fathima.ar
Well-Known Member
விழிகளை திறக்கும்
போதே
நாசியை வருடி
என்னை சுவைக்க
அழைக்கும்
என் விருப்பமான உணவு.
அருகிலிருந்து ஊட்டி விடும் தாய்..
கதை பேசி தலை வருடும் தாய்..
கேட்டதெல்லாம் உடன்
அழைத்துச் சென்று
வாங்கித் தரும் தந்தை..
ஞாயிறு அன்று ஞாயிறு மறையக்கூடாது என்றே வேண்டும் நான்...
மழை நாளில் பள்ளி விடுமுறையை மகிழ்ச்சியோடு வரவேற்கும் குழந்தைகளை ஏங்கும் விழிகளில் பார்க்கும் நான்..
வேலைக்குச் சென்று திரும்பும் வரை தனியாக விடப்படும் நான்...
பள்ளி முடிந்து பசியோடுவரும் போது
பூட்டிய வீட்டை திறக்கும் நான்..
களைத்து தான் போகிறேன்..
வறுமையை விரட்டிச் சென்ற என் பெற்றோர்..
எல்லா செல்வங்களையும்
சேர்க்க ஓடுகிறார்கள்..
அன்பையும் அரவணைப்பையும் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே எனக்களித்து...