தீராத் தீஞ்சுவையே...15

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____15
இரவெல்லாம் தூங்காமல் மித்ரன் அன்று ஆஃபிஸ் க்கு போகாமல் விடுப்பு எடுத்துவிட்டு காத்துக்கொண்டு இருந்தான்...

எப்படித் துடங்குவது என்ற பதட்டமும் பயமும் இல்லை... தான்.
ஆனால் கூறிய பின் அவளுடைய நிலை என்ன மாதிரியானதாக இருக்கும்...
முகம் தெரியாமல் இதுவரை பயனித்ததே போதும்… என்று காதலை சொன்னதும் இந்த மெசேஜ் கூட பதில் அனுப்பாமல் அவாட் செய்துவிட்டால்… அப்போது என்ன செய்வது என்ற யோசனை தான்...
என்ன பதில் சொல்வாள் .. ஏற்காவிட்டாலும் பரவாயில்லை..
பேசாமல் போனால் என்ன செய்வது ஏன்ற பதட்டமே மேலோங்கி அவனைத் திணறடித்துக் கொண்டிருந்தது...

அன்று வியாழக்கிழமை... ஐயப்பனுக்கு மனதில் ஆயிரம் வேண்டுதலோடு காலை 10 மணிக்கு நேத்ராவின் செய்திக்காக காத்திருந்தான்......

அது மே மாதம் என்பதால் பள்ளிகளில் விடுமுறை... ஆனால் புதிய மாணவர் சேர்க்கையில் ஃபார்ம் வினியோகம்... புத்தக வினியோகம் என சில காரணங்களால் ஆசிரியர்களை குழுவாகப் பிரித்து பத்து நாளைக்கு நான்கு ஆசிரியர்கள் வீதம் வரவேண்டியிருந்தது ..

நேத்ராவின் முறை இன்று... மே... 15..... காலை 10 மணிக்கு பள்ளிக்கு வந்த நேத்ரா பொதுவாக குட் மார்னிங் டைப் செய்து அனுப்பிவிட்டு வேலையைத் தொடங்கினாள்..

புத்தகங்களை பிரித்து.... பள்ளி தொடங்கிய பின் நடத்த வேண்டிய பாடக் குறிப்பிற்கான தொகுப்புகளை தயாரிக்க அமர்ந்து விட்டாள்...

வியாழன் அன்று நேத்ராவும் ஒரு பொழுது விரதம் இருந்தாள்...
காரணம் அன்று நம்ம ஹீரோவும் விரதமாம்...
அப்படியா.....
யாருக்கு தேரியும்... அந்த பையன் சொன்னான்.... இந்த புள்ளையும் ஃபாலோவ் பன்னுது...
நாம கண்டுக்காம நின்னு வேடிக்கை பார்ப்போம்... வாங்க..
நேத்ராவின் மொபைல் தொடர்ந்து வைப்ரேட் மோடில் எண்ணை பார் யோகம் வரும் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது....

ஆம் நம்ம மித்து குட் மார்னிங் சொன்ன கையோடு..... எல்.கே.ஜி. பசங்க ரைம்ஸ் சொல்றா மாதிரி மெசேஜ் ல திக்கித் தினறி ஏதேதோ ரைமிங்கா ஆரம்பிச்சி ஒரு வழியா லவ் ஆ சொல்ல ரெடி ஆகிட்டான்....
நேத்ராவிற்கு இப்போது பதட்டமாக இருந்தது .. காதலில் கடக்க வேண்டிய கடினமான பகுதி... காதலை சொல்வதுதான்…
சில நேரங்களில் காதலை பெருவதும் தான்… உண்மையில் அதுதான் பெரிய சங்கடம்..
ஆனாலும்….
அது பூமத்திய ரேகையை கடப்பது மாதிரி ஒருவிதமான அற்புத நிகழ்வு..

கடந்த காலத்தில் புறா விடு தூதில் துவங்கி இன்றைக்கு வரை அது ஒரு பதட்டமான அழகான மறக்க முடியாத தருணம் தான்… காதல் சொல்வதும் காதலை ஏற்பதும்..

வேக .. வேகமாக மித்துவின் மெசேஜ்களை நம்ம நேத்ரா மீடியேட்டர் திலகாவிற்கு ஃபார்வர்ட் செய்ய...

அந்தப்பக்கம் பதிலில்லை... பதட்டமானவள் திலகாவிற்கு ஃபோன் செய்தாள் ....அதுவும் நாட் ரீச்சபில்...

மனதை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு பேசத் துவங்கினாள்...
((இனி அனைத்தும் பழைய பிளாக் அண்ட் ஒயிட் நோக்கியா திரையில் வரும் மெசேஜ்களாக கற்பனை சேய்து கொண்டு வாசிக்கும் படி அன்பாக கேட்டுக் கொள்ளப் படுகிறது...

சொல்லுங்க மித்து என்ன ஏதேதோ சம்மந்தமே இல்லாம பேசுறீங்க...
அது நேத்ரா நீ வீட்ல ஓ.கே சொல்லிட்டியா...
எதுக்கு ஓ.கே சொல்லிட்டியானு கேக்றீங்க...
உன் கல்யாணத்துக்கு...
இதுல சொல்ல என்ன இருக்கு..
இல்ல நீ என்ன முடிவு பன்னிருக்க...
தெரியல மித்து பிரண்ட்ஸ் லா மேரேஜ் பன்னிட்டு செட்டில் ஆகுரதே பெஸ்ட் னு சொல்றாங்க... சில பேர் கல்யாணம் மட்டும் பன்னிடாத அதோட எல்லாம் காலினு பயமுறுத்துராங்க...
உன் மனசு என்ன சொல்லுது
நான்..... மேல படிக்க ஆசை பட்ரேன் ... ஆனா அப்பா இன்னும் என்கிட்ட அத பத்தி பேசல.
ம்ம்ம்....
அப்புறம் மித்து .. சொல்லு...
இல்ல நீ லவ் பத்தி என்ன நினைக்கிற ...
அது.. தெரியலையே...
உனக்கு நம்பிக்கை இல்லையா
இருக்கு மித்ரன்.. ஆனா லவ் பன்றவங்க மேல இல்ல...
யூ நோ.. எனக்கு அப்படி கல்யாணம் நடந்தாலும்
வீட்ல அரேன்ஜ் பன்னி எல்லா சொந்த பந்தங்களோட ஆசிர்வாதத்தோட தான் எனக்கு கல்யாணம் நடக்கனும் னு ஆசை...

என் அப்பாக்கு பிடிக்காம ரிஜிஸ்டர் மேரேஜ் பன்ற அளவுக்கு லா எனக்கு தைரியம் இல்லப்பா … அதால லவ் பன்றதுலயும் இன்ட்ரஸ்ட் இல்லை...
லவ் பன்னிட்டு அரேன்ஜ் மேரேஜ் பன்லாமே அம்மு.

மேரேஜ் பன்னிட்டு கூட லவ் பன்லாமே மித்து ..
ம்ம்ம சரிதான்...
ஓகே அம்மு என்ன பத்தி என்ன நினைக்கிற...
ம்ம்ம்ம்... நல்ல பையன் தான்....
ஆனா...
ஆனா...

நீங்க யாருனு எனக்கு தெரியாதே ... நான் உங்கல பார்த்தது கூட இல்ல...பேசினது கூட இல்ல... சாதாரண சேட்டிங்ல எப்படி ஒருத்தரோட குணத்த சொல்ல முடியும்...

பரவாயில்லை... தெரிஞ்சவரைக்கும் சொல்லு....

எனக்கு இப்போ என்ன சொல்றதுனு தெரியல... அப்பறமா யோசிச்சு சொல்லவா...

ம்ம்ம் சரி...

அப்போ நான் இன்னொன்னும் சொல்றேன்... அதையும் யோசிச்சி அப்பறமா பதில் சொல்றியா... பிளீஸ்.

ஓ ... சொல்லுங்க மித்து...

ஐ லவ் யூ அம்மு...

.........

நேத்ரா....
.........

ஏய் பிளீஸ் நீ பதில் சொல்லலனாக் கூட பரவாயில்லை... ஆனா பேசாம இருக்காத பா பிளீஸ்...

...........

நேத்ரா... பிளீஸ்...
...........

மெசேஜ் மீ....
.............
சாரி அம்மு ............
நீ பேசர வரைக்கும் நா சாப்பிட கூட மாட்டேன் அம்மு பிளீஸ் மெசேஜ் பன்னு..............


எந்த பதிலும் இல்லை…
அவனுக்கு பதட்டத்தில் வியர்த்தது.. எங்கே இனி பேசவே மாட்டாளோ என்று..

மதியம் 1.30 .. நேத்ரா அவசர அவசரமாக திலகாவிற்கு கால் செய்தும் கால் எடுக்கப்படவில்லை...

அதற்குள் பள்ளி தலைமை ஆசியியர் உடனடியாக அனைவரையும் அழைத்து மீட்டிங் என்ற பெயரில் பெற்றவர்களின் சம்பளத்திற்கு எந்தெந்த வகையில் வேட்டு வைப்பது...

எப்படி எப்படி பெயர் சொல்லி புதிய புதிய இல்லாத திட்டங்களையும் வகுப்புகளையும் உருவாக்கி மொத்தமாக மணி பர்சை துடைப்பது..... என்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி சரியாக லன்ச் டைமிற்கு தான் வெளியே அனுப்பினார்....

நேத்ரா மொபைல் சைலன்ட் மோடில்
வைப்ரேட் ஆகி வைப்ரேட் ஆகி.
அன்கான்ஷியஸ் ஸ்டேஜ் இல் சார்ஜ்
இன்றி பரிதவித்து ஒரு வழியாக சிவிச்
ஆஃப் ஆகி கோமாவிற்கே போய்விட்டது .
அவசர அவசரமாக அதை சார்ஜில் போட்டுவிட்டு நேத்ரா உணவருந்த அமர்தாள் .

நேத்ராவின் பிரியமான தயிர் சாதமும் அவளே தயாரித்த எலுமிச்சை ஊறுகாயும்
காதலை ஒரு அடி தூரம் பத்திவிட்டு விட்டு... காரியமே கண்ணாயிரு மனமே என்று சாப்பிட வைத்தது… அந்த உணவு...

ஆர அமர சாப்பிட்டவள் எல்லாவற்றையும் அலசி வைத்துவிட்டு போனை எடுத்து வந்து ஆன் செய்தாள் .
53 மெசேஜ்.... 46 மிஸ் கால்கள்...
இதுவரை மித்ரனும் நேத்ராவும் குறுந்தகவல்களில் பேசி இருந்தாலும் தொலைபேசி அழைப்புகளில் பேசியது இல்லை…

இன்று அதையும் தாண்டி இத்தனை முறை கால் செய்தும் பார்த்துவிட்டான்….
அவளுடைய நோக்கியா ஆன் செய்த
அடுத்த நிமிடமே சாரி நேத்ரா பிளீஸ்
மெசேஜ் மீ என 54 வது மெசேஜ்
வெற்றிகரமாக வந்தடைந்தது.
நேத்விற்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை...

ஏன் இவன் இப்போ சம்மந்தமே இல்லாம சாரி கேக்குறான் என யோசித்தவள் வேக வேகமாக அனைத்து மேசேஜ்களையும் ஓபன் செய்தாள் ..

அவள் எதை சொல்ல வேண்டும் என்று நேற்றிலிருந்து காத்திருந்தானோ... அதயே பார்க்க முடியாமல் செய்த அந்த பரங்கிக்காய் தலை எச்.எம் மீது கட்டுக்கடங்கா கோவம் வந்தாலும்....

