Joher
Well-Known Member
வின்டர் க்ரீன் ஆயில் விஷத்தன்மையானதா... ‘பகீர்’ ஆய்வு முடிவுகள்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலாதளம் என்பதால், சுற்றுலா பயணிகளுக்காக ஏராளமான கடைகள் உள்ளன. ஹோம்மேட் சாக்லேட், வாசனை எண்ணெய் விற்பனை அமோகமாக நடக்கும். இந்தக் கடைகளில் வின்டர் கிரீன் ஆயில் என்ற பெயரில் ஓர் எண்ணெயை விற்பனை செய்கிறார்கள். 'சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த எண்ணெயைத் தேய்த்தால், கை - கால் மூட்டு வலிகள் நீங்கும்' எனச்சொல்லி விற்பனை செய்கிறார்கள். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் இந்த எண்ணெய்யை வாங்கிச்செல்கிறார்கள்.
ஆனால், இது கொடிய விஷத்தன்மை வாய்ந்தது. நாகப்பாம்பு விஷத்தை விடவும் கொடிய விஷம் கொண்டது என்கிறார்கள். இந்த எண்ணெய்யைக் குடித்தால், உடனடியாக உயிர் பிரிந்துவிடும். கொடைக்கானலில், கடந்த ஆறு மாதத்தில் மட்டும் இந்த எண்ணெய் குடித்து இருபதுக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள்.
கடந்த வாரம் கொடைக்கானலைச் சேர்ந்த, மெர்சி அவரது மூத்த மகள் தபிதா மற்றும் மூன்று வயது குழந்தை கென்ஸ் ஆகியோர் வின்டர் ஆயில் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில், மெர்சியும் தபிதாவும் உயிரிழந்துவிட்டனர். குழந்தை கென்ஸ் உயிருக்குப் போராடி வருகிறது. 'இந்த எண்ணெயை விற்பனை செய்யக்கூடாது' என மதுரை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இந்நிலையில், தடையை மீறி கொடைக்கானலில் பல இடங்களில், வின்டர் கிரீன் ஆயில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
விண்டர் கிரீன் ஆயில்
கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் உள்ள கடைகளிலும், நகர்ப் பகுதிகளில் உள்ள கடைகளிலும் வின்டர் கிரீன் ஆயில் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில கடைகளில் குடிசைத் தொழில் என்ற பெயரில், 'தமிழக அரசின் அங்கீகாரம் வாங்கிவிட்டோம்' என ஏமாற்றி விற்பனை செய்கிறார்கள்.
இந்த வின்டர் க்ரீன் ஆயில் கொடைக்கானலில் ஒரு சில சமூக விரோதிகளால் மொத்தமாகத் தயார் செய்யப்பட்டு கடைகளுக்கு விற்பனைக்காக வழங்கப்படுகிறது. கொடிய விஷத் தன்மை வாய்ந்த வின்டர் க்ரீன் ஆயிலைக் குடித்து தற்கொலைக்கு முயல்வோரைக் காப்பாற்ற முடியாது.
தடையை மீறி, வின்டர் ஆயில் விற்பனை செய்வது தொடர்பாக, தொடர் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து நேற்று கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சரவணன், ஆய்வு மேற்கொண்டார். கொடைக்கானல் நகரம் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தியதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வின்டர் க்ரீன் ஆயில் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனை செய்த கடைகளுக்கு ரூபாய் பத்தாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
'வின்டர் க்ரீன் ஆயில் விற்பனை செய்யக்கூடாது' என மதுரை உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ள ராஜேந்திரன் இதுபற்றிக் கூறும் போது, ''இந்த வகையான ஆயிலை சோதனை இடும் அலுவலகம் - அதிகாரிகள் வசதி திண்டுக்கல்லில் மட்டுமே உள்ளது. வின்டர் க்ரீன் ஆயில் குடித்து தற்கொலைக்கு முயன்று உயிரிழப்புகள் ஏற்படும்போது மட்டும் கண் துடைப்புக்காக அதிகாரிகள் சோதனையிடுகின்றனர்.
கடைகளில் வின்டர் க்ரீன் ஆயில் விற்பது குற்றம் என்று கடை உரிமையாளர்கள் உணரும் வகையில், விற்பனையில் ஈடுபடும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். மேலும் வின்டர் க்ரீன் ஆயிலை மொத்தமாகத் தயாரிக்கும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.