S
semao
Guest
அலைகள்
விலையில்லாக் கண்காட்சி நான்
வீட்டை விட்டு வாராயோ எனைக் காண
வீடு கூட்டிச் செல்வாயா உனைத் தொடர்வேன்
கரைத் தேடி வந்து விட்டேன்
கரைத் தாண்ட இயலவில்லை
ஆனாலும் விடமாட்டேன்
தொடர்ந்தே நான் முயன்றிடுவேன்
முயற்சிதனைத் தொடர்ந்திட்டால்
பேரலையாய் வந்திடுவேன்
ஆழிபேரலையாய் வந்திடுவேன்
நான் உனக்குச் சொல்வதெல்லாம்
முயற்சிதனைக் கலந்திட்டு
அயற்சியின்றிப் போராடு
சந்தேகம் வேண்டாமே
சலிப்பற்ற உழைப்பு கொண்டால்
வெற்றி எனும் பேரலையே
உன்னை வந்து சேர்ந்து விடும்
வீண் எண்ணம் தவிர்த்து விடு
வீழாமல் எழுந்து விடு
-மீரா