மெல்லிய காதல் பூக்கும் P20

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அமுதவள்ளியின் டயரியிலிருந்து.....:cry::cry:


அந்த வீடோ மாளிகை மாதிரி இருக்க, மனதில் பயம் கவ்விக் கொண்டது. அந்த வீட்டு மருமகளாக எல்லா சடங்கையும் செய்த பின்னே என்னை உள்ளே அழைத்து சென்றார் உங்கப்பா. வீட்டை சுற்றி வேட்டை நாய்களும், அடியாட்களும் நிறைந்திருக்க அது நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறி விடாதிருக்க செய்யப்பட்ட ஏற்பாடு என புரிந்தது. அப்பொழுதுதான் நிதர்சனம் உரைத்தது. நான் இன்னாரின் மனைவி. இனி என் வாழ்க்கை இவரோடு தான். என்னால் இந்த வாழக்கையை ஏற்க முடியுமா? நான் காதலித்தவர் என்ன ஆனார்? இவர் எதற்கு என் கழுத்தில் தாலி காட்டினார்? ஒரு வேலை அப்பா பார்த்த மாப்பிள்ளையோ! கல்யாணம் நின்ற கோபத்தில் என்னை தேடி வந்து அவரை அடித்துப் போட்டு நான் மயங்கிய நேரம் கழுத்தில் தாலி கட்டினாரோ! அப்பாக்கு இந்த விஷயம் தெரியுமா? மனக் குழப்பம் நீங்காமல் என்னுள் பல கேள்விகள் எழுந்து வண்ணம் இருந்தது.





ஒரு கட்டத்தின் மேல் என் மீதே எனக்கு அருவருப்பாக வர கையை கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அதற்கும் அவரின் வார்த்தைகள் ரணமாகத்தான் வந்தன. அந்த இடத்தை விட்டு போகவும் முடியாமல், ஒவ்வொரு இரவும் படும் வேதனை தாங்க முடியாமல் சாவும் என்னை நெருங்காமல் என்ன வாழ்க்கை இது என்றிருக்கும் பொழுது என்னை சந்திக்க அப்பா வந்தார்.





அவர் தானாக வரவில்லை வரவைக்கப் பட்டிருந்தார். அது என் தற்கொலை முயற்சியால் நேர்ந்தது என்று அறிந்து கொள்ள நேர்ந்தது அவர் சென்ற பின் தான்.



அப்பா நான் அணிந்திருந்த, புடவை, நகைகளை பார்த்து விட்டு நான் பணக்காரனுக்கு வாக்கப் பட்டு இருப்பதாக கருதி கல்யாணத்தை நிறுத்தி அவருக்கு ஏற்படுத்திய தலைகுனிவுக்காகவும், இரண்டு தங்கைகளின் வாழ்க்கையை கேள்விக்கு குறியாக்கியதற்காகவும் சாபமிட்டுவிட்டு சென்று விட்டார்.



"உங்களுக்கு பண்ணதுக்கு ஏற்கனவே தண்டனையை அனுபவித்து கொண்டு தான் இருக்கேன் அப்பா..." என்னால் மனத்தால் மட்டுமே கூறி அழ முடிந்தது.



"அய்ச்சோ அமுதா... எதுக்கு இப்படி அழுற? அவரு கெடக்குறாரு விடு, உனக்கென்ன குறைச்சல் நாளுக்கு ஒரு புடவை, நகை உன் வாழ்வு மிக சிறப்பா இருக்கு. நீ அந்த சங்கரனையோ! உங்கப்பா பார்த்த மாப்பிளையோ! கல்யாணம் பண்ணி இருந்தா இந்த வாழ்க கிடைச்சி இருக்குமா? இல்லலா..." ரத்னவேல் பொய்யாக அனுதாபப் பட அமுதாவின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகியது.



"ஆ... அமுதா இன்னொரு தடவ தற்கொலைக்கு முயற்சி பண்ணினாலோ! என்ன விட்டு இந்த வீட்டை விட்டு போகலாம்னு நினைத்தாளோ! அந்த எண்ணத்தை கை விடு. ஏன்னா... நீ பண்ணுற ஒவ்வொண்ணுத்துக்கும் உன் குடும்பம் தான் பதில் சொல்லணும். இப்போ நல்ல பொண்டாட்டியா கண்ண தொடச்சிகிட்டு உள்ள போ"



அப்பாவை வரவழைத்தது இதற்குத்தான். என்னை மிரட்ட. அதன் பின் அப்பாவையே அம்மாவையே என் வாழக்கையில் நான் சந்திக்கவில்லை. சந்திக்க முயற்சியும் எடுக்க வில்லை. அவர்களாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று இந்த வாழ்க்கையை பழகிக் கொண்டேன்.



:censored::censored::censored::censored::censored:
 

banumathi jayaraman

Well-Known Member
அமுதவள்ளியின் அப்பா பார்த்த மாப்பிள்ளை ரத்னவேல் இல்லையா?
அப்போ எதுக்கு தங்கைக்குக் கூட பிடிக்காமல் வம்படியாக அமுதவள்ளியை ரத்னவேல் கல்யாணம் செஞ்சுக்கிட்டான்?
என்ன காரணம்?
சீக்கிரமா வந்து சொல்லுங்க,
மிலா டியர்
சங்கரன் என்ன ஆனான்?
அமுதாவை மிரட்ட அவளோட பெற்றோரை படாத பாடுபடுத்துறானே இந்த ரத்னவேல் பேமானி
ஒரே குஷ்டமப்பா
சேச்சே ஒரே கஷ்டமப்பா
 
Last edited:

rajienia

Well-Known Member
Amutha neenga tharkolaiku try panathuku pathila ethuga 2 sapatulayum vesam vachurykalam evlo peru nala erunthirupanga:censored:so sad:censored:waiting for epi sis
 

Saroja

Well-Known Member
எதுக்கு இந்த கல்யாணம்
காதலன் என்ன ஆனால
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top