கொலுசொலி மயக்குதடி - 7

Advertisement

வாசு ஆபிஸ் கிளம்ப தயாராய் இருக்கவும் நிலா அவன் முகம் பார்ப்பதும் பின்பு தயக்கமாய் வேறுபுறம் பார்ப்பதுமாய் இருந்தாள்...

தலைநிமிர்ந்து பேசும் நிலா தான் வாசு அறிந்தது... இன்றோ இந்த தயக்கம் ஏனென்று புரியாமல்... என்ன நிலா என்னாச்சு. என் கிட்ட தயங்குற அளவுக்கு என்ன விசயம் என்று கேட்டவாறு அவளை புரியாமல் பார்த்தான் வாசு.

இல்ல வாசு... வெளியே அவ்வளவாக எங்கேயும் போக தோணல... வீட்டிற்குள் கிச்சன் ஹால் பெட்ரூம் மூணும் கிளீன் பண்ணிட்டேன்... மத்த ரூம் சாவி கொடுக்கறீங்களா அங்கயும் க்ளீன் பண்ணுனா எனக்கும் டைம் போகும்...

என்ன நிலா இதுக்கு போய் இவ்வளவு தயக்கமா.... ஆனால் அதெல்லாம் ரொம்ப குப்பையாக இருக்கும்... சிரமப்படாத சரியா... சாவிக்கொத்து இதோ இங்க இருக்கு என அங்கே டேபிளின் அலமாரியின் இழுப்பறையை திறந்து காட்டினான்......

தேங்க்ஸ் வாசு.... லாக் பண்ணி இருந்ததால தான் எப்படி கேட்கறதுனு தயக்கமாக இருந்தது. இன்னைக்கே மத்த ரூம்ஸ் எல்லாம் க்ளீன் பண்றேன் என மகிழ்ச்சியாகக் கூறினாள்...

வேலை செய்ய சந்தோசப்படறது நீயாகத் தான் இருப்பாய்....

அவளிற்கு பதில் புன்னகை புரிந்தவாறு பத்திரமாக இரு நிலா என வழக்கம் போல சொல்லிவிட்டு வாசு கிளம்பி விட்டான்.....

நிலாவும் காலை உணவை முடித்து விட்டு சாவியை எடுத்து ஒரு ரூமை திறந்தாள்... அது வாசுவின் பெற்றோர் அறை.... அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை அது இருந்த தோற்றமே உணர்த்தியது......

சுவர் முழுக்க அவர்கள் இருவரும் இருந்த புகைப்படங்கள் நிரம்பி வழிந்தது..... அலமாரியில் அத்தனை புத்தகங்கள்.... பக்கத்தில் ஒரு ரீடிங் டேபிளின் மேலே சில நோட்டுகள் இருந்தது.... அதை எடுத்து புரட்டியபோது எல்லாம் படித்துவிட்டு எடுத்த குறிப்புகளாய் இருந்தது....

பீரோ முழுக்க அவர்கள் இருவரின் உடைகளும் நேர்த்தியாக அடுக்கப்பட்டு இருந்தது... புடவைகளை எடுத்துப் பார்த்திட கண்டிப்பாக அதிக விலைகளை உடையது என பார்த்ததும் அவளிற்கு புரிந்தது.....

வீட்டில் இருக்கும் பொருட்களை சாதாரணமாக பார்த்தால் தெரியாமல் போனாலும் அனைத்தும் விலை உயர்ந்தவை... அதோடு வீட்டிற்கு தேவையான அனைத்து எலக்ரானிக் சாதனங்களும் இருந்தது....

வசதி மிக்கவன் என அவனது செலுமையை அந்த வீடே எடுத்துக் காட்ட ஏன் டூவீலரில் தினமும் ஆபிஸ் செல்கிறான் என புரியவில்லை.... வரும்போது கூட அவன் நினைத்திருந்தால் ப்ளைட்டில் வந்திருக்கலாம் ஏன் ட்ரைனில் அதுவும் ஏசி கோச்சில் கூட ஏன் வரவில்லை என யோசித்தாள்...

மனம் அவனை பற்றி சிந்திக்க கைகள் தானாய் சுத்தம் செய்யும் வேலைகளை செவ்வனே செய்தது.... ஒட்டடை எல்லாம் அடித்துவி்ட்டு கூட்டிப் பெருக்கி மாப் போட்டு முடிக்கவும் அறையே பளிச்சென மின்னியது....

வாசுவின் அறையைப் போல அங்கு ஒதுக்கி வைக்க தேவையே இல்லாமல் எல்லாம் அந்தந்த இடத்தில் இருந்தது.... டேபிளின் உள்ளறையில் இருந்த ஆல்பம் அவளின் கண்களில் பட அதை எடுத்துக் கொண்டு வந்தாள்......

அட இவங்க அம்மா அப்பா ஆல்பம் போல என பக்கங்களை ஒவ்வொன்றாக திருப்பினாள்... அவர்கள் திருமணமான புதிதில் இருந்து.... வாசு பிறந்த பின் குழந்தையாக இருந்தது... தவழ்ந்தது... நடைவண்டியில் நடந்தது.... பள்ளிக்கு போகும் போது.... என ஒவ்வொன்றாய் இருந்தது.....

வாசு அப்படியே அவங்க அம்மா ஜாடை... அவங்க எவ்வளவு கலையாக இருக்காங்க... அவங்களோட ரொம்ப நாள் இருக்க வாசுக்கு தான் கொடுத்து வைக்கல... ஏனோ மனம் பாரமாக... அதை மூடிவைத்து விட்டு ரூமை பூட்டி விட்டு வந்தாள்....

பால்கனிக்கு வந்தவள் வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.....

ஆபிசில் வழக்கம் போல சக்தியின் கோபத்திற்கு ஆளானவர் அவனின் முன்னே நடுங்கியவாறு நின்று கொண்டிருந்தார்....

என்ன நெனச்சுட்டு இருக்கீங்க.... டைம்க்கு வரணும்னு தெரியாதா உங்களுக்கு... நீங்க செக் பண்ணி அனுப்பினால் தான் நெக்ஸ்ட் பேக்கிங் செக்சன்க்கு அனுப்ப முடியும்.... காலையில் பத்து மணிக்குள்ள அதெல்லாம் அனுப்பனும்.... நீங்க என்னடான்னா இப்போ தான் வந்திருக்கீங்க.....

எனக்கு கண்டிப்பாக முக்கால் மணி நேரம் ஆகும்... நீங்க எப்படி சூப்பர் பாஸ்ட் மேனா இருபது நிமிடத்தில் முடிப்பீங்களா....வாங்களே காட்டுங்க எனக்கு.... நானும் பார்த்து கத்துக்கறேன்...

கோபத்தில் காச்மூச் என கத்திக் கொண்டிருந்தான்.... ஆபந்தவனாய் வாசு வரவும் அவரிற்கு போன உயிர் திரும்ப வந்தது.....

சார் நீங்க போய் அத பாருங்க.... ஆல்டெி ரவி பார்த்துட்டு இருக்காரு... நீங்க போய்ட்டு அவரை ரிலீவ் பண்ணிடுங்க....

வாசு சொல்லவும் சக்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சரியென கிளம்பினார்.... வாசு அவரை பாவமாக பார்த்தபடியே எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்...

வாசு அங்கிருந்த வாட்டர் பாட்டிலை எடுக்கவும்.... நான்தானே இவ்வளவு நேரமாக கத்திட்டு இருக்கேன்...உனக்கு எதுக்கு கொடுடா. அவனின் கையில் இருந்த பாட்டிலை பிடுங்கியவன் அவனது வாயில் மொத்தமாக சரித்தான்....

அட அவசரத்துக்கு பொறந்தவனே... உனக்கு தானடா கொடுக்க வந்தேன்... நீ இழுத்த இழுப்பில் என் கையே உன்னோடு வந்திரும் போலயே.... வலிக்காத கையை நீவி விட்டுக் கொண்டான்.....

உன்னை கொல்லனும்.... எதுக்கு டா அவரை அனுப்புன இப்போ... தினுமும் அவருக்கு இதே வேலை தான்.... இன்னைக்கு ஒரு வழி ஆக்கியிருப்பேன்... அதுக்குள்ள எல்லாத்தையும் கெடுத்துட்ட...

குறையாத கோபத்தில் சக்தியின் ஒவ்வொரு வார்த்தையும் வந்து விழுந்தது... அதே நேரம் வாசுவின் அழைபேசி ஒலித்தது...

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட கரைந்தே போனாளே....

பார்த்தால் பார்க்கத் தோன்றும்
பேரைக் கேட்கத் தோன்றும்

பூப்போல் சிரிக்கும் போது
காற்றாய் பறந்திடத் தோன்றும்...

செல் செல் அவளிடம் செல்
என்றே கால்கள் சொல்லுதடா

சொல் சொல் அவளிடம் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா

அழகாய் மனதை பறித்து விட்டாள்....


நா. முத்துக்குமாரின் வரிகளில் வாசு சிலையாகி போய்விட சக்தியோ இருக்கையை விட்டு எழுந்து வந்து அவனின் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தான்.....

அட லூசே எப்போ எழுந்த... எப்படி வந்த...வலி உயிரே போகுது.... வாசு அலறவும் .. முதல்ல போனை எடுத்து யாருனு பாரு... ரொம்ப நேரமாக கத்தது...

என்னது கத்துதா... எப்படி தேடித்தேடி அழகா ஒரு சாங் ரிங்டோனா வச்சேன்... வராத கண்ணீரை துடைத்தவாறு போனை எடுத்தவன் திரையில் ஔிர்ந்த மூன் என்ற பெயரை பார்த்ததும் நிஜமாகவே அழுகை வரும்போல இருந்தது...

ஏம்மா நிலா.. உனக்கு என்னமா பிரச்சனை.. அவன் கிட்ட கோர்த்து விட்டுட்டு எதுவுமே தெரியாம நீ அங்கே இருக்க... நான்தான் இவன்கிட்ட மாட்டிட்டு முழிக்கறேன்.... இன்னைக்குத்தான் நீ கொடுத்த வத்தக்குழம்பையும் மிளகு இரசத்தையும் தின்னுட்டு பாட்டினு சொல்லாம விட்டான்....

அதுக்காகவே கால் பண்றியே மா... நீயெல்லாம் நல்லா வருவ... போனையும் சக்தியையும் மாற்றி மாற்றி பார்த்தபடி தனக்குள் பேசிக் கொண்டிருந்தான்....

மூன்று தடவை விடாமல் ஒலித்துவிட்டு அதுவே டயர்டாகி தனது அழைப்பை நிறுத்திக் கொண்டது...

ஒரு முக்கியமான.. அது....அதுவந்து அவசரம் அதான் எமர்ஜென்சி.. கால்... வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டிவிட்டு அங்கிருந்து ஓடியே போனான்....

இவன் எதுக்கு இப்போ ஆபிஸ்க்குள்ளே ரன்னிங் ரேஸ்ல ஓடறது மாதிரி போறான்... சக்தி அவனை வறுத்தபடி தனது வேலைகளை கவனிக்கத் தொடங்கினான்....

வாசுவோ அவனது கேபினிற்கு போனதும் நிலாவிற்கு அழைப்பு விடுத்தான்.... சில ரிங் போனதும்.... வாசு பிசியாக இருக்கீங்களா...? என நிலா எடுத்ததும் அவனிடம் கேட்டாள்....

சேசே அப்படியெல்லாம் எதுவும் இல்லை சொல்லு நிலா... கால் பண்ணியிருக்க எதுவும் முக்கியமான விசயமா....

நான் குக்கரிங் க்ளாஸ் போலாம்னு இருக்கேன்... எனக்கு ரொம்ப நாளாகவே கேக் அன்ட் பேக்கிங் ஐட்டம்ஸ் கத்துக்கனும்னு ஆசை.... ஜாயின் பண்ணிக்கவா ஒன் மன்ந்த் க்ளாஸ் தான்...

சூப்பர் நிலா... கண்டிப்பாக சேர்ந்துக்கோ.. நல்லா கத்துக்கோ... எப்போ ஜாய்ன் பண்ற....

இன்னைக்கே அட்மிசன் போட்டுட்டு நாளைல இருந்து போலாம்னு நினைக்கிறேன் வாசு....

நான் கிளம்பி வரவா நிலா... இல்லை நீயே போய்ட்டு வந்திடுவியா.... வாசுவின் குரல் அக்கறையுடன் வெளிவந்தது.....

நானே போயிடுவேன் பா... உங்க கிட்ட கேட்கலாம்னு தான் கால் பண்ணுனேன்... நான் போய் சேர்ந்துட்டு கிளம்பும்போது கால் பண்றேன்.... நீங்க வொர்க் பாருங்க நான் வைக்கவா...?

சரி நிலா டேக் கேர்.... பாய்... அழைப்பைத் துண்டித்தவன்... கேட்கலாம்னு தானே சொன்னாள்... சொல்லலாம் என்று சொல்லவில்லை.. அப்படியானால் அவள் செய்யப் போவதாக தன்னிடம் தகவல் சொல்லவில்லை....

செய்யவா என அனுமதி கேட்கிறாள் என்பதை அறிந்ததும் மனம் ஏனோ சிறகடித்து பறந்தது....

முடிக்க வேண்டிய வேலை வாசுவின் கழுத்தை நெறிக்கவும் முந்தைய நாட்களை போல விரைவாக கிளம்ப முடியவில்லை...

நிலாவை நினைத்தபடியே முடிக்க வேண்டிய வேலைகளை வேகமாக பார்த்து முடித்தான்..

கிளம்பி வீட்டிற்கு போகும் போது நிலாவிற்காக ஒன்றை வாங்கிக் கொண்டு ஆசையாக வீட்டை நோக்கி போனான்...

வீட்டிற்கு வந்தவன் ஹாலில் மாட்டியிருந்த புகைப்படத்தை பார்த்ததும் அதன் அருகில் போனான்..

வாசு அவனது பெற்றோருடன் இருக்கும் ஒரு புகைப்படம் பெரிதாக ப்ரேம் செய்யப்பட்டு மாட்டப்பட்டிருந்தது...

போட்டோவையே கைகளால் தடவியபடியே இருக்கவும் உள்ளே இருந்து வந்த நிலா அப்படியே நின்று விட்டாள்...

நிலா அவனின் பின்னால் நின்று அவன் பார்ப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ தோன்ற திரும்பிய வாசு நிலா தன்னை பார்ப்பதை கண்டதும் அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டான்...

இதுதான் நிலா எங்க அம்மா அப்பா அப்புறமாக இந்த குட்டிப் பையன்.... அது நீங்க தானே என நிலா சொல்லவும் முகத்தில் புன்னகை தோன்ற ஆமாம் என தலையாட்டினான்..

ரொம்ப க்யூட் பாப்பா என நிலா ரசித்துச் சொல்லவும் வாசு மலர்ந்து சிரித்தான்...

ம்ம்ம்... இப்போ தான் இந்த பெரிய பாப்பாவும் க்யூட்டா இருக்கு. அழுமூஞ்சி பாப்பா நல்லாவே இல்ல.
முகத்தை சுருக்கிய வாசுவோ நான் ஒண்ணும் அழுமூஞ்சி இல்ல என முறுக்கிக் கொண்டான்.
அதான் கொஞ்ச நேரம் முன்னாடி பார்த்தேனே...

அது கண்ணு வேர்த்துச்சு என சமாளிக்கவும் சரிசரியென சிரித்தவாறு விட்டு விட்டாள்...
ஹேய் நீ முதல்ல கண்ணை மூடு உனக்காக ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கேன்..

எனக்கா என்ன சொல்லுங்க... சொல்லுங்க... குழந்தையின் குதூகலத்துடன் பரபரத்தாள்...
கண்ணை மூடு அப்போ தான் கொடுப்பேன் என பேரம் பேசினான்..

நிலாவும் சரியென கண்களை மூடவும் வாசு அவளின் கையில் ஒரு கிப்ட் பாக்சை கொடுத்தான்..
கண்களை திறந்தவள் பொறுமையாக அதை பிரித்தாள். உள்ளே ஒரு அழகான புடவை இருந்தது. அதை பார்த்ததும் நிலாவின் கண்கள் சாசர் போல விரிந்தது...

நிலாவின் கண்கள் காட்டிய பாவனையே அவளிற்கு புடவை பிடித்திருப்பதை எடுத்துக் கூறவும் வாசு அவளையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

மயக்குவாள்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top