தூரம் போகாதே என் மழை மேகமே!! - 44

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
epi-44.jpgஅசுவாரசியமாகக் கதை கேட்பது போல் இருந்த போதும் ‘இவள் இதில் இப்படி வருத்திக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லையே. நேற்றே என்னிடம் அவள் காதலை சொல்லியிருந்தால் நான் தவறாக எண்ணவும் வாய்ப்பில்லையே’ என்று எண்ணினான் அர்ஜூன்.
அவன் மனநிலை அறியாமல் தொடர்ந்து , “ஆனால்.. ஆனால் எல்லாம் ஒரு நொடியில் உடைந்து போனதே!. ஊர் செல்லுமுன்னரே , என் மனதை உங்களிடம் சொல்லுமுன்னரே அது உடைந்து போனதே!” என்றாள் ஆதிரை. அவளது கண்ணீர் அவள் கன்னத்தை விட்டு இறங்கியிருந்தது.

அவளது கவலையின் காரணம் புரியாமல் அவளைத் தேற்றிவிடும் எண்ணத்தில் அவள் கண்ணீரை துடைக்க மேலேறிய அவனது கை ஒரு நொடி உயர்ந்து மீண்டது.

தொடர்ந்து “என்னால் முடியவில்லையே… இதற்கு மேலும் என்னால் தாங்க முடியவில்லையே” என்று கத்திய வண்ணம் கைகளில் முகம் புதைத்து தேம்ப ஆரம்பித்தாள். இதனை எதிர் பாராத அர்ஜூன் ஒரு நொடி திகைத்தான்.

அவன் திகைப்பிலிருந்து மீளுமுன்னரே, நிமிர்ந்த ஆதிரை அவனைக் கலங்கிய கண்ணீருடன் நோக்கி “ உங்களை விரும்பியது என் மனம் என்னைக் கேட்காமல் செய்த தவறு. அந்தத் தவற்றை நீங்க என் அண்ணியின் தம்பி என்று தெரிந்த பின்னும் தொடர்வது தெரிந்தே தண்ணீரில்லா கிணற்றில் குதிப்பதற்கு சமம். நான் என் ராஜாவைப் பற்றி சொன்ன பொழுதே என் அண்ணியின் தம்பி நீங்க என்பதை என்னிடம் நீங்க மறைத்திராவிட்டால் எனக்கு இவ்வளவு சங்கடங்கள் வந்திராது. நான் இந்த இரண்டு வருடம் பட்ட கஷ்டத்திற்குக் காரணமானவன் நீங்கதான். என்னை என்னவெல்லாம் பேசினீங்க. என் உடம்பு தினவெடுத்து பெற்ற பிள்ளையா என் ராஜா. அதன் பொருள் கூடப் புரியாத என்னிடம் என்னவெல்லாம் பேசினீங்க.அவனை உன் அக்கா மகன் என்று பொய்யாக சொல்லி உங்களின் தலையில் கட்டி பணம் பார்க்க எண்ணினேனா நான்?. நீங்க பேசியது உங்களுக்கு நினைவில்லாமல் இருக்கலாம், ஆனால் எனக்குத் தினம் தினம் நரகம் தரும் வார்த்தைகள் அவை. ஒரு நிம்டம் phone call –ல் எப்படி எல்லாம் பேசீனீங்க. அதனை எண்ணும் போதே உங்களை வெறுக்கத் தோன்றுகிறதே!. நீங்க தொட்ட இடமெல்லாம் நெருப்பாய் எரிகிறதே! உங்கள்முன் வலுவிழந்திருக்கும் என் இந்தப் பெண்மையை நிந்திக்கத் தோன்றுகிறதே!. “ என்று அவனது விழிகளிலிருந்து பார்வையை மாற்றாமல் அவளது கண்ணீரும் நிற்காமல் சொல்லி முடித்தாள் ஆதிரை.

“என்ன சொல்கிறாய் ஆதிரை! நானா? அப்படியா?” என்றான் குரலில் சிறு இறுக்கம் தோன்ற.

எல்லாம் சொல்லி முடித்த பின்பும் ஆதிரையின் கேவல் நின்றபாடில்லை. “ஆம்… நீங்கதான்… ரிதிகா அண்ணியின் தம்பி என்று நீங்க ஒருவர் மட்டும் தானே.” அவனது முகம் பார்க்கும் சக்தியற்று தலை குனிந்து பேசினாள்

“ஆம்… ஆனால் எனக்கு உன்னிடம் இரண்டு வருடத்திற்கு முன் பேசியது போலவே ஞாபகம் இல்லையே! நானாக உனக்கு phone செய்யவில்லை. அரவிந்த் மாமாவின் தங்கையென்று யாரும் எனக்கு phone செய்ததாக நினைவில்லை. அப்படி இருக்க ,இதை எப்படி நான் நம்புவது. நீதான் என்னைப் பார்த்ததிலிருந்து தவறாக புரிந்து கொண்டு எத்தனை முறையோ தவறாக எண்ணியிருக்கிறாயே! சொல்லியிருக்கிறாயே! ஏன் நேற்றும் அஸ்மிதா என்று சொன்னதும் அவள் என் காதலியாக இருக்கக் கூடுமென்று தவறாக எண்ணவில்லை.? அவள் என் அக்காவின் குழந்தையென்றதும்தானே இயல்பானாய். அதனால் நீ தேவையில்லாமல் என் மீது பழி போட பார்க்கிறாய் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நீ செய்த தவற்றை சரி செய்ய என்னைக் குற்றவாளியாக்குகிறாய். நான் அப்படி எந்தப் பெண்ணிடமும் இதுவரை பேசியதாகவே நினைவில்லை” என்று அவளருகில் வந்து நின்று கூறினான் அர்ஜூன்.

அவன் அருகிலிருப்பதை அறிந்த போது விரைப்புற்ற ஆதிரையின் தேகம் அவனைத் திரும்பி பார்க்காமலே, “எனக்கு அப்படி நான் பொய் சொல்ல எந்தவித அவசியமுமில்லை. நான் சொல்வதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். சேகர் அங்கிள்தான் உங்களிடம் என்னை phone பண்ணச் சொல்வதாக சொன்னார். நீங்களும் எனக்கு phone செய்தீர்கள். என்னில் நம்பிக்கையில்லையென்றால் அவரிடமே கேட்டுக் கொள்ளுங்க.” என்றாள் ஆதிரை.

‘இதற்கு மேல் உங்களிடம் பேசுவதற்கு எதுவுமில்லை’ என்பது போல் அதன் பின் அங்கு நிற்கும் சக்தியற்று அவனிலிருந்து விலகிவிடும் எண்ணத்தில் அங்கே கீழே இருந்த ஒரு தடித்த குச்சியினை எடுத்து கைதாங்கலாக பிடித்துக் கொண்டு அழுகையுடனே மெதுவாகக் குகை நோக்கி நடந்து சென்றாள் ஆதிரை.

பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் விலகிச் சென்றதில் “என்ன திமிர்?” என்று எண்ணிய போதும் அவளது வார்த்தைகளில் யோசனையிலிருந்த அர்ஜூன், அவள் போக்கில் விட்டுவிட எண்ணினான். ஊர் சென்றதும் இது குறிந்து ஐயம் திரிபர அறிந்திட துடித்தான். ‘இதுதான் ஆதிரையின் உண்மை மனநிலையா! இல்லை எதிலிருந்தோ தப்பிக்க எதையோ செய்ய முயல்கிறாளா. எதற்கும் அவளிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று சிறிது குழப்பத்துடனே அவளைப் பின் தொடர்ந்து நடந்தான் அர்ஜூன்.

அந்தக் குச்சியை ஊன்றிய வண்ணம் அவள் தத்தி நடந்து செல்வதை பார்த்த அர்ஜூனுக்கு அவளை மீண்டும் தூக்கிச் செல்ல தோன்றியது. இருந்தும் தொட்ட இடம் எரிகிறது என்பவளை நெருங்க அர்ஜுனுக்கு அவளைத் தோட தன் மானம் துளியும் இடம் கொடுக்கவில்லை. அதனால் தன் இருக் கைகளையும் தன் phant pocket –ல் விட்டுக் கொண்டு அவள் பின்னோடே நடந்து சென்றான். ‘அவளது காலிற்கு அதிக வலிதராமல் குச்சியினை ஊன்றிதானே செல்கிறாள். பரவாயில்லை நடக்கட்டும்’ என்று நினைத்தான்.

சிறிது தூரம் சென்றதும் கோபமாக ஆதிரையின் குரல் எதையோ பார்த்து ஒலித்துக் கொண்டிருந்தது. அவளது குரலில் நிமிர்ந்த அர்ஜூன் அவளையும் அவள் பார்த்து பேசிக் கொண்டிருந்த மழை மேகத்தையும் பார்த்தான்.

“எல்லாம் உன்னால்தான். என் அருகில் வா. உன் மீது கற்களையும் குச்சிகளையும் எறிந்து நீ இருக்குமிடம் தெரியாமல் அழித்துவிடுகிறேன்.” என்று அவள் அருகில் வந்து கொண்டிருந்த மழை மேகத்தைப் பார்த்து ஆதிரை கத்தினாள்.

அதனோடு நிற்காமல், கீழே குனிந்து அவள் கைகளுக்கு கிடைக்கும் மரத்துண்டுகள், கற்கள், குச்சிகள், இலைகளுடன் கூடிய மரக்கிளைகள் என்று எல்லாவற்றையும் தூக்கி அந்த மழை மேகத்தின் மீது எறிந்தாள். “ நான் பாட்டுக்கு இருந்தேன். இவன்.. இந்த அர்ஜூனா? என் திகேந்திரன். என் கனவில் எப்படி என் மீது பாசமாக இருப்பதாகக் காட்டினாய். நீ தான் மாயம் செய்வாயே! உனக்கே தெரிந்திருக்குமே! அவன் எப்படியெல்லாம் என்னைப் பேசினான், பேசுகிறான் என்று. களங்கம் இல்லாமல் இருந்த என் மனசைக் கெடுத்துவிட்டாயே! என் ராஜாவே உலகம் என்று இருந்த என் மனதில் தேவையில்லாத ஆசையை உண்டாக்கி அழித்தும்விட்டாயே!. உன்னை… என்ன செய்கிறேன் பார்” என்று அவள் பார்வை அவளருகில் எடுத்தெறிவதற்குத் தோதாக எதுவும் கிடைக்குமா என்று தேடி பரபரத்தது. கையில் கிடைக்கும் அனைத்தையும் அந்த மேகத்தின் மீது எறிந்து அதனைக் கலைத்துவிட துடிதுடித்தது ஆதிரையின் கைகளும் கண்களும்.

அவளது சைகையை பார்த்த அர்ஜூனுக்கு ஏனோ சிரிப்பே வந்தது. அவனிருந்த இடத்திலே நின்று கொண்டு குழந்தையைப் போன்ற அவளது சைகை ஆதிரையினுள் தெரிந்த குழந்தைத்தனமான அஸ்மிதாவையே அவனுக்கு ஒரு நொடி நினைவுக்குக் கொண்டு வந்தது. அதனை ஒரு நிமிடம் அமைதியாகப் பார்த்து புன்னகித்துக் கொண்டிருந்த அர்ஜூன், “என்ன பேசியும் . வெறுப்பது போல தோற்றம் ஏற்பட்ட போதும், இவள் ஏன் என் கண்களுக்கு எப்போதும் அழகாகத் தெரிய வேண்டும்” என்று வாய்விட்டே சொல்லிக் கொண்டு புன்னகித்த வண்ணம் அவளை நோக்கி நடந்தான்.

ஆதிரை தூக்கி எறிந்த குச்சிகளும் இலைதழைகளும் அந்த மழை மேகத்தை இந்த நேரத்திற்குக் கலைந்திருக்க வேண்டும். ஆனால் அவள் எறிந்த குச்சிகளையெல்லாம் அந்த மேகம் அதனை ஊடுருவி அந்தப் பக்கம் விழச் செய்து மீண்டும் ஒன்று சேர்ந்து இன்னும் பெரிய மேகங்களாகவும் மேலும் கரு நிறமுடையதாகவும் மாறிக் கொண்டே வந்தது. இதனைப் பார்த்த போது ஆதிரைக்குக் கொஞ்சம் பயம் வந்தது. ரிதிகா சொன்ன எச்சரிக்கை இதுவாக இருக்கக் கூடுமோ என்று ஆதிரை அர்ஜூன் இருவருமே நினைத்தனர்.

விரைந்து ஆதிரையின் அருகில் வந்த அர்ஜூன், அவசரமாக அவளை கைகளில் தூக்கிக் கொண்டு “அதனிடம் என்ன விளையாட்டு ஆதிரை. அக்கா ஏற்கனவே எச்சரிக்கையாக இருக்கச் சொன்னார்கள் தானே” என்று அவளிடம் கூறிய வண்ணம் குகை நோக்கி அவளை தூக்கிக் கொண்டே சென்றுவிட ஓடினான். பயத்திலிருந்த ஆதிரையும் அவனது வார்த்தையில், “ஏதோ கோபத்தில்…” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே , பெரிதாகிவிட்டிருந்த அந்த மழை மேகம் வழக்கத்திற்கு மாறாகப் பெரிய இடியுடன் அவர்களை நெருங்கி வந்தது. அந்த இடி சத்தத்தில் ஒரு நொடி ஆதிரையின் உடல் குலுங்கியது. இருக்கமாக அர்ஜூனின் கழுத்தினை அணைத்துக் கொண்டாள் ஆதிரை. அதில் அவளை ஒரு நொடி பார்த்த போதும் அர்ஜூன் ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கவில்லை. எவ்வளவு வேகமாக அர்ஜூன் சென்ற போதும் அவர்களை அந்த மழை மேகம் தொட்டுவிட்டது. இன்னும் சில இடிகளை முழங்கிவிட்டு அவர்கள் மேல் மழை தொடர்ந்து பொழிய ஆரம்பித்தது.

ஏற்கனவே அந்த மழை மேகத்தின் மாயத்திலிருந்து மீண்டுவிட்ட போதும் அர்ஜூனால் இந்த முறை அந்த மழை மேகத்திடமிருந்து மீள முடியவில்லை. இந்த முறை இருவருமே மயங்கி சுயநினைவை இழந்தனர்.
 

banumathi jayaraman

Well-Known Member
அய்யய்யோ
என்னப்பா அர்ஜுன் ஆதிரை
இரண்டு பேரையும் அந்த மழை
மேகத்திடம் மாட்டி விட்டுட்டீங்க,
Yogi டியர்
இப்போ இவங்க இரண்டு பேரும்
இப்படி மயங்கிட்டாங்களே
இவங்க எப்படி இந்திரபிரதேஷ்
போவாங்க?

அப்புறம் உங்கள் பெயரை தமிழில்
எப்படி எழுதுவது, Yogiwave டியர்?
(ரொம்பவே சீக்கிரமா 44th அப்டேட்ல
கேட்டுட்டேன்னு பாசமா நினைத்து அன்பால்லாம் திட்டக் கூடாது
மீ பாவம் ஓகே?)

அப்புறம் அன்னிக்கு அவன் கண்டபடி பேசியதை அர்ஜுன் எப்படி மறந்தான்?
ஒருவேளை அர்ஜுன் பேசலையோ?
இதிலும் ஒரு மாயாஜாலமாப்பா?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அப்போ போன்ல பேசியது யார்???
இப்போ 2 பேரும் மயங்கிட்டாங்களே.......
யார் வந்து காப்பாத்த போறா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top