மனம் பொய்த்த பொழுதுகள் - அத்தியாயம் 2 - புது மலர்கள் - முன்னோட்டம்

Advertisement

arasilamparithi

Writers Team
Tamil Novel Writer
புது மலர்கள்

இதுவரை, வீடு விட்டு வெளிச்சென்று தங்கியதில்லை அவன். அப்பா என்றால் மரியாதையும், அம்மா என்றால் அன்பும் மனதில் உடனடியாகத் தோன்றி விடும் எண்ணங்கள்.

இந்த விளக்கம் கூறப்படுவதற்கு முன்பு உள்ளபடியே, அந்த சுந்தரை நோக்கி சிரிப்பதற்குக் காத்திருந்தவர்கள் இப்போது அமைதியாகி விட்டனர். ஏதோ, விளையாட்டாய் கேட்கப்பட்ட கேள்வி என எண்ணியிருந்தவர்களும் கூட, இப்போது, இது எத்தனை உண்மையான ஒரு கேள்வி என சிந்திக்கத் துவங்கி இருந்தனர்.

“நமக்கான ஏதோ ஒரு அடிப்படையான உரிமை மறுக்கப்படுகிறது என்பது போலான எண்ணத்தை வளர்த்துக் கொண்டு, நமக்குள் நாம் புதிய புதிய சிக்கல்களை உருவாக்கிக் கொள்ளாமல் இருப்போம்.”


“இப்போது உங்கள் கவனம் இருக்க வேண்டியது, உங்களை யார் ஏமாற்ற விழைகிறார்கள் என்று கவனிப்பதில் இல்லை; உங்கள் வாழ்க்கையில், நீங்கள் எப்பொழுதும் எதிலும், யாரிடமும் ஏமாறாமல் இருப்பது எப்படி என்பதில்தான்.”

“அக்காவின் கடிதம் நாளை வந்து விடும். பிள்ளைக்கு அடுத்த வாரமாவது வீடு வரக் கொடுத்து வைத்திருக்கிறதோ என்னவோ? நான் ஊர் போய் சேர்ந்து, அக்காவின் கடிதம் வரப் பார்த்து விட்டு, கடிதம் போடுகிறேன். ஊருக்கு வர முடியாத நிலை என்றால் சனியன்று உன் கடிதம் அப்பா எதிர்பார்ப்பேன். நினைவில் இருக்க வேண்டும். சரியா?”

“இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தபோது மக்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்பது எனக்கு இப்போது நன்றாகப் புரிகிறது. அந்த மாதிரிதான் இருக்கிறது எனக்கு. ஒரு வழியாக நான் இங்கிருந்து தப்பித்துக் கொண்டேன்.”

“உண்மைதான் செல்வி. அவர்களைப் பார்த்தால் அப்படித் தோன்றவே இல்லைதான். ஆனாலும், நமக்கு இங்கு எல்லாமே புதியதுதானே? அதற்குள்ளாக அவர்களைப் பற்றியோ, இல்லை, அவர்கள் பேச்சை வைத்து எந்த முடிவுக்குமோ நம்மால் எப்படிப்பா வரமுடியும்?”
 

banumathi jayaraman

Well-Known Member
முதல் பதிவு படித்து, குணாவைப்
பெற்ற தாயின் மனம் பொய்த்துப்
போன பொழுதில் மனசு மிகவும்
கனத்து இருக்கு, சகோ

நிறைய கேள்விகள் இருக்கு
நாளைக்கு கேட்கிறேன்,
அரசிளம்பரிதி சகோ
 

arasilamparithi

Writers Team
Tamil Novel Writer
முதல் பதிவு படித்து, குணாவைப்
பெற்ற தாயின் மனம் பொய்த்துப்
போன பொழுதில் மனசு மிகவும்
கனத்து இருக்கு, சகோ

நிறைய கேள்விகள் இருக்கு
நாளைக்கு கேட்கிறேன்,
அரசிளம்பரிதி சகோ
உங்கள் கேள்விகள் பெரும்பாலானவற்றிற்கு பதில்களை "மனம் பொய்த்த பொழுதுகள்" அளிக்கும் சகோ. உங்கள் கேள்விகளைத் தயங்காமல் முன்வையுங்கள். நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top