E2 Nee Enbathu Yaathenil

Advertisement

malar02

Well-Known Member
கவிதை நடையில் கருத்தை சொல்வது நன்றாக தான் இருக்கிறது பாத்திமா.

தோல்வியுற்ற திருமண வாழ்வா பாரதி கண்ட புதுமை பெண்ணை உருவாக்குவது...

தோல்வியுற்ற திருமணம் யாருக்கு?


கையில் குழுந்தையுடன் கண்ணியமாக வாழ்க்கை நடத்தி 10 பேருக்கு படியளக்கும் உயர்ந்த நிலையில் இருக்கும் 'சுந்தரி' தோற்றுப் போனவளா?

அவளது பெயர் பிடிக்கவில்லை
அவளது தோற்றம் பிடிக்கவில்லை.
அவளது வீடும் பிடிக்கவில்லை
அவளது தந்தையை பிடிக்கவில்லை
சோறு போடும் விவசாயியின் வியர்வை மணம் பிடிக்கவில்லை
அவளை முழுமையாய் சுகித்த பின்னும் அவளுடன் வாழ பிடிக்கவில்லை
அவனும் அவளும் பிறந்து வளர்ந்த நந்தவன பூமி பிடிக்கவில்லை
இன்னும் எத்தனை பிடிக்கவில்லை அவளிடம் அவனுக்கு முழுமையாக தெரியவில்லை


இத்தனை பிடிக்கவில்லைகளை கூறி மணவிலக்கு கோரும் அவனிடம் மண்டியிட்டு வாழ்க்கை பிச்சை கேட்டிருந்தால் அவள் மணவாழ்க்கையில் வெற்றி பெற்ற பாரதி கண்ட புதுமை பெண் ஆகியிருப்பாளோ உங்கள் கூற்றுப்படி.

எங்கே கூறியிருக்கிறான் அந்த முண்டாசு கவி இப்படியோர் பொருள் வரும் கவிதையை.


புதிய சமுதாயம் படைக்க புறபட்டிருக்கும் உங்கள் தாரக மந்திரம் என்ன? கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பதா? உன்னை பிடிக்கவில்லை என்பவனுடன் சேர்ந்து வாழ்ந்திருந்தால் அவள் மல்லியின் கதாநாயகியாய் இருந்திருக்க முடியாது. நீ எனக்கு வேண்டாம் என்றவனிடம் நீ எனக்கு வேண்டவே வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு வெற்றி நடைபோடும்.
மல்லியின் சுந்தரியின் பின்னே புதிய சமுதாயம் நோக்கி போரடவே நான் விரும்புகிறேன்.

அவள் கண்ணனுடன் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அவள் பாரதி கண்ட புதுமை பெண் தான் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கிறேன்.

இப்படியொருத்தியை மனைவியாகவும் மருமகளாகவும் அடைந்தும் தக்கவைத்துக் கொள்ளாமல் தவறவிட்டவர்களே வாழ்க்கையில் தோற்றுப்போனவர்கள்.என்பதே எனது தாழ்மையான கருத்து பாத்திமா அவர்களே.
9e1c7cfc14d3e25fb133e22cbf397abc.jpg
 

malar02

Well-Known Member
மஞ்சள் கண்ணாடி அணிந்தது நான் அல்ல தோழி. உங்கள் கவிதையையும் என் கருத்தையும் வாசிக்கும் மற்ற தோழிகளுக்கு புரியும்.

பாதகம் செய்பவரை கண்டால் நீ
பயம் கொள்ளலாகது பாப்பா
மோதி உதைத்துவிடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

என்ற பாரதியின் பாப்பா பாட்டை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் தானே?

பாரதியின் கனவுக்கு இழுக்கென்று எதை குறிப்பிட்டீர்கள்? எந்த இடத்தில் கூறியிருக்கிறீர்கள்?

இதே தளத்தில் நம்முடன் பயணிக்கும் சில உடன்பிறப்புகள் துரதிர்ஷ்டவசமாக மணவாழ்க்கையிலிருந்து விலகி தனிமையில் இருக்கின்றனர்.

அவர்கள் எல்லாம் தோற்றுப்போனவர்களா? அவர்களை கைநழுவவிட்டவர்கள் தான் தோற்றோடியவர்கள்.

