ஜீவ தீபங்கள் -26

Advertisement

Nachu

Well-Known Member
வருணை நான் நியாய படுத்தல.... ஆனால்

சௌமியா அப்பன் பிரகா உடம்பு முடியாமல் இருக்கும் போது தன் தங்கச்சிய கல்யாணம் செஞ்சு வச்சு மூனு குழந்தையோடு துறத்தி விட்டவன் தான..... சௌமியா அம்மாவும் கூட சேர்ந்து அமைதியா இருந்தவங்க தான....

ஏன் இப்போ கூட பாலன் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாமல் நேர்மையா வாழ்ந்து கிட்டு இருக்கான்.... அவனை முன்னேற விடாமல் ஆளை வச்சு கொலை பண்ற அளவுக்கு போயிட்டாங்க....

இளங்கோவன் மருமகன் சபரி செல்வாக்கை வச்சு இடத்தை வாங்க விடாமல் பிரச்சினை பண்றது லைசென்ஸ் கிடைக்க விடாமல் பண்றது என்று தொல்லை கொடுத்து கிட்டே தான் இருக்காங்க....

என்னைக்கோ பிரகதீஸ்வரிக்கு நடந்த கெடுதல் இல்லை இப்போ வரை பிரகாவ வாழ விடாமல் கெடுதல் செஞ்சுட்டு தான் இருக்காங்க... ஒரு வேளை பாலன் உயிர் போயிருந்தால்.....

சின்ன வயசில் இருந்து இப்போ வரை அந்த குடும்பம் தன்னோட அம்மாவுக்கும் அண்ணனுக்கும் அந்த குடும்பம் செய்ற கொடுமைய பார்த்துக்கிட்டே தான இருக்கான் அந்த கோவம் தான் இப்படி காட்டுறான்.... வருண் செய்றது எந்த விதத்திலும் நியாயம் இல்லை தான் ஆனால் அவன் பாதிக்கப்பட்டவன் அவன் மனநிலையில் இருந்து பார்க்கும் போது நியாயமும் இருக்கு....

சௌமியாவோ அவங்க அம்மாவோ அவங்க குடும்பம் பாலனுக்கு இப்போ வரைக்கும் செய்யுற கெடுதலை தடுக்காமல் வேடிக்கை தான் பார்க்கிறாங்க ....

ப்ரியா அவ அம்மாவையும் அண்ணனையும் எப்படி கேள்வி கேட்கிறா தப்பு செஞ்சா தண்டனை கொடுக்கிறா ஏன் இந்த அறிவு ஏன் சௌமியாவுக்கு இல்லை

சௌமியா அம்மா இப்போ வந்து பொண்ணுக்காக நியாயம் கேட்கிறவங்க அன்னைக்கு அவங்க அப்பா அண்ணன் புருஷன் எல்லாம் பிரகா வாழ்க்கை அழிக்கும் போது வேடிக்கை தான பார்த்துக் கிட்டு இருந்தாங்க......
நம்ம வீட்டு ஆம்பளைங்க ஒரு பொண்ணோட வாழ்க்கைய அழிக்கும் போது வேடிக்கை பார்த்தால் அதுக்கான பலனை நம்ம பிள்ளைங்க தான் அனுபவிப்பாங்க..

சௌமியா மேலயும் கோவம் இருக்கு தன்
குடும்பத்துக்கு வேண்டாதவன் என்று தெரிஞ்சும் எப்படி அவனை நம்பி கல்யாணம் செஞ்சு வீட்டுக்கு தெரியாமல் குடும்பம் நடத்துனா.... நம்பி படிக்க அனுப்புனவங்களுக்கு அவ செஞ்சது துரோகம் தான்.....
ஏங்க நீங்க சொன்னது எல்லாம் வாஸ்தவம் தான்.
பாலன் உயிர் போய் இருந்தால் ன்னு கேக்குறீங்களே...... இந்த சம்பவத்தில் சௌம்யா உயிர் போய் இருந்தால்??
காலம் முழுக்க பாலனுக்கு மன நிம்மதியே இருக்காதே??
வருணுக்கும் குற்ற உணர்ச்சியாக தானே இருக்கும்??
என்ன தான் அவன் மனம் தான் செய்தது சரி ன்னு வாதடினாலும்....... அடிப்படை ன்னு ஒன்னு இருக்குல??
அவனுக்கே தெரியணும். அந்த வீட்டு பொண்ணு ன்னு தெரிஞ்சே லவ் பண்றான் னா, அண்ணன் தூக்கி வளர்த்த புள்ளை ன்னு சொல்றவன் அண்ணன் கிட்ட சொல்லியிருக்கணும்.
ஆனாலும் வருண் பண்ணது தப்பு தாங்க.
 

Romila Robert

Well-Known Member
அருமை. ஆனால் அடுத்த அத்தியாயம் வருவதற்குள் திக் திக் நிமிடங்கள் தான்.பேசாமல் அடுத்த அத்தியத்தை போட்டு விடுங்களே :D:D:D:D:D தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Thank you so much friends.

Advance happy diwali to all :love:.

Next epi kandippa tuesday than friends.:sleep:

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
இப்படித்தான் நேத்தும் நாலு நாளைக்கு அப்புறம்ன்னு சொன்னீங்க.... ஆனா இன்னிக்கே போட்டுட்டீங்க... அதே போல திங்கள் கிழமையே எதிர்பார்க்கலாமா?

இந்த வருண் ரெண்டு "மாசமா" குடும்பம் நடத்துனதுல ஒருவேளை சௌம்யா "மாசமா" ஆயிட்டாளோ? அதை தான் அனுசுயா கூப்பிட்டு சொன்னாங்களோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top