நேசம் மறவா நெஞ்சம் -15Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம்-15





அதிகாலை 5 மணிக்கே கண்ணன் கண்விழித்து விட்டான். எப்போதும் எழுந்து வயலுக்குச் செல்பவன் இன்று கண்விழித்தவுடன் ஒரு பூமாலைபோல தன்மேல் ஒரு கையையும் காலையும் போட்டு படுத்திருந்த கயலை கண்டவன்........அவன் மார்புக்கு நேராக அவள் தலையை வைத்திருந்தாள் தன் தலையை அவள் தாடையில் வைத்து............ ஆழ்ந்த மூச்செடுத்தவன்..............இவ பூவ அங்க டேபுள்ள தானே வச்சா.........ஆனா இவ மேலயிருந்து எப்படி அந்த பூவாசம் வருது என்று யோசித்தவன். தன் தலையை சற்று பின்னால் நகர்த்தி அவளுடைய முகத்தை ஆராய ஆரம்பித்தான்..............



அவளுடைய அந்த முகத்தில் குழந்தை தனத்தையும் அப்பாவித்தனத்தையும் கண்டவனுக்கு............ நேற்று இரவு அவள் பேச்சை கேட்டவனுக்கு......அப்பா......... என்ன இவ இப்படி பேசுறா.........இவள வீட்டுலவச்சு எப்புடித்தான் கட்டிமேச்சாங்களோ ............(அதுக்கு தான் இனிமே நீ கிடச்சியே ராசா.....).. அவளை மேலிருந்து கீழாக அணுஅணுவாக ரசித்து கொண்டிருந்தவன்......... அவளுடைய நைட்டி முழங்கால் வரை ஏறி இருக்கவும் மெதுவாக அவள் காலை பார்க்க.......... அவள் உள்ளே சுடிதாரின் பேன்ட்டை போட்டிருந்தாள்........... வட போச்சே......பயபுள்ள தூங்கும்போது கூட அலார்ட்டாதான் இருக்கு என்று நினைத்தவன்....... ம்ம்ம.......மீண்டும் அவள் முகத்தை ரசிக்க ஆரம்பித்தான்..........



சிறிது நேரம் கழித்து கண்விழித்த கயல் என்னடா இது இந்த தலகாணி இப்புடி இருக்கு........எவளோ நம்ம தலகாணிய எடுத்துட்டு மாத்தி வச்சுட்டாளுக.......... இன்னைக்கு இருக்கு அவளுகளுக்கு மனதிற்குள் தன் தங்கைகளை திட்டியபடி கண் விழித்தவள்.......... தன் முகத்திற்கு அருகே பனியன் மட்டும் போட்டுப் படுத்திருந்த கண்ணனை பார்த்தவள் படக்கென்று எழுந்து உட்கார்ந்தாள்............ தன்நைட்டியை அவசரமாக கீழே இழுத்து விட்டாள்........ நல்ல வேளை நம்ம அம்மா எப்பவுமே பேன்ட்ட போட்டு படுக்கச் சொன்னதால நம்ம மானம் இன்னைக்கு தப்புச்சுச்சு.......இல்லனா கப்பலேறியில்ல போயிருக்கும்.............



ஆமா நாம இந்த ஒரத்துல தான படுத்தோம்........... எப்புடி இவருகிட்ட வந்தோம்..........மேக்கொண்டு அவரு மேல வேற கைய கால போட்டு தூங்கியிருக்கோம்.........அதுதான் நம்மள என்ன சொல்லி திட்டலாம்னு யோசிக்கிறாரோ............கயல் எப்போதும் மல்லிகாவோடும் அருணாவோடும் தான் படுப்பாள்.......இவர்கள் இல்லையென்றால தன்னைச் சுற்றிலும் தலகாணியோடு தான் படுப்பாள்........ இல்லையென்றால் தரையில் விழுந்து கிடப்பாள்........ ஆனால் நேற்று இரவு தலகாணி இல்லாததால் நாம எப்புடியும் தரையில தான்கிடப்போம்.........ஆனா இந்த கட்டில் இவ்வளவு உயரமா இருக்கே......... கீழே விழுந்தா கண்டிப்பா மண்ட ஒடஞ்சுறும் என்று யோசித்தவள்......அரை தூக்கத்திலேயே இருந்தாள்.........லேசாக தடுமாறும் போதெல்லாம் விழித்து சற்று நகர்ந்து படுத்தாள்.......

நடுஇரவுக்குமேல் தன்னை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றவள் ...... .கண்ணன் நடுஇரவில் எழுந்து பாத்ரூம் சென்று வரும் போது கயல் கட்டலின் விளிம்பிற்கு வந்ததிருந்தாள். அவள் கீழே விழுந்துவிடுவாளே என்று நினைத்து .........அவளை தன்புறம் நகர்த்தி படுக்க வைத்தவன் அவள் மீண்டும் உருள ஆரம்பிக்கவும் அவள் மேல் கையை போட்டுப் படுத்திருந்தான்.............இவளும் அவனை தலகாணி என்று நினைத்து கையையும் காலையும் அவன் மேல் போட்டு படுத்திருந்தாள்........



