Cooked as Comali!!!!!!!!!!!!!!!!!

Sasideera

Well-Known Member
#1
ஹாய்! ஹலோ! பிரெண்ட்ஸ்!

கடலை உருண்டை சாப்பிடும் போது கண நேரத்தில் இந்த யோசனை உதயமானது... அது என்னன்னா டிவியில மட்டும்தான் குக் வித் கோமாளி நடத்துவாங்களா... நம்ம சைட்ல நடத்தி ஒரு புது சரித்திரம் படைப்போம்னு ஒரு முயற்சி....:p:p(ஹா ஹா) எல்லாருக்குமே குக்கிங் அனுபவம் எக்கச்சக்கமாக இருக்கும் அதில் நம்மளே கோமாளியா மாறிய சுவாரசியமான அனுபவங்கள் நிறைய இருக்கும்... :LOL::LOL:

சமையல்னு செய்ய ஆரம்பிச்சு இந்த குழம்புக்கு இந்த பொருள் தான் போடணும், இந்த பதம் இருக்கணும், கலர் இப்படி இருக்கணும்னு நிறைய விஷயங்களில் நம்ம எதாவது சொதப்பி அசடு வழிய நின்ற தருணங்கள் நிறைய நமக்கு இருக்கும்ல... அதைத்தான் இங்க ஷேர் பண்ண போறோம்... அனைவரும் இதில் கலந்துக் கொண்டு உங்கள் அனுபவங்களை சொல்லவும்.... கொஞ்சம் ஜாலியா நேரம் போகும்... வாங்கோ வாங்கோ.... நீங்க சொல்ல போகும் களம் இதோ.... இதோ.... எழுத்துக்களால் எங்களை மயங்க வைத்த எழுத்தாளர்களே உங்களின் சமையல் அனுபவங்களை சொன்னால் இன்னும் சைட்டு களைகட்டும்...

என்னோட அனுபவம் சொல்றேன்...
அம்மா ஊருல இல்லாத சமயங்களில் தான் நம்ம அந்த பக்கம் எட்டிப்பார்க்கறது... தம்பி ஃபிரியா இருந்தா அதுகூட கிடையாது ஏன்னா அவனே நல்லா வெரைட்டியா சமைச்சு தருவான்...நான் நல்லா சாப்பிட்டு பார்த்துட்டு அதோட நிறை குறைகள் சொல்லுவேன்(வெஜ்) அதிகமா குறை சொல்றதுன்னு கூட சொல்லலாம்... அப்பவே என் பழைய ஆபீஸ் பிரெண்ட் உனக்கு செஃப் சுரேஷ்ன்னு நினைப்பு எப்ப பாரு கமெண்ட் சொல்லிக்கிட்டுன்னு சொல்லுவாங்க.... ரொம்ப மோசமா இல்லைன்னாலும் ஓரளவுக்கு வாயில வைக்கற அளவுக்கு இப்ப செய்ய தெரியும்...

ஆனா நான் சமைக்க ஆரம்பிச்சதுல இருந்து இப்பவரைக்கும் எனக்கு சரியா வராதது சாப்பாடு சரியா பதத்துக்கு வடிக்கறது... அம்மா செய்யும் போது பார்த்திருக்கேன் அவங்க சாப்பாடு அடுப்புல வைச்சுட்டு பக்கத்துல வேற வேலை செய்வாங்க ஆனா அது அவ்ளோ சமத்தா வேகும்... அதுவே பக்கத்துல தான் நின்னுட்டு இருப்பேன் ஆனாலும் புசுபுசுன்னு அப்படி பொங்கிவரும்.... அதை உள்ளே தள்ளிவிடறேன்னு கிண்டி கிண்டி கடையிசில பொங்கல் தான் கிடைக்கும்.... இப்பவரைக்கும் இதே தான்...
இது சாப்பாடு பொங்கலா மாறிய கதை... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::p

அடுத்தது சப்பாதிக்குன்னு பிசைஞ்ச மாவுல வெந்தும் வேகாததை சுட்டு மத்தவங்களுக்கு போட்டுட்டு எனக்கு சுடறது சோம்பேறித்தனமான இருக்கும் போது பிசைஞ்ச மாவை கோதுமை தோசைக்கு உருமாற்றிய பெருமை என்னையே சேரும்... லைட்டா என் தம்பியையும் சேரும்.... இதை திரட்டி சாப்பிடறதுக்குள்ள பசி போயிடும்னு பிசைஞ்ச மாவுல கொஞ்சம் கொஞ்சமா தண்ணியை ஊத்தி ஊத்தி கடைசியில அன்னைக்கு தண்ணி குடிச்சுட்டு தான் தூங்கினேன்.... :ROFLMAO::ROFLMAO:இப்படி சில பலது இருக்கு.... இதே மாதிரி உங்களோட அனுபவங்களை கேட்க ஆவலோடு இருக்கேன்....:love::love::love:
 
