P9 Uppuk Kattru

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi Friends

Will come with the epi in the evening.


“இங்கேயே தங்கேன் பா...” என்ற தாத்தாவின் பேச்சுக்கு மறுப்பாக தலையசைத்துவிட்டு அருள் வெளியே செல்ல...
“எல்லாத்தையும் ஏத்துக்க அவனுக்கு கொஞ்சம் நேரம் ஆகும். அவன் யோசிக்கட்டும். நாளைக்கு பார்க்கலாம்.” என சொல்லிவிட்டு ஜோசப் அருளோடு சென்றான்.
அருள் வீடு திரும்பும் போது நள்ளிரவுக்கும் மேல்... இனிமேல் தன் வாழ்க்கை எப்படி இருக்கும் என நிறைய யோசித்து, உறங்கியும் உறங்காமலும் பொழுதை கழித்தவன், விடிந்ததும் ரோஜாவை தேடி சென்றான்.
அவன் சென்றபோது மரிதயதாஸ் வீட்டில் தான் இருந்தார். அருள் வருவதைப் பார்த்ததும் காலில் செருப்பை போட்டுக் கொண்டு அவர் வெளியே சென்றுவிட... நல்லவேளை சண்டை எதுவும் வரவில்லை என ரோஜா நினைக்க... அருளும் ஆச்சர்யபட்டவன், அங்கேயே திண்ணையில் அமர்ந்தான்.
“எங்க அவங்க எல்லாம்?”
“பக்கத்தில ரெசார்ட்ல தங்கி இருக்காங்க.”
“அவங்க உங்க தாத்தா, பாட்டி சித்தப்பாவா?”
“ம்ம்... ஆமாம். என்னோட பழைய போட்டோ எல்லாம் காட்டினாங்க.”
“சரி இப்ப சந்தோஷமா இருக்காம, ஏன் இப்படி மூஞ்சியை தூக்கி வச்சிருக்கீங்க?”
“அவங்க என்னை அங்க கூப்பிடுறாங்க ரோஜா, அதுதான் யோசனையா இருக்கு.”
“இதுல யோசிக்க என்ன இருக்கு? உங்க வீட்டுக்குத்தானே கூப்பிடுறாங்க.”
“எங்க அப்பா அம்மா இருந்தா நான் போறதுல ஒரு அர்த்தம் இருக்கு. எனக்கு அங்க யாரு இருக்கா ரோஜா?”
“அப்படி சொல்லாதீங்க, உங்க தாத்தா பாட்டி மனசு கஷ்ட்டப்படும். அவங்களுக்காக போயிட்டு வாங்க.”
“நேத்து நீங்க எவ்வளவு மனசு கஷ்ட்டபட்டீங்க. அது கடவுளோட காதுல விழுந்து தான் இவங்களை அனுப்பி இருக்காரோ என்னவோ... இனி உங்க வாழ்க்கை நல்லா இருக்கும் பாருங்க.”
“நீ ரொம்ப கற்பனை பண்ணிக்காத... என்னால அங்க போய் இருக்க முடியும்ன்னு தோணலை...”
“இப்பவே இப்படி நினைக்காதீங்க. அங்க போய் பாருங்க. ஒருவேளை உங்களுக்கு அங்க பிடிக்கலாம்.”
“நான் தாத்தா பாட்டிக்காக வேணா போறேன். பத்து நாள் இருப்பேன் வந்திடுவேன். அதுக்கு மேல எல்லாம் முடியாது.”
“சரி போயிட்டு வாங்க. நல்ல டிரஸ்ஸா எடுத்திட்டு போங்க. கையில கொஞ்ச பணம் வச்சுக்கோங்க.”
“ம்ம்... சரி. நீ பத்திரமா இரு.”
“எனக்கு ரொம்ப சந்தோஷம் தெரியுமா? இனி உங்களுக்கு எல்லாமே நல்லதா நடக்கும் பாருங்க.”
“குறி சொல்றியா ஜக்கம்மா...” என்றவன் புன்னகைக்க...
“எப்பப் பாரு கிண்டல் பண்றதே வேலை.” ரோஜா பொய்யாக முறைக்க...
“எனக்கு சாப்பிட எதாவது கொடு.” என அருள் கேட்க, விரைந்து உள்ளே சென்றவள், இருந்த பழையதில் தயிர் ஊற்றி, அருளுக்கு கருவாடு பிடிக்காது என்பதால்... வத்தல் வறுத்துக் கொண்டு வந்து வைத்தாள்.
வயிறு நிறைய உண்டவன், மனம் நிறைய அவளிடம் விடைபெற்று சென்றான்.
வீட்டிற்கு சென்று குளித்து உடை மாற்றி தன்னிடம் இருந்த நல்ல உடைகள் மற்றும் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு, அவன் நண்பர்களை பார்க்க சென்றான்.
“சீக்கிரம் வந்திடுவேன். நான் வந்ததும் தான் கடலுக்கு போறோம்.” என அருள் சொல்ல... நண்பர்கள் புன்னகையுடன் விடைக் கொடுத்தனர்.
தாத்தா பாட்டிக்காக ஒரு பத்து நாட்கள் அவர்களுடன் இருந்துவிட்டு வருவோம் என்றுதான் சென்றான். ஆனால் அங்கே சென்றதும் அவன் மனநிலையே மாறிவிடும் என அப்போது அவனுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
ஜக்கம்மா வாக்கு சொல்ல ஜாமதில் வந்தாளையா
ஹெய் வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கமா
எங்க கூட ஆட்டம் போட ஏண்டியம்மா வெட்கமா
பளபளக்கும் தோட்டமா பட்டாம்பூச்சி கூட்டமா
தேடி வந்த பசங்களுக்கு தேனை அள்ளி ஊட்டம்மா
 

banumathi jayaraman

Well-Known Member
ஹே நான் சொன்ன மாதிரியே
அருள் பணக்கார வீட்டுப் பையன் ஆகிட்டானே
ஆனால் சென்னை போனதும்
ஏன் அருள் மாறிடுறான்?
பெற்றோருடன் இருந்த பழைய
வாழ்க்கை ஞாபகம் வந்துடுச்சா?

ரோஜா ரொம்பவே நல்ல பெண்
அருளின் வளமான வாழ்க்கையைப்
பார்க்கிறாள்
அப்டேட்டுக்கு ஆவலாய் வெயிட்டிங்,
ரம்யா டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னை அருளையும் விடாதா???
அச்சச்சோ..... அப்போ ரோஜா???

ஜக்கம்மா வாக்கு பலிக்கப்போகுதா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top