நேசம் மறவா நெஞ்சம் -15Nesam Marava Nenjam

Advertisement

Meena. J

New Member
கண்ணன் முத்துவை பெல்டால் அடிக்கவும் முதலில் ஒன்றுமே புரியவில்லை............ முத்துவும் அடியை வாங்கிக்கொண்டு பேசாமல் நிற்கவும் சாவித்திரி தன் கண்ணில் நீர் வடிய பார்த்துக்கொண்டிருக்க ராமரோ கையை பிசைந்து கொண்டு அண்ணனை எப்படி தடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்க............கயல் மேலும் பொருக்க முடியாமல்...........எட்டி முத்துவை அணைத்தாற்போல பிடித்திருந்தாள்............


“விடுங்க.......... விடுங்க.......... அடிக்காதிங்க..........” என்று தடுக்கும்போதே கயலுக்கும் நான்கைந்து அடிகள் சுளீர் .........சுளீரென அவளுக்கும் விழுந்தது...........


“ஏய் வெலகு..........வெலகு..... இன்னைக்கு அவன் தோல உறிக்காம விடமாட்டேன்.....”

.என்றபடி அடிக்க கயலின் மேல் அடி விழவும் ராமன் எட்டி அண்ணனின் கையைப் பிடித்திருந்தான்.............. கோபம் குறையாமல் பெல்ட்டை தூக்கி மூலையில் வீசியவன்............. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்..........


முத்துவோ நடுங்கிப் போயிருந்தான்........... இதுவரை தன்னை கைநீட்டி அடிக்காத அண்ணன் முதல் முறையாக அடிக்கவும் தான் இன்று செய்த தவறு அவனுக்கு புரிந்தது........



சாவித்திரியோ..”..முத்து...... ஏண்டா........ உனக்கு இப்புடி புத்தி போச்சு...........”. என்று அழ ஆரம்பிக்க


“அம்மா......... என்னைய மன்னுச்சுக்குங்க.......... தெரியாம பண்ணிட்டேன்......... என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் பெட் கட்டவும் இப்புடி செஞ்சுட்டேம்மா..........”


“ஏண்டா புருஷன் இல்லாம வளத்தபுள்ள..........இன்னைக்கு சிகரெட்ட ஆரம்பிச்சவன் நாளைக்கு தண்ணி மாதிரி வேறவேற பழக்கத்த........ஏற்படுத்திக்கிட்டீனா..........கருப்பா ஏண்டா என்குடும்பத்துக்கு இப்புடி சோதனைய குடுக்குற..............” என்று புலம்ப ஆரம்பிக்க..............



முத்து “அம்மா என்னைய மன்னிச்சுக்குங்க...........அண்ணே தெரியாம பண்ணிட்டேன்............ இனிமே சத்தியமா இந்த தப்ப பண்ணமாட்டேண்ணே.........”.என்று கதற.......



கயலுக்கு மனதிற்குள் கொதிக்க ஆரம்பித்தது. அது என்ன தோலுக்குமேல வளந்த பிள்ளைய அடிக்குறது........... பெத்தவுகளே பிள்ளைகள அடிக்கக்கூடாதுன்னு கவர்மெண்ட்ல சட்டம் சொல்லுது......... ஆனா இந்த ஐயனாரு மட்டும் போட்டு அடிக்குறாரு...........அதுவும் பெல்டால .............கயலுக்கும் நான்கைந்து அடிகள் இடுப்பு கை கால்களில் விழுந்திருந்தது.........அதுக்கே அவளுக்கு மயக்கம் வரும்போல இருந்தது...........கண்களில் கண்ணீர் பெருகியது..........



சிறுவயதில் இருந்தே அவள் எவ்வளவு சேட்டை செய்தாலும் அவள் அம்மாவோ அப்பாவோஅடிச்சதில்லை............. அவள் அப்பத்தா மட்டும்தான் அடிப்பார் அதுவும் லேசாகத்தான் அடிப்பார் அதுக்கே அவள் கத்தி ஊரையே கூட்டுவாள்.............இன்று கண்ணன் முத்துவை போட்டு அடிக்கவும் மனதிற்குள் அவனை வெறுக்கவே ஆரம்பித்தாள்.......



முத்துவிற்கு மேலெல்லாம் பெல்ட்டின்தடம் பட்டை பட்டையாக இருந்தது.அதை பார்த்த சாவித்திரிக்கு வேதனையாக இருந்தாலும் இவன் செய்ததும் தவறுதானே.................



அனைவரும் ஆளுக்கு ஒரு மூலையில் இருக்க.........சாவித்திரி.........முத்துவின் காயத்திற்கு தேங்காய் எண்ணெயும் மஞ்சளும் கலந்து தடவினார்.............அவன் தேம்பி தேம்பி அழுது கொண்டிருக்க......


“ஆத்தா கயலு .........”

“என்னத்த........”


“இங்கன வாத்தா.......”.என்று அழைக்க.........தன் காலிலும் அடிபட்டதால் நடக்க முடியாமல் மெதுவாக வந்த




கயல் “என்னத்தே..............”



“இப்படியே விட்டா இந்த காயம் அப்புடியே கண்ணி போயிரும்தா..............இந்த மருந்தை கொஞ்சம் போட்டுக்கத்தா........மன்னிச்சுக்கத்தா...........அவனுக்கு கோபம் வந்தா இப்புடித்தான்............ஆனா இதுவரைக்கும் தம்பிகளை கை நீட்டி அடிச்சதில்லை.............. இன்னைக்கு அவன்பண்ணுனதும் தப்புதான..............அதுதான் புள்ள கோபத்துல பொசுக்குன்னு அடிச்சுப்புட்டான்.........நான் என்ன பண்ணுவேன்.............. காயம் என்னத்தா இப்புடி இருக்கு..............”.கயலின் சிவந்த தோலுக்கு காயம் படவும் கருஞ்சிவப்பாக இருந்தது.......சாவித்திரி அவளுக்கு மருந்தைத் தடவ..........



மேலே தன் கட்டிலில் படுத்திருந்த கண்ணனுக்கு மனசு ஆறவில்லை...........நாம எப்புடி இப்புடி காட்டுமிராண்டியா மாறுனோம்.........நம்ம தம்பி தானே.........சொல்லி புரிய வச்சிருக்கலாம்.........அவனும் ஒன்னும் சேட்டகாரன் இல்லயே.........எடுத்து சொன்னா கேக்குறவன்தானே...........நாமலாம் அந்த வயசுல தப்பு பண்ணாமலா இருந்தோம்...... பிரண்ஸ்ஸோட சேந்து ஒருதவண தண்ணி கூடத்தான் அடிச்சோம்........நம்ம அப்பா ஒரு தரம்கூட கைநீட்டுனது இல்லயே............ அப்போது கண்ணனுக்கு போன்வர காந்திமதி காலையில் இருந்து ஏழெட்டு முறை போன் செய்து விட்டார்........கயலிடம் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார்.........

அப்பத்தாவிடம் கயல் என்ன சொல்லுவாள்..........................?

தொடரும்...............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top