P7 Uppuk Kattru

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi friends

Epi tomorrow

பால் விற்கும் விலையில், அதை வாங்குவதைப் பற்றி யோசிப்பதே இல்லை. அதனால் வந்தவருக்கு காபி, டீ கொடுக்கும் வேலையும் இல்லை.
“வாங்க தம்பி கடையில போய் டீ குடிப்போம்.” என மரியதாஸ் அழைக்க... ரோஜா தான் வீட்டில் இல்லையே... அதனால் அவர் பின்னே சென்றான்.
கடையில் டீ குடித்தபடி பேசுக் கொடுத்தான்.
“ரோஜாவுக்கு மாப்பிள்ளை பார்த்துடீங்களா?” கிருபா கேட்க,
அவர் எங்கே பார்த்தார். ஆனால் அருளைப் பற்றியும் சொல்ல விருப்பம் இல்லாமல்... “இனி தான் பார்க்கணும். கடலுக்கு போற பையன் இல்லாம... வெளிய செய்யலாம்ன்னு பார்கிறேன்.”
“எனக்கும் எங்க வீட்ல பொண்ணு பார்க்கிறாங்க.”
“உங்க வீட்ல ரொம்ப எதிர்பார்கிறதா நிர்மலா சொல்லுச்சே.... அதுதான் நான் அதை பத்தியோ யோசிக்கலை...”
“அது பார்த்துக்கலாம் மாமா... பின்னாடி செய்றதா சொல்லி எங்க வீட்ல சமாளிச்சுக்கலாம்.”
கிருபா சொல்ல.. மரியதாசின் கண்களிலும் ஆசை மின்னியது. இவனைக் கட்டினால் ரோஜா நிம்மதியாக இருப்பாள் என நினைத்து நிம்மதி கொண்டார். கிருபா கடையில் இருந்தே விடைபெற்றுக் கொண்டான்.

*********************************************************************************************************************
“நான் அவர் சம்மதத்தோட தானே கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன். அப்புறமும் ஏன் என்னை புரிஞ்சிக்க மாட்டேங்கிறார்.”
“இங்கப் பாரு இதுக்கு மேல உங்க அப்பாவுக்கு மரியாதை இல்லை. நானும் உனக்காகத் தான் இத்தனை நாள் பொருத்து போனேன், இதுக்கு மேல முடியாது.”
“நான் நாளைக்கு கடலுக்கு போறேன். இந்த தடவை கடலுக்கு போயிட்டு வந்தும், நம்ம கல்யாணம் தான். நீ அதுக்குள்ள முடிஞ்சா, உங்க அப்பாவை சம்மதிக்க வை. இல்லைனா நம்ம இஷ்ட்டபடி கல்யாணம் நடக்கும்.” என்றான் உறுதியாக.
இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். பிறகு அவளை சமாதானம் செய்து, அவளை சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டு, அங்கிருந்து கிளம்பு சென்றான். மறுநாள் கடலுக்கு செல்ல, அனைத்தும் தயார் செய்ய வேண்டியது இருந்தது.


எப்போது வந்தாலும் திண்ணையில் இருந்து பேசிவிட்டு செல்பவன், இந்த முறை வீட்டிற்குள் இருந்து வரவும், அதை பார்த்த பக்கத்து வீட்டுகாரர், “இந்த மனுஷன் ஒழுங்கா ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிச்சிட்டு போக வேண்டியது தான...” என தன் மனைவியிடம் புலம்ப.
“ஆமாம் அருளை விட இவருக்கு நல்ல பையன் கிடைப்பானாக்கும், இவரே அவங்க பேரை கெடுத்து விட்டுடுவார் போல...பேசாம கல்யாணத்தை முடிச்சிட்டு போகலாம்.” என்றார்
மரியதாஸ் கடலில் இருந்து திரும்பியதும், அதையே அவர்கள் அவரிடமும் சொன்னார்கள்.
“ஏன் அண்ணே, பேசாம கல்யாணத்தை முடிச்சிட்டு போக வேண்டியது தான... அவன் வீட்டுக்கு வந்து போறதை பார்த்தா ஊர் தப்பா பேசாதா...” என சொல்ல... மரியதாஸ் ரோஜாவை முறைத்தவர், அருளிடம் சென்று சண்டை வேறு போட...
“அடுத்த மாசம் எங்க கல்யாணம் நடக்கிறது உறுதி.... உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ.” என அருள் சவால் விட்டான்.


*********************************************************************************************************************
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய் மதி கெட்ட மரியதாஸ்
அந்த கூமுட்டை கிருபாவின் பேச்சை
நம்பி பகல் கனவு காணாதே
அவனை நம்பி கல்யாண வேலை
ஆரம்பிக்காதே
அவங்கம்மாவைப் பார்த்தால்
கிருபா பயந்து சுச்சி போயி பல்டி
அடிச்சுடுவான்
அப்புறம் உனக்கு அவமானம்தான்
மிஞ்சும்

அருள் செல்லத்துக்கு என்ன
குறைச்சல்?
நீ மட்டும் என்ன கலெக்டர் வேலையா
பார்க்கிறே?
நீயும் அதே கடலுக்கு போயிதான்
இரண்டு புள்ளைங்களைப் பெத்து
வளர்த்து ஆளாக்கியிருக்கே
அதை மறந்துடாதே, மரியதாஸ்

உன்னை மாதிரி ரோஜாவின் தாய்
வழிப் பாட்டன் நினைச்சிருந்தால்
உனக்கேது ஸ்டீபனும் ரோஜாவும்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top