தூரம் போகாதே என் மழை மேகமே!! - 47

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
இந்திர பிரதேசில்…

வயது ஆக ஆகத்தானே தொழில், பணம், புகழ் இவை எல்லாவற்றையும் விட அன்பின் அருமை புரிய ஆரம்பிக்கும். அதுப் போலவே முதலில் கோபமாக வீம்பு பிடித்துக் கொண்டு தொழில் தொழில் என்று சுற்றிக் கொண்டிருந்த கஜேந்திரக்கும் சுமித்ராக்கும் மனிதனின் உண்மையான தேவை அன்புதான் என்பது புரிய ஆரம்பித்திருந்தது.

வந்ததும் வராததுமாக முற்றத்தில் அமர்ந்திருந்த சிவசக்தியை பார்த்ததும் ஓடி வந்து அவர் அருகில் அமர்ந்துக் கொண்டு, “அம்மா.. என்னம்மா இப்படி ஆகிவிட்டது. என் அர்ஜூனுமா! என்னால் தாங்க முடியவில்லையேமா? உங்கள் பேச்சை கேட்காமல் நடந்துக் கொண்டதற்கு எங்களை அந்த கடவுள் இப்படி சோதித்துவிட்டாரே. இனி நா லண்டன் போகவே மாட்டேன் அம்மா. இனி தூரத்திலிருந்து ஒருவரையும் இழக்க நான் தாயாராக இல்லை. நீங்க சொன்னதுப் போல நாம சந்திரகுளிர் குகைக்கு நாளைக்கே போய் வரலாம். உங்களையும் அப்பாவையும் மதியாது நான் நடந்துக் கொண்டு பொறுப்பை தட்டிக் கழித்ததால்தான் இந்த் தீவின் சாபம் போல என் பெண்ணையும் மகனையும் இழந்து தவிக்கிறோமே!. என் பேத்தி அஸ்மிதாவையாவது உடனிருந்த பார்த்துக் கொள்ளவேண்டும்,. என்னை மன்னித்துவிடுங்க அம்மா” என்று சிறு பிள்ளைப் போல ஊஞ்சலில் அமர்ந்திருந்த சிவசக்தி பாட்டியின் மடியில் முகம்பதித்து கண்ணீர் விட்டார் கஜேந்திரன்.

ஊர் வரும்வரை பிடித்துவைத்திருந்த கஜேந்திரனின் மனோ திடம் தன் அம்மாவை கண்டதும் கரைந்து கண்ணீராய் மாறியது. தனக்கு ஆருதலாக பேசிக் கொண்டு வந்த தன் கணவனுமே கலங்கிப் போயிருப்பது சுமித்ராவிற்கு புரியாமல் இல்லை. அவளும் ஒருபுறம் சிவசக்தி பாட்டியின் கையினை பிடித்துக் கொண்டு தவிப்பாய் தரையிலே அமர்ந்துக் கொண்டாள்.

அவன் தலையை வருடிய சக்தி, “கஜா.. அர்ஜூனுக்கு எதுவும் ஆகவில்லை. இது எல்லாம் நன்மைக்கு என்பது மட்டும்தான் என்னால் இப்போது சொல்ல முடியும். உன்னிடம் நிறைய பேச வேண்டும். நீங்க ஓய்வெடுங்க மாலை கூட்டத்திற்கு பின் உங்கள் இருவரிடமும் நிறைய பேச வேண்டும்.” என்று அவர்கள் இருவரையும் அமைதி படுத்தினார்.

அப்போது ராஜா, “பாத்திமா… காரு… ராஜா காருல வரான் வவுங்க வவுங்க” என்று சிவசக்தி பாட்டியிடம் கத்திக் கொண்டே சேகர் அவனுக்கு கொடுத்திருந்த பொம்மை ரதத்தினை எடுத்துக் கொண்டு அவர்கள் மூவரும் நின்று பேசிக் கொண்டிருந்த வராண்டாவில் ஓட்டிக் கொண்டு வந்தான். அவனை கண்டதும் அவனை சிறுவயது அர்ஜூனாகவே நினைத்துவிட்ட சுமித்ரா, “அர்ஜூன்….” என்று ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள். உணர்ச்சிவசப்பட்டதால் உண்டான கண்ணீர் துளிகள் அவள் கன்னத்தை கடந்துவிட்டிருந்தது. கஜேந்திரனுக்கும் அதே தாக்கம்தானோ ஒரு நொடி பிரமித்து நின்றான்.

புதுவிதமான பொம்மையுடன் ராஜா விளையாடுவதை பார்த்து ஆர்வமாக அவனையே தொடர்ந்து “டாஜா… டாஜா” என்று ஓடி வந்துக் கொண்டிருந்த அஸ்மிதா, புதிதாக தெரிந்த சுமித்ராவின் செயலில் பயந்து தயங்கி அந்த கதவின் அருலே மறைந்துக் கொண்டு நின்றாள்.

“அம்மா. இது யார்? நம்… நம்.. அர்ஜுனை போலவே இருக்கிறானே!” என்று தயங்கி கேட்டான் கஜேந்திரன்.

புன்னகையுடனே, “ உன் பேரன்தான். அஸ்மிதாவுடன் பிறந்தவன். அம்முவிற்கு இரட்டை குழந்தைகள். “ என்றார் சிவசக்தி.

“என்ன?...” என்று சுமித்ரா, கஜேந்திரன் இருவருமே ஒன்றாக வியந்தனர்.

திடீரென்ற அணைப்பில் திகைத்த ராஜா, ஒரு நொடி பயந்த போதும், சுமித்ராவின் கண்ணீரை பார்த்து, என்ன தோன்றியதோ அவனது பிஞ்சு விரல்களால் அவளது கண்ணீரை துடைத்துவிட்டு ,”அம்மம்மா… அ…வுவ கூடா… சமத்து… அவுவ கூடா… அஸ்மி பாப்பா… போல் சமத்தா… அவுவ கூடா” என்று பாதி விழுங்கிய வார்த்தைகளால் சுமித்ராவிற்கு பெரியவனாக ஆருதல் சொன்னான். வியப்பாக உணர்ந்த அனைவரும் ஒரு நொடி பிரம்பித்து போயினர்.

“எவ்வளவு அருமையாக வளர்த்திருக்கிறார்கள். இவன் இருப்பதையே அம்மு ஏன் சொல்லவில்லை.. இவன் இவ்வளவு நாள் எங்கிருந்தான்.. இப்போது இவனை எப்படி கண்டுபிடித்தீர்கள் அம்மா” என்றான் கஜேந்திரன்.

“எல்லாம் விதி செய்த சதி கஜா.. இவன் உங்க வருங்கால மருமகளிடம்தான் அவளது மகனாக இத்தினை காலம் வளர்ந்தான். “ என்றார் சிவசக்தி.

அர்ஜுன் உயிருடன் இருக்கிறானோ இல்லையோ என்று கலக்கத்துடன் இருந்த சுமித்ராவிற்கு போகத்துடித்துக் கொண்டிருந்த உயிரை மீட்டு வருவதுப் போல சிவசக்தியின் வார்த்தைகள அமைய அவசரமாக “என்னம்மா.. சொல்றீங்க.. எங்க மருமகளா!!” என்று கேட்டுக் கொண்டு சிவசக்தி பாட்டியிடம் வந்தாள் சுமித்ரா.

“ஆமாம்.. விளக்கமாக பிறகு பேசலாம். நீங்க முதலில் போய் ஓய்வெடுங்க. கஜா…. சேகரும் இங்கதான் இருக்கான். மாடியில இடது பக்கம் அறையிலதான் தங்க வச்சிருக்கு. அவந்தான் ராஜாவை இங்கு அழைத்து வந்தான். நீங்க ஓய்விற்குப் பின் அவனிடம் போய் பேசிங்க. அவன் எல்லாம் சொல்வான். எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு..” என்று அவ்வளவுதான் என்பதுப் போல “ராதா…. ராஜா, அஸ்மிதாவின் மீது ஒரு கண் வைத்திரு. வீட்டைவிட்டு வெளியில் போகாமல் பார்த்துக் கொள்” என்று அப்போது குடிக்க தண்ணீருடன் வந்துக் கொண்டிருந்த ராதாவிடம் சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு வெளியில் சென்றுவிட்டார் சிவசக்தி.

கஜேந்திரனும் சுமித்ரையும் சொன்னப்படியே வந்ததும், சிவசக்தி அடுத்து நடக்க வேண்டியவற்றை ஏற்பாடுகள் செய்ய தொடங்கினாள். மாலை பொழுதில் ஊர் மக்கள் எல்லோரும் அவருடைய வீட்டுக்கு வர வேண்டுமென்றும், ஊரை பற்றிய முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் தண்டோரா போட்டு ஊர் மக்களை மாலைப் பொழுதில் கூட்டம் கூட ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

பல நாட்களுக்கு பிறகு தண்டோராவும் கூட்டமும் கூடுவதால் ஊர் மக்கள் அவரவர்களுக்குள் பலவும் பேசி சலசலத்து அமைதியாகினர். அதில் ஒருவன் “வேலா… என்ன செய்தி? ஊரில் எந்த பிரட்சனையும் இப்போது இல்லையே!” என்று தண்டோரா போட்டவனை கேட்க, மற்றவர்களும் ஆர்வமாக கூர்ந்து கவனித்தனர்.

“எனக்கும் ஒன்றும் தெரியவில்லை கணேசா!.. ஏதோ சந்திரகுளிர் பற்றி என்று பேச்சு. எனக்கு சந்திரகுளிர் என்றால் என்னவென்று புரியவில்லை. எப்படியும் மாலை தெரிந்துவிடப் போகிறது.. பார்ப்போம்” என்றான் வேலன்.

“ஓ…. சரி பார்ப்போம் பார்ப்போம்“ என்றவாறு அனைவரும் களைந்து போன பின்னும் சந்திரகுளிர் என்றவுடன் ஒரு முதியவரின் விழி மட்டும் கூர்மையாகி இயல்பானது. அவரது உதடுகள் மென் புன்னகையை உதிர்த்து சாந்தமானது.

************
தீவில்…

கல்வெட்டினை ஒவ்வொன்றாக படித்துக் கொண்டே வந்த ரிதிகா அங்கிருந்த எல்லா கல்வட்டுகளையும் படித்து முடித்தாள். அவளது முன் பிறவியில் உதயாவாக பிறந்து வஜ்ரனான அரவிந்தை மணந்துக் கொண்டதும் கல்வெட்டின் மூலம் தெரிந்துக் கொண்டாள். சித்தர்களாக இருந்த வஜ்ரனும் , திகேந்திரனும் உதயாவையும் ஆதிரையையும் விரும்பியதாக அந்த கல்வெட்டில் பொறிக்க பட்டிருந்தது.

இன்னும் பிறவற்றை படித்த ரிதிகாவிற்கு முன்பிறவியில் நடந்தது எதுவும் நினைவிருப்பதாக தெரியவில்லை. ‘ஆனால் கல்வெட்டின் படி தான் இந்த பிறவியில் ரிதிகாவாக பிறந்து அரவிந்தை மணப்பேன் என்றும் தன்னால் மட்டும்தான் இந்த கல்வெட்டின் அர்த்தங்களை முழுதும் புரிந்துக் கொள்ள முடியுமென்றும் செதுக்கி இருக்கிறேன். அதனால்தான் அரவிந்துக்கு புரியாத மறைபொருளை என்னால் அறிய முடிந்ததோ! ஏன்? ‘ என்று ஒரே நொடிதான் யோசித்த போதும் மேலும் படிக்க முடியாமல் ரிதிகாவிற்கு மயக்கம் போல தோன்றி உறங்கி போனாள். ஆச்சரியபடும்விதமாக அவளுக்கு பசியென்ற உணர்வே தோன்றவில்லை. அவாளுடன் சேர்ந்து ருத்வியும் உறங்கி போனது.

அடுத்த நாள் காலை கண்விழித்த ரிதிகாவிற்கு எப்படி உறங்கி போனோம் என்று புரியாமல் கண்விழித்து பார்த்தாள். அவள் கொண்டு வந்திருந்த விளக்கு லேசாக எரிந்துக் கொண்டிருந்தது. தேன் பிடித்த மெழுகால் செய்யப்பட்ட அந்த விளக்கு இன்னும் சில மணி நேரங்களே தாங்க கூடியதாக இருக்க கூடும். அதனால் வந்த வழி சென்று மீண்டும் பிறகு வர முடிவு செய்துவிட்டு ரிதிகா வெளியே செல்ல எத்தனித்தாள்.

அப்போது அவள் சென்ற பாதைக்கு எதிர் திசையில் ,“ஓம் நமச்சிவாயா போற்றி..” என்று குகை பாதை முழுதும் ஒரு ஆணின் குரலில் அதிர்ந்து ஒலித்தது. அதனை தொடர்ந்து ஒரு சிறிய கால இடைவெளிக்குப்பின், “ ஓம் சக்தியே போற்றி!!” என்று ஒரு பெண்ணின் குரல் ஒலித்து நின்றது. அதுவே பொன்வண்டின் ரிங்காரம் போல ரிதிகா நின்றிருந்த அந்த பாதை முழுதும் ரிங்கரித்து ரிதிகாவை அந்த குகையை விட்டு வெளியில் செல்லாமல் குகையை நோக்கி இன்னும் உள்ளே செல்ல எத்தனித்தது.
 

Joher

Well-Known Member
உள்ளே தான் மாமனார் மாமியார் இருக்காங்களா???
குகை அவங்க ஊர் பக்கம்???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
மகளையும் மகனையும் காணோம்ன்னவுடனே கஜேந்திரனுக்கு ஞானம் வந்து புத்தி வந்துடுச்சா?
அப்போ கஜா அண்ணன் இனி
லண்டன் போக மாட்டாரா?
நல்லது நல்லது

ராஜா அருமையான குழந்தை
ஹே நல்ல வளர்ப்புன்னு நான்
நினைச்சதையே கஜேனும் சொல்றாரே

சந்திரகுளிர் பேரைக் கேட்டதும்
சிரிச்ச முதியவர் யாரு?
அவர் நல்லவரா? கெட்டவரா?

ஓ போன பிறவியில அரவிந்த்,
அர்ஜுன் இரண்டு பேரும்
சித்தர்களா?
சூப்பர் சூப்பர், யோகா டியர்

ஆனால் ஒரு சந்தேகம்ப்பா
சித்தர்கள் முற்றும் துறந்த முனிவர்கள்தானே
அப்போ எப்படி வஜ்ரனுக்கும் திகேந்திரனுக்கும் உதயா and
ஆதிரையின் மீது ஆசை வந்தது?
ஒருவேளை இந்த ஆசைதான்
இவர்கள் செஞ்ச தப்போ?

குகைக்குள்ளே சிவ சக்தி போற்றி சொன்னவங்க யாரு?
அரவிந்த்தின் பெற்றோரா?

இந்த நாவல் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு, யோகா டியர்
ஹி ஹி ஹி
நீங்கள் டெய்லி இரண்டு அப்டேட்ஸ்
கொடுத்தும் போறலைப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top