தேவதையிடம் வரம் கேட்டேன் P13

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
download (14).jpg

"தளபதியின் தம்பியின் திருமணத்துக்கான மட்பாண்டங்கள் அனைத்தும் தயாராகி விட்டன. அனைத்தையும் வண்டியிலேற்றி விட்டேன். பத்திரமாக கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பையும் மருதனிடம் கொடுத்து விட்டேன்" வேலையாள் வேலன் வந்து சொல்ல



ஊர் தலைவர் "நீயும் கூடவே போய் மாட்பாண்டங்களை ஒப்படைத்து விட்டு பண்ணையார் கொடுக்கும் விளைச்சல்களை பொறுப்பாய் கையேடு வாங்கிக் கொண்டு வா"



"ஐயா போய் சேரும் பொது கல்யாண நாளாகிடும் இருந்து கல்யாண சாப்பாடு சாப்பிட்டே வரவா?" தலையை சொறிந்தவாறு வேலன் சொல்ல



"நான் வேண்டாம் என்று சொன்னாலும் உன்னை கல்யாண சாப்பாடு போட்ட பின்தான் அனுப்பி வைப்பார்கள். அதனால் இன்னும் இரண்டு பேரை அழைத்து செல்" என்று உத்தரவிட



இதைக் கேட்டுக் கொண்டிருந்த ருத்ரமகாதேவி குதூகலமாக தானும் கல்யாணத்தை கண்டுகளிக்க அவர்களோடு செல்ல முடிவெடுத்தாள்.



பாவம் அவள் அறிந்திருக்கவில்லை. அவளின் இந்த பயணத்தால் அவளின் கைகளால் இரு உயிர் போகக் போவதென்றும் அதனால் அவள் தனது காதலனை இழந்து சாபத்தில் சிக்கிக் கொள்ள போகிறாள் என்றும். அதிலிருந்து மீள முடியாமல் தனது காதலனை தேடி பல வருடங்களாக அலையப் போகிறாள் என்றும்.
download (18).jpg

அக்ஷையோடு அவனுடைய தனியார் ஜெட் விமானத்தில் டில்லியை நோக்கி பறந்துக் கொண்டிருந்தாள் மதி. இன்னும் அவள் கண்களுக்குள் அக்ஷய் தன்னிடம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதுதான் வந்து வந்து போனது.



பிற ஆண்களை போல் வழிந்து கொண்டோ, பூச்செண்டு கொடுத்தோ, மதியிடம் யாரும் காதலாக கசிந்துருகியதில்லை. காலேஜ் வரை நிர்மலோடு சுத்தியதால் இருவரும் காதலர்கள் என்று கணக்கிட்டு ஒதுங்கியவர்கள். அதன் பின் அவள் போலீஸ் என்று ஒதுக்கினார்கள்.



"போலீஸ் என்றால் பொம்பள இல்லையா? எவனுக்கும் தில்லில்ல" என்று மதியால் வசை பாட மட்டுமே முடிந்தது.



அக்ஷய் விஷயத்தில் அவ்வாறில்லை முதலிலிருந்தே அவளுக்கு அவனை பிடிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவனின் ராஜ தோரணையும், செல்வ செழிப்பும் என்றால் மிகையாகாது. அக்ஷய்க்கு ஆண்களை பிடிக்கும் என்பது புரளி என்று நன்கு அறிந்திருந்தாலும் ஏனோ உள்மனம் அதை சொல்லி அவனை வெறுப்பேத்துவதில் குஷியாக அவனின் முகத்துக்கு நேராக சொல்லப்போய் அவன் வைத்த முத்தம் ஆழ்மன உணர்வுகளை தூண்டி அக்ஷையின் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சாய ஆரம்பித்திருப்பதை உணர்ந்தாள்.



காதல் என்ற வார்த்தையை அவள் வெறுக்கின்றாளா என்றால் இல்லை. ஆனால் அக்ஷையை காதலிக்க அவள் மனம் விரும்பவில்லை. அது ஏன் என்ற கேள்விக்கும் விடையில்லை.



"போன ஜென்மத்துல லவ் பண்ணுறேன்னு சொல்லி என்ன ஏமாத்திட்டு ஓடிப்போய் இருப்பான் அதான் பிடிக்க மாட்டேங்குது" தனக்கு தானே சொல்லிக் கொண்டவள்



அவன் காதலிப்பதாக சொல்லாமல் நேரடியாக கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டது உறுத்தியது. சினிமாத்தனமான "உன்னை காதலிக்கிறேன் கல்யாணம் செய்து கொள்ளலாமா?" என்னு அக்ஷய் கேட்டிருக்க வேண்டும் என்று மதி எண்ணவில்லை. அவன் கண்களில் தெரிந்த தீவிரம் மதியை அடைந்தே ஆகவேண்டும் என்ற தீவிரம் அவளை அச்சுறுத்தியது.



உள்மனம் அவனை ஏற்றுக்கொள் என்று உத்தர விட, போலீஸ் மூளை அவளை தடுத்துக் கொண்டிருக்க பெண் மனமோ! "கல்யாண விஷயம் நேரடியாக பெண்ணிடமா பேசுவாங்க? பெத்த அம்மா இருக்காங்களே! அவங்க கிட்ட போய் பேச வேண்டியது தானே!" என்று சப்பைக்கட்டு கட்டியது.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top