தேவதையிடம் வரம் கேட்டேன் P22

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அக்ஷையும் மதியும் முதன் முதலாக சந்திச்சதையும் இனச்சி இருக்கேன் என்ஜோய்:geek::geek:

images (25).jpg


அக்ஷையின் அன்னை இந்திராவதி இறக்கும் பொழுது அக்ஷய்க்கு எழுவயதுதான். அன்னையுடனான நியாபகங்கள் பசுமையானதாகவே! இருக்க, அன்னையின் முகமும் அக்ஷையின் மனதில் நன்றாகவே! பதிந்து தான் இருந்தது.



"மதி மதி அம்மா..." அக்ஷய் கத்த அவனை சோபாவில் அமர்த்திய மதி ஆசுவாசப்படுத்தி.



"இத்தனை வருஷமாக அவங்க உங்க கூடவே! தான் இருந்திருக்காங்க அக்ஷய். நாம முதன் முதலாக சந்திச்சோமே! அந்த பொட்டல் காட்டில். உங்க டைவர் உங்கள கடத்தி கொலை பண்ண பாத்தானே! அப்போ உங்க அம்மா உங்க வண்டியின் பின்னாடி உக்காந்து இருந்தாங்க. அவங்கதான் புகைய உருவாக்கி "ஹெல்ப்"னு கண்ணாடில எழுதி என் கிட்ட உதவி கேட்டு உங்கள காப்பாத்தும் படி கேட்டாங்க"



"என்ன சொல்லுற மதி?"



"உங்க கண்ணுக்கு ஆவிகள் தெரியுமா? அவங்க பேசுறது கேட்குமா?"



"இல்ல இந்த காப்பு அம்மா கொடுத்தது. அம்மா இறக்குறதுக்கு முன்னால ஒருநாள் என்ன கூப்பிட்டு. இது உனக்கு சொந்தமானது. இத நீ பெரியவனானதும் போட்டுக்க, யார் கேட்டாலும் கொடுக்காத, யாருக்காகவும் கொடுக்காதான்னு சொன்னாங்க"



சில நிமிடங்கள் மெளனமாக இருந்தவன் "டீனேஜ்ல அம்மா நியாபகத்துல ஒருநாள் இந்த காப்ப எடுத்து போட்டுகிட்டேன். அப்போ வெள்ளையா சில உருவங்கள் என் கண் முன்னாடி நடமாடுறத கண்டு பயந்து, இந்த காப்ப தொடவே! இல்ல. அப்பொறம் நீ என் வாழக்கைல வந்த பிறகுதான் இத போட்டுகிட்டேன். அதன் பிறகு இத கழட்டவே! இல்ல" தான் அணிந்திருந்த பித்தளையா? வெள்ளியா? செப்பா? என்று பிரித்தறிய முடியாத அந்த காப்பை பார்த்தவாறே அக்ஷய் கூற



"ஒன்னு கவனிச்சீங்களா? இந்த காப்ப போட்டதால, உங்க அம்மா உங்க கண்ணுக்கு தெரிஞ்சாக, அவங்க பேசினது நீங்க நேரடியாகவே கேட்டீங்க" மதி சந்தோஷமாகவே! சொல்ல



"ஆமாம் மதி. மத்த ஆவிங்க வெள்ள ருவமா மட்டும்தான் என் கண்ணுக்கு தெரியும். அம்மா மட்டும்தான் தெரிஞ்சாங்க. அப்போ ஏன் அம்மா இவ்வளவு நாளும் என் கண் முன்னால வராம இருந்தாங்க?" கவலையான குரலில் மதியிடமே கேட்டான் அக்ஷய்.



"உங்க அப்பாவ மூன்றாம் தாரமா கல்யாணம் பண்ணதால அவங்கள நீங்க தப்பா நினைப்பீங்களோ! என்கிற பயம் தான் அக்ஷய்" மதி அவனை சமாதானப்படுத்த



"நான் என்னைக்குமே! அவங்கள தப்பா நினைக்கல மதி" வெறுமையான குரலில் கூறினான் அக்ஷய்.



"அது அவங்களுக்கு தெரியாதே! உங்க வீட்டுல கூட அவங்க போட்டோ இல்ல. அட்லீஸ்ட் அவங்க போட்டோ முன்னாடியாவது புலம்பி இருந்தா அவங்களுக்கு புரிஞ்சி இருக்கும்" அவனின் கவலையை போக்க வேண்டியவளோ! அவனை குறை கூற ஆரம்பிக்க



"அவங்கள பார்த்தா அவங்க இல்ல என்கிற நினைப்புல இருந்து என்னால வெளிய வர முடியல மதி" என்றவன் அமைதியாக



அவனின் வேதனையை உணர்ந்தவள் அவனை அதிலிருந்து வெளிக்கொண்டுவர வேறு விதத்தை கையாண்டாள்.



"ஆனாலும் உங்க அம்மா இவ்வளவு அழகா இருக்க கூடாது. இறந்து ஆவியானவங்களும் அந்த வயசுலயே இருக்காம வயசாகணும்பா... அப்பா என்ன அழகு" மதியின் குரலில் பொறாமை இழையோட அவளை திரும்பி பார்த்த அக்ஷையின் முகத்தில் புன்னகை சாயல்



"ஆமா ஆமா எங்கம்மா முன்னாடி உன் அழகெல்லாம் தூசு தான். பக்கத்துல கூட நிக்க முடியாது"



"ஒரு பேச்சுக்காவது. இல்ல, மதியழகி நீ ரொம்ப அழகா இருக்கானு சொல்லுறீங்களா?" கோபமாக கூறியவள் அவனை அடிக்க துரத்த, அறையை சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருந்த அக்ஷய் தப்பிக்க வழி இல்லாமல் அறையை விட்டு வெளியே ஓடி இருந்தான்.


images (21).jpg


"மதி அங்க பாரு அந்த வண்டிக்குள்ள…."



மதியும் திரும்பிப் பார்க்க, அது ஒரு ஜீப் வண்டி முன்னாடி இருவர் அமர்ந்திருக்க, பின்னாடி ஒரு இளம் பெண். பெண்ணல்ல அது ஒரு ஆவி.... கண்ணாடியில் புகை மூட்டம் தோன்றி "உதவி" என்ற சொல் எழுதப்பட்டு மறைந்தது.



"அந்த வண்டிய பாலோ பண்ணு. எனக்கென்னமோ அந்த பொண்ண இவனுங்க ரேப் பண்ணி கொலை பண்ணி புதைக்க கொண்டு போய் கிட்டு இருக்காங்க னு தோணுது" ராஜவேலு தனது கருத்தை சொல்ல



"இல்ல வேறென்னமோ பிரச்சினை. அதான் அவங்க உதவி னு கேட்டாங்க" மதி யோசனையாக அந்த வண்டியை பின் தொடரலானாள்.



நகரத்திலிருந்து ஒதுக்கு புறமாக உள்ள பொட்டல் காட்டில் வண்டி நின்றது. தூரத்தில் பாறையின் மறைவில் வண்டியை நிறுத்திய மதியும் அங்கே என்ன நடக்கின்றது என்று பார்க்க ராஜவேலுவை அனுப்பி இருந்தாள்.



வண்டியின் முன் இருக்கையில் கைகள் இரண்டும் பின்னாடி கட்ட பட்ட நிலையை ஒருவன் மயங்கிய இருக்க, வண்டியை ஓட்டி வந்தவன் அவனை கீழே இழுத்து போட்டு அவனுக்கான குழியை தோண்டலானான்.



"மதி ஒருத்தன உசுரோட புதைக்க போறான் போய் காப்பாத்து"



வண்டியில் இருந்து இறங்கிய மதியும் இடுப்பில் இருந்த துப்பாக்கியையும் கையில் எடுத்துக் கொண்டு அரவம் செய்யாது மெதுவாக அடியெடுத்து சென்றவள் வண்டியின் பின் பதுங்கி எட்டிப் பார்க்க, வண்டிக்குள் இருந்த ஆவியை காணவில்லை.



ஒருவன் குழியை மும்முரமாக வெட்டிக் கொண்டிருக்க, மயங்கி விட்டான் என்றவன் கையில் இருந்த சிறு கத்தி கொண்டு கைக்கட்டை அறுத்துக் கொண்டிருந்தான். அவன் கால்களும் கட்டப்பட்டிருக்க அவன் அசையும் சத்தம் கேட்டு குழியை வெட்டுபவன் திரும்பினால் அவனுக்கு ஆபத்து என்பதை கண்டு கொண்ட மதி குழி வெட்டுபவனின் பின்னால் சென்று அவனின் கழுத்தில் ஒரு கராத்தே அடி வைக்க, அவன் மயங்கி சரிந்தான்.



கிழே இருந்தவன் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு மதியை பார்க்க அவளோ! அவனை ஆராயும் பார்வை பார்த்தாள். ஆறடிக்கு மேல் கிரேக்க சிலை போன்ற கட்டுமஸ்தான தேகம். லட்சத்தை தொடும் கோட் சூட். கை கடிகாரம் சொல்லும் அவன் பண செழுமையை. இவனையே ஒருவன் வீழ்த்தி இருக்கின்றான் என்றால் அவன் இவனுக்கு வேண்டியவனா இருக்கணும். என்றெண்ணியவள் அதையே அவனிடமும் கேட்டாள்.



"வெல். ஐம் அக்ஷய் சாம்ராட். இது என் டைவர் தான். உன் புத்தி ரொம்ப கூர்ம" என்றவன் சுற்றும் முற்றும் பார்க்க



"போலீஸ் என்ற மரியாதை கொஞ்சமும் இல்லாம ஒருமைல பேசுறான்" என்ற எண்ணம் மதியின் மனதில் உருவானது.



"எந்த இடம் இது?"



"சிட்டியை தாண்டி நாலு கிலோமீட்டரில் இருக்கு"



"ஜஸ்ட் நாலு கிலோமீட்டரா?"



"ஆமா"



அலைபேசியை உயிர் பித்தவன் "பாஸ்கர் நா ஒரு லொகேஷன் அனுப்புறேன் அது யாரோட இடம்? எவ்வளவு வலிவ்? விற்பங்களா?" எல்லா டீடைலும் எனக்கு உடனே வரணும்"



அவன் பேசுவதை கேட்ட மதி "பக்கா பிசுனஸ் மேன்" மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.



அவளும் கீழே இருந்தவனின் கையில் விலங்கை மாட்டி ஸ்டேஷனுக்கு அழைத்து தகவல் சொல்லி இடத்தை குறிப்பிட்டு உடனே வரும் படி உத்தரவிட்டாள்.



"ஹலோ, ஹலோ நான் தான் கம்பலைனே கொடுக்களையே!" அக்ஷய் புருவம் உயர்த்த



"ஐம் டூயிங் மை டியூட்டி சார்" முகத்தை விறைப்பாய் வைத்திருந்தவள் குரலில் வெறுப்பும், கோபமும் எட்டிப் பார்க்க கூறலானாள்.



முகத்தில் ஒரு அலட்ச்சியத்தை கொண்டு வந்தவன் அவளைக் கண்டு கொள்ளாது, அவ்விடத்தை எந்த மாதிரி பயன் படுத்தலாம் என்று திட்டம் தீட்டலானான்.



"மதிமா..ஆளு பாக்க சினிமா ஹீரோ மாதிரி இருக்கான். உனக்கு பொருத்தமா இருப்பான்"



தந்தையை முறைத்தவள் "அன்னைக்கும் இப்படித்தான் அந்த ஜவுளிக்கடை ஓனரோட மகனை பாத்து சொன்னீங்க, அவன் பொண்ணுங்க பின்னாடி அலையிறான்னு நா சொன்னதும் உங்க மூஞ்ச எங்க கொண்டு போய் வச்சி கிட்டீங்க? இவன் ட்ரெஸ்ஸ பாத்திங்களா? விலை லட்சத்தை தொடும். ட்ரெஸ்ஸுக்கே இப்படின்னா? பார்? பொண்ணுங்க? இன்னும் என்னெல்லாமோ இருக்கும்" விலாவரியாக சொல்லாது அவர் புரிந்து கொள்ளும் படி சொல்ல



"நா வேணா இவன் பின்னாடி போய் வேவு பார்க்கவா?"



"நீங்க வேவு பாக்குற நேரத்துல என்ன ஏதாவது காவு வாங்கிட போகுது"



ராஜவேலு வந்து மதியிடம் பேசிக் கொண்டிருக்க எதேர்ச்சையாக அவளை திரும்பிப் பார்த்தவன் புருவ மத்தியில் முடிச்சோடு யோசிக்க அவளின் ப்ளூடூத்தை கண்டு புன்னகைத்து விட்டு கீழே இருந்த கற்களை கையில் எடுக்க குனிந்த பொழுது எங்கிருந்தோ பறந்து வந்த குண்டு அவன் தலை மேலாக பறந்து அவனுடைய வண்டியின் கண்ணாடியில் பட்டு கண்ணாடியை துளைக்க முடியாமல் பின்வாங்கியது.



அவன் திகைத்து விழிக்கும் போதே அடுத்த குண்டு அவனை நோக்கி பாய அது அவனை தீண்ட விடாது ராஜவேலு அவனை அகற்ற என்ன நடந்தது என்று சிந்திக்க நேரம் இல்லாது உடனே உஷாரானவன் கண் இமைக்கும் நொடியில் மதியை இழுத்து வண்டியினுள் தள்ளி வண்டியில் தாவி ஏறி இருந்தான். அவனின் வேகம் கண்டு மதியுமே ஒரு நிமிடம் திகைத்து சுதாரித்தவள்



"அப்பா... எத்துணை பேர்? எங்க இருந்து சீக்கிரம் பாருங்க.." தந்தைக்கு ஆணையிட அவளை வித்தியாசமாக பார்த்தான் அக்ஷய்.
 

banumathi jayaraman

Well-Known Member
மதிக்கும் அக்ஷய்க்கும் first மீட்டிங்லேயே அவனை சேவ் பண்ணுற வேலைதானா? சூப்பர், மிலா டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
மதிக்கும் அக்ஷய்க்கும் first மீட்டிங்லேயே அவனை சேவ் பண்ணுற வேலைதானா? சூப்பர், மிலா டியர்
அத்தியாயம் 2 தான் பானுமா. இந்திரா வராளே so readers கு நியாபகம் வர போட்டேன் :):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top