தூரம் போகாதே என் மழை மேகமே!! - 61

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer




அர்ஜூன் அறையை விட்டு சென்ற பின்பும் ஆதிரைக்கு அவனது வாசம் வீசுவதுப் போல இருந்தது. அவனது நினைவிலே உறங்க முடியாமல் தவித்தாள் ஆதிரை. காலையிலிருந்து அவனது மனைவியாக அவனோடே ஒட்டி அலைந்துக் கொண்டிருந்தப் போது தன்னை அறியாமலே குடிக் கொண்டிருந்த திமிரெல்லாம் அர்ஜூன் விலகிச் சென்ற அந்த நொடியில் இருக்குமிடம் தெரியாமல் தூரம் போனது. அவளையும் அறியாமல் "அர்ஜூன்... அர்ஜூன் ஏன் இப்படி " என்று அவள் வாய் முனுமுனுத்துக் கொண்டிருக்க அவள் கையும் உடலும் உடைகளை களைந்து இரவு உடைக்கு மாறி முகம் கழுவி படுக்கையில் விழுந்திருந்தது.


‘இவ்வளவுக்கு விரும்பாமல் விலகிச் செல்ல நினைப்பவன் ஏன் என்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். ‘ என்று coma -லிருந்து நினைவு வந்த இத்தனை நாளில் இல்லாத ஒரு ஆர்வம் இன்று ஆதிரைக்கு மேலோங்கி இருந்தது. ஆழ் மனதில் ஆதிரைக்கு அவள் நினைவு இல்லாமலே இந்த திருமணம் நடந்தது பிடித்திருந்ததால்தானோ என்னமோ " ஏன் நினைவில்லாதப் போது இந்த அவசரம் திருமணம்" என்ற காரணம் அறிய ஆதிரை ஆர்வம் காட்டவில்லை என்பதை ஆதிரை உணர்ந்தாள். இன்று அந்த காரணத்தை அறிந்திட எண்ணி அவள் அண்ணிக்கு phone செய்ய நினைத்த போது நேரம் ஏற்கனவே 12 மணியை கடந்திருக்க அந்த எண்ணத்தை அப்படியே கைவிட்டாள். பின் விளக்கினை அணைத்துவிட்டு உறங்க முயன்றாள். வெகு நேரம் ஆகியும் உறக்கம் பிடிக்காமல் புரண்டு புரண்டு படுத்தாள். பின் விடிய காலையிலே அவளையும் உறங்கி போனாள்.


காலை கண் விழித்து பார்த்தப் போது அர்ஜூன் தயாராகி அவள் அறையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் கால் மீது கால் போட்டுக் கொண்டு அமர்ந்துக் கொண்டு ஒரு கையில் cofee- ம் மற்றொரு கையில் phone -ல் எதையோ பார்த்துக் கொண்டும் இருந்தான்.


அவனை பார்த்ததும் அவசரமாக எழுந்து, " நீ… நீங்க எப்படி இங்க? ரொம்ப நேரம் ஆகிவிட்டதா! நான் எழ நேரமாகிவிட்டது. Sorry ..” என்று அவசரமாக phone – ஐ எடுத்து நேரம் பார்த்தாள். 8 மணியை கடந்து 10 நிமிடங்கள் ஆகியிருந்தது..


அவன் பதில் சொல்லுமுன்னரே , “காலையில் விரைவிலே கிளம்ப வேண்டுமென்று சொன்னீர்களே. எந்த train? நேற்றே எந்த நேரம் என்று கேட்காமல் விட்டேனே" என்று அவசரமாக குளியல் அறைக்கு ஓடினாள்.


“ஆதிரை...” என்ற கம்பீரமான அவனது குரலில் அப்படியே நின்றாள்.


அதற்குள் எழுந்து அவள் அருகில் வந்தவன், அவளை அவன்புறம் திருப்பி, அவள் முக கூந்தளை விலக்கிய வண்ணம், “ நேற்று நன்றாக தூங்கினியா?... என் நினைவு வரவில்லையா" என்றான் அர்ஜூன்.


அர்ஜூனின் இந்த புதுவிதமான குரலும் அவளிடம் நடந்துக் கொள்ளும் முறையும் ஆதிரைக்கு என்னவென்றே தெரியாதவிதமாக அடிவயிற்றில் ஆனந்தமும் பயமும் கலந்த குளிர் பரப்பியது. அவளால் அவன் என்ன கேட்கிறான் என்பதே உணர முடியாமல், “எ.. என்ன?” என்று மீண்டும் கேட்டாள்.


அதற்கு பதிலேதும் பேசாமல் அவள் விழிகளை பார்த்து மோகனமாக புன்னகித்தான் அர்ஜூன். பின், “ஒன்றுமில்லை. பொறுமையாக கிளம்பு. நாம் செல்வது காரில். 4 மணி நேரம் தானே அதற்கு எதற்கு train. நாம் காரிலே போய்க் கொள்ளலாம். வேலூர் சென்றதும் வழி தெரியுமல்லவா? இல்லையென்றாலும் map போட்டு போய்க் கொள்ளலாம்.” என்று சொல்லிக் கொண்டே அவளை விட்டு வந்து மீண்டும் அதே நாற்காலியில் முன்பு போல அமர்ந்துக் கொண்டு phone -ஐ நோண்டிக் கொண்டிருந்தான்.


அவள் அதே இடத்திலிருந்து அவனையே திரும்பி பார்த்துக் கொண்டு சில நொடிகள் பிரம்மை பிடித்தவள் போல பேசாமல் நின்றாள்.


அவளை நிமிர்ந்து ஒரு பார்வையும் பார்க்காமல் ,” என்ன கிளம்புவதாக உத்தேஷ்மில்லை போல தெரிகிறது.என்னையே பார்த்துக் கொண்டு நிற்கிறாய் போல" என்று coffee cup -ஐ மேஜை மேல் வைத்தான்.


பின்னே நினைவு வந்தவள் போல, “அ.. அதெல்லாமில்லை. எந்த ஆடைப் போடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இ.. இதோ கிளம்புகிறேன்.” என்று விரைவிலே கிளம்பிவிட்டாள்.


அவள் மனதுள் பல போராட்டங்கள். அவள் உடலிலும் புதுவித மாற்றமென்றுதான் சொல்ல வேண்டும். அர்ஜூனின் கைகளுக்குள் அடங்க அது துடிப்பதாக ஆதிரை அறியாமல் இல்லை. மருத்துவராக இருந்துக் கொண்டு அவள் மறைப்பதற்கு ஏதுமில்லை. ஆனால் தயக்கம் பயம் இவ்வளாவு காலம் அனுபவத்திராத அவனது ஸ்பரிசம் எல்லாவாற்றிருக்கும் ஏட்க பட ஆரம்பித்தாள். இருந்தும் பிடிவாதமாக அவனிலிருந்து விலகிட முயன்றாள்.
அதன் முதல் கட்டமாக 'அவன் அருகில் வந்தால் அவனை தொட விடாமல் விலகிச் செல்வது. அப்படி ஓரிரு முறை செய்தால் கண்டிப்பாக அதன் பின் அவன் நெருங்க முயல மாட்டான் " என எண்ணி அதனை செயல் படுத்தவும் செய்தாள்.


அர்ஜூனே car ஓட்டியதால் ஆதிரைக்கு அவனுடன் பேச வாய்ப்பிருக்கவில்லை. இருந்தும் நேற்று ஒழுங்காக தூங்காததால் காரின் பின் seat -ல் நன்கு உறங்கியும் போனாள்.


சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின் கண் விழிக்கும் போது கந்தன் காரின் முன் seat -ல் அமர்ந்திருந்தான். அர்ஜுனும் அவனும் ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தனர். கிராமத்திலே நடக்கும் Cricket team – ல் சேர்ந்திருப்பது பற்றியும் இரண்டு வாரத்தில் அவனது 10 வகுப்பு பரிட்சை பற்றியும் பேசிக் கொண்டிருந்தான்.


கண்விழ்த்தவள் கந்தன் அர்ஜூனை வார்த்தைக்கு வார்த்தை மாமா என்று அழைத்து பேசுவதை பார்க்கும் போது ஆதிரைக்கு மனதுக்குள் ஏதோ செய்தது. ‘நாளை பின்னே அர்ஜூனை விட்டு பிரிந்து இவனையும் அழைத்துக் கொண்டு எங்காவது போய் யாருக்கும் தெரியாமல் இருக்கலாம்’ என்று எண்ணியிருந்தேனே . இந்த அர்ஜூன் என் தம்பியான கந்தனையும் மயக்கிவிட்டானே. எல்லாரையும் என்னிடமிருந்து பிரிப்பதுதான் இவன் வேலையோ. ?’ என்று அர்ஜூனை பார்த்து முறைத்துக் கொண்டே எழுந்து அமர்ந்துக் கொண்டாள்.


பின் இருக்கையில் அசைவை கண்டு, “ அக்கா.. எழுந்துட்டிங்களா. இப்படியா தூங்குவிங்க. உங்கள மட்டும் நம்பி இருந்திருந்தா. அவ்வளவுதான். நல்ல வேளை சேகர் அங்கிள் மூலமா நாங்க ஏற்கனவே phone -ல் அறிமுகமாகிட்டோம். உங்காளுக்காக wait பண்ணாம மாமா எனக்கே phone செய்தாரு. பாருங்க நாம ஊருகுள்ளே வந்துட்டோம். car உள்ள வரதுக்காக வேற வழியில கூட்டிட்டு வந்தேன். “ என்று சொல்லிக் கொண்டே போனான் கந்தன்.


அவன் சொல்வதற்கெல்லாம், “ம்ம்.. ம்ம்..” என்றது தவிர வேறேதும் பேசவில்லை. மாறாக அர்ஜூனையே முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவன் அவளை பார்க்கவில்லையென்று தெரியாமல் முறைத்ததுதான். ஆனால் அர்ஜூன் ஆதிரையின் விழியினை car-ன் கண்ணாடி மூலமாக பார்த்துக் கொண்டே புன்னகித்துக் கொண்டிருந்தான். திடீரென்று அவனது விழிகளை அந்த கண்ணாடி வழியாக ஆதிரையும் பார்த்தவள். சட்டென முகம் தாழ்த்தி காரின் கதவின் ஓரம் நகர்ந்து அமர்ந்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பதுப் போல பாசாங்கு செய்தாள்.


அர்ஜூனின் ஆதிரையின் இந்த சைகைகள் ஒன்றும் புரியாமல் ஆதிரையிடமிருந்து பதில் வராததால் சினுங்கிக் கொண்டே, “என்னக்கா பதிலே பேச மாட்டேன் எங்கிறாய்?” என்று திரும்பி ஆதிரையை பார்த்தான்.


அர்ஜுன் மீது இருக்கும் கோபத்தை இந்த சின்ன பையனிடம் காட்டினால் இவன் என்ன செய்வான் என்று எண்ணி, “ ஒன்றுமில்லை டா. நம் ஊரை பார்த்து பல மாதம் போல தெரிகிறது. அதனால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு போய் பேசலாம். நீ எப்படி car -ல் எங்கிருந்து ஏறினாய்?” என்று கேட்டாள் ஆதிரை.


“அ.. அது அக்கா மாமா என்னை என் school hostel -க்கே வந்து கூட்டிட்டு வந்தார். " என்றான் கந்தன்.


“ஓ… உன் மாமாவுக்கு உன்னை பற்றி என்னை விட அதிகம் தெரியும் போல தெரிகிறது" என்று ஓரக்கண்ணால் அர்ஜூனை பார்த்த வண்ணம் சொன்னாள்.


“ம்ம் .. அது தெரில அக்கா.. நான் தான் மாமா கூட 2 மாதமா பேசிட்டு இருக்கேனே. நீ கடல்ல போனப்போது உனக்காக கடல அவரும் தொலைஞ்சி போய்டாருனு சேகர் அங்கிள் சொல்லும் போதே எனக்கு தெரியும் என் மாமா அக்கா மேல எவ்வளவு உயிரா இருப்பாருன்னு. அதனால மாமாட்ட என்னை பத்தி எல்லாம் சொல்லிட்டேன்" என்று வெகுளியாக சொன்னான் கந்தன்.


“ஓ… அது சரி… நீயும் சேகர் அங்கிளும் எனக்கு திருமணம் செய்துடனும்னு கடைசியா செஞ்ச சதி தெரியாதுனு நினைக்காத. அப்படி இருக்க எனக்கு திருமணம் ஆனதுக்கு காரணமானவர், என் விருப்பம் இருந்தாலும் இல்லையென்றாலும், அவரை கொண்டாடதானே செய்வீர்கள்" என்று ஆதிரை சொல்லி முடிக்குமுன்ன்ரே அர்ஜூன் வேகமாக சென்றுக் கொண்டிருந்த காரில் break போட்டுவிட்டு ஆதிரையை ஒரு பார்வை திரும்பி பார்த்தான்.


அந்த பார்வையின் பொருள் ஒரு நொடி புரியாமல் திகைத்த ஆதிரை மேலும் எதுவும் பேசாமல் அமைதியுற்றாள். அதன் பின் காரில் அமைதியே நிலவியது.


ஆதிரை வருவது ஏற்கனவே தெரிந்திருந்ததால் ஊர் மக்களும் பெரியவர்களும் ஒன்று கூடி ஆதிரையின் முன்னால் வீட்டின் முன் நின்று அவர்களை வரவேற்தனர்.


ரோஜாப்பூவும் சம்பிங்க் பூவும் சேர்த்து தொடக்கப்பட்ட பூ மாலையை புது மணப்பெண் மணமகனாக வந்து நின்ற அர்ஜூன் ஆதிரையின் கழுத்தில் அணிவித்தனர். ஒரு திருவிழாவைப் போல அந்த வீட்டின் முன் பந்தல் போடப்பட்டிருந்தது. வீட்டின் பின்புரமிருந்த இடத்தில் சிறிய குழி நோண்டப்பட்டு அடுப்பமைபக்கப்பட்டு உணவு தயாராகிக் கொண்டிருந்தது. வீட்டின் உள் நுழைவதற்குள் ஆலம் கரைக்கப் பட்டு மணமக்களுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. அர்ஜூன் ஆலம் எடுத்த வனிதாவின் தட்டில் 500 ரூபாயை போட்டான். 10 ஓலை பின்னினால்தான் அந்த 500 ரூபாய் கிடைக்கும். என்று எண்ணிய வனிதா அந்த மகிழ்வுடனே , “வாங்க அண்ணா.. டாக்டரம்மா… உள்ள வாங்க" என்று ஆசையாக வர வேற்றாள்.


உள்ளே வந்து பார்த்தவள் சேகர் அங்கிளை அங்கு எதிர் பார்க்கவில்லை போலும்., “அங்கிள் நீங்க இங்க எப்ப்டி வந்தீங்க. என்ன பார்க்க யாருமே சென்னைக்கு வரவே இல்லை. நான் கண் விழித்து பார்த்தபிறகு கூட யாரும் வரல எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா" என்று சேகர் அங்கிளை பார்த்ததும் குறையும் சந்தோஷமுமாக பேசிக் கொண்டு அவள் தோள் மீது சாய்ந்துக் கொண்டாள்.


“என்ன ஆதிமா. சின்ன பிள்ளைப் போல. உனக்கு ப்யபடுமடியாக எதுவுமில்லையென்றானதும்தான் நாங்க எல்லோரும் கிளம்பினோம். எவ்வளவு வேலை இருந்தது தெரியுமா ?இந்திரபிரதேஷில் நாளை நீ நேரில் போகும் போது தெரிந்துக் கொள்வாய். இன்று முழுதும் நீ மகிழ்வோடு இருக்க வேண்டும். தேவையில்லாமல் கவலை படாமல் இரு" என்று ஆதிரையிடம் சொல்லிவிட்டு,


“என்னப்பா… சாப்பாடு தயார் தானே ஊர் மக்கள் எல்லோரும் வர சொல்லுங்க பொண்ணு மாப்பிள்ளை வந்தாச்சு. எல்லாரும் சாப்பிடலாம்" என்று கத்திய வண்ணம் சமயல் காராரிடம் கந்தனிடமும் மற்றும் சிலரிடம் சொல்லிய வண்ணம் வீட்டை விட்டு வெளியில் சென்றார்.


அவர்களையே பார்த்திருந்த அர்ஜூன். எதுவும் பேசாமல் தன் phant pocket -ல் தன் இரு கைகளையும் விட்டுக் கொண்டு அந்த அறையின் ஓரமாக நின்றுக் கொண்டிருந்தான். அவனது கண்ணில் என்னவென்றே தெரியாத ஒரு கேள்வி மட்டும் தெரிவதாக ஆதிரை உணர்ந்தாள். அவனிடம் சென்று என்ன என்று கேட்க ஆதிரக்கு துணிவு வரவில்லை. காரில் அவள் அப்படி பேசி இருக்க கூடாதோ. கண்ணை எட்டாத அந்த சிரிப்பில் அர்ஜூனை பார்க்க ஆதிரைக்கு ஏனோ வருத்தமாக இருந்தது.


இவ்வாறாக அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது, “ஆதி. நல்லாருக்கியா? பல வித கஷ்டங்கள் அனுபவித்ததாக சேகர் sir சொல்லி கேட்டேன்.” என்று ஒரு பெண் குரல் கேட்டது. குரலுக்கு சொந்தகாரியை திரும்பி ஆதிரை பார்த்தாள்.


“லா..வண்யா…. நீயா?” என்று அதிர்ந்து நின்றாள் ஆதிரை.
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த லாவண்யாவைத்தானே ஆதிரை விஸ்வாவிடம் நலம் விசாரித்தாள்?
இங்கே எப்படி இவள் வந்தாள்?
ஏன் வந்தாள்?
ஒருவேளை லாவண்யாவை விஸ்வா அனுப்பியிருப்பானோ?
நீலக்கல் கழுத்தாரத்தை ஆதிரை இங்கேயிருந்து எடுத்துப் போவதில் பிரச்சனை ஏதும் வருமோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top