மல்லியின் நாயகியைப் பற்றி பேசும்போது எதிர்மறை கருத்துகள் எதற்கு? நிச்சயம் மல்லி சுந்தரியின் கதாபாத்திரத்தை படைத்திருப்பதே சமூதாயத்தில் இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும் என்பதற்காக தான்.
9ce3229963df59c4d5e5a480ad6f02a3.jpg
 

Ansadoss

Well-Known Member
நண்பர்களே,ஒருசினனசெய்தி,ஏங்க ஊர் பாண்டிசசேரி மிக நல்ல ஊர்.இங்கு60%குடிக்கமாட்டாகள்.2௦%அளவாக குடிபார்கள்,2௦%மோசமகா குடிபார்கள்.ஆனால் வெளி ஊர்களில் வந்து குடிப்பவர் அதிகம்.சினிமாவில் காட்டுவது போல்இல்லை.இதன் இயப்பெயர் வேதபுரி.இங்கு25 சித்தர்கள் உள்ளர்கள்.எங்க தெரு மிக நேராக இருக்கும்,மீக,மீக,அழகிய ஊர்.
முருகேசன் அண்ணாச்சி எனது தந்தையார் பாண்டிச்சேரியில் உள்ள பெத்திசெமினேரி பள்ளியில் 28 ஆண்டுகள் வரலாறு மற்றும் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி 1993ல் ஓய்வு பெற்றவர். பாண்டிச்சேரியின் முன்னாள் முதல்வர் வைத்திய லிங்கம் அப்பாவின் மாணவர்.

நான் சிறுவயதாக இருந்த காலத்திலிருந்தே அமுதசுரபி சூப்பர் மார்கெட் பொருட்கள் தான் எங்க வீட்டில் இருக்கும். அமுதசுரபி என்ற பெயர் பொறித்த மஞ்சள் பையை பள்ளிக்கூடம் போகும் போது எடுத்து செல்ல அவ்வளவு ஆசைபடுவேன்.

நான் +2 முடித்த உடன் பாண்டிச்சேரியில் செயின்ட் தெரசா தெருவில் உள்ள விடுதியில் தங்கி அருகில் உள்ள தட்டச்சு நிறுவனத்தில் பயிற்சி பெற்றேன்.

இந்நகர அமைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. வீதிகள் நேர் நேராக அமைந்திருக்கும்.

என் உறவினர்கள் நிறைய பேர் பாண்டிச்சேரியில் வசிக்கின்றனர். நான் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவள்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எதுக்கு நல்ல மனசு, யாருக்கு நல்ல மனசு, பொன்ஸ் டியர்?
நம்ம எல்லோருக்கும் தான் பானு டியர்...
துரையை கும்ம ரெடி ஆகுறோம் ல அதை சொன்னேன்.
 

aravin22

Well-Known Member
Hi mam

நன்றாக இருந்தது mam,கண்ணனுக்கு இபோதுதான் வயதுக்குரிய அறிவு & முதிற்ச்சி வந்திருக்கும்,அத்தோடு குழந்தைபற்றிய நினைவும் தெரிந்ததிலிருந்து இப்போது வரை அலைகழிக்குமல்லவா,தானாடாவிட்டாலும் தன்தசை ஆடும் என்பார்களே அதே போல் தன்பிள்ளைபற்றிய எண்ணம் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் ,இப்போது இன்னும் வளர்ந்து உலகனுபவமும் சேரந்தவுடன் கடந்தகாலத்தை நினைக்கும்போது ,தன்னுடைய தவறை விளங்கிக்கொண்டுள்ளார்,விவாகரத்து கோரும்போது அப்பெண்ணுடன் வாழவில்லையென்றால் நிறைய சட்டசிக்கல்& காலதாமதம் ஆகலாம்,அதனால்தான் கண்ணன் அப்படி நடந்திருக்கவேண்டுமென்று நினைக்கின்றேன்,ஒன்று மட்டும் உறுதி மீண்டும் சுந்தரியுடனும் குழந்தையுடனும் கண்ணன் சேர்வது என்றால் கண்ணன் சூடு சுரணை காதுகேளாமை வாய்பேசாமை இது எல்லாம் இருந்தால்தான் சுந்தரியின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்,ஏனெனில் மல்லிகா mam இன் நாயகிகள் எப்போதுமே ஒருவித திமிர் & கர்வம் உள்ள நாயகிகள்தான்,அடம் பண்ணத்தொடங்கினார்கள் என்றால் அவர் பேச்சை அவரே கேட்கமாட்டார்,என்னமோ பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி
Aravin22
Hi Friends

