Joher
Well-Known Member
from web...........
பனிக்கால அழகுக் குறிப்புகள்
பனிக்காலம் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டது. இனி, தலைமுடியில் தொடங்கி பாதங்கள் வரை ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும். இதனால், சருமத்தில் வறண்டத்தன்மை, கூந்தலில் பிளவு, பாதங்களில் வெடிப்பு வரிசை கட்டி வரும். இந்தப் பிரச்னைகளைக் கடந்து பனிக்காலத்தை அழகாக்க டிப்ஸ்........
வழக்கம்போல உடம்புக்குத் தேவையான 2 லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை தினமும் குடிக்கணும்.
கைகள், முட்டி ஆகிய இடங்கள் சட்டுனு சொரசொரப்பாயிடும். இந்த இடங்களில் தேங்காய் எண்ணெய்யையும் பாதாம் எண்ணெய்யையும் சரிசமமா கலந்து அப்ளை செஞ்சு, அரை மணி நேரத்துக்கு அப்புறம் மிதமான சுடுநீரில் வாஷ் பண்ணிடுங்க. வாரத்துக்கு ரெண்டு நாள் இப்படி செஞ்சுட்டிருந்தால், கை, கால் முட்டிகள் மிருதுவாக இருக்கும்.
ஒரு துண்டு பப்பாளியுடன், ஒரு துண்டு வாழைப்பழம், 2 டீஸ்பூன் தேன் சேர்த்துப் பிசைஞ்சு, முகம் மற்றும் கழுத்தில் அப்ளை பண்ணுங்க. தேனும் வாழைப்பழமும் சருமத்துக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும். பப்பாளி உங்கள் சருமத்துக்கு பளிச் நிறம் கொடுக்கும்.
பொடித்த பாதாம் பவுடருடன், காய்ச்சாத பாலை தேவையான அளவுக்குச் சேர்த்து பேஸ்ட்டாக்குங்க. உடம்பில் சொரசொரப்பா இருக்கும் பகுதிகளில் பேஸ்ட்டைத் தடவி, அரை மணி நேரம் கழிச்சு வாஷ் பண்ணினால், சொரசொரப்பு போயிடும்.
காம்பினேஷன் சருமம் இருக்கிறவங்க, தயிரையும் மோரையும் சம அளவு கலந்து, பஞ்சினால் தொட்டு முகம் முழுக்க தடவி காயவிடுங்க. கொஞ்சம் நேரம்விட்டு மறுபடியும் என பலமுறை செய்யுங்க. அதிகப்படியா சுரக்கும் எண்ணெய்ப் பசை குறையும். சருமம் வறண்டு போகும் பிரச்னையும் சரியாகும்.
தலைமுடி வறண்டுப் போச்சுன்னா, ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை லேசா சூடு பண்ணுங்க. அதோடு முட்டையின் மஞ்சள் கருவை மிக்ஸ் பண்ணி, ஐந்து நிமிடம் தலையில் தடவி, வாஷ் பண்ணிடுங்க. கூந்தல் வறண்டும் போகாது, உடைஞ்சும் போகாது.
விட்டமின் ‘ஈ’ அதிகம் இருப்பது, சருமத்துக்குள் சீக்கிரம் ஊடுருவது என செக்கில் ஆட்டின தேங்காய் எண்ணெய் சிறப்பாக செயல்படும். ஸோ, தேங்காய் எண்ணெய்யைத் தலை முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவிடுங்க. தலைக்கு சீயக்காய்த் தூளும், உடம்புக்குப் பச்சைப்பயிறுப் பொடியும் போட்டு குளியுங்க. வாரத்துக்கு ஒரு தடவை இப்படி செஞ்சா, அந்த வாரம் முழுக்க சருமம் சாஃப்ட்டாக இருக்கும்.
பனியில் உதடுகள் வெடிச்சுப்போனால், கிளிசரின், விட்டமின் ‘ஈ’ ஆயில் அல்லது வெண்ணெய் தடவுங்க. உதடுகள் மெத்துன்னு இருக்கும்.