தீராத் தீஞ்சுவையே...29

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____29

பள்ளி முடிந்து கிளம்பிய நேத்ரா தொடர்ந்து அடித்த மொபைலில் புதிய எண்ணாக இருக்கவும் முதலில் கட் செய்துவிட்டு நடந்தாள்...

தொடர்ந்து வந்த அடுத்தடுத்த அழைப்புகளை அவ்வாறு புறக்கணித்து நகர முடியவில்லை...

யாராவது தெரிந்தவர்களோ .அல்லது மணவர்களின் பெற்றோர் யாராவது அழைக்கிறார்களா... என்ற தயக்கத்தோடு மொபைலைக் காதில் வைத்தவளுக்கோ ...

பலத்த அதிர்ச்சி காத்திருந்தது...

அவள் ஃபோனை எடுத்து பேச முடியாமல் உரைந்தேப் போனால்... ஏதோ அரசு பணிக்கான நேர்காணல் தேர்வு போல அத்தனை நடுக்கமும் மிரட்சியும் பாய பதட்டத்தில் வேர்த்து கொட்டியது நேத்ராவிற்கு...

அப்படி யாரிடமிருந்து அழைப்பு வந்தது….வேற யாரு.... எல்லாம் நம்மளோட.......
தி கிரேட் மித்ரன்'ஸ் மம்மி.... நேத்ரா'ஸ் மாமி.. அவர் ஹானரபுல் லேடி... மிஸ்ஸஸ்... வசந்தி கணேசனே தான்….

