மண்ணில் தோன்றிய வைரம் 12 & 13

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
#12....
வழமை போல் அன்றும் கல்லூரி மைதானத்தில் வழமையாக அமரும் இடத்தில் அமர்ந்து மைதானத்தில் விளையாடுபவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் சாரு. அப்போது யாரோ பேசும் குரல் கேட்டது. எப்பொழுதும் மற்றவர்கள் பேசுவதை அவசியமற்று ஆர்வமாக காதில் வாங்கிக்கொள்ளாத சாரு ஏனோ அந்த உரையாடலை கேட்க தோன்றிட தவறு என்று மூளை கூறினாலும் அதை கண்டுகொள்ளாது அவ்வுரையாடலை இன்னும் ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள்.



அவளுக்கு மறுபுறம் உடலைக்காட்டியவாறு மர நிழலின் கீழ் இருந்த அந்த நீண்ட பெஞ்சினில் அமர்ந்து தன் குடும்பத்தாருடன் வாட்சப் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்தான் அஸ்வின்.
"என்ன கவி மா சித்தி உன் மேல ஒரு பட்டியல் குற்றச்சாட்டு முன் வைத்திருக்காங்க... இதுக்கு உன் தரப்பு பிரதிவாதம் என்ன??"
என்று இப்புறம் அஸ்வின் கேட்க அந்ந புறம் கூறியதற்கு பதில் அளிக்கும் முகமாக "ஆகா மொத்தம் நீ ஒன்னும் பண்ணவில்லை அப்படி தானே?? அப்போ எதுக்கு சித்தி கவி மா சேட்டை பண்ணுறதா சொல்லுறாங்க?? சரி அதை விடு. ஒழுங்கா படிக்கிறீங்களா கவி மா?? இல்லாட்டி பக்கத்து வீட்டு குள்ள கத்தரிக்காயோட எப்பவும் விளையாட்டு தானா??"
"......"
"குட் கேள். மாது என்ன பண்றான்?? அவனை பிடிக்கவே முடியலை..விளையாட போய்விட்டானா??"
"...."
"சரி ஒழுங்கா இருக்கனும். சேட்டை பண்ணக்கூடாது சரியா?? அப்போ தான் அண்ணா வரும்போது நீங்க கேட்க பிளே ஸ்டேஷனை கொண்டு வருவேன்.. ஓகே வா??
"..."
"சரி போனை பாட்டிகிட்ட குடுங்க"
"பாட்டி எப்படி இருக்கீங்க?? தாத்தா எப்படி இருக்காங்க ?? "
"......"
"நான் நல்லா இருக்கேன் பாட்டி. நீங்க கேட்ட மூட்டுவலி மருந்து வாங்கிட்டேன். வீட்டுக்கு வரும்போது எடுத்துட்டு வருகிறேன்"
"..."
"இல்லை பாட்டி இப்போ வரமுடியாது. நீங்களே கவியை துணைக்கு கூட்டிட்டு போய் பார்த்துட்டு வந்துடுங்க. நான் கந்தசாமி அண்ணா கிட்ட போனில் பேசினேன். அவரும் ரொம்ப கவலைப்பட்டாரு. நம்மால் அவங்களுக்கு ஆறுதல் சொல்ல தான் முடியும். சோ என் சார்பா நீங்க அதை செய்வீங்களாம் சரியா??"
"....."
"என்னோட சமத்து பாட்டி. அப்புறம் தாத்தா இருந்தா அவரிடம் போனை குடுங்களே"
"ஹெலோ யங் மேன் எப்படி இருக்கீங்க?? உங்க பெஞ்சாதி உங்களை கண்கலங்காம பார்த்துக்கிறாங்களா??"
"..."
"ஹாஹா சூப்பர். இதை காதல கேட்கவே இவ்வளவு கிளுகிளுப்பா இருக்கு. இதை பார்க்க குடுத்து வைக்கவில்லையே எனக்கு??"
"...."
"கட்டாயம் வருவேன் தாத்தா நீங்க இவ்வளவு ஆசையா கூப்பிடும் போது அந்த காட்சியை லைவா பார்க்கிற சான்சா விடுவேனா??"
".."
" நான் நல்லா இருக்கேன் தாத்தா. சரி தாத்தா நான் இப்போ ஹாஸ்டலுக்கு போகனும் நாளைக்கு பேசுறேன். எல்லோரிடமும் சொல்லிருங்க" என்றவாறு போனை அணைத்து விட்டு அவ்விடம் விட்டு அகன்றான் அஸ்வின்.