மித்துவின் ஐ லவ் யூ வில் மனதில் மீண்டும் ஜிலு ஜிலுவென ஐஸ் மழை கொட்டியது...
அவன் காதலை உரைக்கும் முன்பே மீட்டிங்கிற்கான அழைப்பு வந்ததாள் அதை கிடப்பில் போட்டு கிளம்பி உள்ளே சென்றவளுக்கு இது இன்ப அதிர்ச்சி தான்….
அதை அப்படியே துடைத்து எறியும் விதமாக மீண்டும் நேத்ராவின் நோக்கியா நடுநடுங்க ...
இப்போது....
காலிங் திலகா ....
நேத்ராவின் புன்னகை வடிந்து திலகாவிற்கு செய்த சத்தியம் நினைவில் வந்து வாட்டியது..
மித்ரனுக்கு அவசரமாக ஒரு வெயிட் என்ற தகவலை அனுப்பி விட்டு திலகாவிற்கு அழைத்தாள்… கட்டாகி மீண்டும் அவளே அழைக்கவும்...
திலகாவின் காலை அட்டன் செய்து நடந்ததை ஒப்புவித்தாள்.... இரு தோழிகளும் நீண்ட விவாதங்களுக்கு பிறகு தான் ஃபோனை வைத்தனர்..

திலகாவின் வழிகாட்டுதலோடு.... மித்துவிடம் பேச்சை துவங்கினாள்...

சாரி மித்து திடீர்னு ஒரு மீட்டிங்.. அதான் மெசேஜ் பார்க்கல… ஃபோன் ல சார்ஜ் இல்லை..
ஃபோன் வேர சிவிச் ஆஃப் சாரி .... மித்து..

நேத்ராவின் பதில் வருவதற்குள் மித்து பதரிதவித்துவிட்டான்..... அடிப்பாவி எவ்வளவு கூலா பதில் சொல்றா பாரு என்று கோவமும் கூட...

அவள் பதில் வருவதற்குள் அவனுடைய பசி ... நிம்மதி... புன்னகை... கவனம் எல்லாம் அவனிடமே ஸ்ட்ரைக் செய்தது...

நேத்ராவின் பதில் வந்த பின் தான் அவனுக்கு உயிரே வந்தது... மீண்டும் மீண்டும் சாரி கேட்டான்...
நேத்ரா அவனிடம் ....
எனக்கு விருப்பம் இல்லை மித்து... நான் உனக்கு தகுதியானவள் இல்லை... நீயும் நானும் இன்று முகம் பார்க்காமல் காதலிக்கலாம் ஆனால் நிஜ வாழ்க்கை முறைக்கு சரி வராது மித்து...

ஏன்... எதை வைச்சு நீ எனக்கு மேட்ச் இல்லைனு சொல்ற....
எனக்கு நம்பிக்கை இருக்கு என்னையும் என் குடும்பத்தையும் நீ கண்டிப்பா பாசமா பார்த்துப்ப...
அது மட்டும் லைஃப் கு பத்தாது மித்து...
வேற..... பணமா .. ஸ்டேடஸ் பாக்குறியா... நான் இன்னைக்கு ஓன்னும் இல்லாம இருக்கலாம் உன்னையும் நம்ம குழைந்தைகளையும் நிச்சயமா சந்தோஷமா பார்த்துக்க என்னால முடியும்...
(அடப்பாவி.... அடியேனு கூப்பிட பொண்டாட்டி இல்லையாம்.... அதுக்குள்ள ஒருத்தன் புள்ள எத்தன பொண்ணு எத்தன னு பேரு வச்சானாம் ...
அவனா நீ..... மனதோடு கேட்டு சிரித்துக்கொண்டே பதில் அனுப்பினாள்.....
இல்லை மித்து அதெல்லாம் தாண்டி எங்க வீட்ல லவ் எல்லாம் ஏத்துக்க மாட்டாங்க… எனக்கும் அதுல நம்பிக்கை இல்லை..
பிளீஸ் நேத்ரா எனக்கு ஒரு சான்ஸ் குடு...
உன்னை கண்டிப்பா உன் வீட்ல இருந்த அளவுக்கு இல்லை நாலும் என்னோட கஷ்ட நஷ்டத்தை காட்டி வருத்தப்படும் படி இருக்க மாட்டேன்...

