வாக்காளர்களின் கவனத்திற்கு

Advertisement

Sahi

Well-Known Member
நம் ஜனநாயக கடமையை ஆற்றும் நேரம் இது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இன்று நாம் சிந்தித்து செயல்படவில்லை எனில் திரும்பவும் நம் அடிப்படை தேவைக்கே கையேந்தும் நிலை ஏற்படும்.

2019 கணக்கெடுப்பின்படி 1.5 கோடி புது வாக்காளர்கள் (18 முதல் 19 வயதுடையவர்கள்) இந்த தேர்தலில் முதல் முறையாக தங்கள் வாக்குகளைப் பதிவிடயிருக்கிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் நாம் முன்னுதாரணமாக திகழவேண்டாமா?

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

சிந்தித்து செயல்படுங்கள்.

கடமையை கடனே என்று செய்யாமல் பொறுப்புடன் செயலாற்றுங்கள்.

பிள்ளைகளை பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ சேர்க்கும் போது நாம் எந்த அளவுக்கு மெனக்கெடுகிறோம், பெண் பிள்ளையின் திருமணத்தில் பிள்ளை பார்ப்பதில் எவ்வளவு பேரை சலித்தெடுக்கிறோம், இளையதலைமுறையினரே ஒரு வேலையில் சேர்வதற்கு முன் அந்த அலுவலகம் பற்றி எவ்வளவு கூகிள் சேர்ச் செய்கிறோம், அந்தளவு ஏன் நாம் நம் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பதில் முனைப்பெடுப்பதில்லை?

மேற்கூறிய விசயங்கள் நம் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமோ அதைவிட முதன்மையானது நம் தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது. அதுவே நம் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும். அதை இந்த 5 ஆண்டு காலங்களில் உணர்ந்திருக்கிறோம்.

இந்நிலை மாறவேண்டும் என்றால் அது நம் கைகளில்! கடமையை உணர்ந்து வாக்களிப்போம்!

வாக்களிக்கும் நாள் நெருங்கும் வேளையில் நாம் ஒரு analysis செய்வோமே.

நம் தொகுதியின் வேட்பாளர்கள் மற்றும் அவர் சார்ந்த கட்சியைப் பற்றியதே அது.

முதலில் அவர் சார்ந்த கட்சி, ஆட்சியில் இருந்தது எனில், அவர்கள் செய்த நன்மைகள் - தனி மனிதர்களுக்கு இல்லை மாநிலத்திற்கு, நாட்டின் நலனிற்கு.

ஆட்சியில் சில பல தவறுகள் இருக்கும். To err is human. ஆம் தவறுகளை மன்னிக்கலாம் திருந்த (திரும்பவும்) வாய்ப்பும் கொடுக்கலாம். ஆனால் தெரிந்தே செய்யும் தப்புகள் தண்டனைக்குரியது.

அடுத்து அந்தக் கட்சி இதுவரை ஆட்சி பீடத்தை எட்டியது இல்லை என்றால் ஒரு முறை சந்தர்ப்பம் கொடுப்பதில் தவறோன்றும் இல்லை. அதற்கு முன் அவர்கள் சேர்ந்த கூட்டணிக் கட்சிகளின் நிலையையும் ஆராய வேண்டும்.

இன்று சாதி கட்சிகள் என்ற மாய வலைகள் சுய விளம்பரத்திற்காக, தங்களின் வாழ்க்கையை உயர்த்திக்கொள்வதற்காக மக்களை துண்டாடுகிறார்கள்.



"சாதிகள் இல்லையடி பாப்பா;

குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;

நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்"

என்று சொன்ன பாரதி பிறந்த மண்ணில் வாழும் நாம் இவர்களின் எண்ணத்திற்கு செவி சாய்க்கக்கூடாது.

சாதிகள் இல்லாத, குலத்தில் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லாத குடிமையை இனியாவது உருவாக்குவது நமது கடமை. கைக்கோர்த்து கடமை ஆற்றுவோம் புதிய தேசத்தை உருவாக்குவோம்.

தங்களின் கட்சியை நிலை நிறுத்துவதற்காக தேர்தலுக்கு தேர்தல் கூட்டணித் தாவும் கட்சிகள் நமக்கு தேவையில்லை. நிலையாக இல்லாதவர்கள் எப்படி நிலையான ஆட்சி அமைப்பார்கள்.

கொள்கையே இல்லாத மற்றும் முற்றிலும் முரண்பாடான கொள்கைகள் உடைய சந்தர்ப்பவாதக் கூட்டணி வேலைக்கு ஆகாது. இன்னைக்கு கைகோர்த்து காட்சிக் கொடுப்பார்கள். நாளைக்கு அவர்கள் பஞ்சாயத்திற்கே அவர்களுக்கு நேரம் போதாது. இதில் மக்கள் பணி கேள்விக்குறி.

தேர்தலுக்கு மதமே தேவையில்லாத போது மதச்சார்பு எங்கே இருந்து வருகிறது. இவர்கள் மக்களிடையே பிரிவினையை விதைத்து ஓட்டு வங்கிகளைச் சிதைக்கிறார்கள்.

சிறுபான்மையினர் என்ற பெயரில் அவர்களை இன்னும் கீழ் இறக்குகிறார்களே தவிர மேன்மைக்கு வழி இல்லை. இந்த வார்த்தைகள் எல்லாம் அவர்களின் தேர்தல் நேர ஜாலம் மயங்காதீர்கள்.

