மண்ணில் தோன்றிய வைரம் 43

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
#1
பாத்ரூமில் இருந்து வெளியே வந்த சாருவை அலங்கரிக்கத் தொடங்கினர் பியூட்டிஷன்ஸ்.... என்ன நடக்கின்றது என புரியாது சாரு அறிய முயல அனைவரும் அங்கு சூழ்ந்திருக்க அவளால் ஏதும் ஷெண்பாவிடம் கேட்க முடியவில்லை..... ஆனால் அங்கு நடப்பது தனக்கு சாதகமான சம்பவம் இல்லை என்று மட்டும் சாருவிற்கு புரிந்தது.... ஆனால் ஏதும் செய்ய முடியாத நிலையில் இருந்தாள்.... பியூட்டிஷனின் கைவண்ணத்தால் அவளது வழமையான வனப்பு இன்னும் மெருகேற்றப்பட்டது..... தன்னை கண்ணாடியில் பார்த்த சாரு தானா இவ்வளவு அழகாய் இருக்கின்றோம் என்று வியந்து நிற்க அந்நேரம் அவளது மனசாட்சி
“ அஸ்வின் உன்னை இப்போ பார்த்தான்னா அவன் டோட்டல் பிளாட் தான்.... சும்மாவே ஜிலேபி ஜிலேபினு உன்னையே சுற்றுவான்.... இப்போ பார்த்தான்னு உன்னை கடத்திட்டு போயிருவான்” கூற
“இங்க என்ன நடக்குதுனே புரியலை இதுல நீ வேற கடுப்ப கிளப்பிகிட்டு....கொஞ்ச நேரம் கம்முனு இரு... நானே என்ன நடக்க போகுதுனு சரியா தெரியாம முழுச்சிட்டு இருக்கேன்...இதுல நீ வேற” என்று தன் மனசாட்சியை மைண்ட் வாயிசில் அடக்கினாள் சாரு........
பின் அவளை அழைத்து செல்லவென ஒரு கும்பல் வந்தது.... அதற்கு தலைமை தாங்கியவரை பார்த்த சாருவிற்கு தான் காண்பது கனவா நினைவா என்றிருந்தது.... ஏனெனில் அந்த கும்பலிற்கு தலைமை தாங்கியது நம் அஸ்வினின் சித்தி சித்ரா தான்.... அவரை கண்டதும் ஓரளவு விஷயத்தை ஊகித்த சாரு அடுத்து வந்த கவியின் அண்ணி என்ற அழைப்பு அவளது சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது.......
“ஆகா ரௌடிபேபி தான் இந்த நாடகத்திற்கு கதை திரைக்கதை வசனம் எல்லாமா???? ஆனால் நான் எப்படி இந்த ஏற்பாட்டிற்கு சரி சொல்வேன்னு அவன் நினைத்தான்????? இப்போ இந்த நிகழ்வில் எனக்கு விருப்பம் இல்லைனு சபையில் சொன்னா என்னா செய்வான் அந்த ரௌடிபேபி?? என்னை கேட்காமல் அவன் எப்படி இப்படி ஒரு முடிவை எடுக்கலாம்????? என் வாழ்க்கை பற்றி முடிவெடுக்க அவன் யார்??” என்று தன்னுள் கேள்வி கேட்டுக்கொண்ட சாரு அதே கேள்விகளை அஸ்வின் தன்னிடம் கேட்க நேர்ந்தால் அவளால் பதிலளிக்க முடியுமா என்ற யதார்த்தத்தை மறந்து விட்டாள்.......
சாரு அருகில் வந்த சித்ரா
“ சாரும்மா செதுக்கின சிலையாட்டம் இருக்க...... அப்படியே வரம் கொடுக்க வந்த வனதேவதையாட்டம் மிதமிஞ்சிய அழகோட இருக்க.... கல்யாணக்களை முகத்தில் தாண்டவமாடுது... என் கண்ணே பட்டுரும் போல இருக்கு..... சரி வா நேரமாச்சு.... எல்லோரும் சபையில் உனக்காக காத்திட்டு இருக்காங்க....” என்று சாருவை அழைத்து சென்றார் சித்ரா....
ஹோலிற்கு ஒரு படை சூழ அழைத்து வரப்பட்ட சாரு குனிந்த தலை நிமிராமல் அன்னநடையிட்டு வர சபையில் ஒருகுரல்
“இந்தா பொண்ணும் வந்தாச்சி.....மாப்பிள்ளை பொண்ணா நல்லா பார்த்துக்கோங்க...... நாளைக்கு பின்ன இது சரியில்லை அது சரியில்லைனு சொல்லக்கூடாது.....இப்போவே சொல்லிட்டோம்.....” என்று கூற சாரு தன் தலையை உயர்த்தி மணமகனாய் அமர்ந்திருக்கும் அஸ்வினை நோக்க அதாவது முறைக்க அவனோ அவளை பார்க்காது வேறு எங்கயோ பார்த்தவாறு மென்னகை புரிந்தான்...... அதில் வெட்கம் கலந்திருக்க பலநாள் கழித்து அவனை பார்த்த சாரு அதில் லயித்து நிற்க சஞ்சுவோ
“அட அட அட நம்ம அஸ்வினையே வெட்கப்பட வச்சிட்டீங்களே பா.... டேய் என்னமோ இந்த புள்ளையும் பால் குடிக்குமாங்குற ரேஞ்சில் இருந்திட்டு என்னமா வெட்கப்படுற??” என்று அஸ்வினை ஓட்ட அதற்கு ஆது
“எல்லாரும் உன்னை மாதிரி பியூஸ் போன பல்பாவே இருப்பாங்கனு நீ எப்படி நினைக்கலாம் சஞ்சு..... எங்க அண்ணா பார்க்க தான் பழம் மாதிரி ஆனால் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் தான்.....” என்று அஸ்வினிற்கு சார்பாக போர்கொடி தூக்க
“யாரு இவன் பழமா???? யம்மா சாமி..... நீ சொல்லுறதுல ஒரு நியாய தர்மம் வேணாமா??? போயும் போயும் இவனை பழம்னு சொல்லுற???.....”
என்று ஒருவர் மாற்றி மற்றொருவர் கலாட்டா பண்ண சபையில் இருந்த பெரியவர் ஒருவர்
“இங்க பாருங்க பிள்ளைகளா உங்க கலாட்டாக்களை நிச்சயம் முடிந்த பிறகு வைத்துக்கோங்க.... இப்போ நல்ல நேரம் முடிவதற்கு முன் தட்டை மாற்றிக்கலாம்..... அம்மாடி சாரு வந்து சபையை நமஸ்காரம் பண்ணிட்டு இப்படிக்கா உட்கார்ந்துக்கோ” என்று அனைவருக்கும் நிகழ்வை நினைவு படுத்த அவரின் சொல்படி அஸ்வினை முறைத்துக் கொண்டிருந்த சாரு சபையினருக்கு வணக்கம் செலுத்தும் முகமாக வீழ்ந்து வணங்கி எழ அவளை கவி மற்றும் சித்ரா அழைத்து சென்று அமர வைத்தனர். அவள் அமர்ந்ததும் ஐயர் திருமண ஓலையை வாசிக்க ஆரம்பிக்க சபை அமைதியை கடைபிடித்து ஓலை வாசிப்பை கவனிக்கத் தொடங்கியது.... அந்த சந்தர்ப்பத்தில் சாரு அங்கு யார் யார் வந்திருக்கிறார்கள் என்று கடைக்கண்ணால் ஒரு ஆராய்ச்சியை முன்னெடுக்க அங்கு அஸ்வினின் அப்பா உட்பட அவனது குடும்பத்தினர், சஞ்சு,ஆது, மிஸ்டர் அன்ட் மிசஸ் ராமமூர்த்தி,ஷெண்பா, ரதன் , வருண், நிஷா மற்றும் அவளது கணவன் , ராக்கேஷ் என்று ஒரு படையே அந்த ஹாலை ஆக்கிரமித்திருந்தது... சாரு அவளது மைண்ட் வாயிசில்
“ எல்லாம் பிளான் பண்ணி தான் செய்திருக்காய்ங்க....... எல்லா பயபுள்ளயும் இதுல கூட்டு தான்...... இந்த சஞ்சு பயகூட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே........” என்று மைண்ட் வாயிலில் பேச அவளது மனசாட்சியோ
“ஏன் சொல்லியிருந்த மறுபடியும் எங்கயாவது ஓடுவதற்கு ஈசியா இருந்திருக்குமோ???? நீ பண்ணுற அட்டூழியத்திற்கு உன்னை அவன் அடிக்காம விட்டதே பெரிய விஷயம்.... இதுல அவன் உன்கிட்ட சொல்லாம பிளான் பண்ணான்னு குறை சொல்லுறியா???? இது மட்டும் அவனுக்கு தெரிந்தது அப்போ அவன் உனக்கு செய்வான் சிறப்பான ஒரு சம்பவத்தை....”
என்று மனசாட்சி பதிலடி கொடுக்க தன் வசை பாடுதலை நிறுத்திவிட்டு நடப்பதை கவனிக்க தொடங்கினாள்.....
பெரியவர்கள் தாம்பூல தட்டு மாற்றியதும் மணமகனையும் மணப்பெண்ணையும் மோதிரம் மாற்ற அழைத்தனர்.....
அஸ்வினும் சாருவும் சபை நடுவே நிற்க இருவர் கையிலும் நெருக்கமாக தொடுக்கப்பட்ட ரோஜா பூ மாலை கொடுக்கப்பட்டு மாலைகளை மாற்றிக்கொள்ளுமாறு சபையில் பெரியவர் ஒருவர் பணித்தார்.... அதன் படி சாரு முதலில் அஸ்வினிற்கு மாலையிட அவளைத் தொடர்ந்து அஸ்வின் சாருவிற்கு மாலையிட்டாள். அச்சந்தர்ப்பத்தில் அஸ்வினை நேருக்கு நேர் நோக்கிய சாருவிற்கு எந்தவித உணர்வுகளையும் பிரதிபலிக்காத அஸ்வினுடைய முகம் மட்டுமே தெரிந்தது.....
“ஆஹா ரௌடி பேபி செம்ம காண்டுல இருக்கான் போல இருக்கே... இவ்வளவு நேரம் சிரிச்ச முகமா இருந்தவன் இப்போ நம்மளை பேஸ் டூ பேஸ் பார்க்கும் போது ஒரு ரியாக்ஷனும் காட்டாம இருக்கானே..... சிரிச்சிட்டு இருந்தாலே இவனை நம்மால சமாளிக்க முடியாது.... இப்ப நம்ம மேல ஹய் ரெம்பரில் இருப்பான்... என்ன செய்ய போறானு தெரியலையே....... நான் வைத்த ரௌடிபேபி பேருக்கு ஏற்ற மாதிரி ரௌடி ஆகிட்டான்னா நம்ம நிலைமை????? சாரு செம்மையா மாட்டிக்கிட்ட போ..... இதைவிட நான் அவனை பிரிந்து செல்ல காரணமா சஞ்சுகிட்ட சொன்னது எல்லாவற்றையும் சரி பண்ணிட்டான் போல .... அஸ்வின் அப்பா மற்றும் அஸ்வினோட குடும்பம் இங்க இருப்பதிலேயே அது புரியுது..... ஐயோ ஆண்டவா இவன்கிட்ட இருந்து எப்படியாவது என்னை காப்பாற்று.....” என்று மனதினுள் நினைத்தாலும் வெளியே சிரித்து வைத்தாள்....... மோதிரம் மாற்றும் போதும் இதே நிலையே தொடர்ந்தது....... சாரு தான் உள்ளுக்குள் பயந்து நடுங்கிக்கொண்டிருந்தாள்... அஸ்வினுடைய காதல் முகத்தை மட்டுமே பார்த்திருந்த சாருவிற்கு அவனது கோப முகம் எப்படி இருக்கும் என்று கற்பனையில் கூட வரையறுக்கமுடியவில்லை..... ஆனாலும் அவன் தன் மீது கொண்ட காதலுக்காக அவளை மன்னித்து விடுவான் என்று நம்பினாள்.... அந்த நம்பிக்கை அவளுள் ஒரு தைரியத்தை உண்டு பண்ண அஸ்வினை சீண்ட முடிவு செய்தாள்...
மோதிரம் மாற்றி முடிந்ததும் மணமக்கள் இருவரையும் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தினர் புகைப்படக்கலைஞர்கள்..... அப்போது அவர்கள் சில போஸ்கலை சொல்ல அதை பட்டும் படாமலும் அஸ்வின் அவர்கள் கூறியபடி செய்ய சாருவோ அவனை உசிப்பேற்றவென்று அதீத நெருக்கம் காட்டினாள்..... அவள் அப்படி செய்தும் கூட அஸ்வினிடம் ஒரு சிறு சலனம் கூட இல்லை........ கடைசியில் அலுத்து போய் அவளும் அவனைப்போல் கடமையே என்று புகைப்படக்கலைஞர்கள் கூறியது போல் செய்தாள்...
போட்டோ சூட் முடிந்ததும் இளைஞர் பட்டாளம் அவர்களை முற்றுகையிட்டது.... அவர்கள் மணமக்களை வம்பிழுத்துக்கொண்டிருக்க சாருவோ அஸ்வினை எப்படி நெருங்குவதென்ற தீவிர யோசனையில் இருந்தாள்....
“என்ன சாரு நாங்க இவ்வளவு பேர் இருக்கும் போதே அஸ்வினோடு கற்பனையில டூயட் பாட போயிட்டியா???? சரியில்லையே..... ஆ... ஐடியா நீ கனவுல எல்லாம் டூயட் பாடி கஷ்டப்பட வேண்டாம்.... இப்போ எங்க எல்லார் முன்னாடியும் இரண்டு பேரும் ஆடுங்க.....எங்கயா மைக் செட்டு ?????? ஸ்டார்ட் த மியூசிக்” சஞ்சு அவளது சிந்தனையை கலைக்க சாரு திரு திருவென முழித்தாள்..... அவளது பாவனையில் அனைவரும் சிரிக்க நிஷா
“என்னா சாரு இந்த முழி முழிக்கிற??? உன்னை நாங்க அண்ணாவுக்கு பப்ளிக்கா முத்தம் கொடுக்கவா சொன்னோம்???? ஜஸ்ட் ஒரு டான்ஸ் பர்போமன்ஸ் தானே???? அதுக்கு ஏன் இப்படி ஒரு ரியாக்ஷன்???? ஓ... ஒருவேளை நான் முதல்ல சொன்னதை செய்ய ஆசைப்படுறியோ???”என்று நிஷா ஓட்ட அங்கிருந்த அனைவரும் ஓ போட்டனர்... தன் இருக்கையில் இருந்து எழுந்த அஸ்வின் சாருவிற்கு கை கொடுத்து அழைப்பு விடுக்க அவள் மறுப்பேதும் சொல்லாமல் எழுந்து ஆடத்தொடங்கினாள்.......
ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே
உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ
ஹே சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு காட்ட
லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ
ஏய் மை டியர் மச்சான்
நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
ஹே மை டியர் ராணி
என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர
Fire பத்திக்கிருச்சா
ரா நம்ம பீச்சு பக்கம் பொத்தாம்
ஒரு டப்பாங் குத்து வெஸ்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி
ரா யு ஆர் மை ஒன்லி கேர்ள் பிரியெண்டு
ஐ வில் கிவ் யு பூச்செண்டு
வி'வில் மேக் Us நியூ ட்ரெண்டு பேபி
பொத்தாம் வெஸ்தாம் ரவுடி பேபி
கேர்ள் பிரியெண்டு பூச்செண்டு நியூ ட்ரெண்டு பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி
உன்னாலே ஏய் மூடாச்சு
மை ஹோர்மோனு பலன்ஸு டேமேஜூ
ஏய் காமக்ச்சி என் மீனாட்சி
இந்த மாரிக்கும் உன்மேல கண்ணாச்சி
ஒன்னு பிளஸ் ஒன்னு டூ மாமா
யு பிளஸ் மீ த்ரீ மாமா
வாடி ஜான்சி ராணி என் கிருஷ்ணவேணி
ஐ வில் பெய் யு போனி அத ஓட்டீனு வா நீ
என் மந்திரவாதி நீ கேடிக்கு கேடி
நான் உன்னுள்ள பாதி நம்ம செம்ம ஜோடி..
என்ற பாடலுக்கு ஏற்றவாறு இருவரும் ஆட அங்கிருந்த அனைவரும் கைதட்டலுடன் அவர்களது ஆடல் முடிவுக்கு வந்தது....
 
#7
நீ ஒண்ணும் கவலைப்படாதே,
சாரு டியர்
இந்தப் பாட்டைப் பாடி உன்னோட
அஸ்வின் ரௌடி பேபியை
ஆப்பு பண்ணிரு, சாரூணீ டியர்

பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு...ஹோய்

பொடி நடையா போறவரே.........
வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு
நான் போட்டேன் மாராப்பு..........
ஓ அக்கிரி கக்கிரி பாச்சா
என்கிட்டே ஆகாது
ஒரு மஞ்சள கட்டி மேச்சா
எங்கேயும் போகாது
பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு...ஹேய்

இறுக்கிப் புடிச்சு இழுக்குதய்யா
மனசுக்குள்ள
அந்த சொகத்த நெனச்சு
தவிக்குதய்யா வயசுப் புள்ள
இறுக்கிப் புடிச்சு இழுக்குதய்யா
மனசுக்குள்ள
அந்த சொகத்த நெனச்சு........
தங்கமே ஒண்ணா ரெண்டா
ஜாதகம் பாப்போம் கொண்டா
குத்தத்த பாத்தாக்கா சொந்தம் இல்ல
கோபத்த பாத்தாக்கா பந்தம் இல்ல
சிலுத்துக்கிட்டா சிலுத்துக்குங்க
சிறுக்கியத் தான் பொறுத்துக்குங்க
பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு...ர்...

பாக்கு வெத்தல மடிச்சு ஒனக்கு
கொடுக்கட்டுமா
நல்ல பவள மல்லிய பூவ எடுத்து
தொடுக்கட்டுமா
பாக்கு வெத்தல மடிச்சு..........

ஒன்ன நான் புள்ளி வெச்சேன்
ஊருக்கு சொல்லி வெச்சேன்
வாங்கினா ஓன் தாலி வாங்கப் போறேன்
தாங்கினா ஓன் மால தாங்கப் போறேன்
பொருத்தமுன்னா பொருத்தமய்யா
மனசிலென்ன வருத்தமய்யா
பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு
நான் போட்டேன் மாராப்பு..........
ஓ அக்கிரி கக்கிரி பாச்சா
என்கிட்டே ஆகாது
ஒரு மஞ்சள கட்டி மேச்சா
எங்கேயும் போகாது
பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும்
வாரேன் வேணாயா வீராப்பு...ஹோய்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement