P24 எந்தன் காதல் நீதானே

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
செவிலியர் தூக்கிக் கொண்டு வந்து கொடுத்த மகனை கையில் வாங்கி உச்சி முகர்ந்தவன், “இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தா அவளுக்கு ரூம்லையே பிரசவம் ஆகி இருக்கும். என்ன வைத்தியம் பார்க்கிறீங்க நீங்க. அவ வலி அதிகமா இருக்குன்னு சொன்னா தானே.” என ஜெய் அவரிடம் எகிற,

“இன்னும் இவன் விடலையா?” என செவலியர் பயந்து போய் பார்க்க,

“விடுப்பா அதுதான் குழந்தை நல்லபடியா பிறந்திடுச்சே. குழந்தையை கொடுத்திட்டு நீ போய் எல்லோருக்கும் ஸ்வீட் வாங்கிட்டு வந்து கொடு.” என கற்பகம் சொல்ல,

வெண்ணிலா ரூமுக்கு வந்ததும் போறேன் என்றவன், தனது அத்தையிடம் குழந்தையைக் கொடுத்தான். அவனது பெற்றோரும் அந்த நேரம் வந்து விட்டனர்.

வெண்ணிலா அறைக்கு வர மேலும் ஒரு மணி நேரம் ஆகியது. அவள் வந்த பிறகு அவள் நலத்தை கேட்டு அறிந்தவன், பிறகே இனிப்பு வாங்க சென்றான்.

கற்பகத்தை துணைக்கு வைத்து விட்டு மகேஸ்வரி தனது அண்ணன் அண்ணியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினார்.

அவர்கள் சென்றதும் கற்பகம் அவன் பேசியதை சொன்னவர், “உன் புருஷனை கொஞ்சம் அடக்கி வை. இல்லைனா நம்மை இன்னைக்கே இங்க இருந்து துரத்திடுவாங்க.” என சொல்ல, சொன்னால் கேட்பவனா என்ன வெண்ணிலா நினைத்துக் கொண்டாள்.

மாலை தான் பாவையளர்கள் நேரம் என்பதால் அப்போது ராஜகோபால் யுவராஜ் வெண்ணிலாவின் அத்தைகள் இன்னும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் என மருத்துவமனைக்கு படையெடுக்க, ஜெய்யின் பெற்றோர் ஏழு மணி வரை இருந்துவிட்டு, மருத்துவமனியில் இருந்தே நேராக ஊருக்கு கிளம்பி விட்டனர். மறுநாள் சந்திரனும் காமாட்சியும் வருவதாக இருந்தது.

மகேஸ்வரி இரவு உணவை எடுத்து வந்ததும் கற்பகம் வீட்டிற்கு கிளம்ப, ஜெய் மருத்துவமனையிலேயே இருந்து கொள்வதாக சொல்ல,

“அதெல்லாம் ஒரு ஆள் தான் கூட இருக்கணும். நீங்க கிளம்புங்க.” என செவிலியர் சொல்ல, ஜெய் மறுக்க,

நேற்றில் இருந்து அவன் படுத்திய பாட்டில் கடுப்பில் இருந்து மருத்துவரும் செவிலியரும், ஒருத்தர் தான் கூட இருக்கலாம். உங்களுக்கு உள்ளே எல்லாம் இடம் இல்லை.” என துரத்தி விட,

“நீங்க வீட்டுக்கு போயிட்டு காலையில வாங்க.” என வெண்ணிலாவும் சொல்ல, ஜெய் முறைத்துக் கொண்டுதான் கிளம்பினான்.

**************************************************************************************************

வெண்ணிலா பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த யுவராஜ், “உன் புருஷனை கேட்க வேண்டியதை இவன்கிட்ட கேட்டு என்ன பிரோஜனம்? அவன் பேசமாட்டான்னு தைரியம் தானே உனக்கு.”

“பார்த்தியா பட்டு குட்டி உன் அம்மா உன்னை திட்டுறா?” என, வெண்ணிலா பதிலுக்கு சிரித்தாள்.

“உன் புருஷனுக்கு நாங்க உன்னை முப்பது நாள்ல அனுப்பலைன்னு கோபமா இருக்கும்.”

“நான் அதையும் கேட்டுட்டேனே இல்லைன்னு சொல்றார். அவர் தோட்டம் போடுற வேலையில பிஸியா இருப்பார்.”

“அவர் கூப்பிட்ட போது உன்னை அனுப்பலைன்னு உனக்கு கோபமா வெண்ணிலா.”

“இந்த மாதிரி நேரத்தில் தான் நீ இங்க அதிக நாள் தங்க முடியும். உன் பையன் ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சிட்டா... அவனுக்கு லீவ் விட்டாத்தான் வருவ.”

“எங்களுக்கு இந்தப் பட்டுக் குட்டியோட இருக்கனும்ன்னு ஆசை இருக்கும் தான... அதோட நீயும் இங்க இருந்தா ரெஸ்ட் எடுப்ப. அதை நினைச்சு தான் நான் அஞ்சு மாசத்தில தான் அனுப்புவேன்னு சொன்னேன்.”

“எனக்கு தெரியும் அண்ணா. நீ விளக்கவெல்லாம் வேணாம். அவருக்கும் புரியும், அவர் மட்டும் இப்ப அகல்யா உண்டாகி இருக்கான்னு, எங்க வீட்ல தானே பிடிச்சு வச்சிருக்கார்.”

“ஆனாலும் உன் புருஷன் கொஞ்சம் அடாவடி தான்.” என சொல்லிவிட்டு யுவராஜ் தங்கையின் முகத்தை குறுகுறுப்பாக பார்க்க,

“அவர் பேசுற விதம் தான் அப்படி. ஆனா அவர் பேசுற விஷயம் நியாயமாத்தான் இருக்கும்.”

“கொஞ்சம் கூட உன் புருஷனை விட்டுக் கொடுக்க மாட்டியே... அப்ப ஏன் உன்னையும் குழந்தையும் பார்க்க வராம இருக்கார்.” யுவராஜ் கேட்டதற்கு வெண்ணிலாவுக்கு தெரிந்தாள் தானே பதில் சொல்வாள்.

கணவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்று அவளுக்கு ஒன்றும் புரியாத நிலை. கோபமா என கேட்டால் இல்லைஎன்று தான் சொன்னான். ஆனாலும் இங்கே வரவில்லை.

*******************************************************************************************

கற்பகத்தின் முகம் இரண்டு மூன்று நாட்களாகவே சரியில்லை. அடிக்கடி தனியாக் சென்று கைபேசியில் பேசிவிட்டு வந்தார். வெண்ணிலாவும் கற்பகமும் ஒரு அறையில் இருப்பதால் வெண்ணிலாவுக்கு குழப்பமாக இருந்தது.

அவள் அதை தனது அம்மா மற்றும் அண்ணனிடம் பகிர்ந்து கொள்ள,

“கத்திரிக்காய் முத்தினா கடை தெருவுக்கு வந்துதான் ஆகணும். எதுவா இருந்தாலும் அவங்க வாயில இருந்தே வரட்டும்.” என்றான் யுவராஜ்.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice Precap

ஜெய் ஏன் வெண்ணிலாவையும் குழந்தையையும் பார்க்க வராம இருக்கான்... இந்த கற்பகம் அடுத்து என்னத்தை பண்ண போகுதோ???
அது முகம் ஏன் சரியில்லை... அடிக்கடி யாருக்கு ஃபோன் பண்ணுது????
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.ஜெய் படுத்திய பாட்டில் டாக்டர்,நர்ஸ் ஒரு ஆள் தான் தங்கனும்னு,உங்களுக்கு உள்ள இடம் இல்லைன்னு தொறத்திட்டாங்களா:D:D:D.

கற்பகத்துக்கு பேரன் கல்யாணத்துக்கு முன்னே ஓடிப் போன காரணம் தெரிஞ்சிருச்சா:oops::oops:. அதனால தான் தனியா போன் பேசிட்டு வருதா:unsure::unsure::unsure:.
ஜெய்,மனைவி,குழந்தையை பார்க்க வராம இருக்க காரணம் என்ன:unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
ரம்யாராஜன் டியர்

அச்சோ
மகனைப் பார்க்க ஜெய் ஏன் வரவில்லை?
என்ன காரணம்?
கிழவியின் முகம் எதுக்கு சுட்ட கத்திரிக்காயாட்டம் ஆச்சு?
ஹா ஹா ஹா
கற்பகம் கிழவி எதுக்கு தனியாக போய் பேசுது?
ஹா ஹா ஹா
கரண் பரதேசி வர்றேன்னு போன் செஞ்சானோ?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஹாஸ்பிடல்ல எல்லோரையும் கடிச்சு கொதறிட்டான் போல........
உனக்கு இடமில்லைனு சொல்லிட்டாங்க.......
கிழவியே மிரளுற அளவுக்கு பேசிட்டான் போல ஜெய் :p:p:p

வீட்டுக்காரர் தோட்டம் போடுறதுல பிஸியா :p:p:p
பையனை பார்த்துமா வரலை???

கரண் வரப்போறானா??? அவன் கிட்ட ஏதும் கரண் வெண்ணிலா கல்யாணம் பற்றி கிழவி வெளியே போய் புலம்புவது ஜெய் காதில் விழுந்துடுச்சா :unsure::unsure::unsure:
அதன் வரலையா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top