இவள் கண் விழித்ததைக் கண்ட கண்ணன் ஒன்றும் சொல்லாமல் கீழே இறங்கிச் செல்லவும் கயலும் அவசர அவசரமாக சேலையை கட்டினாள்..........இல்லை சுற்றிக் கொண்டிருந்தாள்..........



அவள் மெதுவாக மாடியிலிருந்து இறங்கிவந்ததை அப்போது உள்ளே வந்து கொண்டிருந்த கண்ணன் பார்த்து ஐய்யயோ இவ ஏன் சேலைய இப்புடி சுத்தி வச்சிருக்கா.........அவ தலையில பூவ காணோம்....இப்புடி........ இவ வர்றத பாத்தா நம்மள தானே தப்பா நினைப்பாங்க....அங்க ஒன்னுமே நடக்கல........ஆனா இவ வர்றத பாத்தா யாரும் சூடம் ஏத்தி சத்தியம் பண்ணி அங்க ஒன்னும் நடக்கலைன்னு சொன்னாக்கா ஒரு பயலும் நம்ப மாட்டாங்க.................. என்று நினைத்து சுற்றிமுற்றி பார்க்க.........சாவித்திரியும் தாமரையும் மனதிற்குள் சிரித்தபடி அவனை நிமிர்ந்து பார்க்க கண்ணனுக்கு வெட்கம் வந்து விறுவிறுவென்று மாடிக்கு சென்றான்........ கயல் தாமரையிடம் வந்து ஏதோ கேட்க வரவும்

“ முதல்ல போயி குளி......”..என்று அவளை அனுப்பி வைத்தாள்.........

கயல் குளித்து வரவும் தாமரை அவளுக்கு சேலையை இரண்டு மூன்று தரம் கட்டி பழக்கிவிட்டு பின் கயல் சாமி கும்பிட்டு வரவும்............தாமரை சாவித்திரியிடம் சென்று.......

“அத்த அம்மா போன் பண்ணியிருந்தாங்க.........மறுவீட்டுக்கு கயலையும் அவுகளையும் இன்னைக்கு கூட்டிட்டு வரச்சொன்னாங்க..........”



“ஏத்தா இன்னும் ரெண்டு நாளைக்கு இங்கன இருந்துட்டு போகலாம்ல.......”



“இல்லத்த அவசரமா வந்ததால பிள்ளைங்க ரெண்டையும் அம்மாட்ட விட்டுட்டு வந்தேன்........ அதுக ரெண்டும் அம்மாவ ஒருவழியாக்கி இருக்குங்க......... அவுகளும் ஊருக்கு போயிட்டாங்களாம்...........நான் இன்னைக்கு அம்மா வீட்டுக்கு போனாதாத்த பிள்ளைங்க ரெண்டையும் கூட்டிக்கிட்டு நாளைக்காச்சும் ஊருக்கு கிளம்பமுடியும்.... அப்புறம் லேட்டான்னா அவுக சாப்பாட்டுக்கும் ரொம்ப செரமபடுவாங்க.......... மல்லிகாவுக்கும் பள்ளிக்கூடம் இருக்குல்லத்த............ நாங்க கிளம்புறோம் நீங்க கயலு மாப்ளகிட்ட கேட்டுட்டு அப்புறம் வீட்டுக்கு எப்ப வாறாங்கன்னு போன பண்ணிச் சொல்லிருங்கத்த........”



“சரித்தா நானும் போன்ல சொல்லிருரேன்.........நான் கலியாணம் நல்ல படியா முடிஞ்சா குலசாமி கோவிலுக்கு போயிட்டு அப்புடியே பழனிக்கு வரதா வேண்டியிருக்கேன்...........இங்கயும் போட்டது போட்டபடி கிடக்கா.......இந்த வேலையெல்லாம் முடிச்சுட்டு......மத்தியானத்துக்கு மேல கோயிலுக்கு கிளம்பலாமுன்னு பாக்குறேத்தா..........”



“சரித்தே அப்ப நாங்க கிளம்புறோம்........”



“டேய் ராமா..........நீ போயி நம்மவுட்டு காருல இவுகள ஊருல கொண்டுபோயி விட்டுட்டு வெரசா வா......... நாம கோவிலுக்கு கிளம்பனும்..........”.



ராமருக்கு பரவால்லயே....... இன்னும் கொஞ்சநேரம் இந்த ஜாமூன சைட் அடிக்கலாம் போலவே...........என்று நினைத்து சீட்டி அடித்தபடி காரின் சாவியை எடுக்கச் சென்றான்.



தாமரையும் கயலுக்கு சில அறிவுரைகளை கூறியவள் காருக்கு அருகில் செல்ல.... மல்லிகாவுக்கு அழுகை வந்தது....... கயலும் மல்லிகாவையும் தாமரையையும் கட்டிக் கொண்டு அழ............மூவருமே அழ ஆரம்பித்தனர்...........



சாவித்திரி தான் அவர்களை சமாதானப்படுத்த...............கயலை தன் தோளில் சாய்த்துக் கொண்டார்..........



கார் கிளம்ப போக.........மல்லிகா ........”..ஒரு நிமிஷம்...... ஒரு நிமிஷம் ......நிப்பாட்டுங்க...... ப்ளிஸ்.......”.என்று காரைவிட்டு இறங்கியவள்......... கயலிடம் செல்ல அப்போதுதான் கயலுக்கு மல்லிகாவின் ரெக்கார்டு நோட்டு ஞாபகத்திற்கு வந்தது......... குடுகுடுவென்று மாடிக்கு ஒடியவள்.........மல்லிகாவின் ரெக்கார்டு நோட்டை கொண்டு வந்து கொடுக்க..........



“சாரிக்கா.......சாரிக்கா.......தெரியாம நோட்டை கொண்டு வந்துட்டேன்.......... நான் போயி இத அமுதா அக்காகிட்ட குடுத்து படம் வரஞ்சுக்குறேன்..................”என்ற படி நோட்டை பிரித்துப் பார்க்க.......... கயல் எல்லா படத்தையும் வரைந்திருந்தாள்............. அதை பார்த்த மல்லிகா................



“ ஏஏஏஏஏ...........சூப்பர்கா எப்புடிக்கா சொன்னபடி எல்லா படத்தையும் வரஞ்ச..............”.. என்றவள்..கயலின் கன்னத்தில முத்தம் கொடுக்க............ கண்ணனுக்கும் ராமனுக்கும் காதில் புகை வந்தது.........கண்ணனோ இவதான் நமக்கு வில்லியா.........தாமரையோ தலையில் அடித்துக் கொண்டாள்.......... இவ எப்ப படம் வரஞ்சுருப்பா......... கயலையும் அவுக வீட்டுக்காரரையும் பாத்தா ராத்திரி சந்தோசமா இருந்த மாதிரிதான் இருந்துச்சு........ பின்ன எப்ப..............வரஞ்சா..........

அவர்கள் அனைவரும் ஊருக்கு கிளம்ப................. கயலை சிறுசிறு வேலைகள் கொடுத்து அவளை இயல்பு நிலைக்குத் திருப்பினார்......... காலை உணவை தயாரித்தவர்கள்.......... சாவித்திரி ஆண்கள் மூவரையும் சாப்பிட அழைக்க........... மூவரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது சாவித்திரி கயலையும் சாப்பிடச் சொல்ல கண்ணனுக்கு புரை ஏறியது...........ஆத்தி இவ ராத்திரி நம்மகிட்ட பேசுன மாதிரி எதையாவது சொல்லுவாளோ......என்று நினைத்து தன் தாய் மற்றும் தம்பிகளின் கவனத்தை வேறுபுறம் திருப்பியவன் அவளை இழுத்து தன் அருகில் அமர்த்தியிருந்தான்..............



“பேசாம இங்கன உக்காந்து சாப்புடு “என்று அவள் காதின் அருகில் சென்று சொல்ல......... அவளோ என்ன இவுக எல்லாரும் இருக்கும் போதே கையை புடிச்சு இழுக்குறாரு...............என்ன என்று ஏதோ சொல்லவர........

சாவித்திரியோ “எல்லாரும் சீக்கிரமா சாப்புடுங்க........ வேலைய முடிச்சுட்டு கோவிலுக்கு கிளம்பனும்.”.
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இவர்கள் அனைவரும் காரில் கோவிலுக்கு கிளம்ப கண்ணன் அவள் தன் அருகில் வந்து அமர்வாள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க.........அவள் சாவித்திரியின் அருகில் அமர்ந்திருந்தாள்............முத்து தன் தாயின் மறுபுறம் அமர ராமர் முன்னால் தன் அண்ணனோடு அமர்ந்தான்............



அனைவரும் அந்த காட்டிற்குள் இருக்கும் அந்த கருப்பர் கோவிலுக்குச் செல்ல........ “ஆத்தா கயலு இது தான்டா நம்ம குலசாமி நல்லா கும்பிட்டுக்கோ........”



“.ம்ம்ம் சரித்தே.... “ஏற்கனவே பூசாரிக்கு போனில் தகவலை சொல்லியிருந்ததால் அவர் எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தார்.................



பூசாரி இரு மாலைகளை கொடுத்து கண்ணனையும் கயலையும் மாலை மாற்றச் சொன்னார்.......மாலை மாற்றியவர்கள் கோவிலை வலம் வந்து கும்பிட்டவர்கள்..... சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பழனிக்கு கிளம்பினார்கள்...........



கண்ணனும் ராமரும் மாறி மாறி காரை ஓட்ட சீக்கிரமே பழனியை அடைந்தார்கள்..... மலை ஏறியவர்கள் முத்துவும் ராமரும் முன்னால நடக்க கயல் சாவித்திரியோடு மெதுவாக நடந்தாள்........... கண்ணன் தன் தாயின் மறுபுறம் வர கோவிலில் கூட்டம் சற்று குறைவாக இருந்ததால் சீக்கிரமே முருகனை தரிசித்து மலை இறங்க ஆரம்பித்தார்கள்.......... கயல் இதுவரை வெளி இடங்களுக்கு அதிகம் சென்றதில்லை..... சாவித்திரி பஞ்சாமிர்தம் வாங்கிக்கொண்டு மெதுவாக நடந்து வர கயல் முத்தவோடும் ராமரோடும் அரட்டை அடித்துக் கொண்டு வந்தாள்............



கண்ணனோ இவ என்ன நம்மள கண்டுக்கவே மாட்டேங்குறா........... காலையில இருந்து நம்மகிட்ட ஒரு வார்த்தையாச்சும் பேசுனாளா.........ஆனா நம்ம வீட்டுல இருக்குற எல்லாருகிட்டயும் நல்லா வாயமூடாம பேசுறா.......... பேசுற இவ வாய........... மீண்டும் அவளை சைட் அடிக்க ஆரம்பித்தான்.........( டே கண்ணா என்னடா உன்னோட வாழ்க்கை இவள சும்மா பாத்தே...............போயிரும் போல இருக்கே.............)

இவர்கள் மூவரும் ஒவ்வொரு கடையாய் நின்று பார்த்துக் கொண்டு வர கண்ணன் தன் தாயோடு காருக்குச் சென்றான்....... ராமரும் முத்துவும் வேறொரு கடைக்குச் செல்ல கயல் அங்கிருந்த வளையல் கடையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்...... அவளுக்கு கண்ணாடி வளையல் என்றால் மிகவும் பிடிக்கும்...... கலர் கலராக எப்போதும் வளையல் அணிவாள்....... கண்ணன் அவள் தனியாக நிற்பதை கண்டவன் அம்மாவிடம் சொல்லிவிட்டு கயலிடம் வந்தான்...............



“என்ன எந்த கடைய பாத்தாலும் டக்கு டக்குன்னு நின்னுக்குற........ ஆனா கையில ஒன்னும் வாங்குனமாதிரி தெரியல...........”( ஏண்டா இதுதான் ஒங்க ஊர்ல ரொமான்சா பேசுறதா.......) இவரு லேட்டகுதுன்னு சொல்லாறோ....... என்று நினைத்து சாவித்திரியை தேட அவர் காருக்கு அருகில் நிற்கவும் முத்துவும் ராமரும் காரை அடைந்திருந்தார்கள்........ எல்லாரும் காருக்கு போயிட்டாங்களா........ அதான் நம்மள தேடி வந்திருக்காங்க....... என்று நினைத்து இவளும் நடக்க. ஆரம்பிக்க.....கண்ணன் எட்டி அவள் கையை பிடித்தவன்



நில்லு என்ன ஒன்னுமே வாங்காம போற.......இல்ல இல்ல ஒன்னும் வேணாம் வாங்க போவோம்..........( என்கிட்ட தான் காசு இல்லயே.)



.....அப்ப சரி வா போவோம்............( ஏண்டா ஒருத்தி வேணாமுன்னு சொன்னா வேணும்னு அர்த்தம் இது கூட தெரியல நீ எல்லாம் என்னத காலேஜ்ல படிச்ச...........லூசு பயலே....... இந்த லெச்சனுத்துல போனா உன் குடும்ப வாழ்க்கை.......... வெளங்கிரும்..........).

அனைவரும் அங்கிருந்த ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கிளம்ப கண்ணன் காரை கிளப்பினான்.......... சாப்பிடவும் கயலுக்கு கண்ணை சுழற்றியது............ அவள் மெதுவாக சாவித்திரியின் தோளில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள்.......... கண்ணாடி வழியே பார்த்த கண்ணனுக்கு பொறாமை உணர்வு தோன்றியது.......எப்புடி தூங்குறா......... இவள....... கொஞ்ச தூரம் கார் ஒட்டியவன்.........



“ டேய் ராமா எனக்கு ரொம்பநேரம் காரு ஓட்டுனது கையெல்லாம் வலிக்குது..........”



“பரவால்லனே நீ இங்குட்டு வா நான் வந்து ஓட்டுறேன்.........”



“இல்லடா எனக்கு தூக்கம் வருது........ நான் பின்னாடி போறேன் நீ முத்தவ துணைக்கு வச்சுக்க..........”.



“சரிண்ணே...........”. என்றவன் காரை ஓரமாக நிறுத்த...........



இவன் சாவித்திரிக்கும் கயலுக்கும் நடுவில் அமர்ந்தான்...........தூக்க கலக்கத்தில் இருந்த கயல் அவன் தோளில் சாய்ந்து தூங்க.............. கண்ணன் தன் தாய் உணராமல் தன் கையை எடுத்து அவள் தோளில் போட்டவன்............கயலின் தலையின் உச்சியில் மெதுவாக முத்தமிட்டான்..........அவள் தோளில் இருந்த கையால் மெதுவாக அவள் கன்னத்தை தடவ............. அவளோ தூக்க கலக்கத்தில் தன் கன்னத்தில் ஏதோ பூச்சி ஊருதோ என்று நினைத்து அவன்கையை தட்டி விட்டவள்...................மெதுவாக அவன் மடியில் படுத்து விட்டாள்........... மெதுவாக அவள் தலை தடவியவன் தன் மறுதோலில் சாவித்திரி படுக்க கண்ணன் கையை எடுத்து அவள் இடுப்பில் வைத்து தானும் கண் அயர்ந்தான்........... அவனுக்கு இப்போது சுகமாக தூக்கம் கண்ணை சுழற்றியது...........



விடியற்காலம் மூன்று மணிக்கு வீட்டிற்கு வந்தவர்கள் அனைவரும் காரிலிருந்து இறங்க அயர்ந்து தன் மடியில் உறங்கும் கயலை கண்டவன் இவள எப்புடி எழுப்புறது பாவம் அசந்து தூங்குறாளே என்று யோசித்துக் கொண்டிருக்க............



“என்ன கண்ணா இறங்கலயா..........”.



“இந்தா இறங்குறேம்மா..........”



மெதுவாக அவள் கன்னத்தை தட்ட...................கயலோ அவன் கையை பிடித்து அவளின் கழுத்துக்குள் வைத்துக் கொள்ள........... கண்ணனுக்கு மனம் ஜிவ்வென்று பறந்தது..........அவளுக்கு அப்படியே கன்னத்தில் ஒரு முத்தமிட்டால் எப்புடியிருக்கும்.................. என்று யோசித்துக் கொண்டிருக்க.....................



“என்னப்பா............ மருமக இன்னும் எந்திரிக்கலயா........”



“.இந்தா.......... இந்தா .................... எந்திருச்சுட்டாம்மா.......” மெதுவாக அவளை உலுக்க மெதுவாக கண்விழித்த கயல் மலங்க மலங்க முழித்தவள்............. சாவித்திரியின் குரலை கேட்கவும்..........விறுவிறுவென்று வீட்டிற்குள் சென்றாள்......... அவளுக்கு கண்ணன் மடியில் படுத்ததே தெரியவில்லை.......... வீட்டிற்குள் சென்றவள்....... அங்கு முத்தவும் ராமரும் ஆளுக்கு ஒரு மூலையில் படுத்திருக்க.........சாவித்திரி தனக்காக விரித்திருந்த பாயில் கயல் சென்று படுத்தாள்............



“என்னத்தா ............இங்கனயே படுத்துட்ட.........”



“ம்ம்ம்………………….” என்றவள்.............. தூங்கியிருந்தாள்............



அவளையே பார்த்திருந்தவன்................” பரவால்ல...... விடுங்கம்மா........... தூங்கட்டும்” என்றவன் மாடிக்குச் சென்றான்...............
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மறுநாள் கண்ணன் வீட்டிலிருந்த பசு கன்று போட அவளின் பொழுது போக்கே....... அந்த கன்று குட்டியோடு கழிந்தது............. மற்ற நேரங்களில் சாவித்திரிக்கு உதவியாக அனைத்து வேலைகளையும் செய்வாள்.............ஏனோ தானோவென்று இருந்த வீட்டை சீராக்கினாள்........ ஒரு காய் ஒரு குழம்பு மட்டுமே சாவித்திரி சமைப்பாள்.......... கயலோ அவர்கள் வீட்டுத் தோட்டத்திலிருந்த காயை கொண்டு வகைவகையாக சமைத்தாள்......... அசைவமும் நன்றாக சமைத்து அசத்தினாள்.........

கண்ணன் காலை 5 மணிக்கு வயலுக்கு சென்றால் அங்கிருந்த படியே தோப்புக்குச் சென்று விடுபவன்............11 மணிபோல வீட்டிற்கு வருபவன்மீண்டும் கடைக்கு கிளம்புபவன் இரவு பத்து மணிக்குதான் வீட்டிற்கு திரும்புவான்............மதிய உணவை கடையில் வேலை பார்க்கும் பையனிடம் சாவித்திரி கொடுத்து விடுவாள்........ கல்லூரி முடியவும் ராமரும் 7 மணி வரை கடையில் இருந்துவிட்டுதான் வீட்டிற்கு திரும்புவான்............

கண்ணன் காலையில் வயலுக்கு செல்லும் போது கயல் தூங்கிக் கொண்டிருப்பாள்..... அவன் காலையில் சாப்பிட வரும் போது மதிய உணவை சமைத்துக் கொண்டிருப்பவள்........... அவன் இரவு வீட்டிற்கு வரும்போது தூங்கியிருப்பாள்........ அவனுக்கு கயலிடம் பேச ஆசையாக இருந்தாலும் அவள் தூங்கும் போது அவளை எழுப்ப மனசிருக்காது...............