அந்த அம்மா ஏன் நேத்ராக்கு ஃபோன் பன்னாங்க...னு உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது.
அத நீங்களே கேளுங்க....
ஹலோ....
ஹலோ.... அம்முவா....
ஹ..ஹா.... நீங்.... நீங்....நீங்க யாரு...நான் மித்ரனோட அம்மா...
ஆ....ஹா... சொல்லுங்க....
உன் பேர் அம்மு வா....
இ...இ.. இல்ல... அது.. என் எ.. எ... என் பேரு நேத்ரா....
ஓஓஓ.... சரி... உனக்கு எத்தனை நாளா மித்ரனைத் தெரியும்....
ரெண்டு... ரெண்டரை வருஷமாத் தெரியும்...
எப்படி....
அது... அ... அது... நீங்க இந்த கேள்விய அவர்கிட்ட தான் கேக்கனும்...
நீ யாரு... உங்க அப்பா அம்மா பேர் என்ன... எங்க இருக்கீங்க...
நான் ... ஒரு ஸ்கூல் ல டீச்சரா இருக்கேன்... எங்க வீடு திருவொற்றியூர்... ல இருக்கு...
அப்பா.... அம்மா... கூட பிறந்தவங்க....
அப்பா பேரு தட்சிணாமூர்த்தி சொந்தமா மளிகை வியாபாரம்...
அம்மா லலிதா... ஹவுஸ் வைஃப்... சில சமயம் டெய்லர்.... தம்பி இருக்கான்... அன்பு... அது... அன்புச் செழியன்... பி.இ மூனாவது வருஷம் படிக்கிறான்...
நீயும் தம்பியும் மட்டும் தானா... ☹
ஆமா.
நீ என்ன படிச்சிருக்க..
நான் எம்.ஏ .பி.எட்...
ம்ம்ம்... சொந்த வீடா...
ஆமா...
உனக்கு சொந்தத்துல ஏதாவது வரண் பார்த்து பேசி வைச்சிருக்காங்கலா...
இல்ல... அப்படி லா ஒன்னும் இல்ல...
உனக்கு மொரப் பசங்க யாராவது...☹
இருக்காங்க..... ஆனா சொந்தத்துல கல்யாணம் பன்ற ஐடியா அப்பாக்கு இல்ல..
நல்லது...
ம்ம்ம்..
உன் வயசு என்ன...
23
பிறந்த தேதி இராசி... நட்சத்திரம்...
21.06... **** இராசி மகரம்... நட்சத்திரம் உத்ராடம்... பிறந்த தேதி வியாழன்...
ம்ம்ம்... உங்க வீட்டில உனக்கு எப்போ கல்யாணம் பன்றதா இருக்காங்க..
தெரியாது...
உனக்கு மித்ரன பத்தி எல்லாம் தெரியுமா...
கொஞ்சம் ....கொஞ்சம்....
எதையுமே முழுசா தெரிஞ்சிக்காம..... எப்படி லவ் பன்ன..
எல்லாம் தெரிஞ்சிகிட்டு செட்டில் ஆகிட்டானா சேஃபானு பார்த்துட்டு வந்தா அதுக்கு பேரு லவ் இல்லையே...
ம்ம்ம்... நல்லாதா பேசுர...
தேங்க்ஸ்...
அது இருக்கட்டும்... என் பையன் டிப்ளமோ முடிச்சிருக்கான்... ஆர்வ கோளாறு ல திடீர்னு பி.இ போட்டான்.... அது ஏன்னு இப்போ தானே........ தெரியிது...
எனக்கு ஒரு பொண்ணு... ஒரு பையன்... பெரியவ பேரு நித்யா தேவி... இவன் சின்னவன்...
அவளுக்கு கல்யாணம் முடிஞ்சி இரண்டு பசங்க இருக்காங்க.
என் பையன் ரொம்ப அமைதி... நல்லவன்... எந்த கேட்ட பழக்க வழக்கமும் இதுவரைக்கும் இல்லனு நினைக்கிறேன்.
இல்ல தானே....
ஆ...ஆ...ஆமா... ஆன்டி...
ம்ம்ம்... இந்த வார்த்தைய சொல்லி கூப்டவே இவ்ளோ நேரமா...
அது... சாரி.. ஆன்டி...
அழகா அத்தனு கூப்புடு... அது என்ன ஆன்டி...
சரி ஆன்டி.. . ஸ்ஸ்ஸ்..... சாரி ஆன்டி... ஐயோ... சாரி அத்த...
ம்ம்ம்...
என் புள்ளைக்கு அடமும் அதிகம் தான்...
ம்ம்ம்... தெரியும் அத்த...
சரி உன்ன வந்து எப்போ பொண்ணு கேக்கலாம்....
என்னது . ....... பொண்ணு கேக்க வரீங்களா...
ஏன் .... என்ன ஆச்சு...
அது... இல்ல வந்து எனக்கு கொஞ்சம் டைம் வேணும்...
எத்தனை நாளு....
எத்தனை நாளா....
அப்றம்....
இல்ல நான் படிப்பு முடிக்க மூனு வருஷம் ஆகும்...
மூனு வருஷமா.. அவ்வளவு நாள் லா வெயிட் பன்ன முடியாதுமா... சட்டு புட்டுனு வீட்ல விஷயத்த பேசிட்டு எனக்கு சீக்கிரமே நல்ல முடிவா சொல்லு. என் பையன் விருப்பம் நீதானு ஆன பின்னாடி காலதாமதம் பன்றதுல என்ன அர்த்தம் நீங்க நல்லா இருந்தா அதுவே எனக்கு சந்தோஷம்….
ம்ம்ம்... சரிங்க அத்த..
அப்றம் எனக்கு உன் ஜாதகம் வேணுமே...
என்னது ஜாதகமா... ஏன்...
என்னமா நீ என் பையன் உன்ன பத்தி ஆஹா... ஓஹோ... னு சொன்னான்... நீ என்னடான்னா....இவ்ளோ... மந்தமா.. இருக்க... உன் ஜாதகம் எனக்கு எதுக்கு....ரெண்டு பேருக்கும் பொருத்தம் பாக்க தா....
ஓ... சரி நான் .....நான் எப்படியாவது அவருக்கு அனுப்புறேன்....
ம்ம்ம்... சரி கேக்குறேனு தப்பா எடுத்துக்காத......ஆமா...நீங்க என்ன ஜாதி...
********பரவாயில்லை...நாங்க ******** ஜாதி.. எல்லாம் ஒரே பிரிவுதான்.
சரி நான் பேசினது எல்லாம் புரிஞ்சிதுல...சீக்கிரமே வீட்ல பேசி நல்ல முடிவா சொல்லு...
உன் ஜாதகம் ஒரு காப்பி ஆ... அவனுக்கு அனுப்பி வை... வேற ஏதாவது தகவல் இருந்தா நானே உன்ன கூப்புடுறேன்...
இல்ல ஏதாவது கேக்கனும்... சொல்லனுமா னா.. நீ இந்த நம்பருக்கு கூப்பிட்டு... பேசலாம்...சரியா.....
ம்ம்ம்.....சரிங்க அத்த...
ம்ம்ம்..... சரி நான் வைக்கட்டுமா...
ம்ம்ம்...

