தூரம் போகாதே என் மழை மேகமே!! - 46

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
epi-46.jpgஅவளையும் அறியாமல் அவளது அழுகை குறைந்து நின்றது. ராஜாவை நேராக நோக்கினாள்.

அஸ்மிதாவை பார்த்ததும் சேகரின் கையிலிருந்து விலகிய ராஜா, அஸ்மிதாவின் அருகில் சென்று கன்னங்களைக் கடந்திருந்த அவளது கண்ணீரை துடைத்துவிட்டான். பின் திரும்பி சேகரை பார்த்து, “ஊர் தாத்தா.. பா…ப்..பா.. என்கு குட்டிப் பாப்பா..” என்று சொல்லிக் கொண்டே அங்கே அருகிலிருந்த பால் சாதத்தின் கின்னத்தை எடுத்து வந்து “பாப்பா… பூவா (boova) .. ஆ… ஆ..” என அவனது பிஞ்சு கையால் அஸ்மிதாவிற்கு அன்னத்தை ஊட்டிவிட்டான். அதுவரை அர்ஜூன் வராததால் சாப்பிட அடம் செய்த அஸ்மிதா , ராஜா ஊட்டி விட்டவுடன் அமைதியாகச் சாப்பிட்டாள்.

பசியுடன் இருந்த ராஜா தரையில் உட்கார்ந்து கொண்டு, “பாப்பா.. பா… பா. உட்காஞ்சி..” என்று அவளை அருகில் அமரச் சொல்லி தரையில் தட்டினான்.

அவன் சொன்னபடியே நாற்காலியிலிருந்து இறங்கி அமர்ந்த அஸ்மிதா, “பா..ப்..பா” என்று அவளும் ராஜாவை பார்த்துச் சொன்னாள். தத்தித் தத்தி பேசிய போதும் ராஜா அளவிற்கு அவளுக்கு இயல்பாகப் பேச முடியாமல் பேசினாள்.

உடன் அமர்ந்ததும் , ராஜாவே அந்தக் கின்னத்திலிருந்த சாதத்தை எடுத்துச் சாப்பிட, அவனையே பார்த்திருந்த அஸ்மிதாவும் அவளே உணவினை எடுத்து சாப்பிடச் செய்தாள். சிலது இரைந்திருந்த போதும் அமைதியாக இருவரும் உண்டு முடித்தனர்.

அவனைப் பார்த்திருந்த சிவசக்தி பாட்டிக்கு அவனை அள்ளித்தூக்கிக் கொள்ள வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டது. இருந்தும் புதியவளாக அவனை மிரளச் செய்ய கூடாதென்று ஆசையாக அவனது சைகைகளை பார்த்தாள். அர்ஜூனை குழந்தையில் பார்த்தது போல இருந்தது அவருக்கு. அனைவருமே அப்படிதான் நினைத்தார்களோ அங்கே சில நிமிடம் அமைதி நிலவியது.

ராஜாவைப் பற்றி ஏற்கனவே முழுதும் அறிந்திருந்த சேகரே முதலில் பேசினார். “அம்மா… எப்படி இருக்கிங்க.. உங்களை photo –ல் தான் பார்த்திருக்கிறேன். உங்களை நேரில் பார்க்க வாய்ப்பேற்படுமென்று எண்ணியதில்லை. பார்த்ததில் மகிழ்ச்சி மா” என்றார்.

சிவசக்தி பாட்டி, “ம்ம்.. எனக்கும்தான் பா. கூடிய விரைவில் இந்த இடம் எல்லோரும் வந்து போக கூடிய இடமாக அல்லவா மாறா போகிறது. இனி அடிக்கடி நீயும் வந்து போக வேண்டும். சரி…பயணம் எல்லாம் சௌகரியம்தானே. குதிரைப் பயணம் கடினமாக வில்லையே” என்றார்.

“அந்த அளவு கடினமில்லை அம்மா.. கஜா வந்துவிட்டானா.. “ என்றார் சேகர்.

