பிரிவு : அறத்துப்பால், இயல் : துறவறவியல், அதிகாரம் : 28. கூடாவொழுக்கம், குறள் எண்: 275 & 279.

Sasideera

Well-Known Member
#1
குறள் 275:- பற்றுஅற்றேம் என்பார் படிற்றுறொழுக்கம் எற்றுஎற்றுஎன்று
ஏதம் பலவுந் தரும்.

பொருள் :- பற்றுக்களைத் துறந்தோம்’ என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம், என்ன செய்தோம் என்ன செய்தோம்’ என்று வருந்தும்படியான துன்பம் பலவும் தரும்.

எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.
 
Sasideera

Well-Known Member
#2
குறள் 279:- கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.

பொருள் :- நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது; மக்களின் பண்புகளையும் செயல் வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.
 
Sasideera

Well-Known Member
#3
அதிகார விளக்கம் :-
வஞ்சமனம் கொண்டு உலகத்தாரை ஏமாற்றி வாழ்வு நடத்துவது பொய்ஒழுக்கமாம். இதை வள்ளுவர் கூடா ஒழுக்கம் எனக் குறிக்கிறார்.
மற்றவகைகளில் தான் ஈட்டிய ஒரு உயர்ந்த தோற்றத்தை வைத்து குற்றம் புரிபவன், தான் அஞ்சத்தக்கவன் எனக் காட்டிக்கொள்ள வல்லுருவம் பூண்டு ஊர்மேய்பவன், தவவேடத்தில் மறைந்திருந்து காமவேட்டையாடுபவன், புறத்தே செம்மையுடையராகக் காட்சி தந்து அகத்திலே பெருங்குறையுடையவன், மனத்திலே மாசை வைத்துக்கொண்டு மாட்சிமையுடையாராகக் காட்ட நீராடல் போன்ற சடங்குகளில் ஈடுபடுபவன், தோற்றத்தில் ஒன்று செய்கையில் முற்றிலும் மாறாக இருப்பவன் போன்ற இவர்கள் மற்றவர்களுக்குத் தெரியாவண்ணம் மறைந்திருந்து தீச்செயல்கள் புரிபவர்கள். இவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து மக்களை விழிப்பாக இருக்கச் செய்வதற்காக அமைந்தது கூடாஒழுக்கம் அதிகாரம் ஆகும்.
மறைவாகச் செய்கிறோம் என்று எண்ணுகிறார்கள்; ஆனால் இவர்களது படிற்றொழுக்கத்தை இயற்கை பார்த்துக்கொண்டு பதிவு செய்து கொண்டிருக்கிறதே!; 'என் செய்தோம் என் செய்தோம்!' என தன்னிரக்கமாக இவர்கள் பின்னால் புலம்பப் போகிறார்கள்; வஞ்சித்து வாழ்க்கை நடத்துபவரினும் கொடியவர் இல்லை; உலகம் பழித்தவைகளை விலக்கிவிட்டால் போதும்; வெளிவேடம் எதற்கு? இவை கூடாஒழுக்கம் பற்றிக் குறள் தரும் கருத்துக்கள்.
 
Advertisement

New Episodes