மண்ணில் தோன்றிய வைரம் 26

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
சாரு அங்கிருந்த ஒரு வாரமும் அவளை ஒருவர் மாற்றி ஒருவர் அன்பாக கவனித்து கொண்டனர். நேரத்திற்கு உணவு , சிறு சுணக்கத்திற்கும் என்னவென்று பதறி ஓடிவரும் உறவுகள், ஜாலியான கலாட்டாக்கள், அன்பை அப்பழுக்கற்று வாரி இறைக்கும் குடும்பம் என்று அந்த ஒரு வார அஸ்வின் வீட்டு வாசம் அவள் இத்தனை நாட்கள் இழந்திருந்த சந்தோஷத்தை ஒட்டு மொத்தமாக வழங்கியது. அந்த மகிழ்வை இன்னும் இரட்டிப்படைய செய்தது அஸ்வினின் அதிகப்படியான அக்கறை. காலையில் ஆபிஸ் செல்லும் முன் அவளிடம் நலம் விசாரிப்பதுடன் அன்றைய நாளுக்கான ஆபிஸ் வேலை சம்பந்தமாகவும் கலந்துரையாடிவிட்டு செல்பவன் இரவு உணவின் பின் மறுபடியும் நலம் விசாரிக்க வருவான். அப்படி வருபவன் கையில் ஏதும் புத்தகம் அல்லது பொழுது போக்குடன் தொடர்புடையதாக பொருட்கள் இருக்கும். அவனது வீட்டினர் இருக்கும் போது பொழுது போக்கு தேவையில்லை என்று தெரிந்த போதிலும் அவன் அவ்வாறு அவளுக்கென்று வாங்கும் போது ஒரு மனநிறைவு அவனுள் ஏற்படும். அந்த காரணத்திற்காகவே தினமும் ஏதேனும் வாங்கி வந்து கொடுப்பான். கவி மற்றும் மாதேஷ் வரும் வரை சித்ராவின் அன்புக்கட்டளையின் பேரில் ரூமினுள்ளேயே இருப்பவளுக்கு அது பெரும் உதவியாகவே இருந்தது. அதனால் அவன் வாங்கி வருபவற்றை விருப்புடனே வாங்கிக்கொண்டாள். எப்போதும் வேலை வேலை என்று ஓடுபவளுக்கு இந்த ஓய்வில் விருப்பமில்லாத போதிலும் அஸ்வினின் வீட்டிலிருப்பதால் சித்ராவின் பேச்சினை மதித்து ஓய்வே தன் முழு நேர தொழில் என்று இருந்தாள். அவளை ஹாஸ்பிடல் அழைத்து சென்று வரும் சேவையையும் அஸ்வின் தன் வசமே வைத்திருந்தான். என்ன தான் வேலை நெருக்கடி இருந்தாலும் சரியான நேரத்திற்கு வந்து சாருவை அழைத்து சென்று விடுவான். இவ்வாறு அவனது ஒவ்வொரு செயலிலும் சாரு தன் அன்னையின் அன்பை உணர்ந்தாள். ஆனால் தான் அவ்வாறு உணர்வதை அஸ்வின் எப்போது உணர்ந்து அவளை தன்னில் பாதியாக ஏற்றுக்கொள்வான் என்ற கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. இவ்வாறு அவளது நாட்கள் சென்றிருக்க சாருவை நலம் விசாரிக்க வந்தனர் சஞ்சயும் அவனது தந்தை ராமமூர்த்தியும்.
ராமமூர்த்தி சாருவின் தந்தையின் பால்ய சிநேகிதர். சாருவின் தந்தை இறந்த பின் ஆதரவற்று நின்ற சாருவையும் தொழிலையும் அவரே பொறுப்பெடுத்தார். காலேஜ் படித்துக்கொண்டிருந்த சாருவிற்கு தொழில் பற்றி பாடம் நடத்தி தவழும் குழந்தைக்கு நடக்க கற்றுக்கொடுக்கும் அன்னையினை போல் அவளது ஒவ்வொரு முன்னேற்றங்களிலும் சறுக்கல்களிலும் உற்ற துணையாய் இருந்த அவளது அரசாட்சியின் இராஜகுரு அவரே. அவரை பின் தொடர்ந்து சஞ்சுவும் சாருவிற்கு ஆதரவாய் இன்றுவரை இருக்கின்றான்.
சாருவை நலம் விசாரித்த ராமமூர்த்தி
“சாரி சாருமா அன்று சஞ்சு உன்னை பார்க்க வந்தப்போ நானும் ஆண்டியும் ஊரில் இல்லை. அதான் வர முடியவில்லை.. “
“ஐயோ அங்கிள் எதுக்கு என்கிட்ட சாரி எல்லாம் சொல்லுறீங்க??? உங்களுக்கு வர முடியாட்டியும் நீங்களும் ஆண்டியும் தினமும் போனின் என்னை விசாரிச்சிட்டு தான் இருக்கீங்க... என் மேல உங்க இரண்டு பேருக்கும் எவ்வளவு பாசம்னு எனக்கு நல்லாவே தெரியும். அதோட நீங்க இரண்டு பேரும் ப்ரீதி அக்காவோட டிலிவரிக்கு போயிருந்ததால தான் என்னை பார்க்க வரவில்லைனும் தெரியும்.சோ நீங்க வொரி பண்ணிக்க வேண்டாம். குட்டி பையன் எப்படி இருக்கான்?? ப்ரீதி அக்கா எப்படி இருக்காங்க??” என்று அவரை சமாதானப்படுத்திவிட்டு அவர்களது குடும்பத்தின் புது வரவினை பற்றிய விசாரணையில் இறங்க ராமமூர்த்தியும் அவளுக்கு பதில் கூறத்தொடங்கினார்.
அன்றிரவு பால்கனியில் தன் போலி கணக்கில் இருந்து அஸ்வினிக்கு அழைத்தான் சாரு. இரண்டு மூன்று நாட்களாக அவனுக்கு தாறுமாறாக வாய்ஸ் மெசஜ் அனுப்பி அதற்கு அவனிடம் இருந்து எதிர்மறையான ரெஸ்பான்சை எதிர்பார்த்து சாரு காத்திருக்க அவனோ எந்தவித பிரதிபலிப்பையும் காட்டாமல் இருக்க அதனால் ஏமாற்றமடைந்த சாரு இன்று அவனிடம் பேசிவிட வேண்டும் என்ற முடிவுடன் அவனுக்கு அழைத்தாள் சாரு. ஒரே ரிங்கில் போனை அட்டென்ட் பண்ண அஸ்வினிடம் பொறியத்தொடங்கினாள் சாரு “உன்னை எல்லாம் பெத்தாங்களா செஞ்சாங்களா டா??? மனிஷன்னா பீலிங்சை கொஞ்சமாவது வெளியில காட்டனும். இப்படி கல்லை முழுங்கினவன் மாதிரி குத்துக்கல்லாட்டம் இருக்கக்கூடாது... இவ்வளவு மெசேஜ் அனுப்பியிருக்கேனே ஒரு ரிப்ளை பண்ணியா?? அதை விடு அட்லீஸ்ட் பிளாக் சரி பண்ணியா?? எவனுக்கோ வந்த விருந்துங்கிற மாதிரி இருக்க... இங்க ஒருத்தி நம்மளை உருகி உருகி காதலிச்சிட்டு இருக்காளே ...அவளை பற்றி கொஞ்சமாவது உனக்கு அக்கறை இருக்கா..?.. ஒன்னு பேசு இல்லாட்டி திட்டு.. இப்படி எதையும் செய்யாம ஊமையடிகள் மாதிரி ஒரு ரியாக்க்ஷனும் இல்லாம இருக்க..... நீ என்ன நினைக்கிறனு யோசிச்சு யோசிச்சே எனக்கு பைத்தியம் புடிச்சிரும் போல... உனக்கு ரௌடி பேபினு பேர் வச்சதுக்கு பதிலா ரொபோனு பேர் வச்சிருக்கலாம். சீ அந்த பேரை வைத்து அதையும் அசிங்க படுத்த கூடாது. அதுக்கு கூட ஆடிபிசியல் இன்டலிஜன்ஸ் மூலம் இப்ப உணர்ச்சி குடுக்குறாங்க..”என்று அவனை தாறுமாறாக வசைபாட அவனோ சிரிக்கத்தொடங்கினான்.
“டேய் நான் இங்க தொண்டத்தண்ணி வற்ற கத்திட்டு இருக்கேன் நீ சிரிக்கிறியா டா?? ராஸ்கல் கையில் சிக்கும் போது உனக்கு இருக்குடா டேய் “ எனக்கூற அவன் சிரிப்பு இன்னும் அதிகமானது.
“போதும் டா ரௌடி. உனக்கு கொஞ்சம் கூட ரிப்ளை பண்ணனும்னு தோணலையா??? ப்ளீஸ்டா திட்டனும்னு தோனுனா கூட திட்டிரு. இப்படி ரிப்ளை பண்ணாம இருக்காத... மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா. நீ என்னையும் என்னோட லவ்வையும் புரிந்து புரிந்துக்கொள்ளவே மாட்டியா??” என்று தன் மொத்த காதலையும் குரலில் தேக்கி சாரு வினவ அஸ்வின் அமைதியானான்.
“சரி சரி விடு எப்படியும் நீ பதில் சொல்லமாட்டனு எனக்கு நல்லா தெரியும். எதை சரியா செய்றியோ இல்லையோ இப்படி கேள்வி கேட்டோன சைலண்டாவதை மட்டும் சரியா செய்ற... ஓகோடா ரொம்ப டயட்டா இருக்கு. நான் தூங்க போறேன். குட் நைட்.ஸ்வீட் ட்ரீம்ஸ்.. அப்புறம் இனிமே மெசேஜ் பண்ணா ரிப்ளை பண்ணு. இல்லைனு வை போன் ஹெங் ஆகுற அளவுக்கு மெசேஜ் அனுப்புவேன் பார்த்துக்கோ... சொன்னது புரியிதா.. ஓகே பாய்... லவ் யூ டா ரௌடி பேபி.. ஐயம் டெரிப்லி மிஸ்ஸிங் யூ..” என்றுவிட்டு வழமையாய் கொடுக்கும் அந்த நீண்ட முத்தத்தை கொடுத்துவிட்டு காலை கட் செய்த சாருவிற்கு அஸ்வினின் எண்ணத்தை பற்றி யூகிக்க முடியவில்லை. அவனிடம் நெருங்கும் வழி வேறெதும் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் முழி பிதுங்கி நின்ற சாருவை சித்ரா வந்துறங்குமாறு அழைத்தார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top