Naan Ini Nee - Precap 28

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
“நீ இன்னும் நார்மல் ஆகலை..” என,

“நோ ம்ம்மா.. சிலது எல்லாம் உடனே உடனே பேசிக்கணும்..” என,

“எல்லாத்தையும் விட உன்னோட ஹெல்த் எனக்கு முக்கியம் அனு..” என்ற தாரா சம்மதிக்கவேயில்லை.

“ம்ம்ச் ம்மா.. ஏன் நான் சொல்றதை எப்பவுமே யாருமே புரிஞ்சுக்காம என்னை பிடிவாதம் பண்ண வச்சு, எக்ஸ்ட்ரீமா பீகேவ் பண்ண வைக்கிறீங்க..” என்று அனுராகா கத்த,

“என்னது நாங்களா உன்னை இப்படி எல்லாம் செய்யச் சொன்னோம்..” என்று கடிந்தார் தாரா..

இத்தனை நாள் அவள் குணமடைய வேண்டும் என்று பொறுமையாய் இருந்தவருக்கு இப்போது அந்த பொறுமை போய்விட, எத்தனை பட்டாலும் இவள் திருந்துவேனா என்கிறாளே என்று மனது நோகவும் செய்தது அவருக்கு..

--------------------------------------------

“என்ன காதர்ண்ணா.. பசங்களை ஏன் வரச் சொன்னீங்க...” என

“விசயம் அப்படி..” என்றவர் சதீஸ் சொன்னதை எல்லாம் சொல்ல “வாட் என்னை மானிட்டர் பண்ண சொன்னானா???” என்ற தீபனுக்கு இன்னமும் கூட அதனை நம்ப முடியவில்லை.

“ஆமா தம்பி.. ஆள் வேணும்னு சொன்னப்போவே மிதுன் அப்பாக்கு தீபனுக்கு எல்லாம் தெரியவேனாம்னு...” எனும்போதே,

“இதெல்லாம் நீங்க ஏன்ண்ணா முன்னாமே என்கிட்டே சொல்லலை..” என்ற தீபனுக்கு, மிதுன் ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறான் என்ற எண்ணம் வர, அனுராகாவிடம் இருந்தும் அவனுக்கு அழைப்பு வந்தது..

‘ராகா...’ என்று அவளின் பெயரை உச்சரித்தவனுக்கோ, அவளின் இந்த திடீர் அழைப்பு ‘என்ன சொல்லப் போறாளோ...’ என்ற கேள்வியையும் கொடுக்க, அழைப்பை ஏற்காது அலைபேசியின் திரையை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தான்..

----------------------------------------------

அனுராகாவிற்கும், லோகேஸ்வரனுக்கும் இப்படியொரு சண்டை வருமென்று தாரா நினைத்துப் பார்க்கவில்லை. இதற்கு முன்னமும் இருவரும் சண்டையிட்டு இருக்கிறார்கள் தான். ஆனால் இப்போதோ.. அனைத்தையும் மீறிய ஒன்றாய் இருக்க,

தாராவோ “என்ன லோகேஷ் இதெல்லாம்..” என,

அனுராகாவோ “தீப்ஸ் பண்ணது சரின்னு நான் சொல்ல வரலை.. பட் டாட் நீங்க பண்ணது ரொம்ப தப்பு.. ரொம்ப ரொம்பத் தப்பு..” என்று விரல் நீட்டி சொல்ல,

“இதெல்லாம் உனக்கு யார் சொன்னது அனு.. நீயா இமேஜின் பண்ணிட்டா ஆச்சா..” என்றார் அப்போதும் லோகேஸ்வரன் உண்மையை ஒத்துக்கொள்ளாது.

ஆம் அவர் ஆரம்பத்தில் இருந்தே, இதில் பிடிகொடுக்கவில்லை. மகள் எதையோ யூகித்துவிட்டாள் என்று அறியவுமே அவருக்கு முதலில் அனுராகாவை இங்கே இருக்கவே விடக்கூடாது என்ற எண்ணம் வந்துவிட்டது..

------------------------------------

சேட்டிடம் தீபன் சொல்லிவிட்டான் “ஆதாரங்களை எல்லாம் என் கையில் கொடுத்தால் ஆர்த்தி வருவாள்..” என்று..

சேட்டோ “நீ.. நீ எப்படி சொல்றியோ பண்ணிடறேன்..” என்றவர் ஒரு இடம் சொல்லி வரச் சொல்ல,

“ம்ம் இதுல வேற ப்ளான் ஏதாவது இருந்தது.. ஆர்த்தியை மறந்திடுங்க..” என்று தீபன் தயை இன்றி கூற, “இல்ல இல்ல பேட்டா..” என்றார் சேட் பதற்றமாகவே.

“ஓகே..” என்றவன், சேட் சொன்ன இடத்திற்கு காரில் பயணிக்க, அவன் பயணிக்கத் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் தீபனின் காருக்கு முன்னேயும் பின்னேயும், பெரிய சரக்கு லாரிகள் வர, தீபனுக்கு அவனின் காரின் வேகத்தை கூட்டி முன்னே செல்லவும் முடியவில்லை, பின்னே வரும் லாரிக்கு வழி விடலாம் என்றால் அதுவும் முடியவில்லை..

‘ச்சே.. என்னடா...’ என்று யோசிக்கும்போதே, இரண்டு லாரிகளும் வேண்டுமென்றே வேகத்தை கூட்டியும் குறைத்தும் செல்வது போலிருக்க,

‘சம்திங் இஸ் ராங் தீப்ஸ்..’ என்று அவன் நினைத்து முடிக்கும் முன்னே, கண்ணிமைக்கும் நொடியும் அந்த விபரீதம் நிகழ்ந்திட, தீபனுக்கு என்ன நடந்தது என்றுகூட விளங்கிடவில்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top