ஆனாலும் மாமியார் ஆனாலே குரல்ல... கூட ஒரு கெத்து காட்டராங்கப்பா. .என்று தோன்றியது அவளுக்கு...
நேத்ராவின் உலகமே தட்டாமலை சுற்றியது...
பேசி முடித்தவள் நடந்தது கனவா .... பிரமையா இல்லை வேறு ஏதுமா என அதிர்ந்து போனாள்..
நாக்கு உலர்ந்து மேல் அன்னத்தோடு ஒட்டிக்கொண்டு வர மறுத்தது.
உள்ளங்கைகளுக்குள் வியர்வை பிசுபிசுத்தது...
தாகமோ.... நாவை இழுத்துப் பிடித்து வரட்டு இருமலைத் திணித்தது...
தன் கையைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்... ஆமாம் வலித்தது... நிகழ்வதெல்லாம் உண்மை தான்..
இவன் என்னவோ நம்மகிட்ட கண்டம்... பொருத்தம் சரியில்லை....... அது இதுனு சொன்னான் .
இவங்க இப்போ ஃபோன் பன்னிட்டு... ஜாதகம் வேணும் ... போண்ணு பாக்க வரனும்னு சொல்றாங்க ...
நேத்ராவிற்கு குளிர் ஜூரமே வந்து போனது..
அதற்குள் அவளையும் அறியாமல் அவளுடைய வீடும் வந்து விட்டது...
பொம்மையாக நகர்ந்தவள் வீட்டிற்குள் நுழைந்த உடன் கதவடைத்துக் கொண்டு... பெருமூச்சுகளை விட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்...
தண்ணீரை மடமட வென காலிசெய்தாள்... வேகமாக மொபைலை எடுத்து மித்ரனுக்கு அழைத்துவிட்டு காத்திருந்தாள்..
அவசரம் புரியாத மாங்கா மடையா..... ஃபோனை எடுக்காம...... என்னடா பன்ற.....ரிங் அடித்து அடித்து ஓய்ந்தது....
மீண்டும் மீண்டும் முயற்சி செய்தவள்... அவன் ஃபோனை எடுத்தவுடன் அர்ச்சனையை ஆரம்பித்தாள்...
வாங்கிக் கட்டிக் கொண்டு திடமாக என்ன என்று கேட்டவன்..
அவள் அடுக்கடுக்காக அடுக்கிய தகவலைக் கேட்டு அலறினான் . பதறினான்... ஆனந்தக் கூத்தாடினான்..

அடுத்து என்ன... கல்யாண சாப்பாடுதானே..
ரொம்ப அவசரப் படாதீங்க...அதுக்கு இன்னும் ஆறுறுறுறுறுறு மாசமாவது ஆகும்..
காதலுக்கே இவ்வளவு டிவிஸ்ட் இருந்துதே.... கல்யாணம் சிம்பிள் ஆ முடிஞ்சிடுமா ... என்ன...
அடிப்பாவி....அது என்னமோ சரிதான்…
உங்களுக்கு மட்டும் ஒரு சீகரெட் சொல்லட்டுமா....

இனி பதட்டமும் பதைபதைப்பும் குறைத்து... கல்யாண கலாட்டா ஆரம்பிக்கப் போகிறது... தயாராக இருங்கள்.. .

மாமியார் திருமணம் வரை பேசியதே நேத்ராவிற்கு யானை பலம் தந்தது.... தினமும் மித்ரனிடம் பேசுகிறாளோ இல்லையோ... தன் மாமியாரிடம் மணிக்கணக்காக பேசினாள்...

மித்ரனின் விருப்பம் ..வெறுப்பு...பிடித்தம்..சிறிய வயது... குறும்புகள்... அவனுக்கு பிடிக்காத காய்கறி முதல் பிடித்த புதுமாடல் பைக் வரை அனைத்தும் கேட்டு அறிந்தாள்...
அவனுக்கு பிடித்தமான சமையல் வகைகள் இனிப்பு வகைகளை அதன் பக்குவத்தோடு மாமியாரிடம் கேட்டு அறிந்துகொணடு..விடுமுறை நாட்களில் சமையலறையை சோதனைக்கூடமாக மாற்றினாள்..
வீட்டு உறுப்பினர்களை ஸ்பெசிமெனாக பயன்படுத்திக் கொண்டாள்...சில வகைகள் சிறப்பாகவே வந்தன...பல செய்முறை ஐட்டங்கள் படு சொதப்பல் என்பதையும் இங்கே குறிப்பிடத்தக்கது....
இவர்களுடைய காதல் வலுப்பெற்று திருமண ஒப்புதலை மாமியாரின் வாயால் கேட்டு தன் தோழி இன்று ஆனந்தத்தில் மிதப்பது திலகாவிற்கு மனநிறைவாக இருந்தது...
அப்போதும் அவளுக்கு ஆயிரமாயிரம் அறிவுரைகளால் வழி நடத்துவதை அவள் கைவிடவில்லை அவளுடைய சந்தோஷம் திலகாவிற்கும் கொண்டாட்டத்தைக் கொடுத்தது..
அன்பு மட்டும் இடையே அவன் பக்கத்தில் இருந்து போதுமான இடைஞ்சல்கள் அனைத்தும் தந்தான்...

அடிக்கடி நேத்ராவிற்கு தெரியாமல் மொபைலை எடுத்து பரிசோதனைகள் செய்து கொண்டிருந்தான்... கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருந்தான்...
இதற்கிடையில் அன்புவிடம் மாட்டாமல் தப்பிக்க இருக்கவே இருக்கிறது நம்முடைய ப்ளே ஸ்டோர் ஆண்டவர்... அதன் புன்னியத்தில் ஒரு ஆப் லாக் செயலி மூலம் முக்கிய புகைப்படங்கள் யாவையும் ஹைட் செய்தாள்.

மெமரி கார்டில் எதையும் இல்லாமல் அழித்து அவனுக்கு தடயங்கள் கிடைக்காமல் பார்த்துக் கொண்டாள்.
அன்புவின் இத்தனை அடுக்கு பாதுகாப்புகளையும் தாண்டி நேத்ராவிற்கு சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் யார் தான் எனன செய்ய முடியும்..
லலிதாவிற்கும் மூர்த்திக்கும் நேத்ராவின் மீது அளவு கடந்த நம்பிக்கை இருந்தாலும் அன்புவின் வார்த்தைகளை நிராகரிக்க முடியவில்லை .
பெற்றவர்கள் இருவரும் ஓரளவிற்கு நேத்ராவிடம் தெரிந்த மாற்றங்களைக் கண்டு கொண்டு அவளை கணித்திருந்தனர்...
அதற்கு ஏற்றாற் போல லலிதாவிற்கு அவளுடைய தாய்வீட்டு பூர்வீக சொத்து ஒன்று விற்று தனியே பங்குப் பணம் வந்தது...
இப்போது பெற்றோர்கள் இருவருக்கும் கல்யாணம் செய்வதா வீட்டை இடித்து ஆடம்பரமாக மாடியோடு கட்டுவதா என்ற பேச்சுவார்த்தை தொடங்கியது.
மூர்த்தி ஒரு தந்தையாக மகளைக் கருத்தில் கொண்டு திருமணம் செய்யவே தனக்கு விரும்பம் எனத் தெரிவித்தார்
அன்புவிற்கும் அக்கவின் திருமணமே சரியெனப் பட்டது..
லலிதா வும் சரியென சொல்ல வேண்டியதாக இருந்தது..
லலிதாவின் சொந்த ஊரில் நிறைய வரண்களை சகோதரிகள் பரிந்துரைக்க லலிதா முதலில் மகனிடம் இது குறித்து பேசினார்..

நல்ல இடம் ஒரே பையன்.. அரசாங்க உத்யோகம். சொந்த வீடு. இதன் அடிப்படையில் மாப்பிள்ளை தேடி அதில் சில வரண்களை தேர்வு செய்து வைத்துவிட்டு மகளிடம் காட்டி விருப்பம் கேட்க காத்திருந்தார் .. லலிதா.
அக்காகிட்ட என்ன கேட்டுகிட்டு.... உங்களுக்கு பிடிச்சா நல்ல இடமானு செக் பன்னிட்டு அவகிட்ட டேட் பிக்ஸ் பன்னிட்டு இன்ஃபார்ம் பன்னுங்க என பெரியமனிதத் தனமாகவும் நல்ல வில்லனாகவும் திட்டம் தீட்டி அறிவுரை வழங்கினான்..அன்பு

லலிதாற்கும் அதுவே சரியாகப் பட்டது. நல்ல இடம்...வேலை... சொந்த வீடு தன் மகள் வசதியாகவும் நல்லபடியாகவும் வாழ வேண்டும் என அவளுடைய தாயுள்ளம் மகனுடைய வார்த்தைகளை அப்படியே கேட்டது...

ஆனால் இது குறித்து மூர்த்தியிடம் பேசிய போது அவர் நேத்ராவின் விருப்பம் இன்றி எதையும் செயல்படுத்த அனுமதிக்கவில்லை....
மகளை தனியை அழைத்து பேச்சு கொடுத்து அவளுடைய விருப்பத்தை அறிய நினைத்தார்...
அதே போல தனியே அழைத்து வந்திருக்கும் பணம் சம்பந்தமான விவரங்களை கூறி உனக்கு திருமணம் செய்யலாம் என நினைக்கிறேன் உன் கருத்து என்ன..???. உன் மனதில் யாராவது இருக்கிறார்களா ..???இல்லை நாங்களே உனக்கேற்ற வரணாக பார்கட்டுமா... என தயங்கி தயங்கி ஒரு வழியாய் கேட்டுவிட்டு அவளுடைய முக பாவங்களை அவருமைய ஞானக் கண்களால் ஸ்கேன் செய்தார்....

அவளுக்கு பயம் வந்தது இவர் தெரிந்து கொண்டு போட்டுவாங்க பார்க்கிறாரா. . இல்லை உண்மையிலேயே நம் காதலை சொன்னால் ஏற்றுக் கொள்வாரா...

ஏகப்பட்ட பயத்திற்கு பின்னால் அவள் தனக்கு இப்போது திருமணமே வேண்டாம் என்றாள்..

மூர்த்தியின் அனுபவ அறிவுக்கு அவளுடைய மனப்போராட்டம் புரிந்தது...ஆனாலும் வேறு வழியின்றி அவளுடைய வாயினாலேயே உண்மையை வரவைக்க நினைத்தார் ..

இறுதிவரையிலும் நேத்ரா வாயைத்திறந்து எனக்கு ஒருவரை பிடித்திருக்கிறது எனக்கு அவரைத் தான் திருமணம் செய்து கொள்ள விருப்பம் என ஒரு வார்த்தையையும் சொல்லிய வழியில்லை...

மூர்த்தி சிறிது நேர யோசனைக்கு பின் இதை லலிதா அணுகினால் சரியாக இருக்கும் எனத் தீர்மாணித்தார். லலிதாவும் மகளின் சந்தோஷத்தை முன்னிருத்தி அவளுடைய ஆசைகளை புதைத்துக் கொண்டு கணவருக்காக மகளிடம் மனமிறங்கிவிட்டார்... மெல்ல பேச்சு கொடுத்து அவளுடைய விருப்பத்தை அறிய முயற்சி செய்தார்...

