கொலுசொலி மயக்குதடி - 32

Advertisement

நீயா.....? என்ற வாசுவின் கத்தலில் மற்றவர்கள் அதிர்ந்து அவனைப் பார்த்தனர். அவனின் சத்தம் கேட்டு லட்சுமியும் திரும்பி அவர்களை பார்த்தாள். ஐயோ இவனா என நினைத்து லட்சுமிக்கு பயமானது.

உனக்கு லட்சுமியை தெரியுமா... சிவகாமி வாசுவை பார்த்து கேட்டார்.

நல்லா தெரியும் அம்மா மறக்க முடியுமா இவளை என்றவனின் முகம் கோபத்தில் சிவந்தது.
அதற்குள் நிலாவும் தனது முகத்தை சரிசெய்து கொண்டு வாசவை பார்த்தாள்.

இவளை எப்படி டா உனக்கு தெரியும் என சக்தியும் அவன் பங்கிற்கு கேட்டான்.

அடக்கடவுளே இவன் ஏதாவது சொன்னால் அவ்வளவு தான் என நினைத்த லட்சுமி வேகமாக எழுந்து அவர்களின் அருகில் வந்தாள்.

அத்தை அது வேற ஒண்ணும் இல்ல. ஒரு தடவை இவரு ஊருக்கு வந்தபோது பார்த்து இருக்கோம் என வாசுவை முந்திக் கொண்டு பதில் சொன்னாள்.

அதுக்கு எதுக்கு வாசு இவ்வளவு கோபப்படறான் என லட்சுமியை பார்த்து சக்தி கேட்டான்.

அதுவா.. அதுவந்து வேற ஒண்ணும் இல்ல. நான் வேற யாரோனு நெனச்சு அவரோட சண்டை போட்டு திட்டிட்டேன் அதனால தான் கோபமாக இருக்கார் என சமாளித்தாள்.

உனக்கு வேற வேலையே இல்லையா யாரைப் பார்த்தாலும் சண்டை போடறதையே வேலையா வச்சுட்டு இருக்க.
சக்தி திட்டவும் சிவகாமியும் அவளைத்தான் கோபமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

வாசுவிற்கும் அதற்கு மேல் அவளைப் பற்றி பேச விரும்பாததால் அதோடு விட்டு விட்டான்.

சரிங்க அத்தை எல்லாரையும் பார்த்தாச்சே நான் அப்படியே கிளம்பறேன் என மறுபடியும் அதிலேயே வந்து நின்றாள்.

சிவகாமி ஏதோ சொல்ல வரவும் சக்தி குறுக்கிட்டு சரி போ. அதுக்கு முன்னாடி உன்னோட நம்பரை குடு என கேட்டான்.

விட்டால் போதுமென அவசரமாக அவனிடம் தனது நம்பரை கொடுத்தவள் சரி போய்ட்டு வரேன் என கிளம்பினாள்.

ஏம்மா லட்சுமி நீ தங்கியிருக்க ப்ளாட் எதுனு சொல்லாமயே போறயே என கேட்டு வைத்தார்.

ச்சே இவர் இருக்காரே என மனதிற்குள் சிவகாமியை திட்டி தீர்த்தவள் அது வந்து அத்தை B56 என்றவள் அதற்கு பின்பு நிற்காமல் ஓடி விட்டாள்.

நிலா நீ ஏன் ஒரு மாதிரி இருக்க என வாசு கேட்கவும் அது ஒண்ணும் இல்ல லைட்டா தலைவலி.. நான் ரூம் போய் ரெஸ்ட் எடுக்கறேன் என்றவாறு ரூமிற்கு போய்விட்டாள்.

அம்மா அவளுக்கு காபி போட்டு கொடுங்க. அப்படியே தைலம் தேய்ச்சு விடுங்க என சக்தி சொல்லவும் சரிடா என்றவாறு சிவகாமி கிச்சனை நோக்கி போனார்.

அவர் போகும் வரை அமைதியாக இருந்த சக்தி வாசுவிற்கு கண்ஜாடை செய்துவிட்டு வாசுவின் ரூமை நோக்கி நடக்க வாசுவும் அவனை பின் தொடர்ந்தான்.

சக்தி பெட்டில் அமர்ந்திருக்க வாசுவும் அவனின் அருகில் போய் அமர்ந்தான்.

எனக்கு ஒரே குழப்பாக இருக்கு வாசு என சக்தி தொடங்கினான்.

எதைப்பத்தி உனக்கு குழப்பம் என வாசு கேட்டான். வேற என்ன நிலாவைப் பத்தி தான்...

லட்சுமியைப் பத்தி கேட்கப் போகிறான் என வாசு நினைக்க அவனோ நிலாவைப் பற்றி கேட்கவும் என்ன சொல்ற சக்தி நிலாவிற்கு என்ன என கேட்டான்.