பச்சோந்திகளை பகுத்தறியுங்கள் இவர்களுக்கும் மக்கள் நலனிற்கும் சம்மந்தமே இல்லை. சுயநலத்திற்காக நம்மை பலிகடா ஆக்கிவிடுவார்கள்.

அடுத்து நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது கட்சிகளின் தேர்தல் அறிக்கை. ஒரு காலத்தில் தேர்தல் அறிக்கைகள் அத்தேர்தலின் வெற்றியை உறுதி செய்தது. ஆனால் இன்றோ சிறு குழந்தையும் சொல்லும் அது எல்லாம் பிரச்சாரத்தின் போது மட்டுமே பயன்படுத்தப்படும் வெறும் வெற்று வார்த்தைகள் என்று.

அறிக்கைகள் என்பது உண்மையாகவும், செய்து முடிக்கக் கூடியதாகவும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும் இருக்க வேண்டும்.

முக்கியமான ஒன்று இலவசத்திற்கு மயங்காதீர்கள். நம் வரிப்பணமே இப்படி வீணாகிறது. அரசாங்கத்தின் கடமை மக்களின் நலன், அவர்களின் கல்வி, அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு இவற்றை நல்குவதே. இதை செய்ய வக்கில்லாதவர்கள் இலவசமாகக் கொடுக்கிறேன் என்று நம்மை ஏமாற்றுகிறார்கள். அதை நாமும் பயபக்தியோடு வரிசையில் நின்று வாங்கிக்கொள்கிறோம்.

அவர்களின் படங்களை அச்சடித்துக் கொடுக்க அது அவர்களின் கை காசோ, கட்சிப் பணமோ கிடையாது. தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள்.

கட்சிக்காகவோ, தனி மனிதர்களுக்காகவோ வாக்குகளை வீணாக்காதீர்கள். கட்சிகள் நிதியை ஒதுக்கினாலும், நம்மை வந்து சேர வேண்டியது நாம் தேர்ந்த்தெடுத்தவர்களின் கைகளில் உள்ளது. நாம் தேர்ந்த்தெடுப்பவர்கள் நம் தொகுதியின் நலன் காப்பவர்களாக இருக்க வேண்டும்.

இன்றும் பல வீடுகளில் வெறும் சீரியல் சத்தம் மட்டுமே கேட்கிறது. ஏன் வீட்டில் உள்ள பெண்கள் செய்திகள் பார்க்கக் கூடாதா? கேளுங்கள், கட்சி தலைவர்களின் உரைகள், நேர்காணல்கள், பொது மேடைப் பேச்சுக்கள் எல்லாவற்றையும் கேட்டு உங்கள் அக்கம் பக்கம் உள்ள தோழிகளுடன் கலந்துரையாடுங்கள். உங்கள் முடிவு இந்த தேசத்தின் தலை எழுத்தையே மாற்றும். நம்பி செயலாற்றுங்கள்.

இளைஞர், இளைஞிகளே tik tok, pubg என்ற புதை குழிகளில் இருந்து வெளிவாருங்கள். இந்நேரத்தில், உங்கள் பணி தேர்தலின் முக்கியத்துவம் பற்றி அறியாத மக்களிடத்தில் அதை கொண்டு சேர்ப்பதாக இருக்க வேண்டும். பெற்றோர்களே அவர்களுக்கு வழி காட்டுங்கள். அரசியல் meemes போட தெரிந்தவர்களுக்கு இது தெரியாதா? திரியைத் தூண்டி மட்டும் விடுங்கள் வெளிச்சத்திற்கு அவர்கள் பொறுப்பெடுப்பார்கள்.

சுதந்திரத்திற்கு பிறகான நம்முடைய தேர்தல் களத்தையும், அரசியல் அமைப்பையும் rewind செய்யுங்கள். அலசி ஆராய்ந்து முடிவு எடுங்கள். உங்கள் வாக்குகளை உரிய நேரத்தில், உரியவருக்கு அளித்து தேசத்தை உயர்த்துங்கள். சந்தர்ப்பவாத அரசியலுக்கும், ஆட்சியில் இருந்தால் எதுவும் செய்யலாம் என்ற அதிகார வர்க்கத்திற்கும் இந்த தேர்தல் முடிவுகள் ஒரு எச்சரிக்கை மணியாக ஒலிக்கட்டும். இனிமேலாவது ஆட்சிக்கு வருவது மக்களுக்கு வேலை செய்தற்கே அன்றி அதிகார துஷ்பிரயோகத்திற்கு இல்லை என்பதை அனைவரும் உணரட்டும்.

வாழ்க ஜனநாயகம்! வாழ்க இந்தியா!
 

Christy hemraj

Well-Known Member
அருமையா சொன்னீங்க..... Vote podura urimaiyai yarum vitu kudukatheenga.... Unmaiya sollanumna Village la tha athigamana vote pathivaguthu..... City side yarum avlo care panikurathu illa.... Enga oorla lam election booth la mrng ae line la ninu vote poduvanga... Ivlothukum enga oorla booth kedaiyathu... Pakathu oorlatha iruku... 2km.... Nadanthe poi vote poduvom... Enga thatha ku 86 age aguthu... Inum nadathu poi tha vote poduranga.... Itha ethuku soldrena yarum vote podama irukatheenga.... Apuram nalla aatchi varalanu pongatheenga... Yarukum vote poda istam illana nota vote podunga..... Unga vote vera yarum poda mudiyathu.... First namma thirunthuvom.... Automatic Ah ellam Sari agum.... Ithe mathri ungaluku therinjavangaluku sollunga..... Ithu ennoda manasula romba nal ah irukurathu.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top