நேத்ராவை கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம் என இருவரும் அமைதி காக்க ....எங்கே உண்மையை சொன்னால் நம் காதலை நிராகரித்து விடுவார்களோ என நேத்ரா உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
மித்ரனோ தன் அம்மா தனக்காக நேத்ராவிடம் பேசியதையும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததையும் நண்பர்களோடு கோலாகலமாக பார்ட்டி வைத்துக் கொண்டாடினான்.
தன்னுடையக் காதல் கைக்கெட்டப் போவதை நினைத்து அவன் மிதந்து கொண்டிருந்தான் .

ஆனால் நேத்ரா திடீரென ஓர்நாள் கால் செய்து வீட்டில் திருமணம் குறித்து பேசியதைக் கூறவும் ...மித்ரனின் சத்தோஷம் பன் மடங்காகப் பொங்கி வழிந்தது..
அவனுடைய மனநிலைக்கு நேர்மாறாக நேத்ரா கலக்கமாக தன் மனதை எடுத்துக் கூறவும் .... மித்ரனுக்கு அவளுடைய பயம் நியாயமாகவேப் பட்டது...
விடு அம்மு அப்படி நம்ம லவ் ஏ ஏத்துக்கலைனா ரன்னிங் மேரேஜ் தான்... நான் கூப்டா நீ வரமாட்டியா... என்ன .... ???
உறுதியாக கேட்டான்...
மாட்டேன்....
நேத்ராவும் உறுதியாக சொன்னாள்....
மிதரன் ஒரு கணம் அதிர்ந்து போனான்...
என்னடி இப்படி பட்டுனு முடியாதுனு சொல்ற...
ஆமா... மித்து . .வர மாட்டேன்...
என்ன வீட்ல வசதியா நல்ல இடமா பார்த்ததும் இப்போ என்ன புடிக்கலையா ..
தப்புத்தப்பா பேசாதீங்க. மித்ரன்.. என்னையும் உங்கள மாதிரினு நினைச்சீங்களா...
வேற எப்படி டி பேச சொல்ற....
நான் ஜாதகத்தில் தோஷம் இருக்குனு சொன்னப்போ ஒரு நாள் வாழ்ந்து செத்தாலும் உங்க பொண்டாட்டியா இருந்து செத்துப் போறேனு அழுத... இப்போ மாத்தி பேசுர....
இப்பையும் அதையேத் தான் சொல்றேன்... ஒரு நாள் வாழ்ந்து செத்தாலும் உங்க பொண்டாட்டியாதா சாகப் போறேன்..

அப்போ நான் கூப்டா வர மாட்டேனு சொல்றியே ....ஏன்
ஆமா .. வர மாட்டேன்.
அம்மு காலைலயே என்ன கடுப்பேத்தாத ஒழுங்கா புரியர மாதிரி பேசு.
இங்க பாருங்க... ஏன் தேவை இல்லாக கோவமா பேசுறீங்க. நான் சொல்றது பொறுமையா கேட்டா தானேப் புரியும்... அவசரப்பட்டு வார்த்தையக் கொட்டாதீங்க..
சொல்லு...
என்ன சொல்லுனு மொட்டையா கேக்குறீங்க . .. அதுக்குள்ள அம்மு செல்லம் தங்கம் லா காணம போயிடுச்சி.. ல...
வரும். வரும் சொல்லு...
அம்மு .. செல்லம் வந்தாதா நான் சொல்வேன்...
படுத்தியெடுக்காத அம்மு ... சரியான வாயாடி இம்சை போடி நான்...எப்படி தான் உன்கூட குப்பை கொட்ட போறேனோ .
ஹலோ சார் அத நாங்க சொல்லனும்....
சரி சொல்லுங்க அம்மு மேடம் ... நான் கூப்டா ஏன் வர மாட்டீங்க.....
இரண்டு இரண்டரை வருஷம் லவ் பன்ன உங்களுக்கே நான் வரமாட்டேனு சொன்னதும் இவ்வளவு கோவம் வருதுல...
இருபத்தி மூனு வருஷமா பார்த்து பார்த்து வளர்த்து கேட்டதெல்லாம் செஞ்சி.... என்னைய ஒவ்வொரு ஆசைகளோடயும் கனவுகளோடயும் ஆளாக்கினவங்கள எப்படி தூக்கி போட்டுட்டு வர முடியும்...
அவங்க விருப்பம் இல்லனா .... அவங்களே ஓ.கே சொல்ற வரைக்கும் உனக்காக வெயிட் பன்னுவேன்... எத்தனை வருஷம் ஆனாலும்... அவங்க சம்மதிக்கிற வரைக்கும்....ஆனா அவசரப்பட்டு ஓடி வர மாட்டேன்.. புரியிதா...
அதவிட முக்கியமா திலகாக்கு வேற நான் ப்ராமிஸ் பன்னிட்டேன்...
சோ.... சப்போஸ் ரெண்டு பேரோட வீட்டுல யாரு ஏத்துக்காம ஸ்ட்ரைக் பன்னாலும்... ,ரெண்டு பேரும் சேர்ந்து எல்லாரும் ஓ.கோ சொல்ற வரைக்கும் வெயிட் பன்னனும் ஓ.கே வா....
ஓஹோ.. இது வேரையா...அது சரி... உன்தம்பி எம்.என் நம்பியார் கடைசி வரைக்கும் ஓ.கே சொல்லலனா என்னடி பன்றது. நான் சன்யாசியா போகவா...
அவனெல்லாம் கணக்குல சேக்க வேண்டாங்க.. அவன் சும்மா.... ஒப்புக்கு சப்பான்...
அப்போ இந்த டீல் ஓ.கே... சரி நம்ம விஷயத்த எப்போ வீட்டில சொல்லப் போற...
ம்ம்ம்... இன்னைக்கு ஈவ்னிங்...
ம்ம்ம்... சூப்பர் அம்மு.... கலக்கு... கலக்கு... நைட் கால் பன்னிட்டு என்ன ரிசல்ட் னு சொல்லு செல்லம்.... ஐ ஆம்.......வெயிட்டிங்....
போடா.இப்போவே எனக்கு கலக்கலா... தான் இருக்கு...
டிசிஷன் பிக்ஸ் பன்னியாச்சுல அப்பறம் ஏம்மா பயப்பட்ற..... மாமா இருக்கேன் டா தங்கம் தைரியமா சொல்லு..
ம்ம்ம்... சரிங்க சொல்லிட்றேன்...
ஆமா என்னடி நீ திடீர்னு வாங் போங்கனு மறியாதையா மேல ஏத்தி கூப்புட்ற...
திடீர்னு போடா வாடானு தரமட்டத்துக்கு தள்ளி விட்டுடுற...
அதெல்லாம் ஒரு ஃபளோவுல அப்படி தான் வரும்னு முன்னாடியே சொல்லிற்கேன் ல... அப்பறம் என்ன..டா..
சரி.... சரி..... ஒய் டென்ஷன்..... லெஸ் டென்ஷன் மோர் வொர்க்.... மோர் வொர்க் லெஸ் டென்ஷன்.... என்கிட்ட வாயாடாம வீட்ல விஷயத்த சொல்லிட்டு கால் பன்னு டி.
சரிடா..

((என்னதான்....எல்லாரும் சம்மதிச்சாலும்... வெண்ணை திறண்டு வர்ர.... நேரத்தில் பானையை உடைக்க ஒரு புது வில்லன் அதுவும் கெஸ்ட் அப்பியரன்ஸ் ல எண்ட்ராக போறான்னு இவங்க ரெண்டு பேருக்குமே தெரியலையே...))
நேத்ராவை கலாய்த்துவிட்டு கொண்டாட்டமாக வீட்டிற்கு சென்றவனுக்க அங்கே ஒன்றல்ல.....
இரண்டு அதிர்ச்சி காத்திருந்தது...


___தொடரும்...
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 


Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top