தூரம் போகாதே என் மழை மேகமே!! - 65

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer


மாலை 4 மணி போலவே , “அக்கா.. சீக்கரமா ready ஆகுங்க.. மயில்பாற போய் வரதுகுள்ள இருட்டிடும். நேற்றே சொல்லியிருந்தால் காலையிலே போய் வந்திருக்கலாம். இப்போது போனாலும் 3 மணி நேரம் போய் வரவே ஆகிடும். வருவதற்குள் இருட்டிடும். இருட்டிய பின் வருவது அவ்வளவாக பாதுகாப்பு இல்லை" என்றான் கந்தன்.


“என்ன சொல்ட்ற தம்பி. அன்று போனப் போது அப்படி இல்லையே. இரவெல்லாம் அந்த வழியில் நடமாட்டம் இருக்கும் என்றாயே. பிறகென்ன. இருட்டினாலும் வந்துவிடலாம்" என்றாள் ஆதிரை.


“என்ன அக்கா.. யோசிக்கவே மாட்டீங்களா? அன்று திருவிழா. பாட்டு கட்சேரியெல்லாம் மலைமேல இருக்கும் . அதனால ஊர் மக்கள் போய் வந்துக் கொண்டு இருப்பார்கள். அதனால் ப்ரட்சனையில்லை. இன்று அப்படியா? கிர்த்திகை நாள் கூட இல்லை. கோவிலை 6 மணிக்கே மூடிவிட்டு பூசாரி கோவிலை விட்டு வந்துவிடுவார். சும்மா பேசிக் கொண்டு இருக்க நேரமில்லை. சீக்கிரம் கிளம்புங்க..” என்று காரணம் கூறி பெரிய மனிதனாக அவசரபடுத்தினான் கந்தன்.


இதனை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன், “இருட்டினால் வருவதென்ன அப்படி கடினமா கந்தா.. இருட்டினாலும் வந்துவிடலாம்தானே. ஏன் பயபடுகிறாய். அதனோடு நானும்தானே உடன் வர போகிறேன். அதனால் பயபடாமல் கிளம்புங்க. நடந்துதான் போக வேண்டுமா? காரில் போக முடியாதா?” என்று கேட்டான் .


“ம்ம்.. அதற்கில்லை மாமா.. காட்டு வழி இரவில் வழிதடம் மாறி போக வாய்ப்பிருக்கு. அதனோடு மலை அடிவாரம் வரை வேண்டுமென்றால் காரில் செல்லலாம். கோவிலுக்கு படிகளில் நடந்துதான் போக வேண்டும்.” என்றான் கந்தன்.


“ஓ.. சரி அப்போ மலை அடிவாரம் வரை காரில் சென்றுவிட்டு, மலை மேல் நடந்து போய் கொள்ளலாம். என்ன ஆதிரை.. சரிதானே" என்று கேட்டான் அர்ஜூன்.


“ம்ம்… அதுவும் நல்ல idea தான் மாமா.. நேரமும் அதிகம் ஆகாது. ஆனால் மண் ரோடுதான் மாமா. சில நேரங்களில் கல்லும் முள்ளும் இருக்கும். பொறுமையாகதான் போக வேண்டும்.” என்றான் கந்தன்.


“இல்ல.. அர்ஜூன்.. நடந்து போனால்தான் எனக்கு நிம்மதியாக இருக்கும். நான் விரைவில் கிளம்பி விடுகிறேன். நீங்களும் கிளம்பி விடுங்கள். நடந்தே போவோம். கந்தா சேகர் அங்கிளும் லாவண்யாவும் வந்தா நல்லாயிருக்கும். அவர்களுக்கு phone பண்ணி எங்க இருக்காங்கனு கேளு. அங்கிள் சாப்பிட்டாரென்று கூட தெரியவில்லை." என்று சொல்லிவிட்டு அவர்களின் பதிலுக்கும் காத்திராமல் விரைந்து தயாரானாள் ஆதிரை.


லாவண்யாவும் சேகரும் இரவு தான் வீடு வர முடியும் என்பதை அறிந்து விரைவிலே மூவரும் தயாராகி மெதுவாக நடந்து போக ஆரம்பித்தனர். போகும் வழியெல்லாம் ஊர் மக்கள் ஆதிரையையும் அர்ஜூனையும் நிற்க வைத்து பேசிக் கொண்டே இருந்தனர். கணவருடன் போகும் போது நம் ஊர் பெண்களுக்கு கிடைக்கிற மரியாதைக்கும் கௌரவத்திற்கும் ஈடு இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். அதனை ஆதிரை அன்று தான் உணர்ந்தாள். அந்த மன மகிழ்வில் பெருமையாக உணர்ந்தாள். ஒவ்வொருவருடன் பேசும் போதும் அர்ஜூன் ஆதிரையை பற்றி உயர்த்தி பேசும் போது வானத்தில் பறப்பதுப் போல உணர்ந்தாள் ஆதிரை. கூடவே அர்ஜூனிடம் கேட்க வேண்டுமென்று வெகு நாளாக இருந்த கேள்வியும் கேட்க அவளுள் உந்துதல் ஏற்பட்டது. அதனை கேட்டிட அடிதளமிட்டாள் ஆதிரை. கந்தனும் கொஞ்சம் முன்னோக்கி நடந்ததால் அர்ஜுனுடன் ஜோடியாக நடக்க ஆதிரை பேச ஆரம்பித்தாள்.


“அ… அர்ஜூன்… " என்று அழைத்தாள் ஆதிரை..


பேண்ட் pocket -ல் கையை விட்டுக் கொண்டு அந்த ஊரின் அழகை ரசித்துக் கொண்டு வந்திருந்த அர்ஜூனின் மோன நிலையை ஆதிரையின் குரல் களைத்தது. “ம்ம்..” என்று அவளை திரும்பி பார்த்து கேட்டுவிட்டு மீண்டும் நேரே பார்த்து நடந்தான் அர்ஜூன்.


அவனது அந்த பார்வையும் கூட ஆதிரையை வெட்க பட வைக்குமென்று ஆதிரை நினைக்கவில்லை. அவள் காது மடல் வரை சூடான ரத்தம் பாய்வதை உணர்ந்தாள் ஆதிரை. தொடர்ந்து, “உ.. உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்..” என்றாள்.


“ம்ம் சொல்லு.. என்ன கேட்க வேண்டும்… ? இந்த மலை தூரத்திலிருந்த பார்பதைவிட மிக அருகில் பார்க்க ரம்மியமா இருக்கு. trucking எல்லாம் போயிருக்கேன். ஆனால் மலையின் இடையிலிருந்துதான் போயிருக்கேன். ஆனால் அடிவாரத்திலிருந்து போவது இதுதான் முதல் முறை. காரில் வந்திருந்தால் இதனை ரசித்திருக்க முடியாது.தாங்க்ஸ் ஆதிரை.. உன்னால்தான் நடந்து வருகிறோம்.” என்று அவனுடைய அப்போதைய மனனிலையை சொல்லி மகிழ்வுற்றான் அர்ஜூன்.


“ம்ம்… எனக்கும் அப்படிதான் இருந்தது முதல் முறை அந்த கோவிலுக்கு போகும் போது. அதனோடு நிறைய மயில்களும் மான்களும் குரங்குகளும் , பலவித பறவைகளும் இருக்கும். வழி மாறி போனால் பாம்புகளும் , இன்னும் சில மிருகங்களும் இருக்குமென்று கந்தன் சொன்னான். அதனால் ராஜாவை கையோடு அணைத்துக் கொண்டு போனது இப்போதும் நினைவில் இருக்கு" என்றாள் ஆதிரை..


அதற்கு பதிலாக புன்னகித்த அர்ஜூன் ,”ம்ம்.. உனக்கு ராஜானா ரொம்ப புடிக்கும் போல. ஊர் மக்களெல்லாம் ராஜா என்னைப் போல இருப்பதாக சொல்லும் போதும் நீ ராஜா மேல எவ்வளவு பாசமா இருந்தனு சொல்வதை கேட்கும் போதும் என் மனைவியை நினைத்து பெருமையா இருக்கு" என்று அவளை கூர்மையாக பார்த்த வண்ணம் கேட்டான் .


அவன் எதிர்பார்த்ததுப் போல ஆதிரை வெட்கத்தில் தலை தாழ்த்துவது தெரிந்து பெருமையுற்றான்.


“அது சரி.. நீ ஏதோ என்னிடம் கேட்க வேண்டுமென்றாயே? என்னது?” என்று கேட்டு அவனது வலது கையினை அவள் தோள் மீது போட்ட வண்ணம் கேட்டான் அர்ஜூன்.


அவனது தொடுகையில் நிமிர்ந்த ஆதிரை, “எ.. ன்ன.. செ.. செய்றீங்க.. கையை எடுங்க யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்" என்று அவனது கையை எடுத்துவிட முயன்றாள் ஆதிரை.


“எ..என்ன.. என்ன நினைப்பார்கள்.. என்ன நினைத்தால்தான் என்ன. என் மனைவி நீ. நான் அவள் மீது கையை போட்டுக் கொண்டு வந்தால் என்ன" என்று அவளைப் போல கேள்வி கேட்டான் அர்ஜூன்.


“ம்ம்… சென்னையென்றால் பரவாயில்லை. இது கிராமம். அதனால் இருக்கும் இடத்திற்கு ஏற்ப நாமும் இருக்க வேண்டும். “ என்று அவனது கையை எடுத்துவிட்டாள்.


“சரிங்க… மகா ராணி. . நீங்க சொல்வது போலவே செய்கிறேன். அப்பறம்?” என்று சேவகனைப் போல தலை தாழ்த்தி அர்ஜூன் கேட்டதை அப்போது மலை மீதிருந்து ஆடு மேய்த்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த சுகந்தி பார்த்துவிட்டு "டாக்டரம்மா.. சாரு நீங்க சொல்ற எல்லாத்துக்கும் அடிபணிவாரு போல இருக்கு. மேலெருந்து நீங்க பண்றத பார்த்துக் கொண்டுதான் வரேன். “ என்று கேலிப் போல பார்வையிட்டு சிரித்துக் கொண்டே சொன்னாள்.


“சு.. சுகந்தி.. அ.. அது வந்து...” என்று ஆதிரை சொல்லிக் கொண்டிருக்கும் போதே "பரவாயில்லை பரவாயில்லை. சங்கடபடாதீங்க.. நானும் புதுசா திருமணம் ஆன பொண்ணுதான் எனக்கும் எல்லாம் புரியும். நீங்க சந்தோஷமாக இருப்பதே மகிழ்ச்சியா இருக்குமா. " என்று சிரித்துக் கொண்டே ஆடுகளை ஓட்டிக் கொண்டு சென்றுவிட்டாள் சுகந்தி.


“ம்ம்.. சரி..” என்று அசடு வழிந்த வண்ணம் அர்ஜூனை முறைத்தாள் ஆதிரை.. “என்ன?” என்பதுப் போல திருட்டு தனம் செய்யும் பூனையாக அவன் எதுவுமே செய்யாததுப் போல முகம் அசைத்து முன்னோக்கி பார்த்த வண்ணம் சென்றான் அர்ஜூன்.


சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது. பின் "சரி.. என்னிடம் என்ன கேட்க வேண்டும்?” என்று கேட்டான் அர்ஜூன்.


‘ஹப்பா.. இப்போதாவது கேட்டானே. ‘ என்று எண்ணிய ஆதிரை, “அது… எ.. எனக்கு தீவில் நான் நினைவில் இல்லாதப் போது என்ன நடந்தது என்று தெரிய வேண்டும். அ.. அதனோடு நமக்கு எப்படி திருமணம் நடந்தது.. தாத்தா ஏதோ வித்தியாசமான கரடி என்றாரே. அது.. உத்ராவா? என்ன நடந்தது?” என்று கேட்டாள் ஆதிரை.


ஒரு நொடி ஆதிரையை திரும்பி பார்த்த அர்ஜூன், “ நினைவு வந்து இவ்வளவு நாளில் இல்லாத கேள்வி திடீரென்று இன்று ஏன்?” என்று கேட்டான் அர்ஜூன்.


“அ.. அது… உ.. உங்களிடம் எனக்கு கேட்க தயக்கமாயிருந்தது. அண்ணா அண்ணியிடம் கேட்களாமென்று நினைத்தேன். ஆ.. ஆனால்..” என்று நிறுத்தினாள் ஆதிரை..


“ம்ம்.. ஆனால்...” என்று அவளை ஊக்கினான்.


“ஆனால். உங்களிடம் முன்பிருந்த தயக்கம் ஏனோ இப்போது தோன்றவில்லை. முக்கியமாக நேற்று இரவிலிருந்து..” என்று லாவண்யா விஸ்வாவைப் பற்றி தெரிந்ததிலிருந்து அர்ஜூனின் வசம் ஆதிரையின் மனம் மேலும் லயித்து இருந்தது. அதுவும் அந்த இதழணைப்புக்குப் பின் அர்ஜூனிடம் ஆதிரையையும் அறியாமல் சொக்கிதான் போயிருந்தாள். அதனாலே இயல்பாக பேச முடிந்தது.


“நேற்று இரவிலிருந்தா?” என்று நமட்டு சிரிப்பு சிரித்தான் அர்ஜூன்.


“ஆ… ஆமாம்.. மேலும் என்னை கேள்விகள் கேட்காமல் என்ன நடந்தது என்று சொல்லுங்க" என்று கொஞ்சம் சங்கடமும் சலிப்புமுற்றவளாக கேட்டாள் ஆதிரை..


“சரி சரி.. சொல்கிறேன். பொறுமையாய் இரு..” என்று பேச ஆரம்பித்தான் அர்ஜூன்.


"அந்த தீவில் ஒரு அருவில நாம குளிச்சிட்டு வந்த போது அந்த மழை மேகம் வந்தது நினைவிருக்கா? நீ கூட கையில் கிடைத்ததையெல்லாம் கொண்டு அந்த மேகத்தை விரட்டினாயே" என்று சிரித்துக் கொண்டு கேட்டான் அர்ஜூன்.


இதில் இவனுக்கென்ன சிரிப்பு சிறு கடுகடுப்புடன், “ நினைவு இருக்கு. அதன்பிறகுதான் எனக்கு எதுவும் நினைவில்லை " என்று முகத்தில் இறுக்கம் உருவாக சொன்னாள் ஆதிரை.


“அது சரி… அப்போது அந்த மழை மேகத்தால் உன்னோடு நானும் நினைவிழந்தேன். அதன் பிறகு எனக்கு நினைவு தெரிந்து விழித்தப் போது நாம் ஒரு குகையில் இருந்தோம். அனேகமாக நம்மை அந்த குகைக்கு அந்த மழை மேகம்தான் நினைவு இல்லாமல் நடத்தி கொணர்ந்திருக்க வேண்டும். கிட்டதட்ட 5 நாட்கள் நாம் அந்த குகையில்தான் இருந்திருக்கோம். நீரும் உணவுமில்லாமல். நம்மை தேடிக் கொண்டு என் அக்காவும் உன் அண்ணாவும் தீவின் நதிக்கரை இந்த பக்கம் மட்டுமல்லாமல் நதி கரையின் அந்த பக்கமும் தேடி திரிந்திருக்கிறார்கள். கடைசியாக உத்ராவின் உதவியோடும் அக்காவின் உள்ளணர்வினாலும் நாம் இருந்த இடத்திற்கு அக்காவும் மாமாவும் வந்து சேர்ந்தனர். உத்ரா தமிழ் படித்து மாமாக்கு வழி சொன்னது. என்று மாமா சொல்ல கேட்டேன். ஆனால் நான் கண் விழித்தப் பிறகு அந்த கரடி அப்படி எதையும் படிக்கவுமில்லை. இயற்கைக்கு முரண்பாடாக நடந்துக் கொள்ளவுமில்லை. பழையப்படி இயல்பாக தான் இருந்தது. நான் கண் விழித்ததும் அந்த கரடி முன் போல 5 அறிவுடைய விலங்காகவே மாறிவிட்டது. “ என்றான் அர்ஜூன்.


“ஓ… உங்களுக்கு நினைவு வந்த பிறகும் எனக்கு நினைவு வரவில்லையா? இருவரும் ஒன்றாகதானே அந்த குகைக்கு சென்றிருக்க வேண்டும். உங்களுக்கு நினைவு வந்திருக்கு? எனக்கு மட்டும் ஏன் நினைவு வரவில்லை.” என்று கேட்டாள் ஆதிரை..


“சொல்கிறேன் இரு.. அந்த குகையில் நீ நினைப்பதுப் போல நாம் உறங்கி கொண்டோ மயங்கியோ இல்லை ஆதிரை. நினைவு வருவதற்கு. நாம் தவம் செய்துக் கொண்டிருந்தோம். போன ஜன்மம் போல" என்று நிறுத்தினான்.


“தவமா? எனக்கு எதுவும் நினைவில் இல்லையே. போன ஜன்மம் என்று முன்பும் ஏதோ சொன்னீங்களே. போன ஜன்மத்தில் என்ன நடந்தது. உங்களுக்கு மட்டும் எப்படி போன ஜன்மம் நினைவிருக்கு. எனக்கு ஏதும் நினைவில் இல்லையே?” என்று ஆர்வம் மேலிட கேட்டாள் ஆதிரை.


புன்னகித்த அர்ஜூன் , “ம்ம் உனக்கு போன ஜன்மத்தில் என்ன நடந்தது என்று தெரிய வேண்டுமா? இல்லை இந்த ஜன்மத்தில் நமக்கு எப்படி திருமணம் நடந்தது என்று தெரிய வேண்டுமா?” என்று கேட்டான் அர்ஜூன்.


“அ.. அது ரெண்டும்தான். ஆனால் இப்போது நமக்கு எப்படி திருமணம் நடந்தது என்று தெரிய வேண்டும். பிறகு போன ஜன்மம் பற்றி பேசலாம்" என்றாள் ஆதிரை.


“ம்ம்.. சரி.. நாம தவம் செய்துக் கொண்டிருந்தோம். நான் சிவனை நோக்கி தவமிருந்தேன். நீ பார்வதியை நோக்கி தவமிருந்தாய். இருவரும் பத்மாசன நிலையில் அமர்ந்துக் கொண்டு ‘"ஓம் நமச்சிவாய போற்றி" என்று நானும் , “ஓம் சக்தியே போற்றி" என்று நீயும் கைகளை வணங்கிய வண்ணம் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தோம் என்று என் அக்கா சொன்னாங்க. நம் மீது அதற்குள் பல வருடம் தவமிருந்ததுப் போல மண் புத்து ஏறியிருந்ததாகவும் . கழுத்து வரை நம் உடல் மண்ணால் மறைந்திருந்ததுமாவும் , இன்னும் சில தினங்கள் கழித்து வந்திருந்தால் நாம் அப்படியே இறந்திருக்கவும் வாய்ப்பிருந்ததாக உன் அண்ணாவும் சொன்னாங்க" என்று நிறுத்தினான் அர்ஜூன்.


“கதைகளில்தான் இப்படி நடக்க வாய்ப்பிருக்கு. நாம் காணாமல் போன 5 நாட்களில் எப்படி மண் செல் புடிக்கும்.. அந்த தீவே மர்மம்தான். எப்படியோ அங்கிருந்து வந்துவிட்டோம். ஆனால் அந்த மண் புத்திலிருந்து நாம் எப்படி பிழைத்தோம். அப்பறம் என்ன நடந்தது அர்ஜூன்" என்று உண்மையான திகிலும் ஆர்வமும் மேலிட கேட்டாள் ஆதிரை.


“ பிறகு நான் உயிர் பிழைக்க கரடி உத்ராதான் காரணம். நீ உயிர் பிழைக்க என் அக்காதான் காரணம். “ என்றான் அர்ஜூன்.


“புரியவில்லை அர்ஜூன். இருவருக்கும் ஒன்று போல செல் பிடித்திருந்தது என்றால் இருவரும் ஒரே முறைப்படி ஒருவராலேதானே காப்பாற்ற பட்டிருக்க வேண்டும். நீங்க வேறுவிதம் இருக்கும் போல சொல்கிறீர்களே.” என்று கேட்டஆள் ஆதிரை.


"எல்லாம் ஒரு விதம்தான். ஆனால் ஒரு வித்தியாசம் இருந்தது ,எனக்கு முன்னே வித்தியாசமான உலோகத்தால் செய்யப்பட்ட கையின் முழங்கை அளவிலான சிவனின் சிலையும், சிவன் சிலை மீது பால் வண்ணம் கொண்ட மெல்லிய அருவியும், அருவியின் பால் மேலே விழுந்து தீபம் அணைந்துவிடாமல் சற்று தள்ளி சிவனின் எதிரில் ஒரு சிறிய அகல் விளக்கு போன்ற தீபமும் எரிந்துக் கொண்டிருந்தது. அது போல உன் முன்னும் சிறு பால் அருவி இருந்தது . ஆனால் அங்கு எந்த சிலையும் இல்லை. தீபம் எரிவதற்கு ஏதுவாக இரும்பால் தொங்கவிடப்பட்ட மாடம் மட்டும் இருந்தது. ஆனால் விளக்கில்லை. நீ வெற்று பால் அருவியை நோக்கி பார்வதி என்று துதித்துக் கொண்டு இருந்தாய். நான் சிவனின் சிலையை நோக்கி துதித்துக் கொண்டிருந்தேன்" என்று நிறுத்தினான்.


“பா..ர்வதியின் சிலை.. திகேந்திர சித்தர் கந்தர்வன், ரேவதியிடம் ஒப்புவித்துவிட்டு சென்ற பார்வதியின் சிலையும் அந்த விளக்கும்?” என்று கண்ணில் ஒளி பொருந்த அர்ஜூனை திரும்பி பார்த்த கேட்டாள் ஆதிரை.


“தாத்தா எல்லாம் சொல்லிவிட்டிருப்பார் போல இருக்கு. ஆமாம் அந்த பார்வதியின் சிலை இப்போது இந்திரபிரதேஷில் நான் உருவாக்கிய குகையில்தான் இருக்கு. அம்மாவாசை நாளில்லாமல் என்னாலும் கூட அங்கு இப்போது செல்ல முடியாது. நானும் இன்னும் பார்வதியம்மாவை பார்க்கவில்லை. உன்னோடுதான் 1000 வருடங்களுக்கு பிறகு என் பார்வதியினை பார்க்க போகிறேன்" என்று ஒரு நொடி தன் வசமிழந்து அர்ஜூன் பேசினான்.


“அ .. அர்ஜுன். அப்போ நம் கடமை பிரிந்திருக்கும் பார்வதியையும் சிவனையும் அவர்களின் விளக்கினையும் ஒன்று சேர்ப்பது. அதற்காகதான் இந்த முறை மீண்டும் உயிர்ப்பெடுத்திருக்கோமா?” என்று மனதில் உருவகபடுத்தியதை கேட்டே விட்டாள் ஆதிரை.


அவளது பதிலில் ,“ஆமாம்… உனக்கு எல்லாம் நினைவு வந்துவிட்டதா போன ஜன்மத்தில் நாம் பிறந்தது மற்றும் எப்படி பார்வதி சிவனிடமிருந்து பிரிந்தார்கள் என்றெல்லாம்" என்று அர்ஜூன் ஆர்வமாக கேட்டான்.


“இல்லை. எனக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை. நீங்க சொல்லும் கதையையும் சிவராமன் தாத்தா சொன்னதையும் வைத்து பார்க்கும் போது இப்படிதான் இருக்குமென்று தோன்றியது. “ என்றாள் ஆதிரை.


“ஓ… அதுதான் நானும் நினைத்தேன். எனக்கு சிவனின் சிலையை பார்த்ததும்தான் போன ஜன்மங்களின் நினைவு வந்தது. அதுப் போல நீயும் பார்வதியின் சிலையை பார்க்கும் போது நினைவு வரக் கூடும் என்று யூகித்திருந்தேன். “ என்றான் அர்ஜூன்.


“அப்படியா? எனக்கு இப்போது விரைவில் அந்த பார்வதியம்மனையும் , சிவனையும் பார்க்க வேண்டும் என்று ஆசையாக தோன்றுகிறது. எல்லாம் நொடியில் தெரிந்துக் கொள்ள ஆசையாக இருக்கு. ஆனால் அதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கு. சரி நீங்க சொல்லுங்க. அப்பறம் என்ன நடந்தது. கரடி எப்படி உங்களை காப்பாற்றியது?” என்று பெரு மூச்சு விட்டவாரே நேரே கேள்விக்கு வந்தாள் ஆதிரை.


"அது சரி" என்று சப்தமிட்டு சிரித்த அர்ஜூன் பின், “நானிருக்கிறேனே. என்னிடம் கேட்க தயக்கமில்லையென்றால் நானே உனக்கு அந்த கதைகளை சொல்கிறேன்" என்றான் க்ண்ணில் புன்னகை தெரிய.


உடனே ஆர்வம் மிக, “உண்மையாகவா? ஹய்யா? சரி சொல்லுங்க. இப்போது அந்த தீவின் கதை பிறகு மற்றவற்றை பேசலாம்" என்றாள் ஆதிரை.


அதற்கு புன்னகித்த அர்ஜூன், “ சரி.. அப்பறம் அந்த கரடி என் அக்கா மாமாவிடம் என்ன செய்தால் நான் கண் விழிக்க கூடுமென்று எழுதி காட்டியதாம். அதனோடு போன ஜன்மத்தில் என் அக்காவும் உன் அண்ணாவும் நம் நண்பர்களாக பிறந்திருந்தனர். அவர்களுக்கும் அந்த குகையிலிருந்த கல்வெட்டுகளின் மூலமாக போன ஜன்மத்தில் நடந்தவைகள் நினைவு வந்ததாகவும் என் அக்கா சொல்ல கேட்டேன். அதனால் அவர்களுக்கும் சூழ்னிலையின் அவசரம் புரிந்தது. உத்ரா எழுதி காட்டியப்படி , சிவன் சிலை மீது விழுந்து சென்ற பால் வண்ண அருவியின் சிறு துளியை எடுத்து என் மீது தெளிக்க நான் கண் விழித்தேன். நான் கண் விழித்தப்பின் உத்ரா இயல்பானது என்று மாமா சொன்னார். அதுவரை உடன் பேசிக் கொண்டிருந்த கரடி. அதன்பின் எதுவும் செய்யாமல் அங்கு நடப்பது எதுவும் புரியாததுப் போல நிலை மாறியது. சொல்லப் போனால் அந்த குகையை கண்டு பயந்து போனது என்றுதான் சொல்ல வேண்டும். அக்காதான் கரடியை கஷ்டபட்டு சமாதனம் படுத்தினாங்க. நல்ல வேளையாக மிகவும் சோதிக்காமல் கரடியும் அமைதியானது. அப்போதுதான் என் கண்ணெதிரே இருந்த சிவனை பார்த்தேன். பார்த்ததும். எல்லாம் நினைவுக்கு வந்தது. போன ஜன்மம் எல்லாம் நினைவு வந்தது. நீ என்னை ஏமாற்றியதும் நினைவுக்கு வந்தது. “ என்று நிறுத்தினான் அர்ஜூன்.


அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஆதிரை சட்டென திரும்பி அர்ஜூனை பார்த்தாள். அவனது முகத்தில் உணர்வுகளை கட்டுபடுத்த கூடியவிதமான இறுக்கம் தெரிந்தது. போன ஜன்மத்தில் அப்படி என்னதான் நடந்திருக்கும். என்னிடம் விளக்கம் கூற எதுவுமே இல்லையே. என்று எண்ணிய ஆதிரை அவனை என்ன ஏது என்று கேள்வி கேட்காமல் பேசாமடந்தையானாள். அங்கு சில நிமிடங்கள் அமைதி நிலவியது. அதற்குள் மலை அடிவாரத்தில் கோவிலின் படிகள் தெரிந்தது.


மலை அடிவாரம் வந்ததும் ,பின்னோடு வந்துகொண்டிருந்த தன் அக்கா மாமாவை நோக்கி ஓடிவந்தான். கந்தன் விரைவில் அர்ஜூன் ஆதிரை அருகில் வந்து, “அக்கா … நல்ல வேளை விரைவிலே வந்துவிட்டோம் .. சீக்கிரமாக கோவிலுக்கு போய்விட்டு வந்துவிடலாம். சீக்கிரம் வாங்க அக்கா. நான் மலையிலிருக்கும் மரத்திலிருந்து ராம் சீத்தாபழம் பறிச்சு வைக்கிறேன். ” என்று சொல்லிக் கொண்டு வேகமாக படிகளில் ஓடினான் கந்தன்.


அதன் பின்னும் அர்ஜூன் ஏனோ பேசாமல் இறுக்கமாக இருந்தான். அந்த அமைதியை ஆதிரையே உடைத்தாள், “அ.. அர்ஜூன்.. அப்பறம் என்ன நடந்தது. அந்த தீவில்.” விளக்கமில்லாமல் என்ன ஏமாற்றினேன் என்று அர்ஜூனை அப்போது கேட்க ஆதிரைக்கு நாவெழவில்லை. சொல்ல போனால் பயமாக உணர்ந்தாள் ஆதிரை. அதனால் அதனை விடுத்து வேறு கேட்டாள்.


ஆனால் அர்ஜூன் கருணையே இல்லாமல் அவளை புண்படுத்தும்படியாக அவள் ஏமாற்றியதை பற்றியே சொன்னான். " உண்மையில் தெரிந்துதான் ஆக வேண்டுமென்றால் சொல்கிறேன் ." என்று மீண்டும் சொல்ல ஆரம்பித்தான் அர்ஜூன் "எனக்கு உண்மை தெரிந்ததால் உன் மீது மிகவும் கோபம் இருந்தது. உ.. உன்னை நான் மிகவும் வெறுத்தேன். என்னை மண கோலத்தில் திருமணத்திற்கு முன் ஏமாற்றிவிட்டு விஸ்வாவுடன் போன ஜன்மத்தில் ஓடிப் போனவள் நீ. அவை எனக்கு நினைவுக்கு வந்தது. “ என்று வேண்டுமென்றே அவளை வேதனை தரும்படியானதை சொன்னான் அர்ஜுன்.


“இல்லை… நான் அப்படி போயிருக்க வாய்ப்பே இல்லை.” என்று கத்தியே விட்டாள் ஆதிரை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top