மண்ணில் தோன்றிய வைரம் 28

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
ஹோட்டலினுள் சென்ற சாரு ரிசப்ஷனில் விசாரித்துவிட்டு தனக்காக ரிசவ் செய்யப்பட்டிருந்த அந்த மேஜையில் அமர்ந்து காத்திருந்தாள். அவள் காத்திருக்க திடீரென விளக்குகள் அனைத்தும் அணைந்தது. திடீரென்று நிகழ்ந்த இந்த நிகழ்வினால் பயந்த சாரு தன் வாலட்டில் இருந்த மொபைலை தட்டுத்தடுமாறி எடுக்க முயல அந்நேரத்தில் அவளது கண்கள் கட்டப்பட்டு அவளை யாரோ தள்ளிச்செல்வது போல் உணர்ந்தாள். கத்த முயன்ற அவளது வாயினையும் கைகளையும் யாரோ சிறை செய்ய அவளால் ஒன்றும் செய்யமுடியாமல் போனது. இரு நிமிட நடை பயணத்தின் பின் அவளது கைகள் விடுவிக்கப்பட விரைந்து தன் வாய்கட்டை அவிழ்த்தவள் தன் கண்கட்டை அவிழ்க்கும் போது மெல்லிய வயலின் இசையுடன் கூடிய பியானோ இசை கேட்டது. தன் கண்கட்டை அவிழ்த்து பார்த்தவள் பிரமித்தாள். அவளது பிரம்மிப்பிற்கு காரணம் அவள் முன்னிருந்த இசைக்குழுவினரும்,நடனக்குழுவினரும் மற்றும் அழகாய் காதலினை பிரதிபலிக்கும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த கார்டன் வியூவும். அந்த இருளில் அந்த வடிவமைப்பு அவளது மனதை கொள்ளை கொண்டது. சிவப்பு நிற பலூன்களால் உருக்கப்பட்ட அந்த ஆர்ச் சிறு மேடை போன்ற அமைப்பின் மேல் இருக்க மேடைக்கு முன் இசைக்கருவிகளை ஏந்திய வண்ணம் சிலரும் இதய வடிவ பலூன்களை ஏந்திய வண்ணம் சிலரும் இருந்தனர். அவர்கள் கையில் ஏதோ பலகை போன்ற ஒரு பொருளும் இருந்தது.. அந்த மேடை அமைப்பிற்கு நேர் எதிரே சற்று தொலைவில் ஒரு இருக்கையுடன் கூடிய மேசை போடப்பட்டருந்தது. அது சிவப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்களால் முற்றுகையிடப்பட்டிருந்தது. அந்த மேசையின் மீது ஒரு பூச்சாடியில் பல சிவப்பு நிற ரோஜாப்பூக்கள் வைக்கப்பட்டிருந்தது. அதனுடன் ஒரு இதயவடிவால் ஆன பிரத்யேகமாக இது காதலர்களுக்கானது என்று பிரதிபலிக்கும் வகையில் காண்டில் ஸ்டான்டுடன் கூடிய சிவப்பு நிற காண்டில் ஏற்றப்பட்டிருந்தது.அந்த மேசையில் இருந்து மேடைக்கான பாதையில் சிவப்பு நிற கார்ப்பட் விரிக்கப்பட்டு அதன் மேல் ரோஜா இதழ்கள் தூவப்பட்டு இருந்தது. அந்த நடைப்பாதையின் இருப்பகுதியிலும் கம்பங்கள் நடப்பட்டு இரண்டும் அழகிய ரோஜாப்பூ மாலையினாலும் பலூன்களாலும் இணைக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக அவ்விடத்திற்கு அரணாய் இருந்த வேலியின் மேல் சிவப்பு மற்றும் வெள்ளை நிற மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு இருள் சூழ்ந்த அந்த இடத்திற்கு வெளிச்சமூட்டிக் கொண்டிருந்தது. அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக முழு நிலா இரவு நேர வானில் காய்ந்துக்கொண்டிருந்தது. அந்த நிலவிற்கு துணையாய் கடலலைகள் அலைப்பாய்ந்த வண்ணம் இருந்தது. இவ்வாறு முழுக்க முழுக்க காதலை பிரதிபலிக்கும் வகையில் அமைந்தும் அமைக்கப்பட்டும் இருந்த அவ்வழகிய இடத்திற்கு தன்னை கடத்தி வந்தது யார் என்ற ஆவல் சாருவிடம் பெருக ஆரம்பித்தது.. அவளது ஆவலை மேலும் அதிகரிக்கும் வண்ணம் இசைக்கருவிகள் “த டவ்ன் இஸ் பிரேகிங்.... எ லைட் இஸ் சைனிங் த்ரூ...” என்ற ஆங்கில பாடல் இசைக்கப்பட அதற்கு ஏற்றாற் போல் அங்கிருந்த குழுவினர் ஆடத்தொடங்கினர்... ஆடலின் இடையில் ஒவ்வொருவரும் ஒரு சிவப்பு ரோஜாவுடன் வந்து ரோஜாவினை சாருவிடம் கொடுத்துவிட்டு கையில் வைத்திருந்த அந்த பலகையை திருப்பி பிடித்தபடி முழங்காலில் அமர்ந்தனர். அவர்கள் திருப்பி பிடித்த ஒவ்வொரு பலகையிலும் ஒரு ஆங்கில எழுத்து இருந்தது. அனைவரும் ரோஜாவினை கொடுத்து விட்டு அமர்ந்த பின் அப்பலகையில் உள்ளதை வாசித்தாள் சாரு...
“வில் யூ மேரி ஹிம்??” என்ற கேள்வியை தொடர்ந்து பின்புறம் பார்க்குமாறு ஒரு சைகைக்குறி இருக்க சாரு அந்த குறி சுட்டிக்காட்டிய திசையை பார்க்க முயல அமர்ந்திருந்த குழுவினர் எழும்பி அவளுக்கு வழி விட்டனர். அங்கு ஒரு இளைஞன் அங்கிருந்த டிரம் செட்டின் முன் அமர்ந்திருந்தான். அவன் அணிந்திருந்த தொப்பி அவனது முகத்தை மறைத்திருக்க அவன் டிரம்ஸ் வாசிக்க தொடங்கினான். அவனது டிரம்ஸ் வாசிப்பு சிறிது நேரத்தில் முடிவடைய அவனது கைக்கு மைக் ஒன்று வந்திருந்தது.. மைக் வந்த அடுத்த நொடி பாடத்தொடங்கினான்....
அதே நிலா ...
அதே நிலா...
அதே அதே அதே அதே நிலா.....
அதே நிலா...
அதே நிலா...
அதே அதே அதே அதே நிலா...
காதல் சொன்னதும் அதே நிலா...
மோகம் தந்ததும் அதே நிலா..
வெட்கம் கொண்டதும் அதே நிலா..
ஓஹோ..முத்தம் சிந்துது சிந்துது அதே நிலா..
என்று பாடியபடி அந்த இளைஞன் ரோஜா பூச்செண்டுடன் சாருவின் அருகில் வர அவன் யாரென்று இது வரை நேரம் தெரியாமல் அவனை பார்த்துக்கொண்டிருந்த சாரு அவன் அருகில் வர வர யாரென்று அறிந்தவள் உச்ச கட்ட அதிர்ச்சியடைந்தாள்...
அவள் அருகில் வந்த இளைஞன் மண்டியிட்டு பூச்செண்டினை அவளிடம் நீட்ட அவனை நெருங்கிய சாரு அவனது தொப்பியை நீக்கியவாறே அவனை அஸ்வின் என்று அழைக்க......
ஆம் இவ்வளவு நேரம் அந்த இளைஞன் என்று அழைக்கப்பட்டவன் நம் அஸ்வினே....
அஸ்வின் வழங்கிய பூச்செண்டினை சாரு வாங்கும் போது சாருவின் மகிழ்ச்சியின் உச்சம் கண்ணீராய் வெளிப்பட தொடங்கியது. அவளது வலக்கையை ஏந்தி முத்தமிட்டவன் அவளது கண்களை நோக்க அவனது பார்வையின் வேண்டுகோலுக்கிணங்கி அவளது கண்கள் கண்ணீருக்கு விடை கொடுத்து இதழ்கள் சிரிப்பை கொள்வனவு செய்து கொண்டது. பின் எழும்பியவன் அவளது முன்னுச்சியில் முத்தமிட அதில் மகிழ்ந்தவள் அவன் மார்பில் சாய்ந்தாள். பின் அவளை தன்னிடம் இருந்து விளக்கியவன் அவளிடம் தன் கையை நீட்ட அவள் தன் இடக்கையில் இருந்த அனைத்து ரோஜாப்பூக்களையும் வலக்கைக்கு மாற்றிவிட்டு அவனிடம் இடக்கையை நீட்ட அவன் அவளது புறக்கையில் ஒரு முத்தத்தினை வைத்து விட்டு அவளை மேடை நோக்கி அழைத்து சென்றான். அவன் பாடிய பாடல் இப்போது ஸ்பீக்கரில் ஒலிக்க அவளுடன் சேர்ந்து கப்பில் டான்ஸ் ஆடத்தொடங்கினான்.
காதல் சொன்னதும் அதே நிலா....
காக்க சொன்னதும் அதே நிலா..
கூச்சம் கொண்டதும் அதே நிலா...
கூட சொன்னதும் அதே நிலா...
ஹோ.கூட சொல்லுது சொல்லுது அதே நிலா...
கோடி கவிதைகள் பார்க்கும் நிலா..
ஜோடி விழிகளை ஏற்கும் நிலா..
என்னை கவிஞன் ஆக்கும் நிலா..
எந்தன் அருகில் பூக்கும் நிலா...
ஹோ எந்தன் அருகில் பூக்கும் இந்த நிலா...
வானை அழகினில் காட்டும் நிலா..
என்னுள் மிருகத்தை மூட்டும் நிலா....
ரெண்டு இதயம் கூட்டும் நிலா...
காதல் ஓவியம் தீட்டும் நிலா..
ஹோ காதல் ஓவியம் தீட்டும் இந்த நிலா...
அதே நிலா அதே நிலா
அதே அதே அதே அதே நிலா.....
என்றவாறு பாடல் முடிய சாரு தன் கையில் இருந்த அந்த பூச்செண்டினை அவனைப்போலே மண்டியிட்டு அவள் அவனிடம் காதல் யாசகம் செய்தாள்......
அதற்கு அஸ்வினின் பதில் எவ்வாறு இருக்கும்??????
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...........
சூப்பர்ப், அனு டியர்
வாலென்டைன்ஸ் டே-க்கு
ஐடியா பண்ணி சூப்பரா
தன்னோட லவ்வை
தேஜஸ்வின், சாருவிடம்
சொல்லிட்டான்
அவசரப்பட்டு அஸ்வினை
அவ்வளவு திட்டு திட்டினாளே,
சாருணீ மேடம்
இப்போ அவளோட முகத்தை
எங்கே கொண்டு போய்
வைச்சுக்குவாள், அனு டியர்?
நல்லவேளை, வாய் விட்டு
சொல்லாமல் மனசுக்குள்ளேயே
அவனை திட்டிக்கிட்டாள்
அன்னிக்கு அவங்க வீட்டு
பால்கனியில் நின்னு சாரு
போன்-ல பேசியதை அஸ்வின்
கேட்டிருப்பானோ?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஆ.....ஆ......
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
(அன்று)
அம்பிகாபதி கண்ட நிலா
அமராவதியைத் தின்ற நிலா
கம்பன் பாடிய வெள்ளி நிலா
கவியில் ஆடிய பிள்ளை நிலா
ஆ... ஆ...
கவியில் ஆடிய பிள்ளை நிலா
(அன்று)
காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் வென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாலைவனத்தின் வண்ண நிலா
ஆ... ஆ...
பாலைவனத்தின் வண்ண நிலா
நாடுதோறும் வந்த நிலா
நாகரீகம் பார்த்த நிலா
பார்த்து பார்த்து சலித்ததிலா
பாதி தேய்ந்தது வெள்ளி நிலா
ஆ... ஆ...
பாதி தேய்ந்தது வெள்ளி நிலா
(அன்று)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top