மண்ணில் தோன்றிய வைரம் 15

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
சாரு தான் அஸ்வினை விரும்பிய கதையை கூறி முடித்த பின் சஞ்சய் பலமாக சிரிக்க ஆரம்பித்தான். அவன் சிரிப்பில் காண்டான சாரு "சஞ்சு ஏன்டா சிரிக்கிற?? என்கதையை கேட்டா உனக்கு சிரிப்பா இருக்குல்ல?? நீ எல்லாம் ஒரு பிரண்டா டா?? துரோகி.." என்று சாரு சஞ்சயை வசைபாட "சாரு சத்தியமா சொல்லுறேன். இதுவரைக்கும் என்னோட வாழ்க்கையில இப்படி ஒரு ஸ்டோரிய கேட்டதோ பார்த்ததோ இல்லை." என்று மறுபடியும் சிரிக்க..
"ஏன்டா சொல்ல மாட்ட உன்கிட்ட போய் சொன்னேன் பாரு எனக்கு இது தேவைதான்"

"பின் என்ன சாரு நீ கதை சொல்ல ஆரம்பிக்கும் போது என்னமோ நீ உருகி உருகி காதலிச்ச அவன் உன்னை வேணாம்னு சொல்லி அப்படி ஏதாவது சம்பவம் நடந்திருக்குமோனு நினைத்தேன். ஆனா இங்கே ஸ்டோரியே வேற மாதிரி இருக்கு. இதுல காமடி என்னனா அவனுக்கு நீன்னு ஒரு ஆள் இருப்பதே தெரியல. இந்த மேட்டரை என்னமோ அம்பிகாவதி அமராவதி அமரக்காவியம் ரேஞ்சுக்கு அனுபவிச்சி சொன்னா கேட்பவனுக்கு சிரிப்பு வருமா வராதா??"
"டேய் உனக்குமா என்னோட நிலைமை புரியலை. எங்க பிரபோஸ் பண்ணா சிஸ்டர்னு சொல்லிருவாரோங்கிற பயத்தில் நான் பிரபோஸ் பண்ணல. அதுக்கு இப்படியா வச்சி ஓட்டுவ??"
"ஓகே கூல்... அதுக்கு பிறகு நீ அஸ்வினை மீட் பண்ணவே இல்லையா..??"
"இல்லடா. நான் செகெண்ட் இயர் படிக்கும் போது அப்பா தவறிட்டாரு. அப்போ தான் நான் கம்பனியை டேக்கோவர் பண்ற நிலைமை வந்தது. அதுக்கு பிறகு தான் உனக்கே தெரியுமே.."
"ஆனாலும் சாரு நீ சும்மா இருந்திருக்க மாட்டியே.." என்று தன் தோழி பற்றி நன்கறிந்த சஞ்சய் வினவ
"ஹாஹா.. இருந்தாலும் நீ இவ்வளவு ப்ரில்லியண்டா இருக்க கூடாது சஞ்சு... அதுக்கு பிறகு சோசியல் மீடியாவில் எல்லாவற்றிலும் அவனை தேடினேன். அப்போ தான் அஸ்வினோட இன்ஸ்டா, பேஸ்புக், லிங்ட்இன் அக்கவுண்டை கண்டுபிடித்தேன். அதனுடைய தயவால் அவனை பற்றிய அனைத்து தகவல்களும் அப்டேட் ஆகிட்டே இருக்கு"
"அடிப்பாவி இவ்வளவு வேலை பார்த்திருக்கியா... அதுசரி ஏன் லிங்டின் அக்கவுண்டையும் அப்ரோச் பண்ண??"
"அதுவா அந்த அக்கவுண்டில் தான் ஒருத்தரோட உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். மோஸ்ட்லி பிசினஸ் பீல்டில் இருப்பவர்கள் அந்த அக்கவுண்டை அப்டேட் பண்ணிட்டே இருப்பாங்க. எப்படியும் என் ஆளு அந்த விடயத்தில் எல்லாம் கரைக்டா இருக்கும்னு தெரியும். அதான் அந்த அக்கவுண்டையும் அப்ரோச் பண்ணேன். அதனுடைய உதவியால் தான் அஸ்வின் அவுஸ்ரேலியாவில் இருப்பது தெரியவந்தது.."
"பா.. சாரு நீ வேற லெவல்..சரி இப்போ அஸ்வின் கிட்ட எப்படி லவ் பிரபோஸ் பண்ண போற..??"
"அதான் தெரியலை டா. அவரு மாறி இருப்பாருனு நினைத்தேன். ஆனா இன்னமும் அப்படியே தான் இருக்காருடா.."
"ஏன் சாரு அப்படி சொல்லுற??"
"நம்ம ஸ்டாப் கீதாவுக்கும் அன்னைக்கு ரோஹினிக்கு கிடைத்த அதே டோஸ் கிடைத்தது."
"என்னா சாரு சொல்ற?? இது எப்போ நடந்தது??"
"லாஸ்ட் வீக் நான் காபி ஷாப் போயிருந்தேன். அப்போ தான் இது நடந்தது. ரோஹினிக்கு என்ன சொன்னாரோ அதை அப்படியே வார்த்தை மாறாம கீதாகிட்டயும் சொன்னாரு."
"அதை நீ ஒட்டு கேட்ட.. அப்படி தானே.."
"நான் கேட்கலடா.. அது காதுல விழுந்தது..."
"நல்லா சமாளிக்கிற சாரு. ஆனாலும் உன் ஆளுக்கு இவ்வளவு அலும்பு இருக்க கூடாதே."
"நான் என்னடா பண்ண இந்த ரௌடி பேபி பெண்ணை பார்த்தா மண்ணைப் பார்த்து நடக்கிற ரகமா இருக்கு. இதை எப்படி என்னை பார்க்க வைப்பதென்று தெரியவில்லை.."
"பெண்ணை மட்டும் இல்லை ... பெண் சிற்பத்தை கூட திரும்பி பார்க்க மாட்டாரு போல இருக்கே.. நீ இவருக்கு வைத்த பெயர் சரி தான்.ஶ" என்று சிரித்த சஞ்சயை முறைத்தாள் சாரு. "ஓகே கூல் சாரு. விட்டால் கண்ணாலே பஸ்பமாக்கிடுவ போல.. சரி சொல்லு இனி என்ன பண்ண போற" என்று கேட்ட சஞ்சுவிடம் "ஒரு பிளான் வைத்திருக்கேன். அதை தான் எக்சிகியூட் பண்ணலாம்னு இருக்கேன்" என்று தன் படு மாஸான பிளானை சஞ்சயிடம் விளக்கத்தொடங்கினாள் சாரு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top