#2
Lockdown நேரத்துல லட்டு சாப்புடனும்னு ஒரு ஆச வந்துச்சு... சரினு பக்கத்து வீட்டு பிள்ளைங்க ரெண்டு பேரை சேர்த்துக்கிட்டு யூடுப் பார்த்து லட்டு செய்ய ரெடி ஆயிட்டேன்... கடலைமாவுல கொஞ்சம் உப்பு போட்டு தண்ணி ஊத்தி கரைக்கும்போது, ஆரஞ்சு கலர் லட்டும் பண்ணனும்னு பிளான் பண்ணி ஆரஞ்சு கலர் பவுடர் போட்டு கரைச்சுட்டு... சீனி பாகு எவ்ளோ அளவுன்னு தெரியாம நெறைய கொதிக்க வச்சு ஆற வச்சுட்டு, வடசட்டில எண்ணை ஊத்தி கண்கரண்டி பிடிச்சு அதுல மாவா கொஞ்சம் கொஞ்சம் ஊத்தி நல்ல வேக வச்சுட்டோம்... லட்டுக்கு பதில் காராபூந்தி ஆயிடுச்சு நல்ல மொறு மொறு னு... நான் சொன்னேன் மிக்ஸியில் அரைச்சு பகுலா போடுவோம் னு என் கூட இருந்த பிள்ளைங்க, "அத்தை மிக்ஸியில் அரைச்சு போட்ட நல்லாவே இருக்காதுன்னு" சொல்ல நானும் முந்திரி, கிஸ்மிஸ் எல்லாம் நெய்ல வறுத்து கொட்டி... கிண்டுனா பாகு ஜாஸ்தி ஆகிடுச்சு.. அப்பறம் திருப்பி கடலைமாவு பொரிச்சு கொட்டி.. நல்ல சொதப்பி வச்சு கடைசில நாங்க செஞ்சது லட்டு மாதிரி இல்லாம பூந்தி மாதிரி இல்லாம ஒரு different பலகாரம் ஆயிடுச்சு... அதுவும் காலி ஆயிடுச்சு அது வேற விஷயம்... ஆனால் அன்னைக்கு னு இல்ல அந்த வாரம் fulla எல்லாரும் எங்களுக்கு லட்டு எப்படி செய்யறது னு கிளாஸ் எடுத்தாங்க பா...
லட்டு கதை நல்ல இருந்தா நல்ல இருக்குனு சொல்லுங்க... நல்ல இல்லைனாலும் நல்ல இருக்குனு சொல்லுங்க... :ROFLMAO::ROFLMAO::LOL::LOL:
 
Sasideera

Well-Known Member
#3

அன்னைக்கு நீங்க செய்த லட்டு சாப்பிட்டவங்களையும்
நல்லா இருக்குன்னு சொல்ல சொல்லி மிரட்டினிங்களா..... ஆனா கதை சூப்பர்...

கண்ணா லட்டு தின்ன ஆசையா..... :ROFLMAO::ROFLMAO:
 
fathima.ar

Well-Known Member
#4
Last year.. நோன்பு நேரத்துல பள்ளி வாசல்கள் எல்லாம் closed..
நைட்டு தராவீஹ் தொழுகை எங்க வீட்டுல நடத்துனோம்‌‌..
தொழுகை முடிச்சிட்டு கிட்ஸ்க்கு snacks ஏதாச்சும் ஒன்னு செஞ்சு வைப்பேன்..
சுண்டல் சமோசா.. புட்டிங்ஸ்..
இளநீர் புட்டிங் கிட்ஸ் மோஸ்ட் ஃபேவரைட்..

Zebra pudding nu YouTube la trend ஆச்சு...
என் கிட்ட கொக்கோ பவுடர் இல்லை.. பூஸ்ட் வச்சு செஞ்சு.. லுக்கு எல்லாம் நல்லா தான் வந்துச்சு....
சின்னம்மா நல்லா இல்லைன்னு கிட்ஸ் எல்லாரும் சேய் கமெண்ட்..
Bye bye டூ zebra pudding
 
KavithaC

Well-Known Member
#5
ஆஹா... இது நிறைய இருக்கு. ஒரு சாம்பிள்.
ஒரு தீபாவளிக்கு பாதுஷா செய்ய ஆசைபட்டு மைதா, நெய் எல்லாம் ரெடி. இது வாட்ஸ்அப், யூ டியூப் வரதுக்கு முன்னாடி காலம். கூட என் சமையல் அம்மாவும். அவங்களுக்கும் இது முதல் அனுபவம். மாவு, நெய் போட்டு பிசைஞ்சு ரெடி.
எண்ணெய் காஞ்சுது. அழகா ஷேப் பண்ணி முதல் பாதுஷா எண்ணையில போட்டேன். பக்கத்துல கரண்டி எடுத்துகிட்டு கடாயில பார்த்தா , போட்ட பாதுஷாவைக் காணோம்.:oops: முழிச்சிகிட்டே சமையல் அம்மாவை கேட்கறேன். அவங்களுக்கும் புரியலை. :unsure:
இருங்கன்னு சொல்லி, அவங்க ஒரு பாதுஷாவை செஞ்ச எண்ணையில போடறாங்க. :LOL:கண்ணை இந்த முறை கடாயிலயே வெச்சிருக்கேன். கண் எதிர கரைஞ்சு போச்சு.:eek:
அப்பறம் தான் அவங்களுக்கு பல்ப் எரியுது.
வெறும் மாவையும் நெய்யும் மட்டும் போட்டு பிசைத்திருக்கோம் (அவ்ளோ நெய்), சூடு பட்டதும் எண்ணையில கரைஞ்சிட்டது:ROFLMAO::ROFLMAO:
அப்பறம் இன்னும் மாவை போட்டு, பால் சேர்த்து... God...அதுலர்ந்து பாதுஷா கடையில்தான் வாங்கறது.:giggle:
 
Sasideera

Well-Known Member
#6

:ROFLMAO::ROFLMAO:
 
Sasideera

Well-Known Member
#7

நெய்யில் இருந்த மைதா மாவை kanalaiye:ROFLMAO:
 
#8
அன்னைக்கு நீங்க செய்த லட்டு சாப்பிட்டவங்களையும்
நல்லா இருக்குன்னு சொல்ல சொல்லி மிரட்டினிங்களா..... ஆனா கதை சூப்பர்...

கண்ணா லட்டு தின்ன ஆசையா..... :ROFLMAO::ROFLMAO:
:p:p
 
#10
ஆஹா... இது நிறைய இருக்கு. ஒரு சாம்பிள்.
ஒரு தீபாவளிக்கு பாதுஷா செய்ய ஆசைபட்டு மைதா, நெய் எல்லாம் ரெடி. இது வாட்ஸ்அப், யூ டியூப் வரதுக்கு முன்னாடி காலம். கூட என் சமையல் அம்மாவும். அவங்களுக்கும் இது முதல் அனுபவம். மாவு, நெய் போட்டு பிசைஞ்சு ரெடி.
எண்ணெய் காஞ்சுது. அழகா ஷேப் பண்ணி முதல் பாதுஷா எண்ணையில போட்டேன். பக்கத்துல கரண்டி எடுத்துகிட்டு கடாயில பார்த்தா , போட்ட பாதுஷாவைக் காணோம்.:oops: முழிச்சிகிட்டே சமையல் அம்மாவை கேட்கறேன். அவங்களுக்கும் புரியலை. :unsure:
இருங்கன்னு சொல்லி, அவங்க ஒரு பாதுஷாவை செஞ்ச எண்ணையில போடறாங்க. :LOL:கண்ணை இந்த முறை கடாயிலயே வெச்சிருக்கேன். கண் எதிர கரைஞ்சு போச்சு.:eek:
அப்பறம் தான் அவங்களுக்கு பல்ப் எரியுது.
வெறும் மாவையும் நெய்யும் மட்டும் போட்டு பிசைத்திருக்கோம் (அவ்ளோ நெய்), சூடு பட்டதும் எண்ணையில கரைஞ்சிட்டது:ROFLMAO::ROFLMAO:
அப்பறம் இன்னும் மாவை போட்டு, பால் சேர்த்து... God...அதுலர்ந்து பாதுஷா கடையில்தான் வாங்கறது.:giggle:
:unsure::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement