'வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !!' - 33

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
அவ்ளோதான் என்று நினைக்கும் முன்னே
அவ்ளோதானா என தொடங்கும்
அவணவலின் காதல் நினைவுகள்
அவ்வளவு சீக்கிரம் மறையாது மறக்காது...
அவ்வளவு அருமை....
அவ்ளோதான் இந்த காதலை காணத்தான்
இவ்ளோ காலம் காத்திருந்தோம்....
 

Priyaasai

Active Member
வாழ்வு - 33.1

View attachment 10986

எத்தனை நேரம் படுத்திருந்தானோ திடீரென கீர்த்தியின் கரம் அவன் தோள் தொடவும் கண்விழித்தவன் தன்னருகே புன்னகை முகமாய் நிற்ப்பதை கண்டு அவன் முகத்திலும் புன்னகை விரிந்தது.


அவள் புறமாக திரும்பி ஒற்றை கரத்தில் தலையை தாங்கி, 'என்னடி பெங்களூர் போகலை..?' என்றான் புருவம் தூக்கி எள்ளலான குரலில்.


அவன் எள்ளலை கண்டுகொண்டவள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு 'அதை சொல்லிட்டு போக தான் வந்தேன்.., நான் இப்பவே கிளம்பறேன்' என்று அவனுக்கு பழிப்பு காட்டி திரும்ப,



அவள் செய்கையில் வாய்விட்டு சிரித்தவன் அவள் கரத்தை பிடித்திழுத்து தன்னருகே அமர்த்தி உடனே புரண்டு அவள் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான் சரண்.



அவன் தேவை உணர்ந்த கீர்த்தியின் கரமும் அன்னிச்சியாக மேலெழுந்து அவன் தலை கோதிட மென்மையான அவள் விரல்களின் ஸ்பரிசத்தில் மனதில் வார்த்தைகளில் வடிக்கவியலா நிம்மதி பரவ சில நொடிகள் மெளனமாக அவளை பார்த்து கொண்டிருந்தவன் பின் சுகமாக கண்மூடினான்.



'இப்படி அவள் மடியில் தலை சாய்ந்து ஒரு நொடி கண் துஞ்ச மாட்டோமா..?? என்பது எத்தனை நாள் கனவு என்பது அவனுக்கு தானே தெரியும்.

மீளவே மீளாதோ..!! அவள் கரம் சேரும் யோகம் தனக்கு கிடையாதோ என்ற ஏக்கம் கொண்டிருந்த அவனுக்கு தானே இந்த நொடியின் அருமை புரியும்..!!

இனிமேலும் அவளுடனான ஒரு நொடியையும் இழக்க விரும்பாதவனாக தலையில் இருந்த அவள் கரத்தை எடுத்து அவள் உள்ளங்கையில் மென்மையாக இதழ் பதித்தவன் அதை தன் நெஞ்சோடு சேர்த்து பிடித்தவாறே திரும்பி அவள் வயிற்றில் முகம் புதைத்து கொண்டு அங்கும் இதழ் பதித்தான்.


கீர்த்தியோ அவன் ரோம உரசலில் ஒரு கணம் சிலிர்த்து அடங்கியவள் அப்போது தான் அவன் வெற்றுமுதுகில் இருந்த காயத்தை கண்டு மெல்ல அதை வருடி கொடுக்க சரணோ 'அவ்ளோதானா..??' என்று அவள் முகம் பார்த்தான்.



'மா..மா..' என்று சிணுங்கியவள் அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்து கொள்ள,


'அவ்ளோதானாடி..??' என்று அவன் மீண்டும் கேட்கவும் அவன் முதுகிலும் புஜத்திலும் இருந்த காயத்தில் இதழ் பதித்து நிமிர்ந்தவளுக்கு அப்போதுதான் நினைவு வர சரணிடம்,


'மாமா எந்திரிங்க' என்றாள். 'எதுக்குடி.??'

'மணி என்ன ஆச்சு சாப்பிட வேண்டாமா..??'


'ம்ஹும் எதுவும் வேண்டாம் கொஞ்சநேரம் இப்படியே இரு..'

'உங்களுக்கு பசிக்கலையா..??'


முகம் நிமிர்த்தி 'இல்லை என்பதாக தலையசைத்தவன் மீண்டும் அவள் மடியில் முகம் புதைக்க,


'அமுலு மாமா வந்துட்டாங்க உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க போகலாம் வாங்க'



'என்னது ..??' என்று அவன் கேட்ட அதேநேரம் 'சரண்' என்ற எழிலின் குரல் அறைக்கு வெளியே கேட்கவும் அவசரமாக எழுந்து அமர்ந்தவன் ‘இதோ வரேன்ண்ணா’ என்றவாறு சட்டையை தேடிட,



'இங்க இருக்கு மாமா..!!' என்றவாறு கீர்த்தி எடுத்து கொடுக்கவும் அதை வாங்கி பட்டனை போட்டுகொண்டு சரண் அறைக்கதவை பார்க்க அது மூடியிருந்தது.



'ஏய் அண்ணா எல்லாம் வெளியே இருக்கும் போது எதுக்குடி கதவை சாத்தின..??'என்றான் சட்டென முகிழ்த்த கோபத்துடன்.



கீர்த்தியோ "நீங்க எந்த நேரம் என்ன பண்ணுவீங்கன்னு சொல்ல முடியாது அதான் முன்னெச்சரிக்கையாக சாத்தி வச்சேன்".



'நான் என்ன பண்ணேன்..?? போடி போய் முதல்ல கதவை திற' என்று கண்ணாடியின் முன் நின்று அவளால் கலைத்து விடப்பட்ட கேசத்தை சரிசெய்தவாறே அவளை விரட்ட



கீர்த்தியோ நகராமல் கண்ணாடியினூடே கண்களை சுருக்கி அவனை பார்த்தவள் விடைத்த நாசியுடன், "கதவை சாத்தினாலும் தப்பு சாத்தலைனாலும் தப்பு ..?? ரொம்பதான் பண்றீங்க மாமா" என்று சடைத்து கொள்ள சரண் திரும்பி அவளுக்கு பதிலளிக்கும் முன்,


'சரண் சீக்கிரம் வா எங்களுக்கு டைம் ஆகுது' என்று எழில் அழைக்கவும் அவளருகே வந்து 'என்ன நின்னுட்டு இருக்க வா போலாம் ' என்று அழைத்தவன் சென்று கதவை திறக்க கீர்த்தியோ அழுத்தமாக நின்று கொண்டு வரமாட்டேன் என்பதாக அவனை பார்த்துகொண்டிருந்தாள்.




கதவை திறந்தவன் அவள் உடன் வராததை கண்டு, 'என்னாச்சு..?? வா போகலாம்'


'போங்க மாமா வர வர நீங்க இப்படி காரணம் இல்லாம சும்மாவே என்னை திட்டிட்டே இருக்கீங்க... நான் எங்கயும் வரல நீங்களே போய்க்கோங்க' என்றவளின் முகம் சுணங்கி போயிருப்பதை கண்டவன்.



'ப்ச் சாரிடி அண்ணா, அமுலு எல்லாம் வெளியே இருக்கப்போ நீ கதவை சாத்தினதுல..’ என்றவன் அவள் முகம் இன்னுமே மாறாதிருப்பதை கண்டு,



“சரி சரி சாரி இனி எதுவும் சொல்லமாட்டேன் வா' என்று அழைக்க,


"போங்க உங்க சாரி பூரி எதுவும் எனக்கு வேண்டாம் இன்னொருமுறை இப்படி திட்டினா அவ்ளோதான் ..." என்று விரல் நீட்டி அவள் நிறுத்தவும்,



'என்ன சொன்ன ..??'


'உங்க சாரி பூரி...’ என்று ஆரம்பித்தவளிடம்,



'அது இல்ல கடைசியா ஏதோ சொன்னியே ..??' என்று கேட்க,


கீர்த்தியும் எதார்த்தமாக 'திட்டினா அவ்ளோதான்..!!' என்றிட ,


'அப்போ நிஜமாவே அவ்ளோதானா..??' என்று குறும்பாக அவன் கேட்க ,


‘ஆமா அவ்ளோதான் நான் என்ன ...’ என்றவளின் பேச்சை தடை செய்தது அவளை உரசி நின்ற சரணின் அருகாமை விழி உயர்த்தி அவனை பார்த்தவளிடம்,


‘கண்டிப்பா அவ்ளோதானாடி ..?’ என்றவன் அவள் நெற்றியோடு முட்டி மூக்குரசி கேட்கவும்,


இப்போது அவன் கேள்வி புரிந்தவள் "இப்போ மட்டும் யாரும் இல்லையா...?? கதவை திறக்காம என்ன பேச்சு இது..??" என்று கேட்கும் போதே அவள் முகம் குப்பென சிவந்து போக அதை மறைக்கும் விதமாக அவனை முறைக்க முயன்று தோற்றவள் ,

“ போங்க அவ்ளோதான்..!! அவ்ளோதான்...!!" என்று இதழ்கள் துடிக்க குனிந்தவள் எதிரே நின்றிருந்த அவனை தள்ளிக்கொண்டு வெளியே சென்றுவிட சரணும் மந்தகாச புன்னகையோடு அவளை பின்தொடர்ந்தான்.


இருவரும் வெளியே வரும்போதே சரணின் புன்னகையும் கீர்த்தியின் சிவந்த முகமும் அவர்களின் இணக்கத்தை எடுத்துரைக்க அதை கண்ட எழில் அலர் முகத்தில் நிறைவான புன்னகை.


எத்தனை எத்தனை புரிதலின்மை, கோபங்களை, சச்சரவுகளை கடந்து வந்தவர்களுக்கு தெரியாதா கணவன் மனைவியிடையே பேசி தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவும் கிடையாது என்பது..!!

இலை போட்டு அலர் அனைவருக்கும் உணவு பரிமாறிக்கொண்டு இருக்க,



'வேலை முடிஞ்சதா அமுலு எப்போ வந்த..?? நீயும் உட்காரு எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று அழைத்த சரணிடம்,



'முடிஞ்சது மாமா..! இல்ல பரவால்ல நீங்க உட்காருங்க' எனவும் கைகழுவி வந்தவனிடம் எழில்,



‘தூங்கிட்டியாடா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..??’



'இல்லண்ணா சும்மா படுத்திருந்தேன்' என்றவன் கீர்த்தி அருகே அமரவும்


அதை கண்ட எழில் 'டேய் என்ன பண்றே..??' என்றான் அவசரக்குரலில்.



"சாப்பிட உட்காந்தேன்ண்ணா ஏன் என்னாச்சு..??" என்றவன் எழுந்து நின்று நாற்காலியை ஆராய,


"டேய் சேர் நல்லாதான் இருக்கு ஆனா என்ன இது நீ கீர்த்தி பக்கத்துல உட்காருர உன் போர்ஷன் இந்த சைட் என்று தன் புறம் கை காட்டியவன் வா என் பக்கத்துல வந்து உட்காரு" என்று அடக்கப்பட்ட புன்னகையோடு அழைக்க உடனே அலர் கண்களை உருட்டி கொண்டு அவனை முறைத்து பார்த்தாள்.



அதை கண்ட கீர்த்திக்கு சிரிப்பை அடக்கமுடியாமல் சத்தமாகவே சிரித்து அவனிடம், "எஸ் மிஸ்டர் சரண் உங்க போர்ஷன் அந்த பக்கம் நீங்க போடாத கோட்டையே தாண்ட மாட்டீங்கன்னு சொன்னாங்க..?? ஆனா இப்படி பக்கத்துல உட்காந்து இருக்கீங்க தள்ளிப்போங்க " என்று அவனை சீண்ட,


அலர்விழியோ "நீங்க உட்காருங்க மாமா, அவருக்கு சென்னை வெயில் ஒத்துக்கலை அதான்" என்று எழிலை முறைத்துக்கொண்டே சரணுக்கு பரிமாறியவள்,



எழிலோ அப்போதும் அடங்காமல் "அப்புறம் சரண் கீர்த்திக்கு.." என்று ஆரம்பிக்க,

அலர்விழியோ எழிலை நெருங்கி அப்பளம் வைத்தவாறே, 'டேய் உனக்கு நல்லபடியா சொல்றேன் அமைதியா சாப்பிட்டுட்டு கிளம்புற வழியை பாரு' என்று அவனை நன்கு அறிந்தவளாக எச்சரிக்க,



எழிலோ, "ஏய் நான் என்னடி பண்ணேன்..?? உன் மாமனே வாலண்டியரா வந்து கன்டென்ட் கொடுத்து வண்டியில ஏறி இருக்கான்டி எப்படி சும்மா விட சொல்ற..?? அதெல்லாம் முடியாது இன்னைக்கு உன் மாமனை அடிச்சி சூப் வைக்காம கிளம்ப மாட்டேன்" என்றவனின் குரலில் அத்தனை குதூகலம்.




" வேண்டாண்டா நான் நல்லபடியா சொல்றேன் உன் சேட்டை எல்லாம் என் அண்ணனோட நிறுத்திக்கோ மாமா ரொம்ப பாவம் அவரை ஏதாவது பேசின அப்புறம் நான் என்ன பண்ணுவேன்ன்னு எனக்கே தெரியாதுடா..” என்று அவள் மிரட்ட,


சரணுக்காக தன்னை உலக்கையோடு அவள் துரத்தியது எல்லாம் நினைவில் எழ எழிலும் பதிலுக்கு அவளை சீண்டும் விதமாக “ஏய் என்னடி சவுன்ட் ஓவரா இருக்கு அப்படி தான் பேசுவேன் என்ன பண்ணுவ..??”



அவனை பற்றி நன்கு அறிந்த அலரோ, டேய் கீர்த்தி மாமா சேர்ந்ததுல நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அதனால தான் இப்படி பொறுமையா பேசுறேன் வீணா என்னை சீண்டி..” என்றவளின் ரத்த அழுத்தத்தை ' ஓஒ' என்ற ஒரே வார்த்தையில் எகிற வைத்திருந்தான் எழில்







ஆம் அவள் கூறியதை கேட்டு ‘ஓஓ’ என்ற எழிலின் குரலில் டன் கணக்கில் நக்கல் வழிய,


அதை கண்டவளோ கண்களை இறுக மூடி தன்னை கட்டுபடுத்தி அவனை பார்த்தவள் முடிந்த வரை பொறுமையான குரலில்,
“டேய் மாமா நல்ல படியா சொல்றேன் உன்னால எங்கண்ணன் இடுப்பு உடஞ்சி என்ன கஷ்டம் பட்டாருன்னு எனக்கு தெரியும் இப்போ நீ எங்க மாமாக்கு ஸ்கெட்ச் போட பார்க்கிற அதான் சொல்றேன் அவர் உன்னை மாதிரி அராத்து கிடையாது ரொம்ப அமைதி ஒழுங்கா உன் வாலை சுருட்டி வச்சிட்டு சொல்பேச்சு கேட்டு நட இல்ல” என்று முடித்த போது அவள் குரலில் எச்சரிக்கை அப்பட்டமாக நிறைந்திருந்தது.


அவள் எரிச்சலிலும் எச்சரிக்கையிலும் மேலும் புன்னகை எழ, 'இல்லைன்னா' என்று தலை சாய்த்து அவளை பார்த்தவன் சட்டென 'என்னடி பண்ணுவ..??' என்று கேட்டு அவளிடையில் நறுக்கென கிள்ளி வைத்தான்.,


அதை எதிர்பாராத அலர்விழியோ 'டேய்...' என்று பதறிப்போய் அவசரமாக திரும்பி அவர்களை பார்க்க அங்கு கீர்த்தியும் சரணும் அவர்கள் உலகில் சஞ்சரித்து கொண்டிருந்தனர்.


ஆசுவாசமூச்சு எடுத்தவாறே நெஞ்சில் கைவைத்து அலர் திரும்பவும் 'சொல்லுடி குள்ளச்சி என்ன பண்ணுவ..??' என்றான் மீண்டும் சீண்டலாக.




'டேய் உனக்கு எத்தனையோ முறை சொல்லிட்டேன் அப்பவும் அடங்கமாட்டியாடா..??' என்று இடையை தேய்த்து விட்டவாறே சீறிட,




அப்போதும் விடாமல் எழில் வெகு அலட்சியமாக அவளை பார்க்க அதில் அலரின் பொறுமை முற்றிலுமாக கரைந்து போனது,




‘இதோ பார் மாமா இப்படியே பேசிட்டு இருந்த சூடா இருக்க சாம்பாரை கைதவறிடுச்சின்னு சொல்லி தட்டுக்கு பதில் உன்மேல ஊத்திவிட்டுடுவேன்' என்று கூறவும் வாயருகே கொண்டு சென்ற கரம் அந்தரத்தில் மிதக்க அதிர்த்து போனான் எழிலன்.


அவனிடம் அசைவில்லாததை கண்டு அவன் முன் அலர் சொடக்கிட,


'அடிப்பாவி ஏய் என்னடி சொல்ற..??' என்று இன்னமும் அதிர்ச்சி விலகாமல் கேட்க




"ஆமாடா ஆதாரமே இல்லாம சம்பவம் பண்ணிடுவேன் ஆனா சேதாரம் உனக்கு தான் வசதி எப்படி..?? என்று அவள் புருவம் உயர்த்த,


'அரண்டுபோனான் எழிலன்..!!'


அதை கண்ட சரண் "என்னண்ணா அச்சு ஏன் உங்களுக்கு திடீர்ன்னு இப்படி வியர்க்குது முகமும் ஒருமாதிரி இருக்கு..??" என்று கேட்க,


எழிலோ பதில் கூறமுடியாமல் எச்சில் கூட்டி அலரை பார்க்க அவளோ அந்த பயம் இருக்கணும்..!! என்று குனிந்து எழிலிடம் எச்சரித்தவள் சரணிடம்..,





"அது ஒன்னும் இல்ல மாமா அவருக்கு சூடா சாப்பிட பிடிக்கும் சாம்பார் ஆறிப்போனதால இன்னும் கொஞ்சம் சூடு பண்ணி கொண்டு வந்து ஊத்த சொன்னார்" என்றவள் இறுதி வார்த்தைகளில் அழுத்தம் கூட்டி எழிலை பார்க்க அவள் பார்வையோ ‘இனி வாயை திறப்ப..??’ என்ற கேள்வியை தேக்கி இருந்தது.




'அப்படியாண்ணா..?? என்று எழிலை கேட்டவன் இன்னும் அவன் முகம் அதிகமாக வியர்த்திருப்பதை கண்டு,





"கீர்த்தி பேன் இன்னும் கொஞ்சம் பாஸ்ட்ட வை" என்று சொன்னவன் அலரிடம் திரும்பி

'கேஸ் கனெக்ஷன் இன்னும் அப்பளை பண்ணலை அமுலு இண்டக்ஷனும் பாக்ஸ்ல இருக்கும் இன்னும் பிரிக்கலை இரு நான் வந்து எடுத்து தரன்' என்று எழ,





பதறிப்போனான் எழில், 'டேய் டேய்... எங்க போற உட்காரு'





'இல்லண்ணா உங்களுக்கு சூடு பண்ண...'





உன் பாசத்துக்கு ஒரு அளவில்லையாடா..?? என்பதாக அவனை பார்த்தவன் , 'அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ உட்காந்து சாப்பிடு' என்று சரணை அமர்த்த





"பரவாலண்ணா ரெண்டு நிமிஷம் நான் எடுத்து குடுத்துட்டு வரேன்" என்றவன் 'நீ வா அமுலு' என்று அலரை அழைக்க அவளோ இதழ்கள் துடிக்க புன்னகையை கட்டுபடுத்தியவாறு 'இதோ வந்துட்டேன் மாமா' என்றாள்.





'டேய் சரண் அவ சத்தமே இல்லாம ஒரு கொலை பண்ண பார்க்கிறா அதுக்கு வெப்பனை சானை பிடிச்சி கொடுக்குறியேடா பாவி உட்காருடா ..!!' என்று எழில் கர்ஜிக்கவும்








'ஏன் மாமா..?? ஏன்ண்ணா..??' என்று சரண் கீர்த்தி ஒரு சேர கேட்கவும்,








அவர்களுக்கு பதிலளிக்க முடியாமல் அலரை பார்க்க அவளோ சிரிப்பை அடக்கிக்கொண்டு கரண்டியில் சாம்பாரை எடுக்கவும் அதில் மேலும் பதறியவன்,

'ஒன்னு... ஒன்னும் இல்லடா ஒண்ணுமே இல்ல எனக்கு இனி ஆறிப்போன சாம்பார் ஊசிப்போன வடை தான் பிடிக்கும் போதுமா..?? நீங்க சாப்பிடுங்க' என்றவன் சரண் அமர்ந்து சாப்பிட தொடங்கவும் தான் நின்று போயிருந்த மூச்சை ஆழ்ந்து எடுத்துவிட்டு அலரிடம் ,



"ஏய் புருஷனுக்காக கொலையும் செய்வாள் பத்தினின்னு கேள்வி பட்டிருக்கேன் ஆனா நீ உன் மாமனுக்காக புருஷனை கொல்ல பார்ப்பியாடி..??" என்று பல்லை கடித்து கொண்டு கேட்க,





'டேய் அவங்களே இப்பதான் சமாதானம் ஆகி இருக்காங்க நீ வழக்கமான உன் வேலையை இங்க ஆரம்பிச்சி அவங்களை பிரிச்சிவிட பார்த்தா வேற என்ன செய்ய சொல்ற..??' என்றவள் 'நீ வாயை வச்சிட்டு அமைதியா இருந்தா நானும் அமைதியா இருப்பேன்' என்றாள்.



சில நொடிகள் அமைதியாக அவளை பார்த்திருந்தவன் பின் ஒரு முடிவோடு, 'அப்படியாடி செல்லம்..??' என்று கூர்மையாக அவளை பார்த்தவன் பார்வையே சொன்னது நிச்சயம் ஏதோ செய்யப்போகிறான் என்று..!!



“டேய் என்ன ப்ளான் பண்ற..??” என்று அவன் எண்ணப்போக்கை கண்டு கொண்டு அவள் கேட்க,


'போடி குள்ளச்சி நீ கேட்டு நான் பதில் சொல்லனுமா..??' என்பதாக அவளை பார்த்தவன் எழுந்து சென்று கைகளை கழுவிக்கொண்டு வந்து வாங்கி வந்த கவரில் இருந்து மிக்சரை எடுத்து கொண்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான்.
Sambar
 

Priyaasai

Active Member
வாழ்வு - 33.2

அலரோ அவன் மிக்சரோடு அமர்ந்ததில் புரியாமல் ஒரு வித பதட்டத்தோடு அவனை பார்க்க எழிலோ மிக்சரை வாயில் போட்டுக்கொண்டே, “சரண் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்றான் வெகு தீவிரமான குரலில்.


‘என்னண்ணா..??’



“அது ஒண்ணுமில்லைடா யாரும் எதிர்பார்க்காத என்னென்னமோ நடந்துடுச்சி இத்தனை நடந்த பிறகும் நீயும் கீர்த்தியும் எல்லாம் மறந்து பழையபடி ஒன்னு சேர்ந்தா முருகனுக்கு அலகு குத்தி பால் காவடி எடுக்குறதா வேண்டி இருக்கேன்’ என்று நிறுத்தி அலரை பார்க்க,


அவளோ 'பால் காவடியா..?? நமக்கு தெரியாம இது எப்போ..??’ என்பதாக அவனை பார்த்திருந்தாள்,




ஆனால் எழிலின் அன்பை கண்ட சரணுக்கு நெகிழ்ந்து போனது.., “இது தானே எழில்..!! அன்று சரண் காரணமே இன்றி கீர்த்தியை நாதன் வீட்டில் விட்ட போது எழில் அவனை கோபித்து கொண்டதில் கூட சரண் கீர்த்தி மீதான அவன் அக்கறையும் அன்புமே முன்னிலை வகித்ததே அதை புரிந்து கொண்டதால் தானே சரணும் எழிலிடம் எதுவும் பேசாமல் அமைதியாக வெளியேறினான்.., இப்போதும் அவர்கள் வாழ்க்கைக்காக அவன் பால் காவடி எடுக்க போகிறேன் என்று கூறியதில் இன்னுமே அவன் மீதான மரியாதை கூடியது.



‘எதுக்குண்ணா இதெல்லாம் உங்களுக்கு தேவை இல்லா..’ என்று சரண் ஆரம்பித்த போதே,




“மாமா மாமா.., ஒரு நிமிஷம் எதுக்கு அவசரபடுறீங்க இருங்க, இருங்க, அவர் முழுசா சொல்லி முடிக்கட்டும் அப்புறம் நாம பேசிக்கலாம்..” என்றவள் எழில் புறம் திரும்பி இதழ்களை விரித்து தலைசாய்த்து



அவனிடம் ‘நீங்க சொல்லுங்க’ என்று பல்லைகடித்து கொண்டு கூறினாள்.



எழிலோ அவள் கோபத்தில் எழுந்த சிரிப்பை கட்டுபடுத்த முடியாமல் கீழிதழை கடித்தவாறு மீசை துடிக்க அவளை பார்க்கவும்..,




அதை கண்டு கொண்டவள், அவன் அருகே குனிந்து மெல்லிய குரலில் "டேய் நீ ஏதோ கலகம் பண்ண போறன்னு புரியுது வேண்டாண்டா செல்லம் ப்ளீஸ் மாமா பாவம் கீர்த்தியும் பாவம் ஒழுங்கா அமைதியா இரு" என்று இதுநேரம் வரை மிரட்டி கொண்டிருந்தவள் இப்போது இறங்கி வந்து கெஞ்சலுடன் முடிக்க,





எழிலோ எள்ளலாக அவளை பார்த்தவன் சரணிடம் "பழனிக்கு பால் காவடி மட்டும் இல்லை சரண் திருப்பதிக்கும் இங்க இருந்து நடந்தே போய் மொட்டை போடுரதாவும் வேண்டி இருக்கேன்” என்று கூற,



சரண் பதிலளிக்கும் முன் கீர்த்தி அவனிடம், ‘என்ன மாமா இது..!! எங்களுக்காக எதுக்கு இப்படி எல்லாம் வேண்டுதல் வைக்கிறீங்க..??’ என்று சங்கடத்துடன் கேட்க,



அலரோ ‘இரு கீர்த்தி’ என்றவள் எழிலிடம், “அவ்ளோ தானா இல்லை இன்னும் இருக்கா..??” என்று பொறுமையை இழுத்து பிடித்து கேட்க,




‘இப்போதைக்கு அவ்ளோதான் சாப்ட்டு முடிச்சிட்டு கீர்த்தியை கூட்டிட்டு நாம் கிளம்பலாம் வெள்ளிக்கிழமை இங்க வந்து சரனை கூட்டிட்டு திருப்பதிக்கு கிளம்பனும்டி இதுதான் ப்ளான்’ என்று சத்தமே இல்லாமல் இடியை இறக்க,


சரண் கீர்த்திக்கு தூக்கி வாரி போட்டது.




‘ண்ணா நீங்க பால் காவடி எடுக்குறதுக்கு கீர்த்தியை எதுக்கு கூட்டிட்டு போறீங்க’ என்ற சரண் சாப்பாட்டை பாதியில் விட்டு எழுந்தே நின்றுவிட்டான்.




அலர்விழிக்கோ பாத்திரத்தை தூக்கி எழிலின் தலையிலேயே ஒன்று வைக்கும் அளவு ஆத்திரம் ஆனால் அதை செய்ய முடியாத நிலையில் நின்றிருப்பதால் யாருக்கும் தெரியாமல் அவன் தொடையில் கிள்ளிட,



அவனோ ‘ஆஆ எதுக்குடி கிள்ளுற..??’ என்று அலரை முறைத்து சரண் புறம் திரும்பி, “ஆமாடா ஒருவாரம் விரதம் இருந்து திருப்திக்கு நடந்தே போய் உனக்கு மொட்டை போடறதா தான் வேண்டி இருக்கேன்.. அதனால கீர்த்தி இங்க இருந்தா சரிபடாதுஅதான் நாங்க அவளை கூட்டிட்டு போறோம் வெள்ளிக்கிழமை இங்க வந்து எல்லாரும் பாதயாத்திரையா கிளம்பி உனக்கு மொட்டை போட்டுட்டு அப்படியே பழனிக்கு கிளம்பி காவடி..” என்று நிறுத்தி அவர்களை பார்க்க,




கீர்த்தியே எழில் கூறியதை கேட்டு திகைத்து போய் பார்த்திருக்க 'ஒரு வாரம் விரதம் பின் திருப்பதி, பழனி..'என்றதில் சரண் விதிர் விதிர்த்து போனான்.


‘அண்ணா யாரை கேட்டு இப்படி எல்லாம் வேண்டுதல் வச்சீங்க..?? என்னால முடியாது நான் கீர்த்தியை எங்கயும் அனுப்ப மாட்டேன் அவ இங்க தான் இருப்பா’ என்று அருகே அமர்ந்து இருந்த அவள் கையை பிடித்து கொண்டு கூறிய சரணிடம் அப்படி ஒரு ஆத்திரம்.


‘யாரை கேட்டுடா வைக்கணும்..?? உன் இஷ்டத்துக்கு காரணமே சொல்லாம கீர்த்தியை விட்டுட்டு கிளம்பிட்ட எல்லாரும் எவ்ளோ பயந்து போயிட்டோம் தெரியுமா..?? எங்க நீங்க ரெண்டு பெரும் நிரந்தரமா பிரிஞ்சிடுவீன்களோன்னு யாருக்குமே சோறு தண்ணி இரங்கலை அப்போ ஏதாவது ஒரு வேண்டுதலுக்கு நீங்க சேர்ந்துட மாட்டீங்களான்னு ஊருல இருக்க தெய்வம் ஒன்னு விடாம வச்சது, உங்க நல்லதுக்காக வேண்டினா அதையே நீ கேள்வி கேட்பியா..??’ என்று சரணுக்கு மேல் எழில் குரல் உயர்த்தவும் அதில் இருந்த ஆதங்கம் புரிந்தாலும்,


'அண்ணா அதுக்காக மொட்டை, காவடி..' இதெல்லாம் என்று கீர்த்தியை பார்க்க அவளோ வியர்த்த கரங்களை அவனுடன் கோர்த்து கொண்டு இன்னுமே சரணை ஒட்டிக்கொண்டு 'நான் போக மாட்டேன்' என்பது போல நின்றாள்.




நான் பார்த்துக்கொள்கிறேன் என்பது போல அவளை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டு, 'எனக்கு ப்ராஜெக்ட் போயிட்டு இருக்குண்ணா இப்போ லீவ் போட முடியாது ஒரு ரெண்டு மாசம் கழிச்சி இதெல்லாம் வச்சிக்கலாம்' என்று தீர்மானமாக கூற,




அப்படியா..?? என்று இருவரையும் ஆழ்ந்து பார்த்து சில நொடி யோசித்தவன், "ப்ராஜக்ட் ரொம்ப முக்கியம் அதே சமயம் சாமி விஷயம் எப்பவும் ஒத்தி போடக்கூடாதுன்னு சொல்லுவாங்க சரிடா நீ ரெண்டு மாசம் கழிச்சே வா நாமோ அப்பவே வேண்டுதல் எல்லாம் முடிச்சிக்கலாம் என்ன ஒன்னு விரதம் இருந்து தான் கோவிலுக்கு போகணும் அதனால என்ன நாங்க இப்போ கீர்த்தியை கூட்டிட்டு போறோம் நீ ரெண்டு மாசம் கழிச்சி வா" என்ற எழிலுக்கு கீர்த்தி சரண் முகம் இருண்டு போனதை கண்டு கட்டுபடுத்த முடியாத சிரிப்பு எழ முயன்று அதை மீசையினுள் பதுக்கிட,




என்னது ரெண்டு மாசமா..?? என்று கேட்ட சரணின் முகத்தில் ரத்தபசை இழந்து போனது உடனே, "அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை நான் ஆபிஸ்ல பேசிக்கிறேன் நாளைக்கே நாம கோவிலுக்கு போலாம்ண்ணா காவடி, மொட்டை எல்லா.. என்றவனை இடையிட்ட எழில்,




மேவாயை தேய்த்து விட்டவாறே 'சொல்ல மறந்துட்டேன்டா பால் காவடியோட சேர்த்து உனக்கு அலகு குத்துறதாவும் வேண்டி இருக்கேன்' என்று கூற,


'எதுக்கு..??' என்ற கேள்வி கீர்த்தியிடம் இருந்து வந்தது.



'அதுவா கீர்த்தி என்னன்னே தெரியலை கொஞ்ச நாளாவே சரணோட பேச்சு கண்ட்ரோல் இல்லாம போகுது அதான் அலகு குத்தினா அவன் பழையபடி மாற வாய்ப்பு இருக்கு இல்லையா..??' என்று முடிக்க



எழில் ஆரம்பித்த போதே அவனை தடுக்கும் மார்க்கம் புரியாமல் நாற்காலியில் அமர்ந்து நெற்றியை பிடித்துக்கொண்ட அலரோ மனதுக்குள் "பேசியே அவங்களை கூடிய சீக்கிரம் ஐசியு பேசென்ட் ஆக்க போற உனக்கு தான்டா அலகு குத்தனும்" என்று கருவியவளுக்கு இப்போதே எழுந்து சென்று பேசி கொண்டிருக்கும் எழிலின் வாயில் ஓங்கி ஒரு குத்து விடும் வேகம் எழுந்தாலும் சரண் முன்னிலையில் அதை செய்து சரணிடம் திட்டு வாங்க அவள் தயாராக இல்லை.. அதனால் நிமிர்ந்து அவனை பார்த்தவள்




'நீ முடி உன்னை பிறகு பார்த்துகொள்கிறேன்' என்பதாக எழிலை பார்க்க, எழிலோ அவளை நோக்கி இதழ்களை குவித்து கண்சிமிட்டிட,




'டேய்' என்று பல்லை கடித்தவளுக்கு தன்னை கட்டுபடுத்துவது பெரும்பாடாகி போனது.



அப்போதும் விடாத எழில் தொடர்ந்து, “அது மட்டுமில்லடா உங்க ரெண்டு பேருக்கும் சீக்கிரமே குழந்தை பிறக்கறதுக்காக பழனில இருந்து வந்த பிறகும் இன்னும் மூணு மாசம் விரதம் இருக்க வச்சி மலேசியால இருக்க பத்துமடை முருகன் கோவிலுக்கு உங்களை கூட்டிட்டு நீந்தியே போய் தரிசனம் பண்றதாவும் தான் வேண்டி இருக்கேன்” என்றதுமே,


எழிலுக்கு அவர்கள் இருவரின் முகம் போகும் போக்கை கண்டு கட்டுபடுத்த முடியாமல் சிரித்திட அதில் அலரின் கோபம் இருமடங்காகி போனது.



“ஏன் மாமா மூணு மாசம் விரதம் இருந்தா போதுமா..?? என்று கேட்டவாறு எழில் முன்னே வந்து நின்ற அலர் எழில் மீசை துடிக்க அவளை பார்க்கவும்,



'ஏன் கேட்கிறேன்னா அவங்களுக்கு சீக்கிரமே குழந்தை பிறக்கனும்ன்னு வேண்டினதும் வேண்டுனீங்க ஒரு மூணு வருஷம் விரதம் இருந்து வரமாதிரி வேண்டி இருந்தா இன்னும் சீக்கிரமே அவங்களுக்கு குழந்தை பிறக்குமே' என்று எழிலிடம் கேட்க,

அவன் இன்னுமே வெடித்து சிரித்தான் எழில் அவன் சிரிப்பிலும் அலரின் முறைப்பிலும் தான் சரண் கீர்த்திக்கு மூச்சே திரும்பி வந்தது அதுநேரம் வரை அவர்களை பதற வைத்து கொண்டிருந்தவனை கட்டுபடுத்த முடியாமல் அலர் இடையில் ஒரு கரம் பதித்து பேச்சின்றி நின்றுவிட்டாள்.




அவன் சிரிப்பில் இத்தனை நேரம் தங்களை வம்பிழுத்து இருக்கிறான் என்பது புரிய தம்பதியர் முகத்திலும் புன்னகை, சரணோ மூச்சை ஆழமாக எடுத்துவிட்டு, “அண்ணா இப்படியா விளையாடுவீங்க...?? வேண்டுதல்ன்னு சொல்லவும் நாங்க நிஜம்ன்னு நெனச்சிட்டோம்” என்றவனின் முகத்தில் இன்னுமே புன்னகை விரிந்தது..


கீர்த்தியும் “கொஞ்ச நேரத்துல பதற வச்சிட்டீங்க மாமா” என்று எழிலை பார்க்க,



'பயந்துட்டியாடா' என்று கேட்ட எழில் சரணை நெருங்கி அணைத்து தட்டி கொடுத்தவன் அவர்களிடம், "இப்படி உங்களை பார்க்க எவ்ளோ நல்லா இருக்கு கடைசியா எங்க கல்யாணம் ஆன புதுசுல உங்களை ஹாஸ்பிட்டல் இப்படி கை கோர்த்து சந்தோஷமா பார்த்தது இத்தனை வருஷம் கழிச்சி இப்பதான் பார்க்கிறேன் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குடா.. எப்பவும் சொல்றது தான் பழசை கிளறி காயத்தை அதிகபடுத்தாம, இருக்க ஒரு வாழ்க்கையை சந்தோஷமா அனுபவிச்சி வாழுங்க... இனி யார் உங்களுக்கு நடுவுல வந்தாலும் இப்படியே நாங்க பிரிய மாட்டோம்ன்னு இன்னும் சத்தமா சொல்லுங்க..!! என்று கூற,


அலரோ உஷ்ண மூச்சுக்களை எடுத்தவாறு எழிலை முறைத்து கொண்டிருந்தாள். இனியும் தாமதித்தால் மீண்டும் ஏதேனும் வம்பிழுப்பான் என்பதால் 'சரி மாமா நாங்க கிளம்புறோம்' என்று அவள் தோள்பையை எடுக்க,


'அமுலு நீ இன்னும் சாப்பிடலை சாப்ட்டுட்டு போ' என்று சரண் கூற,



'அதெல்லாம் நான் போற வழியில பார்த்துக்குறேன் மாமா..!!' என்று கிளம்புவதிலேயே முனைப்புடன் இருக்க கீர்த்தியோ விடாப்பிடியாக அலரை அமர்த்தி பரிமாறி இருந்தாள்.



அலர்விழியோ எங்கே விட்டால் மீண்டும் ஆரம்பித்து விடுவானோ என்று எழிலின் கரத்தை பிடித்து தன்னருகே அமர்த்திகொண்டே உண்டு முடித்தாள்.


அவள் சாப்பிட்டு முடிக்கவும் அவளிடம் வந்த சரண் "இது வருண் பர்த்டேக்கு அமுலு அவன் கிட்ட கொடுத்துடு" என்றவன் மற்றொரு பையை அவளிடம் நீட்டி "இது உனக்கும் அண்ணாக்கும்" என்று கொடுத்தவன்,



'இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்' என்று கூறவும் அதை கேட்ட கீர்த்தி,


'இன்னைக்கு உங்களுக்கு வெட்டிங்டேவா' என்று ஆச்சர்யமாக கேட்க,


'இன்னைக்கு இல்ல கீர்த்தி நாளைக்கு' என்று சரண் கூறவும் எழிலிடம் பையை கொடுத்து விட்டு வந்த அலர் சரணிடம், 'ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா' என்றவள் கீர்த்தியையும் அழைக்க,


'நான் எதுக்கு..??'



'சின்ன வயசுலேயே அம்மா பழகினது கீர்த்தி நாங்க எல்லாருமே பர்த்டேக்கு தாத்தா, பாட்டி, மாமா கிட்ட ஆசிவாதம் வாங்குறது வழக்கம் அது அப்படியே மற்ற விசேஷ நாட்களிலும் தொடரும்.., இப்போ நீ எனக்கு அக்கா மட்டும் இல்ல மாமியும் கூட அதனால தப்பில்லை மாமா பக்கத்துல நில்லு' என்றவள் அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று நிமிர,



அனைத்தையும் புன்னகை முகமாக பார்த்து கொண்டிருந்த எழில் அவளருகே வந்து 'அப்புறம் சரண்' என்று ஆரம்பிக்க,


'சரி மாமா எங்களுக்கு டைம் ஆச்சு இன்னொரு நாள் வரோம் கிளம்புறோம் பை' என்று எழிலை பேச விடாமல் செய்ய,


'ஒன்னும் லேட் ஆகிடல ஒரு நிமிஷம் இருடி முக்கியமான விஷயம்..'


"எதுவா இருந்தாலும் இப்போ நீ வாயே திறக்கக்கூடாது புரியுதா..??" என்று எச்சரிக்கும் குரலில் அலர் கூறவும்,


'ஏய் இருடி அவங்க கல்யாணத்துக்கு நான் கொடுத்த ஏர் டிக்கெட்ஸ தான் கிழிச்சி போட்டுட்டான் இப்போ வேற கிப்ட் எடுத்துட்டு வைத்திருக்கேன் அதை கொடுத்துட்டு வந்துடுறேன்'



'கிப்ட்டா அப்படி எதுவும் கார்ல பார்க்கலையே' என்று அலர் விழித்து நிற்க அடுத்த சில நொடிகளில் அவள் முன் உலக்கையை ஆட்டி கொண்டு இருந்தான் எழில்.


அதை கண்ட அலர் திகைத்து நின்றவள் பின் சுதாரித்து 'டேய் வேண்டாம்' என்று அவன் சட்டையை பிடித்து இழுப்பதற்குள் உலக்கையை கீர்த்தியிடம் கொடுத்திருந்தான் எழில்.



'என்ன மாமா இது..??' என்று புரியாமல் கீர்த்தி கேட்க,



"இதுவும் உங்க பரம்பரை சொத்து தான் கீர்த்தி உங்க அண்ணன் இவளுக்கு சீர்வரிசையா கொடுத்தான் இப்போ அதை நான் உனக்கு அண்ணன் ஸ்தானத்துல இருந்து கொடுக்குறேன்"




"இதை வச்சி என்ன பண்றது மாமா..??" என்று புரியாமல் கீர்த்தி அதை திருப்பி பார்க்க,



'அது கீர்த்தி...' என்றவனின் வாயை பொத்திய அலர்



'அது சும்மா கொடுத்தது கீர்த்தி நீ தூக்கி போட்டுடு' என்று கூற,


எழிலோ அவள் கையை நறுக்கென கடித்து விட்டு, 'இல்ல கீர்த்தி அபப்டி எல்லாம் செஞ்சிடாத அது முக்கியமான' என்றவனின் வாயை மற்றொரு கையால் மீண்டும் அடைத்தவள், 'டேய் மாமா பாவம்டா போதும் விட்டுட்டு ' என்றவாறே அவனை வாசலுக்கு இழுத்து செல்ல,


அதை கண்ட சரண் 'அமுலு இதென்ன பழக்கம் அண்ணாவை பேச விடு அவர் உலக்கை சம்பந்தமா ஏதோ முக்கியமா சொல்ல வரார்'


'ஐயோ மாமா அவரை பேசவிட்டா உங்களுக்கு தான் ஆபத்து புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ் நாங்க கிளம்புறோம்' என்று எழிலை இழுத்து சென்று காரில் தள்ளி ஸ்டார்ட் செய்து எடுக்க எழிலோ ஜன்னல் வழியே தலையை நீட்டி கீர்த்தியிடம்,


"கீர்த்தி அவ பேச்சை கேட்காத அதை பத்திரமா வச்சிரு உலக்கையோட மகிமையை பத்தி நான் உனக்கு கால் பண்ணி சொல்றேன் சரியா" என்று அவன் கூறிமுடிப்பதற்க்குள் அலர் காரை தெரு கோடிக்கு கொண்டு சென்றிருந்தாள்.


சரணும் கீர்த்தியும் உறையாத புன்னகையோடு செல்லும் அவர்களையே மகிழ்ச்சியுடன் பார்த்துகொண்டிருந்தனர்.
Super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top