சக்தியும் இன்று அலுவலகத்தில் நடந்த அனைத்தையும் சொல்ல வாசுவும் யோசனையானான்.

நம்மகிட்ட தான் நிலா எதுவும் சொல்ல மாட்டிங்குறாளே நாம என்ன பண்றது.

அதுக்காக அப்படியே விட முடியாது வாசு. நாம தான் என்ன ஏதுனு கண்டு பிடிக்கனும். அதோட நான் ஊருக்கு போகும் போது நிலாவும் நீயும் வரீங்க. அங்க வச்சுதான் உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம்.

என்னடா சொல்ற இதெல்லாம் சரிவருமா. நிலாவை நினைத்து வாசுவிற்கு பயமாக இருந்தது.

என்னடா பேசற. உங்க இரண்டு பேருக்கும் எல்லா சொந்தமும் ஊர்ல இருக்கு. எதுக்காக யாரும் இல்லாம தனியாக இங்க இருக்கனும்.

உங்களுக்கு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக விட்டு இருக்கக் கூடாது.

அது இல்லடா சக்தி. நான் என்ன சொல்ல வரேன்னா என வாசு அப்போதும் மனம் ஒப்பாமல் ஏதோ சொல்ல வந்தான்.

ப்ளீஸ் டா நீயாச்சும் இறங்கி வா. உங்களை இங்க விட்டுட்டு நாங்க எப்படி சந்தோசமாக இருக்க முடியும்.
அவனின் வேதனையான குரல் வாசுவை என்னவோ செய்ய எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என சரியென தலையசைத்து தனது சம்மதத்தை கூறினான்.

வாசுவை இறுக்கமாக அணைத்துக் கொண்ட சக்தி இது போதும் டா. எல்லாமே சரியாகும்னு எனக்கு நம்பிக்கை வந்திருச்சு. நீ நிலாவை மட்டும் நல்லா பாத்துக்கோ. நான் முதல்ல பிரச்சனை என்னனு கண்டு பிடிக்கறேன். அதுக்கு அப்புறமா அதுக்கு என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்...

சரிடா நான் நிலாவை பார்த்துக்கறேன். உனக்கு கவலையே வேண்டாம் என வாசு உறுதியளித்தான்.

இது இருக்கட்டும். மறந்தே போயிட்டேன் பாரு லட்சுமி கூட உனக்கு என்னடா பிரச்சனை...

சக்தி கேட்டதும் வாசுவின் முகம் மாறியது. அட ஏன்டா நீ வேற அவ எல்லாம் பொண்ணா டா.

என்னனு சொல்லு முதல்ல எதுக்கு இப்போ இப்படி பேசற...?

நாம கடைசியா ஊருக்கு போனோம்ல அப்போ தான்டா அவளைப் பார்த்தேன். அவளோட ஒரு பொண்ணும் இருந்தா டா. ஆனால் அவளோட முகத்தை பார்க்கல. துப்பட்டாவால முகத்தை மறைச்சுட்டு இருந்தா.

இரண்டு பேரும் சேர்ந்துட்டு யாரோ ஒரு பொண்ணு கிட்ட ஏதே பேசிட்டு இருந்தாங்க. நார்மலா நெனச்சு என்னால க்ராஸ் பண்ண முடியல. என்ன சொன்னாங்கனு தெரியல அந்த பொண்ணு அழ ஆரம்பிச்சுட்டா.

ஆனாலும் இவங்க கொஞ்சம் கூட மனசே இறங்காம ஏதேதோ பேசி கல்யாணத்தை நிறுத்தலானா அவ்வளவு தான்னு சொல்லி மிரட்டிட்டு இருந்தாங்க.

அந்த பொண்ணும் பயந்துட்டு சரினு சொல்லிட்டு அழுதுட்டே போய்ட்டா. எனக்கு அவ்வளவு கோபம் போய் இரண்டு பேரையும் கண்டபடி திட்டவும் இந்த லட்சுமி என்ன சொன்னா தெரியுமா...?

வாசு சொல்லச் சொல்ல கோபத்தின் உச்சத்தில் இருந்தவன் என்ன டா சொன்னா இவ என இறுக்கமாக கேட்டான்.

அவளை இப்போ தான் மிரட்டி அனுப்பினோம். இப்போ நீ வந்து தேவையில்லாம பிரச்சனை பண்ணாத. அப்புறமா எங்ககிட்ட வம்பு பண்றனு போலீஸ்ல பிடிச்சு கொடுத்திருவேன்னு மிரட்டறா.
நான் அவளிற்கு பதில் சொல்றதுக்குள்ள இவ கூட இருந்த பொண்ணு இவளையும் சேர்த்து இழுத்துட்டு போயிட்டா டா.

நீ அழுதுட்டு போன அந்த
பொண்ணை பார்க்கலயா என சக்தி கேட்டான்.

இல்லடா அந்த பொண்ணு முகம் எனக்கு தெரியல. அழுதுட்டு போகவும் தான் மனசு கேட்காம போய் திட்டிட்டேன்.

இன்றும் அதை நினைத்து வாசு கோபமானான்.

சக்திக்கு எதுவோ நெருட இருடா நான் வந்துடறேன் என்றவாறு எழுந்து எங்கோ போனான்.

அதே நேரம் உனக்கு அறிவே இல்லையா என மகா யாரையோ போனில் கத்திக் கொண்டிருந்தாள்.

மறுமுனையில் இருந்தவரோ என்ன சொல்லி சமாளிப்பது என தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்..

நான் என்ன வேணும்னா பண்ணுனேன். எல்லாம் என் நேரம் உன்கிட்ட எல்லாம் திட்டு வாங்கனும்னு.

ரொம்ப பண்ணாத சரியா நான் இருக்க வரைக்கும் தான் நீ நெனச்ச எல்லாமே நடக்கும். என்கிட்ட உன்னோட கோபத்தை காட்டுனா அது உனக்கு தான் பிரச்சனை...

சரிசரி விடு.. இப்போ தான் பிரச்சனை இல்லையே நான் இனிமேல் கவனமாக இருக்கேன்...
சொல்லாத செய். இனியொரு தரம் முட்டாள்தனமாக நடந்துக்காத என்றவாறு போனை துண்டித்தாள் மகா....

நீ ஒரு முட்டாள் தான் இல்லைனா இப்படி நான் சொல்ற எல்லாத்தையும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு கேட்டுட்டு இருப்பியா. சீக்கீரமாவே இந்த கேம் முடிவுக்கு வரும். வரலைனா கூட நானே முடிச்சு வைக்கறேன்.

வன்மத்துடன் மகா சிரிக்க அதைக் கேட்ட மேக்னாவோ நம்மளைப் போலவே இப்போ பேசுனது எந்த அப்பாவி ஜீவனோ. இவ பொண்ணா இல்லை பேயா இப்படி இருக்கா என திட்டியவள் அங்கிருந்து கிளம்பினாள்.

தனது ரூமிற்கு போன மேக்னாவோ ஒரு புகைப்படத்தை எடுத்து பார்த்து கண் கலங்கத் தொடங்கினாள்.

இரண்டு குடும்பங்களாக வாசுவின் பெற்றோரும் மேக்னாவின் பெற்றோரும் இருக்க வாசுவும் மேகனாவும் ஒருவரின் கையை மற்றவர் பிடித்தவாறு நின்று கொண்டிருந்தார்கள்...

என்னை யாருனு உனக்கு தெரியலயா வாசு. சின்ன வயசில் நம்ம இரண்டு குடும்பமும் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தோம். வேலை விசயமாக எங்க குடும்பம் வேற ஊருக்கு போக வேண்டியதாக போயிருச்சு.

அம்மாக்கு எப்பவும் உன்னோட நினைப்பு தான். அடிக்கடி வாசு தங்கம் வாசு தங்கம்னு உன்னைப் பத்தியே தான் பேசுவாங்க.

என் மனசில் நீ இருக்கனு தெருஞ்சப்போ அம்மாக்கு எவ்வளவு சந்தோசமாக இருந்துச்சு தெரியுமா.. உன்னைப் பார்த்து பேசி அம்மாவை பார்க்க கூட்டிட்டு போலாம்னு நெனச்சு தான் இங்கே வந்தேன்.
ஆனால் வந்த அன்னைக்கே நீங்க என்னடான்னா அந்த நிலா கூட உட்கார்ந்து பேசிட்டு இருந்தீங்க பாருங்க. அதைப் பார்த்துட்டு எனக்கு அவ்ளோ கோபம். அதனால தான் பார்த்தும் பேசாமல் கிளம்பி போயிட்டேன்.

அப்போ தான் இந்த மகா என்னைப் பார்த்து அவளாகவே என்கிட்ட பேசுனா. அவளும் நிலா மேல எதுக்காகவோ கோபமாக இருக்கா.
என்னை உங்களோட சேர்த்து வைக்கறதா சொன்னாள். அந்த ஒரே காரணத்துக்காகத் தான் இப்போ இவகூட இருக்கேன்.

எனக்காக இல்லைனா கூட அவளுக்காக அந்த நிலாவை உங்ககிட்ட இருந்து பிரிச்சிடுவா. அப்போ வந்து நான் யாருனு சொல்றேன் வாசு. நீங்களும் மறுக்காம என்கூட அம்மாவை பார்க்க வருவீங்க. நம்ம கல்யாணமும் கண்டிப்பாக நடக்கும் என கனவு காணத் தொடங்கியிருந்தாள்.

மயக்குவாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top