பிரிவு : அறத்துப்பால், இயல் : துறவறவியல், அதிகாரம் : 37. அவாவறுத்தல், குறள் எண்: 365 & 367.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 365:- அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.

பொருள் :- பற்றற்றவர் என்று கூறப்படுவோர் அவா அற்றவரே; அவா அறாத மற்றவர், அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.
 

Sasideera

Well-Known Member
குறள் 367:- அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.

பொருள் :- ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.
ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-
அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றவாறு இல்லறத்தில் நின்றொழுகி, ஒப்புரவறிந்து, ஈகையில் ஈடுபட்டு, புகழ் பெற்று, அதனையும் கடந்து அருள், தவ நோன்புகளை மேற்கொண்டு, நிலையாமை உணர்ந்து, துறவு நெறிநின்று, மெய்ப்பொருள் காண்கின்றனர் மாந்தர். அந்நிலையில் அவர்கள் அவாவை நீத்து இறைவனது மாணடி சேர ஆயத்தமாகின்றனர். பிறப்பு-வாழ்க்கை-இறப்பு என்னும் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடந்து இவ்வுலக வாழ்க்கையின் இறுதிநிலையில் இருக்கின்ற மக்களுக்கான அதிகாரம் இது. உயிர்வாழ்வின் முதிர்ந்த நிலையில் முழுஅமைதி பெற அவா அறுத்தல் தேவையாகிறது என்பது குறள் காட்டும் அறம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top