காதல் படகை கரையேற்ற வா - 10

Advertisement

Padmarahavi

Active Member
அரவிந்த் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஓடியிருந்தது. அவனும் நன்றாகவே வேலை பார்த்தான். தர்னிகாவை மரியாதையுடனே நடத்தினான். தேவையில்லாமல் சந்தேகத்தை கிளப்ப அவன் தயாராக இல்லை. இதுவரை நன்றாகவே போய்க் கொண்டு இருந்தது.


என்னதான் எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பினாலும் யார் மஹதி பற்றிய பார்சலை வீட்டிற்கு அனுப்பியிருப்பார்கள் என உதயனுக்கு தெரியவில்லை. மஹதி தங்கியிருந்த லேடீஸ் ஹாஸ்டலில் உறவினரைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. எனவே உதயனை அங்கு யாருக்கும் தெரியாது.


இப்பொழுது போய் என்னவென்று கேட்பது , எப்படி கண்டுபிடிப்பது என குழம்பி போய் இருந்தான்.


இது இப்படியே இருக்க, அன்று தலை வலிக்கிறது என வீட்டிலேயே இருப்பதாகக் கூறினாள் தர்னிகா.


என்னாச்சும்மா? நான் உன் கூடவே இருக்கேன். அரவிந்த் விஜய் கடையை பாத்துக்கட்டும்.


அட. அவ்வோளாலாம் வலிக்கலை. தூங்கி எழுந்தா சரியா போய்டும். நீ போய்ட்டு வா


அரைகுறை மனதாக சம்மதித்தான் உதயன்.


சரி. நீ சமைக்க வேணாம். வெளியை வாங்கிக்கலாம் என அவளுக்கு மாத்திரை கொடுத்து தூங்க வைத்து சென்றான்.


கடைக்கு தனியாக வந்த உதயனைப் பார்த்த அரவிந்த் எப்படி தர்னிகாவைப் பற்றி கேட்பது என சிந்தித்தான். அதற்குள் விஜயே மேடம் எங்க சார் என தர்னிகாவைக் கேட்டான்.


அவளுக்கு தலைவலிடா. தூங்க சொல்லிருக்கேன்.


அச்சச்சோ என பதறிப் போனான் அரவிந்த் ( நீ புருஷன் இல்லடா. சாக்கை குற)


எப்படியாவது வீட்டிற்குப் போய் அவளைப் பார்க்க வேண்டும் என துடித்தான். ஆனால் எப்படி போவது?


அவளில்லாமல் இருக்க முடியாத உதயன் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை போன் செய்தான்.


முதலில் பேசிய தர்னிகா, பின் கடுப்பாகி, "உதய் நீ என்னை தூங்க விடப்போறியா இல்லையா? நீ இப்படி போன் பண்ணிட்டே இருந்த எனக்கு தலைவலி ஜாஸ்தி தான் ஆகும் " என்றாள்.


சாரி மா என்றபடி போனை வைத்தான் உதயன்.


அன்று பார்த்து கடையில் கூட்டமாக இருந்தது. அப்படியே விட்டுவிட்டு கிளம்ப முடியாமல் தவித்தான்.


சார் என்றபடி வந்து நின்றான் அரவிந்த்.


பக்கத்துல ஃப்ரெண்டு வீடு வரை போய்ட்டு வரணும். ஒரு ஒரு மணி நேரம் பர்மிஷன் வேணும்.


இதுவரை இப்படி அரவிந்த் கேட்டதே இல்லை. விடுமுறையே எடுக்காமல் வருபவன் என்பதால் சரியென பதிலளித்தான் உதயன்.


நேராக உதயன் வீட்டிற்கு சென்றவன் உள்ளே செல்லாமல் பைக்கை சற்று தள்ளி நிறுத்தியவன் என்ன காரணம் சொல்வது என யோசித்தான்.


அதற்குள் கதவு திறக்க வெளியே வந்த தர்னிகா, ராஜேஷைப் பார்த்து வாடா என்றபடி அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.


அப்போது தான் ராஜேஷைப் பார்த்த அரவிந்த்தின் மூளையில் ஒரு திட்டம் உதிக்க தன் போனில் அவர்கள் உள்ளே செல்வதை போட்டோ எடுத்து தன் மற்றொரு எண்ணின் வழியாக உதயனுக்கு அனுப்பி வைத்தான்.


இதை செய்ய அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் தனக்கு கெட்டபெயர் வராமல் அவர்களைப் பிரிக்க இதான் வழி என சமாதானம் செய்து கொண்டான்.


இன்னும் ஏதேனும் வாய்ப்பு உள்ளதா போட்டோ எடுக்க என நினைத்து அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.


ஜன்னலின் வழியே அவனைப் பார்த்த ராஜேஷ் தர்னிகாவை அழைத்தான்.


தர்னி! அவன் யாருன்னு தெரியுதா?


ஹேய். இது என அவள் தொடங்கிய போது அவனே இடைமறித்தான்.


நாம ஒன் இயர் முன்னாடி கொடைக்கானல் டூர் போனோமே அப்போ ஒருத்தன் உன்னையே பாத்துட்டு உன் பின்னாடி வந்தான்னு சொன்னேன்ல அது இவன் தான்.


இல்லடா. தெரியாம பேசாத. அப்போ பாத்தது இப்போ நியாபகம் இருக்குமா?


இல்லடி. எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. முதல்ல சும்மா சைட் அடிக்கிறான்னு நினைச்சி விட்டுட்டேன். ஆனா டூர் முழுக்க உன் பின்னாடியே தான் வந்தான்.


இவனை ஏண்டா அப்பவே காட்டலை


நான் சொன்னேன். நீ தான் காதுல வாங்கவே இல்லை.


அரவிந்த் தன்னை கொடைக்கானல் டூரில் பார்த்ததாக சொன்னது நினைவுக்கு வந்தது. இப்போது ஏன் இங்கு சுற்றிக்கொண்டு இருக்கிறான்? ஏன் கடையில் வேலைக்குச் சேர்ந்தான்? எல்லாம் ஏதேச்சயாக நடக்கிறதா இல்லை ஏதாவது திட்டமா?


அவளுக்கு மண்டை குழம்பி தலைவலி அதிகரித்தது. அப்போது வீட்டின் காலிங்பெல் ஒலிக்க கதவைத் திறந்தவள் அங்கு உதயனைக் கண்டு ஆச்சரியப்பட்டாள்.


என்ன இப்ப வந்திருக்க?


ராஜேஷ் வந்திருக்கானா? அவன் குரலில் தெரிந்த கோபம் அவளை உலுக்கியது.


இவனுக்கு எப்படி தெரிந்தது? தெரிந்ததும் வந்தானானென்றால் தன்னை சந்தேகப்படுகிறானா?


இத்தனை கேள்விக்கும் விடை அடுத்த அத்தியாயத்தில்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பத்மாராஹவி டியர்

அடேய் அரவிந்தன் வீணாப் போனவனே
அவளே தலைவலின்னு வீட்டுலே இருக்கிறாள்
இதிலே ராஜேஷ்ஷையும் தர்னிகாவையும் எதுக்குடா போட்டோ பிடிச்சு உதயனுக்கு அனுப்பினே பரதேசி

இவர்களிலே ராஜேஷ் ஒருத்தன்தான் புத்திசாலி போலிருக்கு
ஒரு வருஷம் முன்னாடி பார்த்த அரவிந்தை கண்டுபிடிச்சுட்டானே

அவன் சொன்னப்புறம்தான் கூமுட்டை தர்னிக்கும் அரவிந்த் எதுக்கு வந்தான் ஏன் வந்தான்னு உறைக்குது போலிருக்கே

அச்சச்சோ
இப்போ கோபமா வந்த உதய்யை தர்னி எப்படி சமாதானம் பண்ணப் போறாளோ?
 
Last edited:

Padmarahavi

Active Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பத்மாராஹவி டியர்

அடேய் அரவிந்தன் வீணாப் போனவனே
அவளே தலைவலின்னு வீட்டுலே இருக்கிறாள்
இதிலே ராஜேஷ்ஷையும் தர்னிகாவையும் எதுக்குடா போட்டோ பிடிச்சு உதயனுக்கு அனுப்பினே பரதேசி

இவர்களிலே ராஜேஷ் ஒருத்தன்தான் புத்திசாலி போலிருக்கு
ஒரு வருஷம் முன்னாடி பார்த்த அரவிந்தை கண்டுபிடிச்சுட்டானே

அவன் சொன்னப்புறம்தான் கூமுட்டை தர்னிக்கும் அரவிந்த் எதுக்கு வந்தான் ஏன் வந்தான்னு உறைக்குது போலிருக்கே

அச்சச்சோ
இப்போ கோபமா வந்த உதய்யை தர்னி எப்படி சமாதானம் பண்ணப் போறாளோ?
Haha nice sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top