துளி மையல் கொண்டேன்-15.2

NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
#1
ஹாய் பிரண்ட்ஸ்.கருத்துக்கள் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.இன்னைக்கு நைட் ரிப்ளை போடறேன்.இதோ போன அத்தியாயத்தின் தொடர்ச்சி.

Thuli Maiyal Kondaen 15 2
 
Last edited:

Devi29

Well-Known Member
#6
Mayuku appo munnadiye arvindai theriyuma intha mayukku mattum vitha vithamaaka sikkal varuthu . Intha vinothan enna seiya poraan interesting epi sis
 
eanandhi

Well-Known Member
#7
மயூவின் முகம் மாற,”மயூ கோவிச்சிக்காதே.சண்டை நடந்து ரெண்டு நாளாச்சு.நான் புரோகிராமுக்கு நாலு நாள் முன்னாடியே பேர் கொடுத்துட்டேன்.நிஜமா உன்னை பார்க்க தான்டி வந்தேன்”அரவிந்த் முன்னாடியே சமாதானம் செய்ய,“ப்ச்ச்.அதை விடு.நான் எப்படி அத்தைகிட்ட பேச முடியும்.பேசறது தெரிஞ்சா,அப்பா என் உறவே வேணாம்னு முடிச்சுக்குவார்”“அது அப்போ மயூ. இப்போ தான் பெரியம்மா உங்க குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கமாகிட்டாங்களே.உன்னை பெரியம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் மயூ.நீ சொன்னா கேட்பாங்க”“நம்பர் கொடு.பேசறேன்”எனவும்,“வெயிட்.வெயிட்...மாறன் அம்மா கூட பேசினா,உன்னோட அப்பா எதுக்கு கோபப்படுவாங்க?”புரியாமல் கேட்டான் அரவிந்த்.எப்படி சொல்வதென்ற சங்கடத்தோடு காயத்ரியை முறைக்க,காயத்ரி தெளிவாகவே விளக்கினாள்.“பெரியம்மா இவளோட சொந்த அத்தை தான்.தாத்தா ஒண்ணு.பாட்டி மூணு..இல்ல நாலு”நக்கலாக சொல்ல,“என்னம்மா சொல்ற”கொஞ்சம் டென்ஷனோடு கேட்க,“பெரியம்மா,மயூ தாத்தாவோட நாலாவது சம்சாரத்து பொண்ணுன்னு நினைக்கறேன்.சரியா எத்தனையாவது வைப்-ன்னு தெரியல.அதுலயும் நம்ம மயூ,பெரியம்மா சாயல்.அதான் மாமாவுக்கு ரொம்ப டென்ஷன் கொடுக்கற விஷயம்”எனவும்,மயூவின் கையிலிருந்த போனை பிடுங்கி,அதிலிருந்த தங்களது திருமண வீடியோக்களை பார்த்தவன்,அதிலிருந்த மாறனின் அம்மா கவிதாவையும் மயூவையும் ஒப்பிட,இருவரும் தோற்றத்தில் சிறிதே வேறுபட்டிருந்தனர்.“இவங்க உனக்கு அத்தைன்னு ஏன் எனக்கு முன்னாடியே சொல்லலை”காயத்ரி முன்பே சத்தமிட்டான்.மயூ காயத்ரியை முறைத்துவிட்டு,”நீங்களோ,நானோ இன்னும் நம்ம உறவுகளை பற்றி எதுவும் பேசிக்கலை”-அரவிந்தும் எதுவும் சொல்லவில்லை என்பதை சரியாய் நினைவுபடுத்த,கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டான்.எதற்காக இந்த கோபம்?-அவனுக்கே தெரியவில்லை என்பதே நிஜம்.“சரிம்மா காயத்ரி.நானும் இவங்க வீட்டுல பேசறேன்.நீ போய் ரெஸ்ட் எடு...... வல்லி நீ காயத்ரிக்கு பிடிச்ச டிஷ் செய்ய சொல்லி உள்ள சொல்லிடு.நான் என்னோட வேலைகளை கொஞ்சம் கவனிக்கறேன்”என்றவன் கீழேயிருந்த ஒரு அறைக்குள் நுழைந்துகொண்டான்.அவன் உள்ளே போய்விட்டதை உறுதிப்படுத்திக்கொண்ட காயத்ரி,”மயூ உன்னோட வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சிருக்குன்னு நம்பறேன்.தேவையில்லாததை எல்லாம் மனசில இருந்து தூக்கி எறிஞ்சுடு.நீயும் மாறிட்டு வர்றன்னு எனக்கு புரியுது. அதனால தான் இதை சொல்றேன்.