மண்ணில் தோன்றிய வைரம் 16

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
சாருவின் பிளானை கேட்ட சஞ்சய் "பிளான் எல்லாம் பக்காவா தான் இருக்கு. ஆனால் இதுக்கு உன்னோட ஆள் எப்படி ரெஸ்பான்ஸ் பண்ணுவாருனு தான் கெஸ் பண்ண முடியாம இருக்கு. ஏதாவது எக்குத்தப்பா நடந்துருச்சினா என்ன பண்ணுவ?"என்று சற்று கவலையுடன் கேட்ட சஞ்சயிடம் "அதுக்கு தான் நீ இருக்கியே.. நீ மேனேஜ் பண்ண மாட்டா??" என்ற சாருவை "அடிப்பாவி எனக்கு தர்ம அடி வாங்கிகுடுக்கனும்னு முடிவே பண்ணிட்டியா??"
"யெஸ் ஆப் கோஸ்"
"சிறப்பு மிகச்சிறப்பு" என்ற சஞ்சயை பார்த்து பலமாக சிரித்தாள் சாரு. "சாரு எனக்கு இந்த சிட்டுவேஷனுக்கு ஒரு பாட்டு பாடனும் போல இருக்கு என்றுவிட்டு "சகலகலாவல்லி... எதையும் செய்வா சொல்லி ..."என்று ஒரே வரியை திரும்பத்திரும்ப பாடிய சஞ்சயின் பாட்டில் கடுப்பான சாரு."ஏய் லூசு அதான் அதுக்கு பிறகு தெரியலைல அப்போ எதுக்கு திரும்ப திரும்ப ஒரே வரியை பாடி இப்படி கழுத்தறுக்குற??"
"அதுக்கு பிறகு உள்ள வரியை பாடுனா நீ என் தலையையே அறுத்துபோட்டுருவ "என்று சஞ்சய் சொல்ல அந்த பாடலில் அப்படி என்ன இருக்கு என்று அறிய யூடூப்பில் அப்பாடலை கேட்டாள். பாடலை பாதியிலே நிறுத்திய சாரு மேசை மீதிருந்த பைலினால் சஞ்சையை அடிக்க ஆரம்பித்தாள். "ஏன்டா இது உனக்கு சிடிவேசன் சாங்கா...? எங்க இருந்துடா உனக்கு மட்டும் இப்படி பாட்டெல்லாம் கிடைக்குது."
" இப்படி கைவசம் நம்மகிட்ட பல விஷயம் இருக்கு சாரு."
"ஓ அப்படிங்களா சார். சரி இன்னைக்கே இதை ஆது காதுக்கு கொண்டு போய்ற வேண்டியதுதான்" என்று சாரு கூறிய மறு நொடி தன் இருக்கையை விட்டெழுந்த சஞ்சய்
"ஏன் சாரு உனக்கு இந்த கொலைவெறி ?? எல்லாம் நல்லா தானே போய்கிட்டு இருக்கு.. ஆ ஊனா இப்படி என் அடிவயிற்றில் கை வைக்கிற?" என்று புலம்ப
"அந்த பயம் இருக்கட்டும். இருந்தாலும் நீ ஆது பேபிக்கு இவ்வளவு பயப்படக்கூடாது" என்று சிரித்த சாருவிடம்
"நீ ஏன்மா சொல்லமாட்டா எல்லாவற்றையும் எப்படி வத்திவைக்கனுமா அப்படி வத்தி வச்சிட்டு நீ சைலண்டா இருப்ப. அவ கேள்விக்கு பதில் சொல்லுவதற்குள் எனக்கு முழி பிதிங்கிரும். சம்பந்தமே இல்லாம சிங்க் பண்ணி டிசைன் டிசைனாக கேப்பா பாரு கேள்வி.. யப்பா சாமி.. ஏன் சாரு அவ மட்டும் அப்படியா இல்லாட்டி பொண்ணுங்க எல்லோரும் அப்படியா??" என்ற சாருவிடம்
"இப்படி எல்லாம் உங்களை படுத்துனா தான் பசங்க நீங்க பொய் சொல்ல பயப்படுவீங்த அதான் இப்படி பண்ணுறோம்"
"யப்பா சாமி என்ன ஒரு புத்திசாலித்தனம்.." என்ற சஞ்சையை பார்த்து சிரித்த சாரு பின் நியாபகம் வந்தவளாக
"சஞ்சு நான் அஸ்வினை லவ் பண்றேனு நீ எப்படி கண்டு பிடிச்ச??"
"ஹாஹா.. சொல்லமாட்டேனே என்ன பண்ணுவ?" என்று ராகம் பாட
"ஆதுகிட்ட போட்டு குடுப்பேனே"என்று அவளும் இசைந்து பாட
"அம்மா தாயே அவசரப்படாத.. இப்ப என்ன நீ அஸ்வினை லவ் பண்ணுவதை நான் எப்படி கண்டுபிடித்தேனு தெரியணும் அவ்வளோ தானே சொல்றேன். நீ அன்னைக்கு ரெஸ்டாரன்டில் அஸ்வினை தெரியும்னு சொல்லும் சொன்னப்போவே எனக்கு ஒரு டவுட்.பிகாஸ் நீ சொன்ன மாடிலேஷன் அப்புறம் நீ அவனை விட்ட லுக்கு எல்லாமே ஒரு மார்க்கமா இருந்துச்சி.அப்போவே கெஸ் பண்ணேன். பிறகு ஒரு நாள் நாம மூன்று பேரும் ஒரு கிளையண்ட் மீட்டிங்கிற்கு தாஜிற்கு போனமே அப்போ நான் வாஸ்ரூம் போயிட்டு வரும் போது நீ அவனை சைட் அடிச்சிட்டு இருந்த.ஆனா அவன் அதை கவனிக்காம உனக்கு ஏதோ எக்ஸ்பிளைன் பண்ணிட்டு இருந்தான். அப்பவே கன்பாம் ஆகிவிட்டது. ஆனாலும் சந்தேகத்தை உறுதிப்படுத்த அன்னைக்கு ஈவினிங் அஸ்வினை பற்றி விசாரிப்பது போல் உன்னை டெஸ்ட் பண்ணேன். நீ அவனைப்பற்றி பேசும்போது உன் கண்ணில் ஒரு ஆர்வம்,மகிழ்ச்சி,விருப்பு இப்படி எல்லாம் கலந்த உணர்வை பார்த்தேன். அதே வெளிப்பாட்டை ஆது எனக்கு ஓகே சொல்லும் போது பார்த்திருக்கேன். அப்போ தான் எனக்கு இருந்த சின்ன டவுட்டும் கிளியர் ஆகிச்சி."
"ஆனாலும் சஞ்சு நீ ப்ரில்லியண்டுக்கெல்லாம் ப்ரில்லியண்ட் டா."
"இனி சரி ஐயாவோட இன்டர்லிஜன்சியை புரிந்துக்கோ"என்று சஞ்சு தன் காலரை தூக்கி விட
"சரிங்க குருவே..."
"சரி சாரு எப்போ உன்னோட பிளானை எக்சிகியூட் பண்ண போற??"
"இன்னைக்கே தொடங்கலாம்னு தான் இருந்தேன். ஆனா அங்கிளுக்கு இப்போ உடம்பு சரியில்லை. சோ என் பேபி ரொம்ப பிசியா இருக்கும். அதுனால நெக்ட் வீக்ல இருந்து என்னோட கேம் ஸ்டார்ட்"
"ஓகே ஆல்திபெஸ்ட்"என்று தன் தோழியை வாழ்த்தினான் சஞ்சய்.
 

banumathi jayaraman

Well-Known Member
தேஜஸ்வினை கவிழ்க்க
ஸாரி, கவர சாருணி என்ன
பிளான் வைச்சுருக்காள்,
அனு டியர்?
சித்தப்பாவுக்கு உடம்புக்கு
சரியில்லாததாலே அஸ்வின்
இப்போதைக்கு தப்பிச்சானோ?
 
Last edited:

Saroja

Well-Known Member
நல்ல பொண்ணு தான் நினைத்து நம்பி
அவன் வேலைக்கு வந்தா
இந்த அம்மா என்ன செய்ய போறாங்க
அஸ்வின் சித்தப்பா உடம்பு சரி இல்லை
அதனால் நீ இப்ப தப்பிச்ச
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top