உன்னை பத்திரமா சந்தோஷமா பார்த்துப்பேன் அம்மு..

எனக்கு புரியிது மித்ரன் ... ஆனா நான் அதை சொல்ல ல ..நீங்க இன்னும் என்னை பார்த்தது கூட இல்லை...

என் குரல் கூட கேட்டது இல்ல.... ஒரு வேல...
நா அசிகங்கமா இருக்கலாம்... எனக்கு ஏதாவது வியாதி இருக்கலாம் தோஷம்... சாதி... மதம்... இவ்வளவு கூட வேண்டாம் நேர்ல பார்த்த பின்னாடி இந்த முகம் பிடிக்காம கூட போகலாம் .
அப்போ நீங்க ஈசியா விட்டுட்டு போய்டுவீங்க நான் கிராமத்துல வளர்ந்த பொண்ணு..

என்னால அடிக்கடி மனச மாத்திக்க முடியாதே...
நேத்ரா கலர் பார்த்து அழக பார்த்து வரதுக்கு பேரு வேற...
எனக்கு உன் குணம் புடிச்சி இருக்கு...
உன் அழகான மனசு புடிச்சிருக்கு..
எதை சொன்னாலும் நம்பி ஆமமாவா னு கேக்குறியே அந்த வெகுளித்தனப் புடிச்சிருக்கு....
உன்ன இப்போ மட்டும் இல்ல .....வயசாகி
தடியோட கன்னம் கறுத்து ... தோல்
சுருங்கி.. பார்வை மங்கி குடு.. குடு...
கிழவியா ஆனாலும் எனக்கு புடிக்கும்...

இதெல்லாம் சினிமாக்கு தா மித்ரன் செட் ஆகும்...
நான் நடிக்கிறேனு சொல்றியா ... அம்மு...
இல்ல மித்து . நான் கறுப்பா குண்டா இருப்பேன் மித்து..
அதுக்கு என்ன... எக்சசைஸ் பன்னா குறைய போற...
முகத்ல பூசிக்க தா ஆயிரத்தெட்டு கிரீம் இருக்கே. .

அதவிட நீ இயற்கையாவே அழகாதா இருப்ப... உலகத்துல எல்லாரும் அழகுதான்...

ஆனா அதை யாரும் புரிஞ்சிகிட்டு தன்னை அழகுபடுத்தி பராமரிப்பு பன்றது இல்ல...
அவ்ளோ தான்....
நீ எப்படி இருந்தாலும் என் கண்ணுக்கு அழகு தான்....
வேணும் னா....ஒன்னு செய்யலாம்....
நானே உன்கூட தினமும் வாக்கிங் வரேன் ..... உனக்கு நானே கடலை மாவுல இருந்து காஸ்மெடிக்ஸ் வரைக்கும் வாங்கி போட்டு விடுறேன் போதுமா...
அதுகூட எனக்காக இல்லை உனக்காக மட்டும் தான்..
மித்து நான் வேற ஒருத்தர் மேல அட்ராக்ஷன் இருந்து இப்போ கல்யாணமே வேண்டாம்னு இருக்கேன்...
நீயே ஒருநாள் என்னை சொல்லி காட்டி கஷ்ட படுத்திட்டா....

ஹேய் லூசு... அதெல்லாம் ஒரு விஷயமா... அதெல்லாம் ஒரு கதைனு காமெடி பன்னாத போ... போ...

