தவறான போதனைகளால் தோன்றிய
தவறான எண்ணங்களை
தவறான நேரத்தில் வெளியிட்டவள்
உணரவில்லை அவளது தவறை...
நல்வேஷம் கலைந்து
துவேஷம் வெளிப்பட
சிதற விட்ட வார்த்தைகளால்
பதறிய நெஞ்சம்
நொறுங்கியது கொஞ்சமல்ல..
காலத்தால் அழியாத
சுடு சொற்களால்
மனதில் ரணத்தை
கொடுத்தும் அறியவில்லை
உடைந்தது நெஞ்சம் மட்டுமல்ல
சொந்தமும் தான்..