என்னுடைய எழுத்தால் யாரையும் மனவருத்தம் செய்ய விருப்பமில்லை,அப்படி என் எழுத்து மனம் வருந்தும்படி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே,தோழிகள் சிலபேர் மிக மனவருத்தத்துடன் எனது விமர்சனத்திற்க்கு பதில் பதிவு செய்திருந்தார்கள் ,எனக்கு மிகவும் சங்கடமாகப்போய்விட்டது தோழிகளின் பதில் விமர்சனத்தைப்பார்த்து,ஆனால் mam இன் எல்லாக்கதைகளும் வாசித்திருப்பீர்கள்தானே அநேக நாயகிகள் அப்படித்தான் சித்தரித்திருப்பார் ,அது அந்தந்த கதையின் நாயகிகளுக்கு இந்த திமிர் & கர்வம் எல்லாம் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தங்கள் நேர்மையினாலும் & ஒழுக்கத்தினாலும் வந்ததாயிருக்கும்,அதைதான் அப்படி எழுதினேன் ,ஏன் சுந்தரி கூட கணவன்செய்த தவறினால் எவ்வளவு பேரின் ஏளனத்திற்கு ஆளாகியிருப்பார்,ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளி தன்னந்தனியாக குழந்தையை வளர்த்து தங்களுடைய தொழிலையும் விருத்திசெய்யவில்லையா ,எதற்கும் யாரையும் எதிர்பார்க்காமல் நிமிர்ந்து நின்று செயாலாற்றுவது ,அவருக்கு ஒருவித நல்ல அழகு கர்வம் திமிர் இது எல்லாவற்றையும் கொடுக்கின்றதல்லவா , அது தன்னால் நேர்மையாக எதையும் சாதிக்கமுடியுமென்ற நம்பிக்கையால் வந்தது , இதைத்தான் நான் அப்படி எழுதினேன்,ஏன் வர்ஷினியைக்கூட எடுத்துக்கோங்க ,mam சிலபகுதிகளில் எழுதியிருப்பார்கள்,திமிராய் பார்க்கின்றார் பதில் சொல்கின்றார் என்று,ஏனென்றால் அவருடைய ஈஸ்வர் எப்படி இன்னொரு பெண்ணிடம் காதல் சொல்லி ஏமாற்றலாம் என்ற கோபத்தினால்தான் வந்தது ,அப்படி சரியான காரணத்திற்கு கோபப்படும் நியாயவாதிகள்தான் நம்ம mam இன் நாயகிகள் ,நான் அதைதான் அச்சொற்களால் பயன்படுத்தினேன்,மற்றும்படி நம் நாயகிகளை இழிவுபடுத்தும் அர்த்தத்தில் அச்சொற்களை பயன்படுத்தவில்லை,என்னுடைய எல்லா விமர்சனங்களையும் வாசித்துப்பார்த்தால் தெரியும் நான் கதைகளில் வரும் கதாபாத்திரங்களைக்கூட ஒருமையில் விளித்து எழுதியது இல்லை,ஏனென்றால் கதாபாத்திரமாக இருந்தால் கூட மதிப்புடன் எழுத வேண்டுமென்று நினைப்பவள் நான்,ஆனால் நம்பெண்களை அதுவும் கதையென்றால்கூட தவறான கண்ணோட்டத்திலோ சொற்றொடரிலோ எழுதமாட்டேன்,எங்கிருந்தாலும் எல்லோரும் சக மனிதர்களே,எந்நாடாயிருந்தாலும் எல்லோரும் பண்புடன்தான் இருக்கவேண்டும்,அதில்மாற்றுக்கருத்தேயில்லை,இது என்னுடைய தன்னிலை விளக்கம்,யாரையும் மனம்வருத்தச்செய்வதற்கோ அல்ல நண்பர்களே,உங்கள் மனதுக்கு தவறென்று தோன்றினால் விளக்கம் கேட்பதில் தவறு இல்லை.அதற்கு பதில் சொல்ல கடமைபட்டவள்.

நன்றி
Aravin22
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top