மனம் மாறு(ம்+ஓ)! - 1

Divyahari

Writers Team
Tamil Novel Writer
வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி.இன்று தான் நம் கதையின் நாயகன் கௌதமிற்கு திருமணம்.

"கௌதம் குமார் weds சந்தியா " என்ற பிரமாண்ட வரவேற்பு பேனர்களும் அலங்காரத் தோரணங்களும் அனைவரையும் வரவேற்றது.ஆனால் கௌதம் மட்டும் ஒருவரின் வரவிற்காக வழி மேல் விழி வைத்து காத்து இருந்தான்.அது வேறு யாருமல்ல. அவனின் உயிரினும் மேலான அவனின் சத்யாவிற்காக...

(கௌதம்,கணேஷ்,பிரதாப்,அருண் ஆகிய நால்வரும் கல்லூரித் தோழர்கள்.அருண் வெளிநாட்டில் இருந்து வந்து இருப்பதால் அவனை அழைத்து வரச் சென்றுள்ளனர் கணேஷும் ,பிரதாப்பும்…)

கணேஷ், டேய் மச்சி ஃபாரின்லா போய்ட்டு வந்து இருக்க.பெரிய ஆள்டா நீ.

பிரதாப், ஆமா நேத்து ஈவ்னிங்கே வந்துடுவனு சொல்லிட்டு ஏன்டா இவ்ளோ லேட்.

அருண், அத ஏன்டா கேக்கறீங்க ஃப்ளைட் 6 ஹவர்ஸ் லேட் டா.எங்கடா முகூர்த்தத்துக்கு வர முடியாம போய்டுமோன்னு ரொம்ப பயந்துட்ட டா.அப்புறம் அந்த அராத்து சத்யாவ யாரு சமாளிக்கறது.கௌதம் சும்மா இருந்தா கூட இவ சும்மா இருக்க மாட்டா..சாமி ஆடிடுவா..பிசாசு.

பிரதாப், டேய் உனக்கு விஷயமே தெரியாதா.?சத்யா இப்ப ஊர்ல இல்லடா.அவ கனடா போய் ஆறு மாசம் ஆச்சு.

அருண், என்னடா சொல்ற. கணேஷு இந்த பிரதாப் பைய சொல்றது எல்லாம் உண்மையாடா!!!

கணேஷ், ஆமாண்டா.உண்மைதா..சத்யா இப்போ ஊர்ல இல்ல. அவளும் இப்ப வந்துட்டு தா இருப்பா..நேத்து மிட் நைட் ஃப்ளைட்னு சொன்னா..

அருண்., அப்புறம் என்னடா .கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி அவளையும் பிக்கப் பண்ணிட்டு வந்து இருக்கலாம்ல.

பிரதாப், இல்லடா.அவ நேத்தே தெளிவா சொல்லிட்டா,எனக்காக வெயிட் பண்ணாதீங்க.நானே டைம்க்கு வந்துடுவ.கூட இருந்து கௌதம பத்திரமா பார்த்துக்கோங்கன்னு.உனக்கு தா அவள பத்தி நல்லா தெரியுமே.அவ ஒரு விசயம் சொல்லி நாம கேக்கலைனா சாமி ஆடிடுவான்னு.அதா கிளம்பிட்ட.

அருண், அதுவும் கரெக்ட்தான்.கௌதம் கல்யாணத்துக்கு அவ வராமலையா.முகூர்த்த நேரத்துக்குள்ள கண்டிப்பா வந்துடுவா.

கணேஷ், அந்த நம்பிக்கைல தா அங்க மண்டபத்துல ஒரு ஜீவன் காத்துட்டு இருக்குது.

அருண், நீ கௌதம தான சொல்ற...

கணேஷ், வேற யாரு அவன தா சொல்ற.பாக்கவே ரொம்ப பாவமா இருக்குடா அவன.நைட்ல இருந்து பைத்தியகாரன் மாதிரி வாசலுக்கும் ரூம்க்கும் நடத்துட்டு இருக்கான்.இந்த சத்யா ஏ இப்டி பண்றா.அவ இல்லா இவன் இருக்க மாட்டானு தெரியும்ல.தெரிஞ்சும்....ரொம்ப முன்னாடி வேண்டா.அட்லீஸ்ட் ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடியாவது வந்து இருக்கலாம்ல.லாஸ்ட் மினிட்ல எல்லாரையும் டென்ஷன் பண்ணிட்டு,.சே ஒரே எரிச்சலா இருக்கு..


அருண், என்னடா பேசற.சத்யா எது பண்ணாலுப் ஒரு கரெக்ட்டான ரீஸன் இருக்கும்.அவள விடவாடா நமக்கு கௌதம் மேல அக்கரை இருக்க போகுது.24 மணி நேரமும் கௌதம் பத்தி நினைச்சிட்டு இருக்கறவ டா அவ.


கணேஷ், அதுவும் கரெக்ட்தான்.அவள இன்னும் காணம்ங்கற டென்ஷன்ல பேசிட்ட .வேற ஒன்னும் இல்ல.

பிரதாப், சரி சரி ஃப்ரீயா விடுங்கடா.மண்டபத்துக்கு போலாம்.டைம் ஆகிடுச்சு.


வாசலிலேயே நின்றிருந்த கௌதம் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டான்.கார் வந்ததும் அவசரமாக ஓடிச் சென்று கதவைத் திறந்து சத்யா வந்துட்டால சத்யா சத்யா என்று தேடினான்.

அருண், டேய் மச்சி சத்யா வரல டா.நான்தான்ட வந்து இருக்க.எப்டிடா இருக்க கல்யாண மாப்ள.என் நண்பா.ஆருயிர்த்தோழா,என்று ஆசையுடன் கௌதமை தழுவிக் கொண்டான்.

கௌதம், அடச்சீ விடுடா.லாஸ்ட் மினிட்ல வந்துட்டு என்னமோ ரெண்டு வாரத்துக்கு முன்னாடி வந்த மாதிரி பில்டப் கொடுக்கற.வாடா.வந்து தொல.

மாப்ளைய கூப்டுங்க.நலுங்கு வைக்கணும் என்ற அழைப்பைக்கேட்ட நண்பர் கூட்டம் மண்டபத்தினுள் சென்றது.

நலுங்கு மற்ற சடங்குகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது.என்ன கௌதம் தான் மருந்திற்கு கூட சிரிக்கவில்லை.

திருமணப்பெண் சந்தியா கௌதமின் நடவடிக்கைகளால் மிகுந்ந மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தால்.கல்யாண பேச்சு ஆரம்பிச்சதுல இருந்து சரியா போன் பேசறது இல்ல.மெசேஜ்கு ரிப்ளை பண்றது இல்ல.சரி சத்யாவ பத்தி நினைச்சு டென்ஷனா இருப்பாரு தொந்தரவு பண்ண வேண்டானு பாத்தா.கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மணி நேரம் தா இருக்கு.இப்ப கூட என்ன பத்தி நினைக்காம அவள பத்தி நினைச்சுகிட்டு.லவ் மேரேஜ் கே இவ்ளோ கொடுமை.ஆண்டவா இந்த சத்யா நாள என்னோட கல்யாணத்துல எந்த குழப்பமும் வராம நீதா பாத்துக்கணும்.அப்டியே அந்த சத்யாவையும் இங்க வரவிடாம பாத்துக்கோ கடவுளே என்று கடவுளிடம் தன் கோரிக்கைகளை வைத்தாள் சந்தியா…

ஆனால் அவள் வேண்டியதற்கு நேர் மாறாக.தன் தற்போதைய காதலன்.,சற்று நேரத்தில் கணவனாகப் போகிறவன், தன் மனங்கவர்ந்தவ கௌதமே கல்யாணத்தை நிறுத்தப் போகிறான் என்று அறிந்திருக்கவில்லை அவள்.,.


மனம் மாறுமா???…
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "மனம்
மாறு(ம்)+(ஓ)!"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
திவ்யாஹரி டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top