S
semao
Guest
பேசும் தெய்வம்
சின்ன நடை அன்ன நடை
சீரில்லா செல்ல நடை
சிங்கார பேச்சாலே
என்னை மயக்கி
கைவிரலில் கை சேர்த்து
கண்ணாடிதனை பிடுங்கி
அம்மா எனும் உன் சொல்லால்
என்னை மயக்கும் என் உயிரே
உன் பேச்சே என் மூச்சு
உன் மழலை கேக்க ஒருமுறை இல்லை
வரைமுறை இல்லை அளவுகோல் இல்லை
கருவறைதன்னில் என்னில் உதித்த என் தெய்வமே
என்னை உயிர்ப்பாக்கும் தெய்வமே
பேசும் தெய்வமே
உன் சிணுங்கலும் என் சங்கீதமே
உன் சிரிப்போ என் மத்தாப்பு
உன் கண்ணீர் துடைக்க
நிஜத்திலும் நிழலிலும்
உன்னை தொடரும் என்னுயிரே
அகத்திலும் வெளியிலும்
உன்னை துதிக்கும் என் மனமே
-மீரா
Last edited by a moderator: