P13 Uppuk Kattru

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi Friends

Precap padichittu nallaa thitittu irunka. Will come with the epi in the evening.

பவித்ராவின் திருமணதிற்கு இன்னும் மூன்று மாதங்களே இருந்த நிலையில், ரேஷ்மாவிற்கும் வரன் பார்த்து இருந்தனர். மாப்பிள்ளை வீட்டினர் திருமணத்திற்கு அவசரப்படுத்த, ரேஷ்மாவின் பெற்றோரும், இப்போது நிச்சயத்தை முடித்துவிட்டால், மாதவன் பவித்ரா திருமணம் முடிந்தவுடன், இவர்கள் திருமணத்தையும் வைத்து விடலாம் என நினைத்தனர்.
மாதவனும் தங்கையின் திருமணத்தை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றால்... நல்லது தானே என்ற எண்ணம்.
அப்போதே அருள் சொன்னான். “ஏன் கல்யாணத்தை இப்படி அவசரமா வைக்கிறீங்க. மாதவன் வந்த பிறகு நிச்சம் பண்ணுவோம். அப்புறம் ஒரு ஆறு மாசம் கழிச்சு கல்யாணம் பண்ணலாம். உங்களுக்கு என்ன பணத்துக்கா குறைச்சல், இல்லை தங்கை கல்யாணத்துக்கு மாதவன் வர மாட்டேன்னு சொல்லிடுவாரா.” என்றதற்கு,
“அதுக்கு இல்லை டா, பையனுக்கு ஜாதகத்தில இன்னும் ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணனுமாம். அதோட மாதவன் வந்திருக்கும்போதே கல்யாணத்தை வச்சிடலாம்ன்னு நினைச்சோம் வேற ஒன்னும் இல்லை.” என்றார் புவனா.
இந்த பேச்சு வார்த்தை நடக்கும்போது ரேஷ்மா அங்குதான் இருந்தாள். அப்போது அவளுக்குமே இவன் ஏன் இதில் எல்லாம் தலையிடுகிறான் என்று எரிச்சலாக இருந்தது.
பெண் பார்த்துவிட்டு சென்றதில் இருந்தே மாப்பிள்ளை சுதர்ஷன், தினமும் ரேஷ்மாவை கைப்பேசியில் அழைத்து விடுவான். “நீ எப்ப எங்க வீட்டுக்கு வருவேன்னு எங்க குடும்பமே ஆவலா இருக்கு. மகாலக்ஷ்மியே மருமகளாக வரப் போகிறாள்ன்னு எங்க அம்மா சந்தோஷத்தில இருக்காங்க” என இது போல எதாவது பேசி, திருமணத்திற்கு பிறகு தான் எதோ சொர்கத்தில் இருக்க போகிறோம் என ரேஷ்மாவிற்கு தோன்றும் அளவு செய்திருந்தான்.
மகாலட்சுமி என அவன் குறிப்பிட்டது பணத்தை. ஆனால் இவள் தன் அழகை சொல்கிறான் என நினைத்துக் கொண்டாள்.

************************************************************************************************************

“என்னது எனக்கு பொண்ணு பார்க்கிறாங்களா? இது என்ன புது கதை.” என் அருள் புரியாமல் பார்க்க... கலை முகம் வாடினார்.
“உனக்கு சொல்லாம நாங்களே பொண்ணு பார்த்தோம் பரத். ஆனா இப்ப இருக்கிற பொண்ணுங்க எல்லாம் நல்லா படிச்சிருக்கங்களா... படிச்ச பையனைத் தான் கேட்கிறாங்க. கொஞ்சம் வசதி குறைவான வீட்ல கூட பையன் படிச்சிருக்கணும் சொல்றாங்க.” என்றார் கவலையாக.
“உங்களை யாரு பாட்டி எனக்கு பொண்ணெல்லாம் பார்க்க சொன்னது. நான் பவித்ரா கல்யாணம் முடியுற வரை கண்டிப்பா இங்க இருக்கணும் நினைக்கிறேன். என்னை இங்க இருந்து போக வச்சிடாதீங்க பாட்டி.” என சற்று காட்டமாகவே சொல்லிவிட்டு அருள் சென்றான்.
அவன் சொன்ன காரணமே தான். அவனை இங்கே பிடித்து வைக்கவே, அவனுக்கும் பெண் பார்க்கப்பட்டது.