நேத்து நீ விட்ட பில்டப்ப பார்த்து நான் கூட என்னமோ.. ஏதோனு பயந்தேன்.... கடைசில பன்னியே ஒரு காமெடி...
அதுக்காக தான் இன்னைக்கு லீவ் போட்டு ஃபீல் பன்னி சிரிச்சேன்னா பார்த்துகோ....
நீ என்ன தப்பா நினைக்கலையா....

இல்ல....

ஏன்....

ஏன்னா .. ஐ லவ் யூ....

சமாளிக்காத… திரும்பவும் டயலாக் வேண்டாம் பிளீஸ்...

நீ நினைச்சிருந்தா எதையுமே என்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாம்... அம்மூ… அதோட இதெல்லாம் ஜஸ்ட் அட்ராக்ஷன் அது டீன் ஏஜ் ல எல்லாருக்கும் வரும்.. லவ் வேற அது வேற டா

ஆனா இந்த மூனு மாசத்துல நீ பேசினத பழகினத வெச்சு நேத்து நைட்டே கன்பார்ம் பன்னிட்டேன்...

என்ன...

இந்த டியூப்லைட் தான் என் பொண்டாட்டி னு...
பொண்டாட்டியா… ஹேய் நான் இன்னும் பதில் சொல்லல...
ஆமான்டி....
டி... யா… நீ ஓவரா பேசுற டா
ஆமா... டி...டி...டி...

அப்போ நானும் உன்ன டா சொல்லவா..
சொல்லிக்கோடி...
போடா லூசு..... நான் இன்னும் ஓ.கே சொல்ல ல...
அப்போ சொல்லு ....டி...
முதல்ல டி ய கட் பன்னு ..
ஓ.கே சொல்லுங்கள் மேடம்...
எனக்கு யோசிக்க டைம் வேணும்...
எடுத்துக்கோ எவ்ளோ டைம் வேணும்...
ஒரு 365 டேய்ஸ் மட்டும்....
என்னா......து 3...6....5 ... டேய்ஸ் ஆஆஆஆ ..... ஏன்....

நீ பையன் சட்டுனு மனசு மாறிட்டா..... என்ன ஏமாத்திட்டா ...

இரண்டாயிரம் ரூபாக்கு வாங்குற எலக்ட்ரானிக் பொருளுங்கே இரண்டு வருஷம் கியாரண்டி ...வாரண்டி தரான் ..

நா உன்ன நம்பி என் லைப் ஏ தரப்போறேன்.... அதுக்கு டைம் வேண்டாமா....
அதுக்கு....
நான் படிக்கனும்.. இன்னும் நல்ல வேலைக்கு போகனும் ... எங்க வீட்ல பர்மிஷன் வாங்கனும்...
ஓ.கே ஆனா ஒரு கண்டிஷன்....
என்ன...
ஒன் இயர் இல்ல... டூ இயர் கூட டைம்

எடுத்துக்கோ....
ஐஐஐஐ .....ஜாலி....
ஆனா.....
ஆனா.. .
பதில் எனக்கு பாசிடிவா வேணும் ஓ.கே வா....
டபிள் ஓ.கே....
அப்பறம் மார்த்தி பேசக்கூடாது....
நோ... நோ....
பிராமிஸ்....
பிராமிஸ்.....
அடியே .. லூசுப் பொண்ணே... இரண்டு வருஷம் டைம் தரேனு அவன் என்ன அழகா உனக்கு சமாமதம் னு உன் வாயாலையே ஓ.கே சொல்ல வைச்சு பிராமிஸ் போட்டு வாங்கிட்டான்...
((இது கூடத் தெரியாம இந்த புள்ள ஓ.கே சொல்லி பல்ல காட்டிகிட்டு நிக்கிதே......))

மித்து நீ செலக்ட் பன்ன டியூப்லைட் செம்ம
பிரைட்டடோ..... பிரைட்டு. ப்ப்ப்பா.....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top