அவனது உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த சாருவிற்கு தானும் அக்குடும்பத்தின் ஒரு அங்கத்தவராக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்ற ஏக்கம் உருவானது. என்னதான் பணம் கொட்டி கிடந்தாலும் தன்னை நலம் விசாரிக்க இவ்வுலகில் யாரும் இல்லையே என்று சாரு எப்போதும் ஏங்குவதுண்டு. அன்னை இருந்தவரை பாசத்தினால் சிறைப்பிடிக்கப்பட்டு சீராட்டப்பட்டவள் அன்னை இறந்த பின் அந்த அன்புச்சிறை அதன் பூட்டை திறந்து அவளை வெளியே தள்ளியது. தந்தை என்ற உறவு இருந்த போதிலும் சாருவை பற்றி நினைத்துப்பார்க்க அவருக்கு நேரம் இருக்கவில்லை.
தன் நண்பர்கள் தம் குடும்பத்தாருடன் உரையாடும் போது தனக்கு இப்படி விசாரிக்க யாரும் இல்லையே என்று எண்ணும் சாருவின் மனம் இன்று அஸ்வினின் உரையாடலை கேட்ட போது தோன்றிய எண்ணம் அவளை திடுக்கிட வைத்தது. என்னாதான் அது வழமையான ஏக்கம் என்று மூளை சமாளித்தாலும் மனமோ நீ அந்த குடும்பத்தில் ஒருவராக இணைய ஆசைப்படுகிறாயா?? என்று கேள்வி கேட்பதை நிறுத்தவில்லை. தன் மனம் போகும் பாதை அறிந்த சாரு அதிர்ந்தாலும் தற்போது மனதின் கேள்விக்கான பதில் தன்னிடம் இல்லை என்று தனக்கு தானே கூறிக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள். என்ன தான் மனிதன் தன் மனதை சரியாக உணராவிட்டாலும் அதை உணர்த்துவதற்கென்றே சில சம்பவங்கள் விதியின் விளையாட்டால் உருவாக்கப்படுகின்றன.

#13…
சாரு ஒவ்வொரு நாளும் வகுப்புக்கள் முடிந்த பின் அந்த மரத்தடி பெஞ்சில் அமர்ந்து நேரம் செலவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டாள். காரணம் அஸ்வின் மாலையில் தன் குடும்பத்தாருடன் அந்த இடத்தில் அமர்ந்து தான் உரையாடுவான். அவனது உரையாடல்கள் ஏனோ சாருவின் ஏக்கங்களை போக்குவதாகவே அமையும். அதனால் இச்செயல் தொடர்ந்தவாறே இருந்தது. அஸ்வினிற்கு இது குறித்து சந்தேகம் வராமல் இருப்பதற்கு அவள் பல பிரம்மப்ரயத்தனங்கள் செய்ய வேண்டியதாய் இருந்தது. எங்கே தான் செய்வது தெரிந்து அவ்விடம் வருவதை அவன் தவிர்த்துவிட்டால் இப்போது கிடைக்கும் சொற்ப இன்பமும் கிடைக்காமல் போய்விடுமோ என்று எண்ணி ஒவ்வொரு நாளும் விதவிதமான யுக்திகளை கையாண்டு அவ்விடத்தில் சரியான நேரத்தில் ஆஜராகி விடுவாள். இவ்வாறு அஸ்வினின் தொலைபேசி உரையாடல்களை கேட்க ஆவலாய் அவனை தொடரும் சாருவிற்கு தெரியாத விஷயம், தான் பின் தொடரும் நபர் தான் தேஜஸ்வின் என்பது. அவன் பேசுவதை மட்டும் கேட்கும் சாருவிற்கு எதிர்புறத்தில் அவனது குடும்பத்தார் அவனை அஸ்வின் என்று அழைப்பதை கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஆகவே அவன் யாரென்று தெரியாமலே சாருவின் மனதில் அவன் மேல் ஒருவித உரிமையுணர்வு வேரூன்ற ஆரம்பித்தது.
இவ்வாறு நாட்கள் சென்றுக்கொண்டிருக்க தான் பின்தொடரும் நபர் அஸ்வின் என்று சாரு அறியும் நாளும் வந்தது.
அன்று சாருவின் வகுப்பில் பொருளியல் விரிவுரையாளர் பாடவிளக்கத்தை நடத்திக்கொண்டிருக்கையில் அஸ்வின் அவரது அனுமதி கேட்டு வகுப்பினுள் நுழைந்தான். அவனை அங்கு பார்த்த சாருவிற்கு ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி.. ஆனால் மகிழ்ச்சிக்கான காரணம் மட்டும் தெரியவில்லை. தன்னுள் அதற்கு விடை காண முயன்றவளின் செவிகளில் அவன் கூறிச்சென்ற செய்தி விழவில்லை. அவன் சென்ற பின் ஒலித்த மணியோசையே அவளை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது. அப்பொழுது அஸ்வினை தேடிய விழிகளுக்கு அவன் பதிலாக கிடைக்காமல் சிறு ஏமாற்றம் கிடைத்தது.