உன்கிட்ட எதையும் மறைச்சு எனக்கு பழக்கமில்ல. உன் அண்ணனும் எதையும் சொல்லக் கூடாதுன்னு மிரட்டி தான் அனுப்பி வைச்சார். ஆனால் உனக்கும் உன் வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிருக்கணும்னு தான்,வந்தவுடனே எல்லாத்தையும் சொல்லிட்டேன். இன்னொரு விஷயத்தையும் சொல்றேன். வினோதன் ஜெயில்ல இருக்கான். அதுவும் திருட்டு கேஸ்ல!!மாறன் அண்ணா தான் அவன் மேல பாவம் பார்த்து,திருட்டு கேஸ் மட்டும் போட்டு உள்ள தள்ளியிருக்காங்க. வேற யார் மூலமாவோ அவன் ஜெயில்ல இருக்கது உன் காதுக்கு வந்து,உன்னால தான் ஜெயிலுக்கு போயிருக்கான்-னு நினைச்சு,நீ உன்னோட வாழ்க்கையை சிக்கலாக்கிக்க கூடாதுன்னு தான் நானே இதை சொல்லிட்டேன்.அவன் செஞ்சதுக்கு தான் அவன் அனுபவிக்கறான்.உன்னால இல்ல. அதை நீ புரிஞ்சுக்கணும். தேவையில்லாம அதையும் இதையும் போட்டு குழப்பிக்கக் கூடாது “ தக்க நேரத்தில் மயூவின் மனதில் இருந்த குழப்பங்களுக்கு, காயத்ரி தன்னை அறியாமலையே விடை கொடுத்துக் கொண்டிருக்க,அவள் பேச்சுக்கு “ம்ம்ம்” கொட்டிக்கொண்டிருந்தவள் மனதில் என்ன இருக்கிறதென்று காயத்ரிக்கு தெரியவேயில்லை.வினோதனின் பேச்சு வந்தால் மட்டும்,மயூவின் உணர்வுகளை யாராலுமே படிக்க முடியாது.சரியாய் இதே நேரத்தில்,காவல் நிலையத்தில் வினோதனை பார்க்க,அவன் நண்பன் வந்திருந்தான்.சில நிமிட காத்திருப்பிற்கு பிறகு வினோதனை பார்த்தவன்,”இது தான் அவ கல்யாண போட்டோ. உன்னை ஏமாத்திட்டா போயிட்டா அந்த நாய் மச்சி...” இன்னும் கீழ்த்தரமாய் பேச,“அப்படி பேசாதடா. என்ன இருந்தாலும் அவ நா காதலிச்ச பொண்ணு. உண்மையான காதல்-ன்னா நாம காதலிச்சவங்க சந்தோஷமா இருக்கணும்னு தான் நினைக்கணும். நானும் அப்படியே தான் நினைக்கறேன். எங்க இருந்தாலும்,யாரோட வாழ்ந்தாலும் அவ சந்தோஷமா இருக்கணும்”கலங்கிய கண்களோடு சொல்ல,அவன் நண்பன் உருகிப் போய்விட்டான்.“நீ கிரேட் மச்சி”என்றவன்,தன் நண்பர்களிடமும் அதையே சொல்ல,அவர்களும் நிறைவேறாமல் போன,தன் நண்பனின் காதலை எண்ணி துவேசமாய் மயூராவை திட்டிக்கொண்டிருந்தார்கள்...அவளின் பெற்றவர்களின்..உறவினர்களின் காது படவே!!!அந்த இரவு நேரத்தில்,வினோதன் தான் மறைத்து வைத்திருந்த மயூராவின் திருமண புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் வெகு நேரமாய்!!கொள்ளை அழகாயிருந்தாள் மயூரா!!‘எனக்கே எனக்குன்னு கிடைக்க வேண்டிய அழகு.. இப்போ எவனுக்கோ!’பெருமூச்சுவிட்டபடி,அரவிந்தனை பார்க்க...‘இவனை எங்கேயோ பார்த்திருக்கேனே’வெகு நேரம் மூளையை தட்டி யோசித்தான்.‘அட இவன் தான,மயூக்கு நான் ஹீரோவா தெரிய காரணமானவன்’சரியாய் ஊகித்தவன் மீண்டும் போட்டோவை பார்த்து உறுதிப்படுத்திவிட்டு,‘அன்னைக்கு அவளுக்கு நீ தான் வில்லனா தெரிஞ்சடா.. வில்லன் நீயே என் மயூவை கல்யாணம் பண்ணிட்டியா!!’திகைப்போடு சிந்தனையை ஓட்டியவன் அப்படியே உறங்கிப்போனான்.வினோதன் மாறியிருந்தான்!! ஆனால் அந்த மாற்றம் வேறு விதமாய் மயூராவையும் அரவிந்தனையும் வருத்த காத்திருந்தது!!
superb episode sis
 
Advertisement

New Episodes