ஜீவ தீபங்கள் -34 (final)

Advertisement

தரணி

Well-Known Member
உங்க கதையில் மிக சிறந்த கதைன்னு இதை சொல்லுவேன்... ரொம்ப ரொம்ப அழகு.... பழி வாங்குறதுனா கொடுமை பண்ணி நல்லா வாழ்ந்து னு சொன்ன கதை... சூப்பர்
 

Novel-reader

Well-Known Member
//Just skimming தான் செஞ்சுருக்கேன். முழுசா ரசிச்சு படிச்சுட்டு comment box - க்கு வரேன்.//

Top notch story Renu!

உங்களோட எழுத்தாற்றலை எத்தனை மடங்கு இந்த கதை மெருக்கேற்றி காட்டுகிறது என்பதை சொல்ல வார்த்தையே இல்லை என்கிட்ட. Congratulations to your efforts pa.

இந்த forum - ல வந்த உங்களோட எந்த கதையையும் நான் படிக்காமல் விட்டதில்லை.
Favourites, likeable, Why not so?, Not my genre இப்படி categorize பண்ணி வெச்சுருப்பேன்.
Not my genre - என்று தெரிஞ்சா கூட just அப்படியே மேலோட்டமாக படித்து தான் இருப்பேன். உங்க writing style அப்படி.

ஆனால் இந்த கதை பல படிகள் ஏறிடுச்சு in all dimensions.
TopNotch category தான் என்
list-la.
First time நிறைய episodes.
நிறைய characters.
மூணு ஜோடிகள்.
நல்ல value exhibit பண்ணும் story theme.

பாலன் character ஆரம்பதிலேயே கணிக்க முடிஞ்சுது. அவன் தான் இந்த கதைக்கு அஸ்திவாரம்.

ஆனால் வள்ளி பிரியா characterisation எனக்கு நிறைய அழகான, எதிர்பாராத நிறைவான ஆச்சரியங்களை கொடுத்தது.

அதுக்கும் மேல ஆதவனோட design. தவிர்க்கவே முடியாத அளவுக்கு அவனை பிடிக்க வெச்சுட்டான் கடைசி சில updates-ல.
வீட்டுல யாரு pregnant-னாலும் kit வாங்க வீட்டு மாப்பிள்ளை தான்.
Maldives போய் ஒண்ணுக்கு ரெண்டா மகசூல் செஞ்சுட்டான்.
High score in Less balls இவனுக்கு தான்.
Humourous-ஆ சொன்னாக்கூட மனைவியோட menstrual & chances of pregnancy details வீட்டுக்காரனுக்கு தெரியணும் - தெரிஞ்சு இருக்கறது ஒன்னும் அதிசியமில்லை - தெரிஞ்சுவெச்சுருப்பது அக்கறை தான் தப்பு இல்லை என்ற கருத்தை அழகா சொல்லுது (சொல்லி இருக்கீங்க).

பிரியா and ஆதவன் characterization அவ்வளவு சரியா இந்த காலகட்டத்துக்கு ஏற்ப இருக்கறது தான் இந்த கதைக்கு ஒரு முக்கிய அம்சம்.

உத்ரா dealing ஆதவன் சொல்லவே வேண்டாம். இதுவும் எனக்கு surprise தான். அவ ரோஷப்பட்டு கல்யாணத்தை நிறுத்திடுவாளோன்னு நினைச்சேன். இல்லை அதுக்கு அப்புறம் ரொம்ப sympathetic design-ஆ போகுமோன்னு யோசிச்சேன். அப்படி இல்லாமல் சும்மா நச்- நச்சுன்னு வாயாலையும் கையாலையும் பதில் கொடுத்து அசத்திட்டா உத்ரா .

வருண்-சௌம்யா அவங்களுக்கு காதல் தொடங்கிய காலகட்டம் காமிச்சுருக்கலாம் என்று தோணிச்சு. ரெண்டு பேரும் பகை குடும்பம் என்கையில் ஒரு வலுவான பிடித்தம் ஏற்பட ஏதாவது சூழ்நிலை காரணமாக இருக்கணும் என்று எனக்கு ஒரு thought.

பாலன் அம்மா ஒரே update-ல மனசுல நின்னுட்டாங்க.

மொத்தத்தில் நிறைய characters வெச்சு, அதில் அவர் அவருக்கு அவரோட குணாதிசயம் மாறாமல் ஒரு முக்கியத்துவம் கொடுத்து இந்த கதையை
வடிவமைச்சிருக்கீங்க பாருங்க அது தான்பா இந்த கதைக்கு extra credits குடுக்க வைக்குது.

இன்னும் நிறைய சொல்லலாம். நேரமின்மையால் fullstop வைக்கிறேன்.

Thanks for this treat.
 
Last edited:

Krishnaveni Rajagopal

Well-Known Member
ரொம்ப நல்லா இருந்தது இந்த கதை.
சிவபாலன் வள்ளி பிரியா என்றுமே மறக்க முடியாத சுடர்விடும் ஜீவதீபங்கள் தான்.
வினை விதைத்தால் வினை அறுப்பான் என்பதை வைத்தியலிங்கம் தெள்ளத் தெளிவாக வாழ்க்கையில் அனுபவித்து வருகிறார். வாழ்த்துக்கள் உங்கள் எழுத்து பணி என்றென்றும் தொடர. நன்றி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top