மறுநாள் காலை சாப்பிடும் போது சாவித்திரி

“கண்ணா கயல் அப்பத்தா போன் பண்ணுனாங்க....... மறுவீட்டுக்கும் வரல.......... நாளைக்கு ஆடி பொறக்க போகுதுல்லப்பா ......... அதுனால கயல அங்க கூட்டிக்கிட்டு வந்து ஒரு மாசத்துக்கு விடச் சொன்னாங்கப்பா............”

கண்ணனுக்கு வாயில் வைத்த உணவு உள்ளே இறங்கவில்லை.......... என்னது ஒரு மாசமா...........?

“என்னம்மா சொல்லுறீங்க..........”


“ஆமாப்பா அப்புடிதான் சொன்னாங்க...........ஆனா நா கொண்டுவந்து விட்டுட்டு ஆடி 18 அன்னைக்கு தாலிய பெருக்கிப் போட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருவேன்னு சொல்லிட்டேம்பா......... என்னால ஒரு மாசம் எல்லாம் மருமகள விட்டுட்டு இருக்க முடியாதுப்பா...........”


என்னது 18 நாளா......... இந்த அஞ்சு நாளா எண்ணி நாலு வார்த்தை பேசமுடியல.......... இவ இப்ப இங்க காலையில சாப்பாடு போடும்போதாச்சும் ஒரு தரம் பாக்குறா......... இவ ஊருக்கு மட்டும் போனா அப்புறம் நாம அங்கபோயி நிக்கும்போது நம்மள யாருன்னு கேட்டாலும் ஆச்சர்யபடுறதுக்கில்ல...........முகத்தை கூட மறந்தாலும் மறந்துருவா.............

“கண்ணா உனக்கு எப்ப தோது இருக்கும்னு சொல்லு........ அப்பத்தாட்ட போன்ல சொல்லிரு............”

“என்னது நான்தான் கூட்டிட்டு போகனுமா............”

“இது என்னப்பா கேள்வி.......நீதான அவ புருஷன்......... அப்ப நீதானே கூட்டிக்கிட்டு போகனும்..........”

“சரிம்மா........நானே அப்பத்தாகிட்ட போன்ல பேசிக்குறேன்..........”.ஐஐஐய்ய்ய் நான் கூட்டிக்கிட்டு போனாத்தானே...........அவ போவா.......ஆடி 17 அன்னைக்கு கூட்டிட்டு போயிட்டு மறுநாளே அவள கூட்டிட்டு வந்துருரேன்..............

அன்று மாலை கயல்” என்ன முத்து மணி ஏழாக போகுது......... இப்பதான் ஸ்கூல் விட்டு வார..........”

“இல்ல அண்ணி நான் டியூசன் போயிட்டு அப்புடியே போய் பிரண்ட்ஸ்ஸோட விளையாண்டுட்டு வாரேன் அண்ணி.............”

“சரிசரி .........சீக்கிரமே வரப்பாரு..........”

அன்று மாலை கண்ணனுக்கு கடையில் இருப்புக் கொள்ளவில்லை............. இன்னைக் காச்சும் கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு போனா கயலோட ரெண்டு வார்த்தை பேசலாம்.......... ராமர் கடைக்கு வரவும் அவனை அங்கு விட்டுவிட்டு

“ நீ ஒரு 8 மணிக்கு கடைய அடச்சிட்டுவா எனக்கு கொஞ்சம் ஆடிட்டர பாக்கவேண்டியிருக்கு.......”

“சரிண்ணே.........நீங்க கிளம்புங்க.........நான் பாத்துக்குறேன்............”

கண்ணன் ஆடிட்டர் அலுவலகத்திற்கு வந்தவன்............ அவர் சில விபரங்களை கேட்க அது சம்பந்தமாக அவர் அஸிஸ்டெண்டோடு அந்த பைலை எடுக்க கடைக்கு திரும்பி கொண்டிருந்தவன்............. முத்து தன் சில நண்பர்களோடு சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பதை கண்டான்........... அவன் பின்னால இருந்த நண்பரும் ......

“இவங்களுக்கு வயசு என்ன.........ஒரு 14......... இல்ல 15........... இருக்குமா..........இப்பவே சிகரெட்.......... இன்னும் கொஞ்சநாள் போனா......... தண்ணி....... கஞ்சான்னு.... ஆரம்பிச்சுருவாங்கன்னு நினைக்கிறேன்............ இவனுகள வீட்டுல தண்ணி தெளிச்சி விட்டுடாங்க............. போல............. “என்று கூறவும் .............கண்ணனுக்கு கோபம் என்றால் கடுமையான கோபம்........... பின்னால் அவர் இருக்கவும் போய் முத்துவை கண்டிக்கவும் முடியவில்லை...............