"சாரு நீ தேஜஸ்வின் அண்ணாவை பார்க்க போகிறாயா??"என்ற நிஷாவிடம்
"நான் எதுக்குடி அவரை பார்க்க போகனும். அப்படியே பார்க்க போகனும்னாலும் ஆள் யாருனு தெரியாம எப்படி பார்க்கிறது?" என்ற சாருவை இவள் என்ன லூசா என்ற ரீதியில் ஒரு பார்வையை பார்த்து வைத்தாள் நிஷா.
" என்னடி லுக்கு இது?? எதுக்கு இப்படி கொடூரமா என்னை சைட் அடிக்கிறாய்??"
"ஓ மேடமிற்கு அப்படி ஒரு நினைப்பு இருக்கா?? நீ கெட்ட கேட்டுக்கு இது ஒன்று தான் குறை. சரி உனக்கு தேஜஸ்வின் அண்ணா யாருனு தெரியாதா??"
"தெரியாதுனு தான் இவ்வளவு நேரம் சொல்லிட்டு இருக்கேன். அது உன் காதிலே விழவில்லையா?? அந்த ரௌடி பேபி யாருனு எனக்கு தெரியாதுடி" என்ற சாருவிடம்
"உனக்கு உட்கார்ந்துகொண்டே தூங்கும் வியாதி ஏதும் இருக்கா?"என்ற கேள்வியை எழுப்பிய நிஷாவிடம்
" இப்போ எதுக்கு சம்பந்தம் இல்லாம கேள்வி கேட்கிற?"
"சம்பந்தம் இல்லாம ஒன்றும் கேட்கல..இப்போ அவரு வந்து தன்னை அறிமுகப்படுத்திகிட்டு ஆகெஸ்ரா குடுப்பில் ஜாயின் பண்ண விரும்புவர்களை தன்னை வந்து சந்திக்குமாறு சொல்லிட்டு போனாரு... இவ்வளவு நடந்த பிறகும் அவரை தெரியவில்லைனு சொன்ன வேறு எப்படி கேட்குறதாம்?"
"ஓ அப்படியா??"என்று வாயால் நிஷாவிடம் கூறிவிட்டு மைன்ட் வாய்சில் " நம்ம ஆள் தான் ரௌடி பேபியா?? இது இவ்வளவு நாள் நமக்கு தெரியாம போய்விட்டது.." என்று மனதினுள் வழக்கடித்துக்கொண்டிருக்க அவளை உலுக்கிய நிஷா "என்னடி மறுபடியும் தூங்குறியா?" என்று கேட்க
"நான் என்னா உன்னை மாதிரினு நினைத்தாயா? ஆர்கெஸ்ரா ஜாயின் பண்ணலாமா வேணாமானு என்னோட ஏழாம் அறிவுகிட்ட கேட்டுட்டு இருந்தேன்" என்று நிஷாவை சமாளிக்க அவளோ "எல்லாம் விவரமா தான்டி இருக்கீங்க"என்று விட்டு காண்டின் நோக்கி நகர்ந்தாள்.
தனக்கு கிடைத்த அந்த தனிமையில் தன் மனம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினாள் சாரு. நான் ஏன் அஸ்வினை கண்டதும் தாய்முகம் பார்த்த குழந்தையை போல் மகிழ்ந்தேன்??.ஏன் மாலையில் அவன் தன் குடும்பத்தாருடன் உரையாடுவதை கேட்கவேண்டி மைதானத்திற்கு அவனறியாமல் செல்கின்றேன்???...
அன்பிற்கு ஏங்குவதால் அப்படி செய்கிறேன் என்று எடுத்துக்கொண்டாலும் அவனை பார்க்கும் போது ஏன் ஒரு இனம்புரியாத உணர்வு தோன்றுகிறது???
அவனை நிஷா அண்ணா என்று கூறும் ஒவ்வொரு முறையும் ஏன் எனக்கு அண்ணா என்று கூற நா எழவில்லை?? அவன் யாரென்று தெரியாத போதே அவனுக்கு செல்லப்பெயர் வைத்தது மட்டுமல்லாமல் இப்போது அதையே அவனது பெயராக மாற்றியதன் காரணம் என்ன???......ஶ
இவ்வாறு பல கேள்விகள் அணைப்புடைந்த வெள்ளமாய் பெருக்கெடுக்க அதற்கு பதில் தெரியாது மனம் ஊசலாட அதன் விளைவால் தலைவலி அவளை சிறையெடுத்தது. தற்காலிகமாக தன் மனம் கேட்ட கேள்விகளை கிடப்பில் போட்டுவிட்டு காபி குடிப்பதற்காக காண்டின் சென்றாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top