காதல் படகை கரையேற்ற வா - 11

Advertisement

Padmarahavi

Active Member
உதயின் கோபத்தை பார்த்த தர்னிகாவிற்கு அவனை சமாதானப்படுத்துவதா இல்லை சந்தேகப்படுகிறானே என அவன் மீது இவள் கோபப்படுவதா என தெரியவில்லை.


யாரு வந்திருக்கா என்று கேட்டபடி வந்த ராஜேஷ் உதயைப் பார்த்ததும் முகம் மலர்ந்தான்.


ஹாய் பாஸ். எப்படி இருக்கீங்க


கடுப்பை மறைத்துக் கொண்ட உதய் நல்லா இருக்கேன். எப்ப வந்தீங்க என்றான்.


அவன் வந்திருக்கான்னு தெரிஞ்ச உனக்கு எப்ப வந்தான்னு தெரியாதா என்று குத்தலாகக் கேட்டாள் தர்னிகா.


அவளை முறைத்த உதய், சொல்ல வேண்டியவங்க ஒழுங்கா சொல்லிருந்தா ஏன் கோவப்பட போறோம் என்றான் உதய்.


இப்போது தான் வந்ததில் தான் ஏதேனும் பிரச்சனையா என்று குழம்பிய ராஜேஷ், " தர்னி. என்னால ஏதும் பிரச்சனையா " என்றான்.


இல்லடா. நீ வந்தன்னு நான் இன்னும் சொல்லவே இல்லை. அதுக்குள்ள இவருக்கா தெரிஞ்சிருக்கு. தெரிஞ்சதும் ஓடி வராரு.


அப்போது பேசிய ராஜேஷ், " சாரி ப்ரோ. முதல்ல கடைக்கே வரவாம்ன்னு தான் பாத்தேன். தர்னிகாவுக்கு போன் பண்ணி சொன்னப்போ அவ தான் தலைவலின்னு வீட்டுல இருக்கிறதா சொன்னா. அதான் இங்க வந்தேன்" என்றான்.


நீ எதுக்குடா சாரி கேக்குற. எப்படி நீ வந்தது தெரியும்ன்னு சொல்றாரா பாரு என்றாள் தர்னிகா.


நான் சொல்லனும்னா நீங்க இரண்டு பேரும் கொஞ்சம் வாயை மூடனும் என்றான் உதய். பின் தன் போனை எடுத்து தனக்கு வந்த புகைப்படங்களைக் காட்டினான்.


நானே வீட்டுக்கு வரலாம். உனக்கு வேற தலைவலியாச்சே. தனியா இருக்கியேன்னு கிளம்பிட்டு இருந்தேன். அப்ப தான் இந்த போட்டோ வந்துச்சு. ஏதோ புது நம்பர். இதைப் பாத்ததும் தோணுச்சு.


இவன் வரான்னு தான் வேணும்னே வீட்டுல இருக்காளோன்னு தோணுச்சா என்று இடைக்கேள்வி கேட்டாள் தர்னிகா.


நீ இப்பதான் லூசா இல்லை எப்பயுமேவா? என்று அவளை கொட்டிய உதய், இந்த போட்டோ நம்ம வீட்டு கிட்ட நின்னு தான் எடுத்திருக்கனும். எடுத்தவன் ஒரு போட்டோவோட நிக்க மாட்டான். கண்டிப்பா இன்னொரு போட்டோ கிடைக்குமான்னு இங்க தான் சுத்திட்டு இருப்பான்.கொஞ்சம் சீக்கிரம் வந்தா அது யாருன்னு கண்டுபிடிக்கலாம்ன்னு தான் வேகமா வந்தேன் என்றான்.


போட்டோவிலே அதிர்ச்சியான தர்னிகாவும், ராஜேஷ் அவன் கூறிய மிச்ச செய்தியைக் கேட்டதும் திடுக்கிட்டனர். இங்கு இருந்து தான் போட்டோ எடுத்திருக்க வேண்டும் என்று அவன் கூறிய போது இருவருக்குமே அரவிந்த் நியாபகம் வர ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.


காரை நிறுத்திட்டு வெளியை முழுக்க நல்லா பாத்துட்டு தான் வந்தேன். யாரும் இல்லை. கார் சத்தத்துல ஓடிட்டானான்னு தெரியலை என்றான் உதய்.


அந்நேரம் உதய்க்கு போன் வர எடுத்துப் பார்த்தால் அரவிந்த்.


ஹலோ சொல்லுங்க அரவிந்த்.


அரவிந்த் பெயரைக் கேட்டதும் தர்னிகாவும் ராஜேஷூம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்


வந்துடீங்களா? ஓ.கே நான் வீட்டுக்கு வந்துட்டேன். பாத்துக்கோங்க பை என போனை வைத்தவனை, யாரு போன்ல எனக் கேட்டாள் தர்னிகா.


அரவிந்த் தான். யாரோ ஃப்ரெண்டைப் பாக்கணும்னு ஒரு மணி நேரம் பர்மிஷன் கேட்டாரு. இப்ப கடைக்கு வந்துட்டாராம். அதை தான் சொன்னாரு.


இப்போது இருவரும் குழம்பினர்.அரவிந்த் இதற்காக வந்தானா , இல்லை அவன் உண்மையாகவே நண்பனைப் பார்க்க வந்தானா? உறுதியாக தெரியாமல் கூறவேண்டாம் என முடிவெடுத்தனர்.


சரி வா சாப்பிடலாம் என்றாள் தர்னிகா.


சாப்பிடலாமா? சமைச்சியா நீ. உன்னை ரெஸ்ட் தானே எடுக்கச் சொன்னேன் என்றான் உதய்.


இல்லை. நான் சமைக்கலை. ராஜேஷ் வாங்கிட்டு வந்திருக்கான்.


ஆமா பாஸ். தர்னிக்கு தலைவலின்னு சொன்னதால சமைக்க வேணாம்னு சொன்னேன்.


கிடைக்கிற கேப்புல கோல் அடிக்கிறானே என்று நினைத்தவன் வாங்க சாப்பிடலாம் என்றான்.


அவளுக்கு பிடித்ததாகப் பார்த்து பார்த்து வாங்கிருந்தான் ராஜேஷ். இப்படி ஒரு நண்பன் எனக்கு இருந்திருந்தா இந்நேரம் எங்கையோ போயிருப்பேன். எனக்கு வந்ததெல்லாம் சூனியம் தான் வைக்குங்க என்று நினைத்துக் கொண்டான் உதய். உண்மையாகவே அவர்களைப் பார்க்க பொறாமையாக இருந்தது.


சாப்பிடதும் கிளம்ப ஆயுத்தமானான் ராஜேஷ் .


இன்னிக்கு தங்கிட்டு போகலாம் டா.


ஆமாம் பாஸ். இதுஇரண்டு பெட்ரூம் வீடு தான். நீங்க ஒரு ரூம்ல தங்கலாம் என்றான் உதய்.


இல்ல ப்ரோ. நான் இங்க ட்ரெய்னிங் காக வந்திருக்கேன். அங்க தான் தங்கணும்.


என்ன ட்ரெயினிங்?


என்ன தர்னி! நான் என்ன வேலைக்கு போகப்போறேன்னு சொல்லலையா?


எங்க! உன் பெயரை சொன்னாலே பொறாமையில பொசுங்காறே என்று நினைத்த தர்னிகா, உதய்.! ராஜேஷ் போலீஸ் எக்ஸாம்ல பாஸ் பண்ணிருக்கான். இப்ப போஸ்ட்டிங் போடப் போறாங்க. அதுக்கு தான் ட்ரெயினிங். என்றாள்.


என்ன போலீசா! நான் ஏதோ வெட்டிப்பயன்னு நினைச்சேன் என்று நினைத்த உதய், அப்ப மஹதி பத்தி இவன் கிட்ட சொல்லலாம் என நினைத்தான்.


ராஜேஷூம் கிளம்பும் போது உதயனிடம் அவனுக்கு போட்டோ அனுப்பிய எண்ணை குறித்துக்கொண்டான்.


ராஜேஷை வழியனுப்பி வைத்து விட்டு கதவை அடைத்துவிட்டு திரும்பிய தர்னிகாவின் கையை பிடித்து இழுத்து தன்னருகில் நிறுத்திக்கொண்டான் உதயன்.


ஹேய் என்ன பண்ற என்றாள் தர்னிகா.


ஆமா!!!! என்ன இரண்டு பேரும் ரொம்ப உருகுறீங்க. புருஷன் பக்கத்துல இருக்கிறதே நியாபகம் இல்லை .


புருஷனா? யாரு? நீங்க ஏதோ கெஸ்ட்ன்னு நினைச்சேன்.


ரொம்ப தாண்டி பண்ற. உனக்காக வேலையை விட்டுட்டு வந்தேன் பாரு. என்னை சொல்லணும். நீ இங்க உன் ஃப்ரெண்டு கூட ஜாலியா தான் இருக்க.


அவனே திடீர்னு சொல்லாம வந்தான். அவன் மேல உனக்கு என்ன பொறாமை.


பொறாமைலாம் இல்லை என்றவன் கொஞ்சம் நிறுத்திவிட்டு லைட்டா பொறாமை தான் என்றான்.


கலகலவென சிரித்த தர்னிகா, அவன் எனக்கு ஃப்ரெண்டு தான்.


அப்போ நான்?


நீ தான் யாருன்னு எனக்கு இன்னும் தெரியலை.


அடிப்பாவி நான் உன் புருஷன்டி. நான் வேணா நிரூபிக்கட்டுமா என்று அவளை நெருங்கினான் உதயன்.


அவனை மெல்ல தள்ளிவிட்ட தர்னிகா , இதெல்லாம் லவ் சொன்னதுக்கு பிறகு தான், என்றாள்


அப்ப இப்பவேசொல்றேண்டி. ஐ லவ் என்று தொடங்கியவன் வாயை மூடிய தர்னிகா , இப்படிலாம் சொல்ல வேணாம். எனக்கு சர்ப்ரைஸா சொல்லணும். என்றாள்.


சரி. இப்பயாவது என்னை யாராவது தூங்க விடுங்க என்று கூறியவள் அறைக்குச் சென்றுவிட்டாள்.


சர்ப்ரைஸா? அதுக்கு நான் எங்க போவேன் என்று யோசிக்கத் தொடங்கினான்.


கடையில் இருந்த அரவிந்த்திற்கு வேலையே ஓடவில்லை. போட்டோ பார்த்து விட்டு அவசரமாக சென்றிருப்பான். பின் என்ன நடந்தது எனத் தெரியாமல் குழம்பினான். போனிலும் சாதாரணமாக தான் பேசினான். என்ன நடந்திருக்கும்?


அவர்களை பிரிக்க செய்யும் செயல்களெல்லாம் , அவர்களின் பந்தத்தை மேலும் உறுதியாக்குகிறது என அரவிந்த்திற்கு தெரியவில்லை. பார்ப்போம் அடுத்து என்ன நடக்கிறதென!
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பத்மாராஹவி டியர்

ராஜேஷ் போலீஸா?
அப்போ உதய்க்கும் தர்னிகாவுக்கும் நல்லதுதான்

ஏண்டா உதய் மஹதியைப் பற்றி ராஜேஷ்ஷிடம் சொல்ல வேண்டியதுதானே
அதற்கு உனக்கு ஒரு நல்ல முகூர்த்த நாள் வேணுமா?

பொண்டாட்டியை லவ் பண்ணவும் துப்பில்லை
மஹதியை தூக்கி போடவும் முடியலை
ஆனால் நண்பர்களைப் பார்த்து பொறாமை மட்டும் வருது
ஆனாலும் நீ அட்டர் வேஸ்ட்டுடா உதய்

கோக்குமாக்கா அரவிந்த் என்ன செய்தாலும் அது உதய்க்கு சாதகமாவேதான் இருக்குது
ஹா ஹா ஹா
நாட்டிலே அவனவன் செய்யுறதெல்லாம் நமக்கு நன்மையாத்தான் இருக்கு

ஸ்டோரி நல்லாயிருக்கு
ஆனால் ரொம்பவும் லேட்டா அப்டேட் தர்றீங்க
அப்படியே தந்தாலும் குட்டி அப்டேட்டாத்தான் இருக்கு
ஸ்டோரி தொய்வில்லாமல் இருக்க வாரம் மூன்று அப்டேட்ஸ்ஸாவது தரலாமே
 
Last edited:

Padmarahavi

Active Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பத்மாராஹவி டியர்

ராஜேஷ் போலீஸா?
அப்போ உதய்க்கும் தர்னிகாவுக்கும் நல்லதுதான்

ஏண்டா உதய் மஹதியைப் பற்றி ராஜேஷ்ஷிடம் சொல்ல வேண்டியதுதானே
அதற்கு உனக்கு ஒரு நல்ல முகூர்த்த நாள் வேணுமா?

பொண்டாட்டியை லவ் பண்ணவும் துப்பில்லை
மஹதியை தூக்கி போடவும் முடியலை
ஆனால் நண்பர்களைப் பார்த்து பொறாமை மட்டும் வருது
ஆனாலும் நீ அட்டர் வேஸ்ட்டுடா உதய்

கோக்குமாக்கா அரவிந்த் என்ன செய்தாலும் அது உதய்க்கு சாதகமாவேதான் இருக்குது
ஹா ஹா ஹா
நாட்டிலே அவனவன் செய்யுறதெல்லாம் நமக்கு நன்மையாத்தான் இருக்கு

ஸ்டோரி நல்லாயிருக்கு
ஆனால் ரொம்பவும் லேட்டா அப்டேட் தர்றீங்க
அப்படியே தந்தாலும் குட்டி அப்டேட்டாத்தான் இருக்கு
ஸ்டோரி தொய்வில்லாமல் இருக்க வாரம் மூன்று அப்டேட்ஸ்ஸாவது தரலாமே
Very nice review sis thanks. Kandipa niraya update podren
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top