“இல்லை சேகர்.. நாளை மாலைக்குள் வந்துவிடுவதாகச் சொன்னான். அவன் வந்ததும் மற்றதை பேசுவோம். “ என்றார் சக்தி.

“ம்ம்.. “ என்ற போதும் காதம்பரன் மற்றும் சேகர் இருவர் முகத்திலும் கேள்விக் கோடுகள் இல்லாமல் இல்லை.

“காதம்… உன்னை தேடிக் கொண்டு உன் மனைவி இரண்டு முறை வந்துவிட்டாள். உன் மகனும் மகளும் வெளியில் இருக்கும் போது உன்னையும் வெளியில் நான் அனுப்பியிருக்கக் கூடாது. முதலில் நீ போய் அவளைப் பார்.. மீண்டும் நாளைப் பார்ப்போம்” என்றார் சக்தி.

“சரிங்க அம்மா…” என்றவர் தொடர்ந்து , “அம்மா.. அர்ஜூனும் அந்த பொண்ணுக்கும் ஒன்னும் ஆகிருக்காதில்லையா?” என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டார் காதம்.

“ம்ம்… எதுவும் ஆகாது அல்ல. எதுவும் ஆகவில்லை. விரைவில் இங்கு வந்துவிடுவார்கள்.. இப்போது நிம்மதியாகப் போய் உன் மனைவியைப் பார்” என்றார் சக்தி.

“இப்போதோ கொஞ்சம் நிம்மதியாக இருக்கு மா. நா நாளைக்கு வரேன்.” என்றுவிட்டு காதம்பரன் அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

“சேகர்.. நீயும் போய் கொஞ்சம் ஓய்வெடுப்பா.. ராஜா யார் என்று ஏற்கனவே தெரியும். இனி நீ எதைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். நானே அஸ்மியுடன் சேர்த்து பார்த்துக் கொள்ள ஏற்பாடுச் செய்கிறேன்” என்றுவிட்டு, “ராதா.. இவருக்கென்று ஏற்பாடு செய்திருந்த அறைக்கு அழைத்துச் சென்று அவருக்குத் தேவையான உதவிகள் செய். வேண்டுமென்றால் ராமுவையும் உதவிக்கு அழைத்துக் கொள்” என்று சேர்த்து பேசினார்.

அனைவரும் கஜேந்திரனுக்காக காத்திருந்தனர்.

**************
தீவில்…
அரவிந்தை வழியனுப்பிய ரிதிகா அவன் வர எப்படியும் இரண்டு நாட்களாவது ஆகக் கூடுமென்று யூகித்திருந்தாள். அதனால் காத்திருந்த நேரத்தில் அந்தக் கல்வெட்டு ஆராய்ச்சி குறிப்புகளை முழுதும் படித்துவிட எண்ணி அரவிந்த் எழுதி வைத்திருந்த குறிப்புகளை படித்திட முயன்றாள். ஏனோ முழுமையில்லாத குறிப்புகளாக உணர்ந்த ரிதிகா. மாலைப் பொழுதென்றும் பாராமல் ஆர்வமிகுதியாலும் அர்ஜூன் மற்றும் ஆதிரையைப் பற்றி மேலும் அறிந்திடும் ஆர்வத்திலும் விளக்கினை எடுத்துக் கொண்டு சாப்பிடவென்று சிலவற்றையும் குடிக்க நீரினையும் எடுத்துக் கொண்டு அந்த குகைக் கோவிலுக்கு நடந்து சென்றாள் கர்ப்பிணியாக இருந்த போதும் இந்தக் காட்டு வாழ்க்கைக்கு பழக்கப்பட்டிருந்த ரிதிகாவின் உடல் அந்தக் காட்டு பாதை நடைக்கு ஒத்துழைப்புக் கொடுத்தது.

அந்தக் குகையில் நுழைந்தாள் ரிதிகா. பகலில் மறைக்கப்பட்டிருந்த அந்தக் குகையின் அழகு இரவில் ஒளிர்ந்தது. மின்மினி பூச்சுகளின் ஜாலத்தில் அந்தக் குகை முழுதும் ஒளி பெற்றது. விளக்கின் ஒளி தேவைபடமாலே கோவில் என்று எண்ணிய அறைக்கு நுழைந்தாள். சில நிமிடங்கள் அந்தக் குகையின் மேற்கூரையை ஆர்வமாகப் பார்த்தாள். கோவில் என்று சொல்ல அரவிந்தின் பெற்றோர்களால் சொல்ல பட்ட போதும் அங்கு எந்தத் தெய்வங்களின் சிலைகளும் இல்லை. ஒரு ஒளி மட்டுமே தெரியும். அது ஒரு விளக்கொளியின் பிம்பம் போல் இருந்தது. உண்மையான விளக்கோ அதற்கான திரியோ அல்ல எரிபொருளோ அங்கு இல்லை. அந்தரத்தில் எரிந்து கொண்டிருந்த அந்த ஒளியே அந்தக் கோவிலின் தெய்வம் என்றனர். அஸ்மிதாவினை பற்றி அறிந்து கொள்ள வந்த போது அந்த விளக்கொளியில் நம்பிக்கையில்லாமல் தான் ரிதிகா அந்தக் கோவிலுக்கு வந்திருந்தாள்.

ஆனால் அடுத்த பௌர்ணமி அன்று அவள் கனவில் நடந்தவை அனைத்தும் படம் போல ஓடியது ரிதிகாவின் இந்தக் கோவில் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அதனோடு அரவிந்தின் அம்மாவும் இந்தத் தீபத்திடம் தன் மகனைக் கடைசியாக பார்க்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டதும்தான் அரவிந்த் இந்தத் தீவிற்கு வந்ததாக உணர்ந்திருந்தாள். இருந்த போதும் இந்தத் தீவிற்கு தாங்கள் வந்திருப்பதற்கு ஏதோ அசைக்க முடியாத காரணம் இருப்பதாக ரிதிகா நம்பினாள். ஆதிரை இந்தத் தீவில் பிறந்தாள் என்பதை அறிந்ததுமே எதற்காகவோ கடவுளால் தேர்ந்தெடுக்கபட்டவாளாக அவள் இருக்கக் கூடுமென்பது ரிதிகாவின் யூகம். அவளுக்கு உதவிடவே அவளுடன் தாங்களும் இந்தத் தீவில் அகப்பட்டிருப்பதாக நினைத்தாள். அந்தக் காரணம் பொருட்டும் ஏனோ ஏற்பட்ட உள்ளணர்வினாலும் ஆதிரை இந்தத் தீவிற்கு வர வேண்டுமென்று அரவிந்தின் எச்சரிக்கையையும் மீறிக்கொண்டு இந்தத் தீபத்திடம் ரிதிகா வேண்டினாள்.

இப்போது இந்தக் கல்வெட்டு ஓலைச் சுவடிகள் ரிதிகாவின் பல கேள்விகளை தீர்க்கக் கூடுமென்ற ஆர்வத்தினை ஏற்படுத்தியது.

பகலில் வரும்போது இருட்டி அந்தத் தீபம் பட்டுமே தெரியும் இந்த குகைக் கோயில் இன்று இப்படி மின்மினிப்பூச்சிகளால் வெளிச்சமுற்று ரமியமாக இருக்கக் கூடுமென்று ரிதிகா என்றுமே நினைத்ததில்லை. இந்த வெளிச்சத்திலே மெதுவாக அரவிந்த் சொன்ன இடத்தில் இருந்த கல்வெட்டினை மெதுவாகப் படிக்க ஆரம்பித்தாள்.

அப்படி படித்துக் கொண்டிருந்தவளின் கண்களை அந்தக் குகையில் ஒரு மூலையின் ஒரு குறுகிய பகுதியில் மட்டும் மின்மினிப் பூச்சிகள் இல்லாமல் இருண்டு காணப்பட்டது கவனத்தை ஈர்த்தது. அந்த இடத்திற்கு விளக்கைக் கொண்டு வந்து பார்த்தாள். அதன் மீது கையினை வைத்து தடவிப் பார்த்தாள். அவளது தொடுகைக்காகவே இத்தினை காலம் காத்திருந்தது போல ஒளியற்ற அந்த இடம் ஒரு ஆள் நுழை வதற்கான துவாரத்தை ஏற்படுத்தி விலகி விழுந்தது. எதிர்பாராத அதன் நகர்வில் ஒரு நொடி பின்வாங்கிய ரிதிகா, பின் உற்று நோக்கிப் பார்த்தாள். அது மற்றோர் குகைக்கான பாதை போல தெரிந்தது. விளக்கினூடே உள் நுழைந்த ரிதிகா முன்நோக்கி நடந்தாள். ரிதிகா எங்கோ போவதை பார்த்த ருத்வி ரிதிகாவின் தோட்பட்டை மீது ஏறி அமர்ந்து கொண்டது.

ஒரு ஆள் மட்டும் நடக்கக் கூடிய விதமாக இருந்த அந்தப் பாதையில் எங்கும் கணுக்கால் வரை நீராக இருந்தது. கொஞ்சம் தூரம் சென்றதும் ஈரமற்ற காய்ந்த தரையும், பாதைக் கொஞ்சம் பெரியதாகத் தெரிந்தது. திடீரென்று அவளுள் ஏற்பட்ட இனம் புரியாத தெய்வீக உணர்வு அவளை முன்நோக்கி நடக்கவிடாமல் தடுத்தது. அவளையும் அறியாமல் அவள் நின்றிருந்த இடத்திலே சமணமிட்டு அமர்ந்தாள். அவள் விளக்கை அருகில் வைத்துவிட்டு அந்தப் பாதையின் பக்கச்சுவரிலிருந்த தூசினை தட்டிவிட்ட போது அவளது பெயரையே அந்தக் கல்வெட்டில் பார்த்தாள். அதனைப் பார்த்ததும் அவள் கைகளில் தெரிந்த அவசரம் அவளையும் தொற்றிக் கொண்டு ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்தாள். படித்துக் கொண்டிருக்கும்போதே ரிதிகாவிற்கு எல்லாம் புரிந்துவிட்டது. வியப்பில் ஸ்தம்பித்து நின்றாள் ரிதிகா. ஏனென்றால் அந்தக் கல்வெட்டை செதுக்கியவள் ரிதிகாவே!
 

Joher

Well-Known Member
:love::love::love:

கதை வித்தியாசமா போகுது......
ரித்திகா செதுக்கியதா???
அப்போ எல்லோரும் இங்கே இருந்து போனவங்க தானா????
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
படிக்கப் படிக்க இந்த ஸ்டோரி ரொம்ப நல்லாயிருக்கு, யோகா டியர்
குழந்தைகள் இருவரும் சாப்பிடுவது
வெகு அழகு
ஆதிரை ராஜாவை நன்றாக வளர்த்திருக்கிறாள்
என்னது?
அந்த கல்வெட்டை செதுக்கியது ரிதிகாவா?
அப்போ இவங்க இருக்கும் குகைப்
பகுதி இந்திரபிரதேஷின் அருகில்
இருக்கிறதா?
And இப்போ ரிதிகா போன குகைக்
கோவில் ஏற்கனவே அமாவாசை
தோறும் சிவசக்தியம்மா போன கோவில்தானா?
அந்த கல்வெட்டில் ரித்திகா என்ன
எழுதி வைத்திருக்கிறாள்?
 

Saroja

Well-Known Member
அருமையா நகருது கதை
ஆச்சரியமாக இருக்கிறது
ரிதிகா வந்து இருப்பது
சக்தி அம்மா கும்பிடும் குகை
கோவிலா
குழந்தைகள் கூட்டணி அழகு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top