பிரிவு : அறத்துப்பால், இயல் : துறவறவியல், அதிகாரம் : 35. துறவு, குறள் எண்: 346 & 350.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 346:- யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

பொருள் :- உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக் கருதலுமாகிய மயக்கத்தைப் போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.

உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.
 

Sasideera

Well-Known Member
குறள் 350:- பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

பொருள் :- பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும்; உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப் பற்ற வேண்டும்.

ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.

திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது "பற்று" - ஆறு முறை.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-
இல்லறம் இயற்றிப் பின்னர் உரிய காலத்தில் அதை நீத்துத் துறவுவாழ்க்கை மேற்கொண்டு இறையொளி காண்பதற்கு முயல்தல் துறவு எனப்படும். பற்றுக்களையும் தொடர்புகளையும் நீக்கி ‘யான்', 'எனது’ என்னும் செருக்கறுத்தலே துறவாகும். இல்லறத்தின் குறிப்பிட்ட செயல் எல்லைக்குள்ளேயே துறவறத்தை அடைய முடியுமென்பதால் துறவறம் இருவகை அறத்துக்கும் பொருந்துகிறது என்பர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top