செவ்வானில் ஒரு முழு நிலவு Intro

mila

Writers Team
Tamil Novel Writer
#1
11224365_1670447079841157_7507928634515358763_n.jpg

கோப்பில் கையெழுத்துட்டுக் கொண்டிருந்தவனை கலைத்தது கதவு தட்டும் ஓசை "கமிங்" என்றவன் தலையை தூக்காமலையே நான் விசாரிக்க சொன்னது என்னாச்சு" என்று கேட்கஉள்ளே வந்தது அவனது பி.ஏ. தயாளன் அவன் கேட்டதுக்கு பதில் சொல்லாது தனது அலைபேசியை அவன் புறம் நீட்டி "ஐசு லைன்ல இருக்கா" என்று சொல்லபட்டென்று தலையை உயர்த்தியவன் அலைபேசியை பறிக்காத குறையாக வாங்கி கம்பீரமான குரலில் "ஹலோ" சொல்லஅந்தக் குரலை அடையாளம் கண்டு கொண்ட உடன் மறுமுனையில் இருந்து முத்தங்கள் அலைபேசி வழியாக பரிசாக ஈகைக்கு வழங்கப்பட்டது.இவ்வளவு நேரமும் விறைப்பாக இருந்தவன் அந்த சத்தத்தில் உடலும், மனமும் இளகி, முகமும் புன்னகையை தத்தெடுத்துக்கொள்ள "ஐ லவ் யு பேபி" என்றான் அன்பாக.பல பெண்கள் ஈகையின் பின்னால் சுற்ற அனைவரையும் தனது கருட பார்வையால் ஓரம் கட்டியவன் ஐசுவின் பின்னால் குழந்தையாக மாறி ஓடிக்கொண்டு இருக்கிறான். அவன் முத்தமிடும் பொழுது மீசை குத்துவதாக சிணுங்கலோடு அவள் சொன்னதற்காக வேண்டியே மீசை, தாடி இல்லாமல் க்ளீன் ஷேவ் செய்து வளம் வரும் ஆணழகன் ஈகை.download (19).jpg

"பார்கவி இங்க வாம்மா..." என்று அழைத்த வேதநாயகி "இது என் மக வயித்து பேத்தி. பேரு பார்கவி" என்று அறிமுகப்படுத்த ஈகைச்செல்வன் அவளை பார்த்து புன்னகைத்தவாறே வணக்கம் வைத்து விட்டு வேதநாயகியின் புறம் திரும்பிக்கொண்டான்.

ஏதோ அவருடைய நல்ல குணத்துக்கு தன்னுடைய பேத்தியை அறிமுகப் படுத்தினாங்க அதற்காக வணக்கம் வைத்தேன் கூடவே புன்னகை செய்தேன் என்றிருந்தது அவன் செயல். கொஞ்சமாலும் அங்கே ஒரு வயதுப் பெண் இருக்கிறாள் என்ற பார்வை அவனிடம் இல்லை. வேதநாயகியும் அதை கவனித்து கொண்டுதான் இருந்தார்.

வேதநாயகி தன்னை அழைத்து ஈகைக்கு அறிமுகப்படுத்தி வைப்பார் என்று எதிர்பார்க்காத பார்கவி சற்று அதிர்ச்சியடைய, அவன் அவளை கண்டு கொள்ளாததில் யோசனைக்குள்ளானாள்.மாடிப்படிகளில் இறங்கி வரும் பொழுதே ஈகை பார்கவியை பார்த்து விட்டான். சேலைதான் அணிந்திருந்தாள். அதிலும் அந்த லெவெண்டர் நிறம் அவளுக்கு கண கச்சிதமாக பொருத்தம் என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதற்க்கு மேட்ச்சிக்காக கோல்டு நிறத்தில் பிளவுஸ். போட்டோவில் இருந்தது போலவே முடியை பின்பக்கமாக ஒதுக்கி ஒரு கிளிப்பில் அடக்கி விரித்து விட்டிருந்தாள். கொஞ்சம் மல்லிகை அவள் தலையில் குடியிருந்தது கூந்தலோடு சேந்து தோளின் இரு பக்கமும் விழுந்து அவள் படிகளில் இறங்கவும் பொழுது நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தன. கூடவே அவள் காதில் அணிந்திருந்த குடை ஜிமிக்கியும் சேர்ந்து ஆடியதுதான் கண்கொள்ளா காட்ச்சி. நெத்தியில் இருந்த சிறிய வட்ட போட்டு அவளுடைய சின்ன நெத்தியில் அழகாக வீற்றிருக்க, உதடுகள் சாயமில்லாமல் சிவந்திருந்தன.அந்த ஒரு நொடிப்பார்வையிலையே போட்டோவில் இருந்தவளுக்கு, நேரில் இருப்பவளும் ஆயிரம் வித்தியாசங்களை சொல்லி விடுவான் ஈகை. தூரத்தில் பார்த்தே அவ்வளவு கவனித்தவன் கிட்ட நிற்பவளை கள்ளப்பார்வை பார்க்க மாட்டானா என்ன?


:love::love::love::love::love:
 
Last edited:

Saroja

Well-Known Member
#2
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்
ஈகை பெயர் நல்லா இருக்கு
மிலா
 
#7
:D :p :D
உங்களுடைய "செவ்வானில்
ஒரு முழு நிலவு"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
#9
அடப்பாவிப்பயலே.......என்னாமா பாத்து இருக்கான்....
பார்த்துக்கே இப்படின்னா அவன் பண்ண போற காரியத்துக்கு:whistle::unsure::p
நன்றி Viji dear :love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes