Kaathal Sindhum Thooral - Precap 7

Advertisement


Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஆனால் வருணோ அவளைப் பற்றி நன்கு தெரிந்தவன் போலவே பேச அவளுக்கு ஆச்சர்யமாய் போனது.. ‘எப்படி இப்படி பேசுறான்...’ என்று தான் எண்ணினாள். அவளது எண்ணம் அவளின் கண்களில் எப்போதும் போலவே பிரதிபலிக்க,

“நீங்க நினைக்கிறது புரியுது.. பட் பேசினாதானே கொஞ்சமாவது தெரியும்...” என்றான் வருணும்..

“ம்ம்...” என்று கண்மணி தலையை ஆட்ட,

‘அவன் என்ன சொல்றான்.. இவ எதுக்கு தலையை ஆட்டுறா..’ என்று எண்ணியது வேறு யாராய் இருக்க முடியும்.. எல்லாம் அதிரூபனே..
கண்மணியும் வருணும் அங்கே வந்து நின்றதில் இருந்தே அவனால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை. எழுந்து போய் ‘இங்க என்னடா பேச்சு??’ என்று வருணை பிடித்து கேட்கவேண்டும் போல இருக்க, அதிரூபன் திணறித்தான் போனான்..


--------------------------------------------------------------------

“ரூபன் என்னடா??? எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க...” என்று மஞ்சுளா திரும்பவும் கேட்க,

“என்னம்மா செய்ய சொல்ற என்னை??” என்று பட்டென்று கேட்டுவிட்டான் அதிரூபன்.
அங்கே வருண் கண்மணியிடம் பேச பேச, இங்கே இவனுக்கு பற்றிக்கொண்டு இருந்தது. ஒருவேளை காதல் தீயோ என்னவோ.. ஆனால் அதனின் வெம்மை மட்டும்
அதிரூபனால் தாங்கவே முடியவில்லை.


‘அவன் பேசுறான்.. இவ சிரிக்கிறா...’ என்று இப்போது பல்லைக் கடித்துக்கொண்டு அங்கே பார்க்க,

“ரூபன்...” என்று மஞ்சுளாவும் பல்லைக்கடித்தார்..
----------------------------------------------------------------------------


அதிரூபன் பேசும் முன்னமே “கங்க்ராட்ஸ் அண்ணா... இங்க உனக்கு பேசி முடிச்சிட்டாங்க.. அண்ட் இன்னொரு சந்தோசமான விஷயம் கண்ஸ்க்கும் பேசி முடிச்சிட்டாங்க...” என்றுசொல்ல,

“என்னது??!!!!!” என்று ஆடிப்போனான் அதிரூபன்..

“ண்ணா.... நீதானே சொல்லிட்டு வந்த நீங்க பேசிட்டு வாங்கன்னு.. அதான் அம்மா சரின்னு சொல்லிட்டாங்க.. பொண்ணு வீட்லயும் ஓகேன்னு சொல்லவும், மாமா அத்தை அம்மா எல்லாம் பேசிட்டு இருக்காங்க... நான் இப்போதான் கண்மணிய பார்த்துட்டு அவங்க எல்லார்கூடவும் பேசிட்டு வந்தேன்...” என்று நிவின் சொல்லிக்கொண்டே போக,

அப்படியே தோய்ந்து அமர்ந்துவிட்டான் இவன்.. அந்த பக்கம் நிவின் என்ன பேசினானோ தெரியாது.. ஆனால் அவன் பேசியது எதுவுமே இவனுக்கு கேட்கவில்லை.. மாறாக கண்மணிக்கு பேசி முடித்துவிட்டார்கள் என்பதே மனதில் ஓடியது அவனுக்கு..
 

Joher

Well-Known Member
Ty சரயு..........
spark வருதோ???????? இந்த நிவின் வேற spark-க்கு என்னை ஊற்றுவான் போல..........

இன்னொரு பையனோடு பார்க்கும் போது தான் தன்னோட காதல் வெளிவருது........ இனி கண்ஸ் எனக்குதான்......... (அதி MV)

4 குடும்பத்திலும் அனல் பறக்க போகுதோ?????????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top