முத்தவுக்கும் இந்த நண்பர்கள் இப்போதுதான் அறிமுகமாகி இருந்தார்கள்........... இன்று டியூசன் விட்டு வரும்போது இவர்கள் அனைவரும் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்க............

“டேய் என்னடா சிகரெட் குடிக்கிறீங்க................”

"இப்ப குடிக்காம..........எங்களுக்குள்ள ஒரு போட்டி........ யாருதான் ஒரு சிகரெட்ட அப்புடியே இறுமல் வராம குடிக்குறதுன்னு............ இந்தா நீ ஒன்னு குடிச்சிப்பாரு..........”

“அம்மாடி எனக்கு வேணாம்டா...............”.


“டேய் அவன் ஒரு தொடை நடுங்கிடா................ அவன்கிட்ட போயிகுடுக்குற............”



“டேய் நான் ஒன்னும் பயந்தவன் கிடையாது.................. “
அவன் நண்பர்கள் ஆளாளுக்கு ஒன்று உசுப்பேற்ற முத்துவும் கண்ணன் அந்த பாதையில் வரும்போது தான் சிகரெட்டை பத்தவைத்திருந்தான்...............


கண்ணனுக்கு ஆடிட்டர் ஆபிஸில் வேலைமுடிய மணி 9 ஆயிற்று...........வீட்டிற்கு வந்தவன்.......... அங்கு வாசலில் உட்கார்ந்திருந்த தன்தாயிடம்

“அம்மா.......... முத்து எங்க.........?”

“உள்ளதாப்பா........படிச்சுக்கிட்டு இருந்தான்....... ஏப்பா வந்ததும் வராததுமா அவன பத்தி கேக்குற......... முகமே நல்லால்ல.................என்னாச்சுப்பா........?.”.

கண்ணன் முத்துவிடம் சென்று” சிகரெட் குடிக்குறியா...........?”


முத்தவுக்கு..... அப்படியே வெடவெடத்தது.” அது வந்து.......... இல்லண்ணே..........”



“பொய்யி வேற..........”என்று அவன் சட்டையை எட்டிப் பிடித்தவன் பளார் என்று ஒரு அறை வைத்தவன்............ கோபம் குறையாமல் தன் தந்தையின் பெல்ட்டை எடுத்திருந்தான்............


சாவித்திரியும் ராமரும்...........முத்து சிகரெட் குடிச்சானா...........என்று விக்கித்து போயிருந்தார்கள்............

அதுவரை தன் மாமியாரோடும் முத்துவோடும் பேசிக்கொண்டிருந்த கயல் அப்போது தான் மாடிக்குச் சென்றிருந்தாள்.......... கீழே சத்தம் கேட்கவும் என்ன இன்னைக்கு ஐயனாரு சீக்கிரமே வந்துட்டாரு...........போல...........என்று மனதிற்குள் நினைத்தவள்.......... பரவால்ல நாமகூட இவரோட வாய்ஸ கண்டுபிடிச்சுருரமே.............. என்றபடி கீழே இறங்கி வந்தவள்.................


 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கண்ணன் முத்துவை பெல்டால் அடிக்கவும் முதலில் ஒன்றுமே புரியவில்லை............ முத்துவும் அடியை வாங்கிக்கொண்டு பேசாமல் நிற்கவும் சாவித்திரி தன் கண்ணில் நீர் வடிய பார்த்துக்கொண்டிருக்க ராமரோ கையை பிசைந்து கொண்டு அண்ணனை எப்படி தடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்க............கயல் மேலும் பொருக்க முடியாமல்...........எட்டி முத்துவை அணைத்தாற்போல பிடித்திருந்தாள்............


“விடுங்க.......... விடுங்க.......... அடிக்காதிங்க..........” என்று தடுக்கும்போதே கயலுக்கும் நான்கைந்து அடிகள் சுளீர் .........சுளீரென அவளுக்கும் விழுந்தது...........


“ஏய் வெலகு..........வெலகு..... இன்னைக்கு அவன் தோல உறிக்காம விடமாட்டேன்.....”

.என்றபடி அடிக்க கயலின் மேல் அடி விழவும் ராமன் எட்டி அண்ணனின் கையைப் பிடித்திருந்தான்.............. கோபம் குறையாமல் பெல்ட்டை தூக்கி மூலையில் வீசியவன்............. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்..........


முத்துவோ நடுங்கிப் போயிருந்தான்........... இதுவரை தன்னை கைநீட்டி அடிக்காத அண்ணன் முதல் முறையாக அடிக்கவும் தான் இன்று செய்த தவறு அவனுக்கு புரிந்தது........



சாவித்திரியோ..”..முத்து...... ஏண்டா........ உனக்கு இப்புடி புத்தி போச்சு...........”. என்று அழ ஆரம்பிக்க


“அம்மா......... என்னைய மன்னுச்சுக்குங்க.......... தெரியாம பண்ணிட்டேன்......... என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் பெட் கட்டவும் இப்புடி செஞ்சுட்டேம்மா..........”


“ஏண்டா புருஷன் இல்லாம வளத்தபுள்ள..........இன்னைக்கு சிகரெட்ட ஆரம்பிச்சவன் நாளைக்கு தண்ணி மாதிரி வேறவேற பழக்கத்த........ஏற்படுத்திக்கிட்டீனா..........கருப்பா ஏண்டா என்குடும்பத்துக்கு இப்புடி சோதனைய குடுக்குற..............” என்று புலம்ப ஆரம்பிக்க..............



முத்து “அம்மா என்னைய மன்னிச்சுக்குங்க...........அண்ணே தெரியாம பண்ணிட்டேன்............ இனிமே சத்தியமா இந்த தப்ப பண்ணமாட்டேண்ணே.........”.என்று கதற.......



கயலுக்கு மனதிற்குள் கொதிக்க ஆரம்பித்தது. அது என்ன தோலுக்குமேல வளந்த பிள்ளைய அடிக்குறது........... பெத்தவுகளே பிள்ளைகள அடிக்கக்கூடாதுன்னு கவர்மெண்ட்ல சட்டம் சொல்லுது......... ஆனா இந்த ஐயனாரு மட்டும் போட்டு அடிக்குறாரு...........அதுவும் பெல்டால .............கயலுக்கும் நான்கைந்து அடிகள் இடுப்பு கை கால்களில் விழுந்திருந்தது.........அதுக்கே அவளுக்கு மயக்கம் வரும்போல இருந்தது...........கண்களில் கண்ணீர் பெருகியது..........



சிறுவயதில் இருந்தே அவள் எவ்வளவு சேட்டை செய்தாலும் அவள் அம்மாவோ அப்பாவோஅடிச்சதில்லை............. அவள் அப்பத்தா மட்டும்தான் அடிப்பார் அதுவும் லேசாகத்தான் அடிப்பார் அதுக்கே அவள் கத்தி ஊரையே கூட்டுவாள்.............இன்று கண்ணன் முத்துவை போட்டு அடிக்கவும் மனதிற்குள் அவனை வெறுக்கவே ஆரம்பித்தாள்.......



முத்துவிற்கு மேலெல்லாம் பெல்ட்டின்தடம் பட்டை பட்டையாக இருந்தது.அதை பார்த்த சாவித்திரிக்கு வேதனையாக இருந்தாலும் இவன் செய்ததும் தவறுதானே.................



அனைவரும் ஆளுக்கு ஒரு மூலையில் இருக்க.........சாவித்திரி.........முத்துவின் காயத்திற்கு தேங்காய் எண்ணெயும் மஞ்சளும் கலந்து தடவினார்.............அவன் தேம்பி தேம்பி அழுது கொண்டிருக்க......


“ஆத்தா கயலு .........”

“என்னத்த........”


“இங்கன வாத்தா.......”.என்று அழைக்க.........தன் காலிலும் அடிபட்டதால் நடக்க முடியாமல் மெதுவாக வந்த




கயல் “என்னத்தே..............”



“இப்படியே விட்டா இந்த காயம் அப்புடியே கண்ணி போயிரும்தா..............இந்த மருந்தை கொஞ்சம் போட்டுக்கத்தா........மன்னிச்சுக்கத்தா...........அவனுக்கு கோபம் வந்தா இப்புடித்தான்............ஆனா இதுவரைக்கும் தம்பிகளை கை நீட்டி அடிச்சதில்லை.............. இன்னைக்கு அவன்பண்ணுனதும் தப்புதான..............அதுதான் புள்ள கோபத்துல பொசுக்குன்னு அடிச்சுப்புட்டான்.........நான் என்ன பண்ணுவேன்.............. காயம் என்னத்தா இப்புடி இருக்கு..............”.கயலின் சிவந்த தோலுக்கு காயம் படவும் கருஞ்சிவப்பாக இருந்தது.......சாவித்திரி அவளுக்கு மருந்தைத் தடவ..........



மேலே தன் கட்டிலில் படுத்திருந்த கண்ணனுக்கு மனசு ஆறவில்லை...........நாம எப்புடி இப்புடி காட்டுமிராண்டியா மாறுனோம்.........நம்ம தம்பி தானே.........சொல்லி புரிய வச்சிருக்கலாம்.........அவனும் ஒன்னும் சேட்டகாரன் இல்லயே.........எடுத்து சொன்னா கேக்குறவன்தானே...........நாமலாம் அந்த வயசுல தப்பு பண்ணாமலா இருந்தோம்...... பிரண்ஸ்ஸோட சேந்து ஒருதவண தண்ணி கூடத்தான் அடிச்சோம்........நம்ம அப்பா ஒரு தரம்கூட கைநீட்டுனது இல்லயே............ அப்போது கண்ணனுக்கு போன்வர காந்திமதி காலையில் இருந்து ஏழெட்டு முறை போன் செய்து விட்டார்........கயலிடம் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார்.........

அப்பத்தாவிடம் கயல் என்ன சொல்லுவாள்..........................?

தொடரும்...............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top