********************************************************************************************************************
“இவங்க குடும்பத்தில செய்திட்டு, கல்யாணத்துக்கு பிறகு நாம எல்லோரும் கஷ்ட்டபடுறதுக்கு, இப்ப நிச்சயத்தோட நின்னது பரவாயில்லை.” என்றார்.
“நான் ஒரு யோசனை சொல்றேன் கேட்கிறீங்களா? நாம வெளிய தெரியாது ஆளுக்கு கொடுக்கிறதுக்கு. நம்ம பரத்துக்கு கொடுக்கலாமே... நம்ம பொண்ணு நம்ம கண்ணுக்கு முன்னாடி இருப்பா... பெண்ணயும் நல்லா பார்த்துப்பான்.” என புவானா சொல்லும்போதே, ரேஷ்மா எழுந்து அங்கிருந்த அறைக்குள் சென்றுவிட....
“ரேஷ்மாவுக்கு சம்மதம்ன்னா எனக்கு சம்மதம்.” என்றார் ஸ்ரீநிவாஸ். தொழிலை வேறு யாருக்கோ கொடுப்பதற்கு, பரத் தங்கள் தொழிலை பார்த்துக்கொள்வது அவருக்கு பரவாயில்லை என தோன்றியது.
“இன்னைக்கே நம்ம பொண்ணு நிச்சயம் நடக்கணும். நான் அவகிட்ட பேசுறேன்.” என சொல்லிவிட்டு புவனா உள்ளே சென்றார்.
ரேஷ்மாவின் சம்மதம் முக்கியம் என நினைத்தனரே தவிர, அருளிடம் சம்மதம் கேட்க வேண்டும் என யாரும் நினைக்கவில்லை.
“கடவுள் கண் திறந்திட்டார். நம்ம பரத்தை பத்தி இனி கவலை இல்லை. படிக்கலைன்னு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொன்னாங்க இல்ல.... அவங்க முன்னாடி இவங்க கல்யாணம் ஜாம்ஜாம்ன்னு நடக்கணும்.” என்றார் கலை கண்கள் கலங்கியபடி.
அருளுக்கு என்ன டா இது சோதனை என்றாகிவிட்டது. ஒருத்தராவது வந்து அவனிடம் பேசுவார்கள் என பார்த்தால் யாருமே உனக்கு இந்த திருமணத்தில் விருப்பமா என கேட்கவில்லை. ஏன் பவித்ராவே கேட்கவில்லை.
அண்ணனும் இதே குடும்பத்திற்குள் வந்திவிட்டால்... தான் என்றும் அவனுடன் ஒட்டுதலுடன் இருக்கலாம் என நினைத்து மகிழ்ந்தாள். அவனுக்கும் ஒரு ஆசை இருக்கும், தன் திருமணத்தை குறித்துக் கனவு இருக்கும் என எண்ண மறந்தாள்.
அதற்கு மேல் ரேஷ்மா... எதோ இவன் அவள் கழுத்தில் தாலி கட்ட தவம் கிடப்பது போல... கிடைத்த சந்தர்ப்பத்தில் இவனிடம் வந்து, “உனக்கு எல்லாம் இப்படி கல்யாணம் நடந்தால் தான் உண்டு. நல்லா இன்க்கையே செட்டில் ஆகிடலாம்ன்னு சந்தோஷமா இருக்கியா?” என கேட்டுவிட்டு சென்றாள்.
 
SINDHU NARAYANAN

Well-Known Member
ரேஷ்மா உனக்கு ரொம்ப தான் நினைப்பு...
ஐயோ Roja வின் நிலைமை :unsure::unsure:

Remya alternative days ல வரேன்னு சொல்லிட்டு.... :rolleyes::rolleyes:
 
Last edited:

eanandhi

super precap sis
 
Riy

Writers Team
Tamil Novel Writer
ரேஷு உனக்கு ரோஜாவ பத்தி தெரியல.. அவ முன்னாடி நீ டம்மி பீசு... அவகிட்ட மயங்கின மனசு உன்கிட்ட வந்திடுமா.. போம்மா போ.. போயி உன்ன மாதிரியே ஒரு அல்ட்டாப்பை பாரு...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top