பிரிவு : பொருட்பால், இயல் : அரசியல், அதிகாரம் : 49. காலமறிதல், குறள் எண்: 484 & 487.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 484:- ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்.

பொருள் :- (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
 

Sasideera

Well-Known Member
குறள் 487:- பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

பொருள் :- அறிவுடையவர், (பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார்;(வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

காலமறிதல்
செய்வதற்குரிய காலம் அறிந்து செய்து முடித்தற்கான கருவிகளுடன் செய்பவர்க்கு செய்தற்கரிய செயல்களில்லை என இவ்வதிகாரம் கூறுகிறது.
சுஈலப்பொழுதினால் பெறும் வெற்றி,, கஈலமறிதலால் வரும் பயன், கஈலம் வாய்க்காவிட்டால் பொஈறுத்திருத்தல், பொறுத்திருப்பதால் வரும் சிறப்பு, பொறுத்திருக்கும் பருவத்தில் தன் நோக்கம், உணர்ச்சிகள் ஆகியவற்றை வெளிக்காட்டாமை,, கா'லம் கூடியபொழுது வினரந்து செயல்படுதல், அச்செயல்முறை விளக்கம் இவற்றை சொல்வது காலமறிதல் அதிகாரம்..
காலத்துடன் இடமும் இணக்கமாக் அமைந்துவிட்டால் உலகமே கைகூடும் என்கிறது ஒரு பாடல். காலத்திற்காகச் சிலவேளைகளில் காத்திருக்க வேண்டி இருக்கும். அச்சமயங்களில் பதற்றமின்றிச் செயல்படவேண்டும். த்ம்முடைய குறிக்கொள்களை வெளிக்காட்டிக் கொள்ளாம்ல் ஒடுங்கி இருக்க வேண்டும். சீண்டும் மாற்றாரின் நடவடிக்கைகளுக்கு உடனுக்குடன் எதிவினை காட்டாம்ல் அசைவற்றுத் தோற்றமளிக்க வேண்டும். அவ்விதம் ஒடுங்கி இருத்தல் இகழ்வாகக் கருதப்படமாட்டாது. இவ்விதம் பொறுமை காப்பது பெரும் பயனளிக்கும். தம் காலம் வரும்போது எல்லாம் தலைகீழாகிவிடும். பணியச் செய்தவர் பணிவர். காலம் இயைந்தபொழுது அரிய செயல்களைச் செய்து முடித்துவிடவேண்டும். பதுங்கி இருந்தவர், காலம் கூடியபொழுது பாய்ந்து விரைந்து திருத்தமாகச் செயலாற்றி வெற்றி காண்பர்.. இவை இந்த அதிகாரத்தில் அடங்கியுள்ள செய்திகளாகும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top