மரவள்ளிக்கிழங்கு இனிப்பு தோசை

Advertisement

Bhuvana

Well-Known Member
மரவள்ளிக்கிழங்கு இனிப்பு தோசை :

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக்கிழங்கு - 1/4 கிலோ
வெல்லம் - 100 கிராம்
பேரீச்சைப்பழம் - 100 கிராம்
ரவை - 1/2 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 1/4 கப்
ஏலக்காய் - 3
தேங்காய் துருவல் - 1/2 கப்

மரவள்ளிக்கிழங்கை நன்கு வேக வைத்து மிக்ஸியில் மையாக அரைத்து கொள்ளவும். வெல்லம், பேரீச்சைப்பழம், ஏலக்காய் இவற்றையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும். {பேரீச்சைப்பழத்தை ஒரு 1/2 மணி நேரம் ஊற வைத்து தான் அரைக்க வேண்டும்.}

ஒரு பாத்திரத்தித்தில் ரவை, கோதுமை மாவு, அரிசி மாவுடன் அரைத்தவையும், தேங்காய் துருவலையும் சேர்த்து போதுமான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

தவா சூடானதும் சின்ன சின்னதாக ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பி வேக விட்டு சுவையான இனிப்பு தோசைகளை பரிமாறவும்.

maniok-jadalny-warzywo-korzeniowe.jpg


15781805_976141692491776_298173231602288828_n.jpg
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மரவள்ளிக்கிழங்கு இனிப்பு
தோசை ரெசிப்பி, ரொம்பவே
நல்லாயிருக்கு, புவனா டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
இவ்வளவு வேலை ஏன்??????:p:p:p

simple-ஆ வேக வைத்த கிழங்கை மசித்து கொஞ்சம் தேங்காய் துருவல், பால், சீனி/வெல்லம் போட்டு சாப்பிட்டால் சூப்பரா இருக்கும்........

இல்லை கொஞ்சம் மீன் குழம்பு......... thats all.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top