பிரிவு : அறத்துப்பால், இயல் : துறவறவியல், அதிகாரம் : 29. கள்ளாமை, குறள் எண்: 282 & 286.

Sasideera

Well-Known Member
#1
குறள் 282:- உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

பொருள் :- குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே; அதனால் பி்றன் பொருளை அவன் அறியாத வகையால், `வஞ்சித்துக் கொள்வோம்’ என்று எண்ணாதிருக்க வேண்டும்.

அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.
 
Sasideera

Well-Known Member
#2
குறள் 286:- அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

பொருள் :- களவு செய்து பிறர்பொருள் கொள்ளுதலின் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.

உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.
 
Sasideera

Well-Known Member
#3
அதிகார விளக்கம் :-
தனக்கு உரிமையில்லாத மற்றவர் உடைமைகளை அவரறியாமல் கைக்கொள்ளவோ, வஞ்சித்து எடுத்துக் கொள்ளவோ, எண்ணாதிருத்தலும் அங்ஙனம் செய்யாதிருத்தலும் கள்ளாமை ஆகும். பொருள் ஈட்டுவதற்காக மறைந்தொழுகல் செய்யலாகாது என்பதைக் கள்ளாமை அதிகாரம் சொல்கிறது.
சிறிதேயானாலும் களவாடக்கூடாது; களவுசெய்ய வேண்டும் என்று எண்ணுதலும் தீமையே; களவால் செல்வம் பெருகுவது போன்று தோன்றினாலும் அது அழிந்தே தீரும்; கண்டுபிடிக்கப்பட்டால் மிகுந்த துன்பத்தைத் தரும்; களவு செய்வார் அன்பில்லாதவராகவே இருப்பர்; அவர் வரம்புமீறிய வாழ்வு நடத்துவர்; இருள் அறிவு கொண்டவர்; களவின் சுவை கண்டவர் திரும்பவும் மாறுதல் கடினம்; மற்ற நல்ல தொழில்களைப் பயிலாதவர் நேரற்ற செயல்களையே புரிவர். ஆனால் கள்ளார் வானுலகமும் செல்லமுடியும். இவை இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் கூறும் செய்திகள்.
கள்ளாமையை ஒருவகை அறமாகவே கருதுகிறார் வள்ளுவர்.
 
Advertisement

New Episodes